Wednesday 30 March 2016

மெல்லிய கோடு
மெல்லிய கோடு
வல்லினம் கொண்ட கோடுகள்
மெல்லியதாய் இருப்பதில்லை
இருபதுகளில்
மெல்லிய கோடு
மெல்லியாளின் உதடு
வளைவுகள் அழகு
கோடுகள் தெளிவு
நாற்பதுகளில்
மெல்லிய கோடு
அனுபவ ஏடு
காதரோம் கேச சுருளில்
வெள்ளியாய்
மெல்லிய கோடு
வாழ்ந்ததின் அடையாளம்
கண்ணாடி விழு
மெல்லிய கோடு
துல்லியமாய்
மெல்லியதில்லை
அழிந்ததாய் அறியவுமில்லை
ஆக்கமும் அழிவுமாய்
மெல்லிய கோடுகள்
மெல்லியகோடு ஆழம்

Tuesday 29 March 2016

இரு பறவைகள் மலை முழுவதும்............

"இசைஞானி இளையராஜா ஆயிரம்"

                       
ஓவியர் ரவி பேலட் வரைந்தது





இசை எத்தனை வசியம், அத்தனையையும் மறந்த பாமரனாய் ரசிக்க வைத்த இல்லை கட்டிப்போட்ட இசை வசியம், மொழி கடந்த நேசம் இசை, ஒரு கிதாரின் வாசிப்பில் கரகோஷங்கள் இசையாய் ஒலிக்கின்றன, சாதரணமாய் பாடலும்.இசையும் தான் இவர்களை தத்தெடுத்து இருக்கிறது என்று சொல்வதில் ஒரு அலட்சியம் தென்படுகிறது,ஆனால் தாலட்டையும்,ஒப்பாரியையும்,
தெம்மாங்கையும்,நம் நாட்டின் கலாச்சாரம் மாறாத காதலையும் உலகறியச் செய்த இவர்களை கண்டு வியக்கத்தான் முடிகிறது.


பாடலில்,இசையில்,ஒவியத்தில்,சிற்பத்தில் தழுவல்(நம்மவர்கள் மொழியில் காப்பி) இல்லாமல் இருக்க முடியாது,இது கலைகளில் மூழ்கி திளைத்து ரசிக்கும் ரசிகனுக்கும், படைப்பாளிகளுக்கும் தெரிந்த ஒன்று,ஏதொன்றும் இந்த பூமியிலிருந்தே எடுக்கப்பட்டது.

இதை உணர்ந்தவன் மகா ரசிகன்.


அலையோடும் ஒலியில், 
இலையுரசும் ஒலியில்,
பூமி தொடும் மழையில்
மரம் உறிக்கும் ஒலியில், 
அருவியின் ஒலியில்
பறவையின் சிறகு விரிக்கும் ஒலியில் 
என அனைத்திலும் உள்ள இசையை உணர்ந்து சுவைத்து, அதை அனைவரும் ரசிக்கும்படி நாம் இருக்குமிடத்திலேயே நம்மின் செவிக்கு கொடுக்கும் படைப்பாளியை கொண்டாடதான் வேண்டும்.


எத்தனை வருட படிப்பு, எத்தனை வருட பணியாற்றிய அனுபவம் இருந்தும் நம் துறையில் அருகில் இருப்பவர்கள் வியக்கும் வண்ணம் ஏதொன்றும் செய்ய இயலவில்லை, ஆனால் ஒரு துறையில் உலகம் வியக்கும் வண்ணம் சாதனை புரிந்த கலைஞனை நாம் பெற்றிருக்கிறோம் என்பது பெருமையாகதான் இருக்கிறது.


சிந்து பைரவியில் நானொரு சிந்து பாட்டில் அம்மி அரைச்சவ கும்மியடிச்சவ என்ற இடத்தில் இசைக்காமல் விட்டு அந்த இசையை உணர வைத்திருக்கும் வித்தையை ரசிக்காமல்தான் இருக்க முடியுமா,

இசைஞானி, மேஸ்ட்ரோ என்றெல்லாம் அன்புடன் அழைத்தாலும், சில நேரங்களில் இசையில் மூழ்கி அதை வர்ணிக்க வார்த்தை கிடைக்காத போது நம்ம “மொட்ட பாஸ்” மொட்ட பாஸ் தான் என உரிமையுடன் சிலாகிப்பது உண்டு.

ராஜாவின் பாடலில் பிடித்தப் பாடலை பட்டியலிட சொன்னார் ஒரு தோழி…

சும்மா,ராஜா சார் BOW வை வயலினில் வைத்தாலே போதும்,
அவரின் குரலில் பாடினாலே போதும் எனக்கு பிடிக்கும்.

இருந்தாலும்…..

சில UNIQUE SONGS எனக்கு பிடித்த சில பாடல்களை மட்டும் சொல்கிறேன்.மீண்டும் ஒருமுறை கேட்டுவிட்டு சொல்லுங்களேன்.


1.படம்: பூவிலங்கு.
பாடல்:ஆத்தாடி பாவாட காத்தாட…..
எழுதியவர் : வைரமுத்து.

பலரும் இப்பாடலை பற்றி பேசுவதை தவிர்த்து விடுவார்கள். கலையில் ஏது காமம்.கலை காதோடு கேளுங்கள்.

திரையிசையில் இதுவரை அதிகம் பயன்படுத்தப்படாத ராகமான "லவந்திகா" ராகத்தில்அமைந்த பாடல் இது. மனச் சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை போக்கும் வல்லமை வாய்ந்தது இந்த ராகம்.

பாடலைப் பற்றி பார்ப்போம்.கவிஞர் வைரமுத்து பேனாவில் “மை” க்கு பதிலாக காதலைஊற்றி எழுதியிருக்கிறார். 

இசையோ பேசும்.பின்னணி இசை குயிலி அவர்களோடு ஆடும். புல்லாங்குழல் இசையுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கும் இந்தப் பாடல் எந்தப் பரபரப்போ, ஆரவாரமோ இன்றி குறைந்த வாத்தியக் கோப்புடன்தான் பாடல் முழுக்கவே நகரும்.

ஆனால் கேட்கும் நம்மைக் கட்டிப் போட்டது / போடுவது ஜோரான அந்தத் தாளக் கட்டும், ராஜா பாடல் வரிகளை படு நேர்த்தியாகப் பாடிய விதமும் தான். 

குறிப்பாக, உன் வீட்டில் இந்நேரம் ஆளில்லையே என்ற வரிக்கு பின் வரும் இசை,‌‌ அடுத்த வரிக்கு கொடுத்திருக்க மாட்டார்.
அதே போல்.

அந்த வரி ஆண் குரலில் பாட அதற்கு பெண் பதில் சொல்லாமல் இசை பதில் சொல்லியிருக்கும். அட செவ்வாழையே எனும்  போது ராஜா சார் அவர்களின் குரல் SUSTAIN ஆகி குழைந்து கொஞ்சம் விட்டு பிடிக்கும். 

2.பாடல்          : ‘என் கண்மணி’
படம்           : சிட்டுக்குருவி
எழுதியவர்      : வாலி
இசை           : இசைஞானி

Counterpoint Technique-ஐ உபயோகித்து இசைஞானி உருவாக்கிய பாடல் ‘என் கண்மணி’, என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! இந்த Technique-ன் பிதாமகன் Johann Sebastian Bach (1685).

ஜெர்மனியைச் சேர்ந்த இந்த Composer பல்வேறு String Instruments-களை இசைப்பதில் வல்லுனர். 

இசைஞானியின் ஆதர்சம்! Western Music-ல் Classical & Complicated என்று அறியப்படும் Counterpoint Technique-ஐ, பாமரனும் ரசிக்கும் வகையில் எளிமைப்படுத்தித் தந்தது இசைஞானியின் வித்தை!

ஆண்           : பொன்
பெண்     : மஞ்சம்
ஆண்           : தான்
பெண்     : அருகில்
ஆண்           : நீ
பெண்     : வருவாயோ?

அதாவது ஆண் பாடுவதைத் தனியாகவும், பெண் பாடுவதைத் 
தனியாகவும், பிரித்துப் படித்தால், தனித்தனி அர்த்தம் வரும்.

அதாவது ‘பொன் தான் நீ’ என்கிறான் ஆண்.

‘மஞ்சம் அருகில் வருவாயோ?’ என்கிறாள் பெண்.

இரண்டையும் சேர்த்துப் பாடும்போது, ‘பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ?’ என்று பொதுவாக 
இன்னொரு அர்த்தம் வரும்.

மணியே மணிக்குயிலே,செங்கமலம் சிரிக்குது, யமுனை ஆற்றிலே,புத்தம் புது காலை(மேகா) போன்ற பாடல்களில் வரும் Trills எத்தனை அற்புதம்

ராஜாவின் இசையை ரசிக்க இசை பயின்று இருக்க வேண்டிய அவசியமில்லை,அவர் உணரும் இசையை அதன் நுணுக்கங்களை ரசிகர்களையும் உணர வைப்பதில்தான் அவரின் திறமை ஒளிர்கிறது.

இவரை Mozart, Beethovan, Bach, Chopin என்று நாங்கள் சொல்லிக் கொள்கிறோம்.

விவாதம் செய்யாமல் விடுங்கள்.
 இசைப்போம்.
🎻🎸🎻🎸🎻🎸🎻🎸🎻🎸🎻🎸🎻🎸🎻🎸🎻

இளையராஜாவையும், அவரது இசையைப் பற்றியும் தொகுக்கப்பட்ட சுவாரசியமான தகவல்கள்..
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Maximum number of new singers introduced by any music director.. more than 330 singers... from 1976 - till now...

👏🏻 ஒரு ஐந்து (5 minits) நிமிடங்கள் ஒதுக்கி இந்த பதிவை படிக்கவும்...நன்றி..!

🎼 இசைஞானி ILAYARAJA 10,000 பாடல்கள் இசையமைத்திருக்கிறார் என்பது ஒரு பிரம்மாண்டம் என்றாலும்,அந்த பாடல்களை ஒரு சாதாரண மனிதன் செய்வது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுவதைத் தடுக்கமுடியாது...

சரி இது ஒரு தெய்வீகம் குடிகொண்டிருக்கும் மனிதன் செய்தான் என வைத்துக் கொண்டாலும் அந்தப் பாடல்களில் அவர் செய்திருக்கும் நுட்பங்களைப்  பார்த்தாலே (கேட்டாலே) இசைஞானியை எதனோடு ஒப்பிடுவது எனப் புரியாமல் போகும்...

இசையை வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் இன்றைய Musician's_களுக்கிடையே , இவர் மட்டும் விதிவிலக்கு..

சங்கீதம் (Music) இது எதுவென்று தெரியாத பாமரன் நான், என்னுள் இசைஞானி ஏற்படுத்திய தாக்கத்தின் இசையை , அதன் நுட்பம் ரசிப்பது மட்டுமல்லாமல் இவர் இசையில் செய்த புதுமைகளை எண்ணிப் பித்தனானேன்..அப்படி ராஜா செய்த நுட்பங்களை(technical) பற்றிய பதிவுதான் இது...

1. 3-Track Recording வசதியில் முதலில் ஒரு பகுதியை பாடமுடியாத இடங்களில் விட்டுவிடச்சொல்லி ஒரு Track_ல் ரெக்கார்ட் செய்து, அதன் பின்னர் அடுத்த Trackல் விட்ட இடங்களைப் பாடி Record செய்து பிறகு இரண்டையும் Synchronization செய்து பதிவு செய்த பாடல்தான் "கண்மணியே காதல் என்பது கற்பனையோ.... காவியமோ...கண்வரைந்த ஓவியமோ...எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா...." இதுவரை யாரும் செய்யாதது மேலும் இதற்கு *முன்_பின்* யாரும் நினைத்துக்கூட பார்க்காதது..

2 🎵. ஸ்ரீ_ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் "சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டுப் போனபுள்ள..சோளம் வௌஞ்சு காத்துக் கிடக்கு", என்ற பாடல்தான்.இந்தப் பாட்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு..15 நிமிடத்தில் மெட்டமைத்து ராஜாவே பாடிய Title Song..(திரைப்படத்தில் ராஜா பாடிய first full song_கும் இதுதான்.. இதன் வெற்றிக்கு பிறகு, இவரே Title Song பாட வேண்டும் என வற்புறுத்தப்பட்டார்.

3 🎧. "நூறாவது நாள்" படத்தின் மொத்த Re_Recording_கையும் JUST அரைநாளில் செய்து முடித்து சாதனை படைத்தது...

4 🎤. ஒரு முறை "அமிர்தவர்ஷினி" என்ற ராகத்தை அடிப்படையாக கொண்ட பாடலை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் (மழையை வரவழைப்பதற்குண்டான தனித்துவமுடைய ராகம் அது) Recording_ஐ முடித்து விட்டு பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி..யாரும் வெளியிலே செல்ல முடியாதபடி கனத்த மழை..(முறையாக மெட்டமைத்துப் பாடினால் மட்டுமே இது சாத்தியம்) ராகதேவனுக்கு மட்டுமே இதுவரை சாத்தியப்பட்ட ஒரு விசயம் இது....

5 🎧. " ரீதி_கௌளை " எனும் ராகம் இதுவரை சினிமாவில் பயன்படுத்தப்பட்டதே இல்லை, முதன் முதலாக ராகதேவன்தான் *கவிக்குயில்* எனும் படத்தில் ''சின்னக் கண்ணன் அழைக்கிறான்..ராதையை பூங்கோதையை" என்னும் பாடலில் முதன்முதலில் சினிமாப் பாட்டின் தலையில் உட்கார்த்தி வைத்தார்...

6🎹. ரஜினி, ஸ்ரீதேவி நடித்த *காயத்ரி* படத்தில் வரும் "வாழ்வே மாயமா.. வெறுங்கதையா" எனும் பாடலில்தான் இந்தியத் திரை இசை வரலாற்றில் முதன் முறையாக Electric PIANO (எலெக்ட்ரிக் பியானோ) வாசிக்கப்பட்டது (உபயோகிக்கப்பட்டது)

7 🔊. COUNTER POINT (கௌண்டர் பாயிண்ட்) என்னும் யுக்தியை முதன் முதலில் பயன்படுத்தியது சிவகுமார் நடித்த *சிட்டுக்குருவி* என்ற படத்தில் இடம்பெற்ற " என் கண்மனி என் காதலி..இளம்மாங்கனி_ உனைப் பார்ததும் துடிக்கின்றதே துடிக்கின்றதே...நீ சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ நகைச்சுவை மன்னனில்லயோ..." என்ற பாடலில்தான்....

8 🔔. ஞானி *செஞ்சுருட்டி* ராகத்தில் உருவாக்கிய ஒரே பாடல் *16வயதினிலே* படத்தில் வரும் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. கோழிகுஞ்சு வந்ததுன்னு.. பூனைக்குட்டி சொல்லக்கேட்டு. யானைக்குட்டி வந்ததுன்னு.... கதையில்ல சாமி இப்போ காணுது பூமி" என்ற பாடல் மட்டும்தான்...

9 🎻. "சிகப்பு ரோஜாக்கள்" படத்தின் இசைக்கு 12 வயலின் 2 செல்லோ வெறும் 10,000/- ரூபாயில் முடித்தது....

10 📯. ரஜினி நடித்த *முள்ளும் மலரும்* படத்தில் வரும் "ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனெக்கொரு கவலைமில்லே" என்ற பாடலை 'அந்தோலிகா' எனும் ராகத்தின் அடிப்படையில் *நாடோடி பாடலாக*அமைந்த இந்த இசையை மிஞ்ச இன்னொருவன் பிறக்கவுமில்லை,இனிமேல் பிறக்கப் போவதுமில்லை....

11🔇.தமிழ்படவுலக வரலாற்றில் முதன்முதலில் *STEREOPHONIC*(ஸ்டீரியோ) தொழில்நுட்பத்தில் அதுவும் வெளிநாட்டில் முழப்பாடல்களையும் பதிவுசெய்து பயன்படுத்தியது ரஜினி,ஸ்ரீதேவி நடித்த "பிரியா" படத்தில் தான் ....

12 ⌛. மோகன்,சுஹாசினி நடித்த *புதிய பார்வை* படத்தில் வரும் "பருவமே புதிய பாடல் பாடு...இளமையின் பூந்தென்றல் ராகம் " என்ற பாட்டிற்கு தொடையில் தட்டி தாளத்திற்கு(இசைக்கு) புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி....

13 📌. விசிலில் மெட்டமைத்து அதற்கு இசையமைத்தவர் இளையராஜா, ரஜினி,மாதவி நடித்த *தம்பிக்கு எந்த ஊரு* படத்தில் இடம்பெற்ற "காதலின் தீபமென்று ஏற்றினாலே எந்நெஞ்சில்... ஊடலில் வந்த சொந்தம் ...காதல் வாழ்க" என்ற பாடல் தான்....

14 📣. இந்தியத் திரையிசைத் துறையிலேயே யாருமே செய்திராத,செய்யமுடியாத சாதனையாக, படத்தோட கதையைக் கேட்காமலேயே, பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டுமே வைத்து, அதற்கு மெட்டமைத்துப் பாடல் பதிவு செய்து ராஜா இசையமைத்து கொடுத்த படம் ராமராஜன்,கனகா நடித்த *கரகாட்டகாரன்*.....

15 👻. வாயசைவை மட்டும் வைத்து அதற்கு பொருத்தமான பாடல்களை கமல் நடித்த *ஹேராம்* படத்திற்கு உருவாக்கியது இதுவரை இசையுலகில் யாரும் செய்திராத சாதனை....

16 🎺. இதுவரை யாரும் ஒரு பாடலுக்கு மட்டும் 137 இசைக்கருவிகளை பயன்படுத்தியது கிடையாது, அப்படி இசைஞானியால் பயன்படுத்தப்பட்ட பாடல் ரஜினி நடித்த *தளபதி* படத்தில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. சொல்லடீ இன்னாள் ஒரு சேதி" என்ற பாடல்தான் அது....

17 🎷சத்தியராஜ் நடித்த *அமைதிப்படை* படத்தில் வரும் அதிபயங்கர ரேப்(RAPE) சீனுக்கு வெறும் புல்லாங்குழல், தபேலாவை மட்டும் வச்சி வாசித்து தியேட்டரையே மிரட்டி வைத்தது....

18 🎸.ரேவதி  குருடராக நடித்த *அவதாரம்* என்ற படத்தில் வரும் "சந்திரரும் சூரியரும்" பாடலில் இசைஞானி அதில் தனி ஆவர்த்தனமே நடத்தியிருப்பார்..*GRANDEUR'S MUSIC* (க்ராண்ட்யூர் இசை) அறிமுகப்படுத்தியது இந்த பாடலில்தான்...

19 🔖ரஜினி நடித்த *மன்னன்* படத்தில் இடம்பெற்ற "அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காத உயர்வில்லையே" என்ற பாடல் பாடகர் K.J.ஜேசுதாஸ்_க்கு பல விருதுகளையும் ,எந்த மேடைகளில் அவர் பாடச் சென்றாலும் அனைவராலும் திரும்பத் திரும்ப (once more) கேட்க வைத்த பாடல் மட்டுமல்லாது, திருச்சி நகரில் அருள்மிகு ஐயப்பன் சன்னதி கல்வெட்டில் முழுப்பாடலையும் பொறித்து வைக்கப்பட்டுள்ளதையும் , Audio_அனுதினமும் ஒலித்துக் கொண்டேயிருப்பதையும் காணலாம்...

20 🎨. *சிம்பொனி* கம்போசிங் பண்ண குறைஞ்சது 6 மாதமாவது ஆகும்..ஆனால் 13-நாட்களிலேயே வாசித்து முடித்து உலகையே திரும்பிப் பார்த்து பிரமிக்க வைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்....

🙏🏾 அவர் என்றென்றும் நீடூழி வாழவும்... என்றுமே அவர் இசைப் பயணம் தொடரவும், இன்னும் இசைஅற்புதங்களை நிகழ்திடவும்... வாழ்த்திடுவோம், 
💐🌺🌹


அன்புடன்
- கோ.லீலா.