Saturday, 9 July 2016

A Thrilling Trip to Manampalli மானாம்பள்ளி ஒரு பரபரப்பான பயணம்………………….


மானாம்பள்ளிக்கு அலுவல் தொடர்பாக செல்லவேண்டுமென பலமுறை நினைத்தும் செல்லமுடியமால் பல்வேறுபணிகள் வந்துகொண்டேயிருந்தன.

தென்மேற்குமழைக்காலம் தொடங்கியதை தொடர்ந்துமானாம்பள்ளி மின்நிலையத்திலிருந்து எந்த இடத்தில் தண்ணீர் பரம்பிக்குளம் அணையில் சேர்கிறது என்று அறிந்துக்கொள்ள சதா யோசித்துக்கொண்டேயிருக்கஎனது அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரிக்கஎனது ஆர்வத்தைப் புரிந்துகொண்டுஅவர்களும்ஆர்வத்துடன்
களமிறங்க மானாம்பள்ளி பயணம் இனிதே தொடங்கிற்று.











பொள்ளாச்சியிலிருந்து ஆழியார், வால்பாறை வழியாக சென்று சோலையாரக்கு பத்து கிலோ மீட்டர் முன்பாக உருளிக்கல் சோதனை சாவடியில் அனுமதி பெற்று மீண்டும் சுமார் பத்து கிலோமீட்டர் குறுகிய சாலையிலான பயணத்தின் முடிவில் மானாம்பள்ளி.

ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும்வழியில் 9வது கொண்டைஊசி வளைவில்  வரையாடுகள் மேயகண்ணாலும்,காமிராவிலும் கிளிக்கிகொண்டோம்.

வரையாடு பாறைமேல் செங்குத்தாக நடப்பதை வீடியோ எடுப்பதற்குள் லாரி ஒன்றிற்கு வழிவிட நகரவேண்டியாதகிவிட கண்ணிற்கு எட்டியது காமிரவுக்கு எட்டாமல்போயிற்று.















தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்றும்சாரலும் எங்களை தாலாட்டி ஆசீர்வதிக்க பயணம் தொடர்ந்ததுபகலிலேயே  பனிமூடிக்கொள்ள மிஸ்ட்(Mist light) போட்டுக்கொண்டு மெள்ள ஊர்ந்து சென்றது ஜீப்மழை சற்று கனமாகிவிடபனியும் மழையும் ஒரே நேரத்தில் சாத்தியமாவென
அறிவியல் சார்ந்த பேச்சில் ஜீப் கலகலப்பானது.

ஓட்டுநர் ராஜூ
மேடம் வைப்பர் ஸ்ட்ராக் (STRUCK) ஆகிவிட்ட்து என்று சொல்லமழையில் என்ன செய்வது என்று கண்ணாடியை துண்டினால் சுத்தம்  செய்துவிட்டுமீண்டும் பயணம் கண்முன்னே

தேயிலைதோட்டமும்அதற்கானமருந்துகளைமுதுகில் தாங்கியபடி தேயிலை தொழிலாளிகளும் மழைக்கு ஒதுங்கி நிற்க மழையின் காரணமாக ஜீப்பில் இருந்தவாறே பேசிஅவர்களின் அனுமதியோடு
புகைப்படம் ஒன்றும் எடுத்துகொண்டு பயணம்தொடர மீண்டும் தேயிலைஎஸ்டேட்தொழிலாளிகளின் துயரம்தேயிலைக்கு அடிக்கப்படும் மருந்துஅவை மழையில் கரைந்து சிற்றோடைகள் வழியாக எப்படி மனிதர்களையும்மற்ற உயிரினங்களையும் சென்றடைகிறது என்று மீண்டும் பேச்சு தொடங்கியது.











வால்பாறையிலிருந்து சோலையார்  நோக்கி ஜீப் செல்ல ஆர்வமுடன் எப்போதுசோதனை சாவடி வருமென காத்திருந்த தருணம் வந்துவிட அரசு வாகனமென்பதால் எந்தவித தடையுமின்றி உள்சென்றோம். குறுகிய சாலை அடர்வனம்,விட்டு விட்டு பெய்யும் மழை.8 கி.மீ ல் 30 வளைவுகள் என பரபரப்பான பயணம் தொடங்க எல்லோருக்கும் உற்சாகம் தொற்றி கொண்டது.

















பத்துகி,மீ பயணத்தில் வனதேவதையின் ஆசீர்வாதத்தில்உடலும் உள்ளமும் குளிர்ந்திருக்கமானாம்பள்ளியிலுள்ள சோலையார் மின்நிலையம்-1 சென்றோம்.

இம்மின்நிலையமானது சோலையார் அணையிலிருந்து நீரை எடுத்து மின்சாரம் எடுத்தப் பின் பரம்பிக்குளம் செல்கிறது
மின்நிலையத்தில் இரண்டு யூனிட்கள் உள்ளனபாசன தேவையை பொறுத்துபொதுப்பணித்துறையின் வேண்டுதலுக்கு இணங்க இம்மின்நிலையம் இயக்கப்படுகிறது.





















இன்று இருப்பது போல்வாகனஅலைபேசி மற்றும் சர்வே செய்யும் உபகரணங்கள் (updated) இல்லாத காலத்தில் எப்படி இதை எல்லாம் செய்தார்கள் என்று எண்ணிவியக்கும்போதே தெளிவானது
அப்போதிருந்த அரசும்அதிகாரிகளும் மக்கள் மீது கொண்டிருந்த அன்பு.































மின்நிலையத்தில் இறங்கும்போதே அட்டைகள் குறித்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டதுமின்நிலையத்தின் பின்புறத்தில் வெளியேறும் தண்ணீரின் அளவை எடுக்க சென்று (tail race water) பின் penstock பார்த்துவிட்டு மீண்டும் உள்நுழையும்போது இடது முழங்காலுக்கருகே  ஏதோ ஊர்வது போல் இருக்கஅவசரமாக வெளியேறி பார்த்தபோது அட்டை,‌ சட்டென்று எடுத்து வீசினேன்.


பொதுவாக அட்டை ஏறுவது தெரியாதுஇரத்தம் உறிந்து அது சற்று பெருத்த பின் தான் தானாக விழும்ஆனால் நல்லவேளையாக என்னுடைய உடலின் நுண்ணுர்வின் கூர்மையினால் உடனடியாக எடுத்து தப்பினேன்.
























அங்கிருந்துஇப்போது சொல்லப்போகும் பயணம்தான்யாரும் செல்லமுடியாத இடம்அங்கு போவதற்கு இன்னொரு சோதனை சாவடியில் அனுமதி பெறவேண்டும்அங்கு சென்ற பின் தான் தெரியும்உடனடியாக வனசரகர் தொடர்பு எண் பெற்று அந்த இடத்திற்கு ஏன் செல்லவேண்டும்நாங்கள் யார் என்ற விபரங்கள் தெரிந்தவுடன்,அனுமதி கொடுத்துவிட்டார்ஆனால் சோதனை சாவடியின் சாவி வன கவனிப்பாளரிடம் இருந்ததுபின் அவரை சென்று பார்த்தோம்வனசரகர் தகவல் சொன்னதாக கூறி சாவியுடன்,

















அவரும் எங்களுடன் வந்தார்.

1989 க்கு பிறகு அலுவல் காரணமாக (வனத்துறை தவிர) நாங்கள்தான் வந்திருக்கிறோமென,எங்களுடன் வந்த வனத்துறை சார்ந்த பணியாளரும், சோலையாரிலிருந்து வந்த இன்னொரு பணியாளரும் கூறினர்.


அடர்ந்த  பசுமை மாறா காடும், இலையுதிர்காடும், அடுத்தடுத்து இருந்தன.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வனதேவதை பச்சை ஆடை கட்டியிருந்தாள்,வண்டுகளின் ரீங்காரமும்அருவிகளின்  ஓசையும் தவிர வேறெந்த ஓசையுமில்லைமீண்டும் 7 கி.மீ தூர பயணம், 5 கி.மீ வரை ஜீப்பில் சென்றோம்வழியில் பெரியார் சேருமிடம் வர, தொடர் மழைஅட்டைகள் என பல காரணங்களால் இறங்க முடியவில்லைஆயினும் ஜீப்பில் இருந்தவாறே சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.


 

















இன்னும் மதிய உணவு உண்ணவில்லை என்பதை உணர்ந்த போது மணி மதியம் மூன்று நடுக்காட்டில் இருந்தோம்வழியில் சோலைக்காடுகளில் இருந்து அருவிகளாக நீர் வழிய, மரப்பாலமாக இருந்த கருநீர்பாலம்ஓராண்டுக்கு முன்பாக 
கான்கீரிட் பாலமாக மாற்றப்பட்டிருந்தது.

கருநீர் பாலமென்றே அதனடியில் ஓடிய ஆறும் அழைக்கப்படுகிறதுதண்ணீர், கடந்து வரும் மூலிகை மற்றும் அப்பாறையின் நிறங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக கறுப்பாக இருந்தாலும் ஜில்லென்று பனிக்கட்டி போலவும் , சுத்தமான தண்ணீராகவும் இருந்தது.














அந்த பாலம்தான் அடுத்த பக்கம் செல்வதற்கான தடையாக ஒரு காலத்தில் இருந்ததாகவும் கூறினார் நம்முடன் வந்திருந்த வனத்துறை பணியாளர் திரு.ராஜ்குமார் அவர்களிடம் நாங்கள் கேள்விகணைகளை தொடுக்க பொறுமையாகவும்,தெளிவாகவும் பதில் சொல்லி கொண்டே வந்தார்.


மானாம்பள்ளி வனத்தில் யானை, புலி, காட்டெருது, சாம்பார் மான், காட்டு பன்றி, சிறுத்தை குரங்குகள் போன்ற விலங்குகளும்.


வெண்தேக்கு, கணக்க, பிள்ளைமருது, குங்கிலியம்,கூவாட்டி, சோள வேங்கை, பூவத்தி, மரவெட்டி போன்ற மரங்களையும் எங்களுக்கு இனம்பிரித்து காட்டினார்.

இடது புறமிருப்பது பிள்ளை மருது, மிகவும் கெட்டியானது. செதுக்கிய பகுதியை பார்த்தால் தெரியும். வலது புறமிருப்பது சாம்பிராணி மரமென்று சொல்லப்படும் குங்கிலிய மரம். கீழேயிருப்பது கூவை பூ. அதாவது கஸ்தூரி மஞ்சள் செடி பூ மட்டும் பூக்கும், மஞ்சள் வருவதில்லை.இதை காட்டு கூவை என்கிறார்கள்




சோலைக்காடுகளில் இருந்து வரும் தண்ணீர் பாணார்த்தி என்ற அருவியாக சேர, மானாம்பள்ளி மின்நிலையத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் ஒரு ஆறு வடிவமாக வர அதன் இடையில் பெரியாறு, மற்றும் கறுநீர் பாலம், பாணார்த்தி அருவி, இன்னும் பல பெயர் தெரியாத அருவிகளும் சிற்றோடைகளும் சேர்ந்து பரம்பிக்குளம் ஆறாக உள்நுழையும் இடம் நோக்கி பயணம் தொடர, வழியில் வனதேவதையாக அங்குள்ள மக்களின் நம்பிக்கை குடிக்கொண்டிருந்த இடத்தை காட்டினார், தைமாதத்தில் அங்கு பொங்கலிட்டு கொண்டாடுவதாக கூறினார்.




ஓரிடம் வந்தவுடன், இனி நடைப்பயணமாக செல்லவேண்டும் என்று சொல்லி, அவர் முன்னே செல்ல நாங்கள் அவரை பின் தொடர்ந்தோம், இலைகள் உதிர்ந்து மட்கி மண்ணோடு மண்ணாகியிருக்க மழை நீர் கலந்து ஒருவிதமான நிறத்தில் மண்ணிருக்க, வானுயர்ந்த மரங்களுக்கிடையே, அட்டைகளுக்கான மரியாதையாக உடைகளை தூக்கி பிடித்தவாறு உற்சாகமாக சென்றோம் ஒரு 30 நிமிட நடைக்கு பின்னால்

 

வனதுறையின் முகாம் கட்டிடம் வர அதிலிருந்து மீண்டும் இடது புறமாக கீழிறங்கினால் நாங்கள் பார்க்க வேண்டிய இடம் வந்தது, எல்லையற்ற மகிழ்ச்சியுடன் சென்றால் காண கண் கோடி வேண்டும் அத்தனை பேரழகு.

மான் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்க, ஒரு புறம் காட்டு பன்றிகள் விரிந்த புல் தரை தமிழக மற்றும் கேரள எல்லை மலைகளாக எழுந்து நின்ற கோலம் சொல்லில் விவரிக்க முடியாது.


அந்த வனத்தின் பாதை ஒரு பாறையில் முடிய அதில்தான் நின்று கொண்டிருந்தோம், மழையின் காரணத்தினால் பாறையிலிருந்து கீழிறங்கி செல்ல முடியவில்லை. அலுவலக ரீதியாக பெற வேண்டிய செய்திகளை பெற்றுக்கொண்டு மீண்டும் நடை பயணமாக ஜீப்பிற்கு திரும்ப, அத்தனை மழையிலும், குளிரிலும் அனைவருக்கும் வியர்வை அரும்பியிருக்க இருதய துடிப்பு அதிகமாயிருந்தது,



உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம், பேச வேண்டாம் என சொல்லி, அனைவரையும் ஆசுவாசப்படுத்தி, பின் தண்ணீர் கொடுத்தோம் பின் ஜீப் புறப்பட்டது, எதற்காக இந்த பயணம் என்பதை இப்போது ஒரு அதிகாரியாக நான் விளக்க, எங்கள் உதவி பொறியாளர்கள் மற்றும், பணியாளர்கள் முகத்திலும் மகிழ்ச்சி தெரிய, உணவை மறந்து மீண்டும் அது குறித்தான குறிப்புகளை திரு.ராஜ்குமார் அவர்களிடம் பெற்றுக்கொண்டு அவரிடம் விடைப்பெற்றோம்.






மீண்டும் வலது கால்விரலிடுக்கில் ஏதோ ஊர்வது போல் தெரிய ஏதுமில்லை என உறுதி செய்தபின் 7 கி.மீ தள்ளியிருந்த சோதனை சாவடி வந்த போதுதான் தெரிந்தது விரலிடுக்கில் இரத்த கசிவு, மீண்டும் அட்டை. பசி தெரியவில்லை,தாகம் தெரியவில்லை ஒரு சிறந்த பயணமாக அமைந்தது.


மீண்டும் வால்பாறையை பனிமூட்ட்த்தில் கடந்து பொள்ளாச்சி வந்து சேர்ந்தபோது,வனமாகியிருந்தேன்.


நன்றி: பொதுப்பணித்துறை,
வனத்துறை
,காவல் துறை,
திரு.ராஜ்குமார்.
திரு.ராஜு-ஓட்டுநர், திரு.ம்னோஜ்,
திரு.பழனிச்சாமி
,பொறி.சுமதி,
பொறி.கார்த்திகேயன்.


அன்புடன்-லீலா.

No comments:

Post a Comment