Friday 23 December 2016

விவசாயிகள் தினம்............



வெண்முகில் கறுத்து கருக் கொள்ளுமோ
வான் பார்த்த மண்ணில் மழையாகுமோ
காற்றழைத்த திசைத்தேடி மேகம் போகுமோ?
கழனி நனைக்க மழையாக  சொரியுமோ?

கண்ணீர் மாரியில்  கழனி விளையுமோ?
வான் பார்த்து களைத்து போகிறான்
விளைச்சல் இன்றி இளைத்து போகிறான்
உணவின்றி  தன்னையே உரமாக போடுறான்

விடிந்த பொழுதிலும் விடியாமல் வாழ்கிறான்
மண்ணில் உயிரோடு புதைந்து போகிறான்
தினம் விவசாயியை நினைக்க மறந்தவன்
விவசாய  தினமதில் திளைக்க சொல்றான்

சின்னஞ்சிறு  விதையை சோறா ஆக்குபவன்
அதற்கு உதிரத்தை வியர்வையாய் ஊற்றுபவன் 
இன்று மண்ணுக்கு  விவசாயி  உணவாகிறான்
நாளை மண்மட்டுமே நமக்கு உணவாகும் 





-அன்புடன் லீலா........

Tuesday 20 December 2016

சமூக காதல்..........






மருதாணி பூசி
மல்லிகைப்பூ சூடி
மயங்கவச்சி போறவளே
சொல்லாத சொல்லால
மணலுல மீனபோல
துடிக்கதடி உசிரு
என்னானு கேட்டுப்போ
மரம்வெட்டி பொழக்கிற
மனுசபய வாழும்ஊரு
மரம் நடுவோம்நூறு
ஆக்கிடுவோம் அறுநூறு-பின்
படிப்போம் அகநானூறு.

மூக்குத்தி அணிஞ்சி
முல்லைப்பூ சூடி
முகம் காட்டி போறவளே
குழலுல காத்துப்போல
சுத்துதடி உசிரு
கதயேதும் கேட்க
மறுக்குதடி மனசு
என்னானு கேட்டுப்போ
காஞ்ச வயலுல
கதிரும் விளையில
மறைஞ்சி நிக்கவழியில்ல
தண்ணியில்லேன்னா
கதிருமில்ல காதலுமில்ல
தண்ணிநிக்க வழிசெய்வோம்
பின்னாலே காதல்செய்வோம்……

கண்ணாடி வளையலடுக்கி
கனகாம்பர பூச்சூடி
கனகமணியணிஞ்சி போறவளே
கானகத்து வண்டா                       
சுத்துதடி என்உசிரு
சொல்லாத சொல்லால
சொக்கட்டான் ஆடுதடிமனசு
என்னானு கேட்டுப்போ
தண்ணியள்ளி குடம் நிறைச்சு
இடக்கையால் அதஅணைச்சி
நடக்குமழகு பார்க்க
ஆயிரம் கண்வேணுமடி
தண்ணி நிறைக்க
ஊத்துக்கண்ணு இல்லையடி
ஊரெல்லாம் காஞ்சிகிடக்கு
உறவெல்லாம் வாடிகிடக்கு
கூடிகிடப்பது மட்டுமில்லைகாதல்
கூடிஉழைப்பதும்தான் காதல்
நல்ல மழைபெய்ய
நாடும் வளம்பெற
மரம் கோடிநடுவோம்-பின்
மனம் நாடிகூடுவோம்…..

-அன்புடன் லீலா
நன்றி-புகைப்படம்: தீபா ஜேக்கப்.


Sunday 18 December 2016

வால்பாறை……. வால்பாறை………………


வணக்கம் நண்பர்களே……………..
                 


பத்து வருடமாக அடிக்கடி அலுவலக பணி மற்றும் சுற்றுலா என பலமுறை சென்று வந்த இடமான வால்பாறை பற்றிதான் இன்று பேச போகிறோம்.ஆரம்ப காலத்தில் ஊட்டியை விட வால்பாறைதான் மிகவும் பிடித்த இடமாக இருந்தது. ஆனால்,வனம் அழிந்த கதையும்,தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் அடிமைப்படுத்தப்பட்ட கதையும்,வால்பாறை மீதிருந்த ஈர்ப்பை குறைத்துவிட்டது.
                
எனினும்,இயற்கையின் பேரழகு பாரபட்சமற்றது……………
சரி வாங்க, வாங்க சீக்கிரம் வண்டியிலே ஏறுங்க…………..அப்போதான் நிறைய இடம் பார்க்கலாம்….
தண்ணீர்,தீனி,முதலுதவி பெட்டி,காமிரா எல்லாம் எடுத்துக்கோங்க……….
                            
வால்பாறை பற்றிய கதையை சொல்லிக்கிட்டே போகலாம்……..
பொள்ளாச்சியிலிருந்து ஆழியார் வழியா வால்பாறை போகணும்.மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள்,அதில் 32 கொண்டை ஊசி வளைவுகள் ஏற்றம்,8 கொண்டை ஊசி வளைவு இறக்கம்….
3914 அடி உயரத்தில்(elevation)ல இருக்கு…
                       
வால்பாறை இப்போ இருக்கிற மாதிரி அப்போ இல்லை………..
ஆமாம் பெரிய அடர் வனமா இருந்திருக்கு
              
1864 ல் இராமசாமி முதலியார் என்பவர் வால்பாறையில் முதன் முதலாக தனது சொந்த எஸ்டேடில் காபி பயிரிட்டார்,ஆனால் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லைன்னு சொல்லி தன்னுடைய இடத்தை வித்திருக்கார்.அதே வருடம் கர்நாடக  காபி கம்பெனி மதராஸ் அரசிடம் வால்பாறையில் கொஞ்சம் இடம் கேட்டது.அரசும் ஏக்கர் ரூ5.00 என்ற விலைக்கு இடம் கொடுக்க சம்மதித்தது, அதில் கர்நாடக  காபி கம்பெனி காபி பயிட்டது,அதுவும் விளைச்சல் சரியாக இல்லாததால்,அவர்களும் மக்களிடம் இடத்தை விற்றுவிட்டனர்.இன்று அந்த இடம் தான் ஒரு பகுதி வேவர்லி எஸ்டேட் என்றும் இன்னொரு பகுதி வாட்டர் பால்ஸ் எஸ்டேட் என்றும் அழைக்கப்படுகிறது..
                 
1875 ஆம் வருடம் இங்கிலாந்தின் இளவரசர் வேல்ஸ் எட்வார்ட் VII இந்தியாவிற்கு வந்தார்.அவர் வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்,அதனால் க்ராஸ் ஹில் பகுதியில் வேட்டையாட விரும்ப,அவரது வருகையை முன்னிட்டு முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக மக்கள் முகாமிட்டனர்,குறிப்பாக ஆங்கிலேயே மக்கள் அதிகமாக அந்த முகாமில் இருந்தனர்,அதனால் அந்த பகுதி ஆங்கில குறிச்சி என்று அழைக்கப்பட்டது,தற்சமயம் அந்த இடம் அங்கலகுறிச்சி என அழைக்கப்படுகிறது.

அடடா,என்ன மேம் இந்த ஆங்கிலேயர்கள் எங்கெல்லாம் வந்திருக்காங்க…
ஆமாம்,இளவரசர் வருவதற்காகன் சாலை,ரயில் பாதைகள்,விருந்தினர் மாளிகை என அனைத்தையும் புதிதாக அமைத்தனர்,இதற்காக வனம் அழிக்கப்பட்டது. இந்த பணிக்காக வீரர்கள்,யானைகள்,குதிரைகள் பயன்படுத்தப்பட்டனர்,ஆனால் சில காரணத்தால் இளவரசர் வேல்ஸ் வேட்டையாட வரவில்லை..
           
ஏன் லீலா?
காரணம் சரியா தெரியலை,ஆனா அந்த நேரத்தில் விலங்குகளுக்கு நல்ல நேரம் ன்னு நினைக்கிறேன்.
              
1877 ம் வருடம், அரசு ஒரு முடிவு எடுத்தது,அதாவது இந்த காடழிப்பால்,விலை மதிப்பற்ற மழை, காடு, மற்றும் அரிய வகை மரங்கள்,விலங்குகள் அழிவதால், இனி காபி பயிடுவதற்கு நிலம் தருவதில்லை என்பதுதான் அந்த முடிவு. நிறைய தேக்கு மரங்கள் காணாமல் போனதால் எஸ்டேட் முதலாளிகளுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் சச்சரவு ஏற்பட்டது.
                                                 
அப்போ எப்படி தேயிலை தோட்டம் வந்தது லீலா?
சொல்றேன்… கேளுங்க அதுக்கு முன்னாடி நாம் இப்போ இருக்கிற இடம்தான் அங்கலகுறிச்சி.
என்னப்பா நிறைய மண் பானை விற்பனை இருக்கு…….
அங்கலகுறிச்சி மண்பானை, மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள்,பொம்மைகள் போன்ற பொருள்கள் கிடைக்கும் இடம்.

1890ல் விண்டில் மற்றும் நார்டன் என்பவரும் அரசிடம் காபி பயிரிட நிலம் கேட்டனர், அங்குள்ள நீராதரங்களிலிருந்து வரும் தண்ணீர் எல்லாம் வீணாக கொச்சின் வழியே  அரேபியன் கடலில் கலந்து விடுகிறது,எங்களுக்கு அனுமதி கொடுத்தால் அந்த தண்ணீரை வைத்து நிலத்தில் பயிரிட்டுக் கொள்கிறோம் என காரணம் சொல்லி, அரசை நிலம் தர சம்மதிக்க வைத்தனர்.
                          
அரசும் நிலத்தை கொடுக்க, விண்டில் முதல் வேலையாக என்ன செய்திருப்பார் ன்னு நினைக்கிறீங்க?
என்னப்பா suspense வைக்கிற…………….
விண்டில் தன்னுடைய நிலத்தில் இருந்த அத்தனை மரத்தையும் வெட்டி சாய்த்தார்…..
அச்சோச்சோ…….
ஆமா,போன முறை மழைக்காடுகள்  பற்றி பேசும் போது சொன்ன மாதிரி விண்டில் காட்டை அழிச்சவுடனே அவருக்கு வளமான மண் உடைய நிலம் கிடைச்சுது…….
அட தனியாளா எப்படி இதெல்லாம் செஞ்சிருப்பார்…..
ஆமா நல்லா கேட்டீங்க.
சரி  வலது பக்கம் பாருங்க,குரங்கு அருவி….
விடுமுறை நாட்களில் அதிகமா கூட்டம் வரும்….
இடது பக்கம் பிரியும் சாலையில் போனால் ஆழியார் அருவி போகலாம்,வழியில் சமமட்டக் கால்வாய் பார்க்கலாம்,மலையாள கரையோரம் பாடல் படமாக்கப்பட்ட இடம் இந்த சாலை……
லீலா,நிறைய ஷூட்டிங் நிறைய பார்க்க வாய்ப்பு இருக்குமோ……
நிறைய ஷூட்டிங் நடக்கும்…………
காதலிக்க நேரமில்லை படம் ஆழியாரில் தான் படமாக்கப்பட்டது, விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடல் ஆழியார் ஆய்வு மாளிகையில்தான் எடுக்கப்பட்டது.
              
 இந்த பொன்னான கைகள் புண்ணாகலாமா? பாடல் இந்த சாலையில்தான் படமாக்கப்பட்டது…….
சரி வால்பாறையை பற்றி சொல்றேன்…..
தனியா எதையும் செய்ய முடியாதில்லையா……அதற்காக   மார்ஷல் என்ற  மிகுந்த திறமையும்,17 வருட அனுபவம் கொண்ட முதுநிலை(senior) அலுவலரை வர செய்து ரூ250 மாத சம்பளத்திற்கு  எஸ்டேடில் பணியிலமர்த்தினார்….கார்வல் மார்ஷல் சிறந்த பணியாளர் மட்டுமில்லை,மக்களிடம் இனிமையாக பழக கூடியவராகவும் .நோயுற்றவர்களுக்கு மருந்தாகவும் இருந்தார்.அதனால் மக்களின் அன்புக்குரியவராக ஆனார்,அவரை மக்கள் ஆனைமலையின் தந்தை என அன்புடன் அழைத்தனர்,பின்னாளில் அவரது சிலையை அவரது மனைவி அனுப்பி வைத்தார்.
               
சரி அப்படியே திரும்பி பாருங்க அதுதான் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு இப்போ பார்த்தோம்ல அந்த காட்சி முனை. அந்த சாலையை பாருங்க, ஆங்கிலேயே அரசர்களின் வருகையை முன்னிட்டு போடப்பட்ட சாலை,இதை வடிவமைத்த லோம்ஸ் என்ற பொறியாளாரின் பெயரில் அந்த இடம் Loams view point என அழைக்கப்படுகிறது.இந்த வளைவுக்கிட்டே தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு நிறைய இருக்கும். மலையில் செங்குத்தாக நடக்க கூடியவை இந்த ஆடுகள் . 
                  
வால்பாறை போகும் வழியில் கவர்கல் என்ற இடத்தில் கார்வல் மார்ஷலின் சிலை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.அவர் கை நீட்டும் திசையை நோக்கினால் பரம்பிக்குளம் தெரியும் என்பது கூடுதல் தகவல்.
                         
1898 ல்  மார்டின் என்பவர் சிறுகுன்றா எஸ்டேட்டை உருவாக்கினார்.
1896ல் Passion Quince company Aency யின் உஅதவியோடு ரூபி தேயிலை கம்பெனியை உருவாக்கினார்.இவர்கள் தான் 1927 ல் நல்லகாத்து மற்றும் இஞ்சிபாறை எஸ்டேட் என 1939 ல் 5204 ஏக்கர் நிலத்தை தேயிலை தோட்டமாக்கி இருந்தனர். இந்த பகுதி ஸ்டேன்மோர் க்ரூப் னுடையது.
                                       
 ஷேக்கல் முடி ன்னு பஸ் போகுது…
ஆமா,ஷேக்கல் முடிங்கிறது ஒரு க்ரூப்(M/s parry agro industries ltd.,1904 ல் கார்வர் மார்ஷும் காங்கேரு ம் கல்லாயான பந்தல் எஸ்டேடில் ர்ப்பர் பயிட்டனர், கல்லாயான பந்தல் என்ற பெயர் பழங்குடியினரின் கடவுளின் பெயரான கல்யாணி என்ற பெயரிலிருந்து வைக்கப்பட்டது.
கவர்கல் வந்தாச்சு கொஞ்ச நேரம் இறங்கி பாருங்க….
வெள்ளமலை க்ரூப்( m/s periya karamalai tea produce co ltd.,)1925-1937  க்குள் 1038 ஏக்கர் தேயிலை பயிடப்பட்டு வெள்ளமலை,காஞ்சமலை தேயிலை எஸ்டேட்டாக உருவெடுத்தது. கார்வர் மார்ஷல் 1911ல் தொடங்கிய பணியை 1927 வரை தொடர்ந்தார் 777ஏக்கர் நிலத்தை தேயிலை பயிரிட்டனர்.
            
சரி சரி அங்கே பாருங்க பாலாஜி கோயில் போற வழி வந்தாச்சு….
என்ன மேம் கோயிலுக்கு போவீங்களா என்ன?

J நண்பர்களுக்காகவும்,அங்கே பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையின் பேரழகிற்கும் நான் அடிமை என்பதாலும் கோயிலுக்கு வரலாம்தானே J
                              
இங்கு அதிகாலையில் வந்தால் பனிபடர்ந்த தேயிலை தோட்டமும் பனியில் நிழலாய் தெரியும் உயர்ந்த மரங்களும் பார்க்க பார்க்க கண் குளிரும் காட்சி.அங்குள்ள மலர்களும் மனதிற்கு இதமளிக்க கூடியவை.சரி வாங்க கொஞ்சம் நடக்கலாம்.கொஞ்ச நேரம் பேசாமல் அப்படியே இயற்கையோட ஒன்றி போகுதல் ஒரு தவம்…..ஒரு 10 நிமிடம் எனக்கு கொடுங்க, நீங்களும் எடுத்துக்கோங்க……
                          
லீலா நேரமாயிடுச்சி வாங்க………….
சரி வாங்க,,பக்கவாட்டில் பார்த்துகிட்டே வாங்க தேயிலை தோட்டமும்,அதில் பணி புரியும் பெண்கள்,ஆண்கள் எல்லாம் தெரிவாங்க…
இந்த தேயிலை தோட்டத்தை பார்க்கும் போதெல்லாம் ஆமை படுத்திருப்பது போல் தோன்றும் எனக்கு.
என்னப்பா இன்னும் பனி இருக்கு…..
ஆமா,சில நாட்களில் நாள் முழுக்க பனியிருக்கும் சில நேரங்களில் சூரிய ஒளிப்பட்டு தேயிலை இலைகளிலிருந்து ஆவியாகும் பனியை பார்க்கும் போது பெண்கள் தலை குளித்த பின் சாம்பிராணி புகை போட்டுக் கொள்வது போல் இருக்கும்.இந்த ஆறு பெயர்தான் கூழாங்கல் ஆறு.
                     
சரி அங்கே பாருங்க அதுதான் வேளாங்கண்ணி மாதா கோயில் போன்றே வடிவமைக்கப்பட்ட தேவாலயம்,மிகவும் அமைதியான இடம் தண்ணீரின் சலசலக்கும் ஓசையுடன் அந்த இடம் ஒரு சொர்க்கம்.
                
அடடா! என்ன ஒரு அற்புதமான இடம்….
இருங்க இருங்க இன்னுமொரு அற்புதமான இடத்திற்கு போக போறோம்…
பசுமை,குளுமை,மனதிற்கு இதமளிக்கும் இந்த காட்சிகளின் பின்னே ஒளிந்திருக்கும் மாபெரும் கண்ணீர் கதைகளை அடுத்த உரையாடலில் கூறுகிறேன்.
இப்போ,காட்சிகளை கண்டு களிப்போம்.
இருங்க தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பெண்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம்.
என்ன சில இடத்தில் தேயிலை செடியெல்லாம் வெட்டிட்டாங்க ?
அதுக்கு பெயர்தான் கவாத்து செய்றது…
கவாத்து என்பது செடியின் கிளைகளை வெட்டி சரி செய்தல்,முக்கியமாக கவாத்து செய்வதன் மூலம் இலை பறிக்கும் மட்டம்,காய்ந்த மற்றும் நோய் தாக்கிய செடிகளின் கிளை வாதுகளை வெட்டி எடுக்க முடியும்.
 சரி அந்த அற்புதமான இடம் என்ன சொல்லுங்க லீலா.
ஆங், அதுதான் சின்னார்  நீர்வீழ்ச்சி…..
சின்னார் தமிழகத்தின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் அளவிற்கு மழை பெறும் பகுதி.( தற்சமயம் மாயேஷ்வரம் தான் இந்தியாவில் அதிக மழை பெறும் இடம்).
வாங்க வாங்க….இந்த பாலம் தாண்டி போனால் falls. அதோ பாருங்க…
இனிமே யாரும் பேச மாட்டாங்க………. நானும்,நீங்களும் கூட அந்த பேரழகை பாருங்கள்……….
             


                                
சரி கிட்டதட்ட 30 நிமிடத்திற்கு மேலே ஆயிடுச்சி  வாங்க திரும்பி போகணும்,யானை வரும்…
சரி நீரார் ஆய்வு மாளிகையில் கொஞ்சம் ஓய்வு எடுத்திட்டு போகலாம்…..
இந்த குளுமை,அமைதி இதுதான் சொர்க்கம்…
அக்காமலை க்ராஸ் ஹில்(Grass hill) போறோம்.. இந்த புல் படுக்கைதான் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவியை தக்க வைத்து கடை மடை பகுதி வரை தருவதற்கு உதவும் இந்த புல்வெளி,இதில் சற்று அடர்வான மழைக்காடுகள் தெரிகிறதா அந்த பகுதியில் காட்டு பசுக்கள்(Indian gaur) இருக்கும்.                 
போட்டோ எடுத்தாச்சா சரி வாங்க போகலாம்…………. வரையாடுகள் இங்கேயும் அதிகமா இருக்கும்.
             
இன்று வால்பாறையில் ஓய்வு எடுத்துக்கலாம்.காலையில் சோலையார்
போகலாம்…

              
சரி நண்பர்களே, வேறொரு நாள் சந்திப்போம்.நன்றி

-அன்புடன் லீலா.

Monday 5 December 2016

அம்மு


Dedicated to Ammuchellam.

மலைப்பூவே என் மனப்பூவே
என் அன்பான செல்லக்கிளி
இவள் ஓடி வர ஒளிந்திருக்க
பார்க்கையில் பூவாக சிரிக்கிறாள்
நினைக்கையில் தேனாக இனிக்கிறாள்
சின்னஞ்சிறுபூசிந்தும் சிரிப்பில்
நெஞ்சம் நெகிழ்ந்ததென்ன
அள்ளி அணைக்கையில்
ஆசை பெருகுகையில்
என்னை மறந்ததென்ன
மூக்கு கடித்துமுத்தம் கொடுக்க
நெஞ்சம் குளிர்ந்ததென்ன
சித்திர சேலையில்
சின்னஞ்சிறு பூவை காண
உள்ளம் சிலிர்த்ததென்ன
இவளோடு நானிங்கு
வாழ்கின்ற நாளெல்லாம் தேன்
எனை இவள்  கொஞ்சாத
நாளெல்லாம் வீண்
சொந்தமென பந்தமென
எனை  தொடரும் உறவுதான்
நினைக்கையில் இனிப்பாக இருக்குது

என் மனம் எங்கெங்கோ பறக்குது.
-அம்முவிற்கு அம்மாவின் அன்பு முத்தங்களுடன்....

Thursday 24 November 2016

மழைக்காடுகள்……………………..


வணக்கம் நண்பர்களே…………

இன்னைக்கு முக்கியமான அதே நேரத்தில் சுவாரசியமான ஒன்றைப்பற்றி பேச போகிறோம்,அதோடு தேவையான செய்தியும் கூட……………..
             
காடு என்றால் என்ன? என்று கேட்டால் நிறைய மரங்கள் இருக்கும், மிருகங்கள் இருக்கும்,காடு இருந்தால் மழை வரும்  என்பது தவிர  பெரிய புரிதல் இல்லாமைதான் இன்றைய தட்ப வெட்ப சூழலின் சீர்கேட்டுக்கு காரணமாயிற்று.
மழைக்காடுகள்
                                                     
முதலில் காடு,வனம்,கானகம்  என்றால் ஒன்றா வேறுவேறா? என்பதை பார்ப்போம்………

காடு என்பது மனிதனின் முயற்சியாலும் உருவாக்க முடியும். இதை ஆங்கிலத்தில் forest  என்று சொல்கிறோம். காடுகள் சூரிய ஓளி ஊடுருவ கூடியவை.

வனம் என்பது  தன்னியல்பில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்து செழித்து வளர்ந்தது தான் வனம், இங்கு பல்லுயிர்களின் பெருக்கம்  இருக்கும். இதை ஆங்கிலத்தில் Jungle என சொல்வார்கள். வனத்தை ஒரு நாளும் மனிதனால் உருவாக்க முடியாது. வனம் அல்லது கானகத்தில் சூரிய ஒளியின் ஊடுருவல் இருக்காது.
சூரிய் ஒளி ஊடுருவாத அடர் மரக்கவிகை
               
கானகம் என்பது மலை சார்ந்த பகுதியில் உள்ள வனம்தான் கானகம்.
இதில் மழைக்காடுகள் எதில் சேரும் என்று பார்ப்போம்…………..

மழைக்காடுகளை சோலைக்காடுகள் என்றும் கூறுவது உண்டு. ஆங்கிலத்தில் Rain forest or Shola forest  என்று கூறுவர். இந்த மழைக்காடுகள் வனம் அல்லது கானகம் என்று சொல்லும் தன்னியல்பு காடுகள் இதை மனிதனால் உருவாக்க முடியாது.

மழைக்காடுகள் ன்னு சொல்றோமே ஏன்?

ஏன்னா, பேருக்கேத்த மாதிரி மழையை தரக்கூடிய காடுகள் இவை.

அப்போ மழை குறைஞ்சிடுச்சே?

ஆமாம் மழை குறைஞ்சிடுச்சி ஏன் எனில் மழைக்காடுகள் மரணித்துக் கொண்டிருக்கின்றன.அதை மனிதனால் உருவாக்க முடியாது.
                                         

மழைக்காடுகள் என்பதை எப்படி அறிவது?

நண்பர்களே நாம இப்போ வனத்திற்குள் போக போறோம்,அதற்கு தேவையான உணவு,தண்ணீர்,கம்பூட்,மற்றும் முதலுதவி பெட்டியுடன் தயரா…………

இது  ஒரு எதிர்பாராத பயணமாக இருந்தாலும்,உற்சாகமான பயணமா இருக்கும் வாங்க போகலாம். பயமாயிருக்கவங்க,ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சிக்கோங்க, அப்படியே எனக்கு பின்னால் வாங்க……….

மேடம் மரமெல்லாம் உயரமா இருக்கே

மழைக்காடுகளின் முதல் அடையாளம் உயரமான மரங்களும்,அதன் அடர்வான மரக் கவிகையும் ஆகும் (Canopy).இது உலகத்தின் பகுதியில் 6% சதவீதம் மட்டுமே உள்ளது,எனினும் உலகித்திலுள்ள பாதி அளவுக்கு மேலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இந்த மழைக்காடுகளில்தான் இருக்கின்றன.

 பார்த்து மெதுவா வாங்க…….

லீலா,இது மண் மாதிரி இல்லையேப்பா….

ஆமாம்  அது மண் இல்லை,இங்குள்ள இலைகள் விழுந்து மட்கி போய் மருநிலமா இருக்கு,லேசா மழைச்சாரல் எப்பவுமே இருக்கும்,காலை அழுத்தி வச்சு கவனமா வாங்க.இந்த மண் மழைக்காட்டின் இரண்டாவது அடையாளம்.
மழைக்காட்டின் மண்
             
குளுகுளுன்னு இருக்கு இல்லையா இது மழைக்காடுகளின் மூன்றாவது அடையாளம்….

அதாவது உயரமான மரங்கள் அடர்ந்த மரக் கவிகை,மட்கி போன இலைகளால் ஆன மண்,குளுமையான பகுதி இதுதான் மழைக்காடு இல்லையா லீலா…

Exactly தோழரே….அப்படியே சூரிய ஓளியும் இல்லைபாருங்க…

லீலா! லீலா!

என்ன மேடம்,ஏன் என்ன ஆச்சு இருங்க வரேன்…….
அட அட்டை ! சரி பயப்படாதீங்க,இருங்க அதை எடுத்திடுறேன்….
ரத்தம் லீலா, பயமாயிருக்கு.

ஆமா, இனிமே வராது அட்டைய எடுத்திட்டேன்ல…
பயப்படாம  வாங்க……

சரி கொஞ்சம் உட்காருங்க..

இந்த வனத்தில் கிட்டதட்ட 30ஆயிரம் வகை தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன Exotic flowers  மற்றும் அழகிய மலர்கள் எல்லாம் இங்கே இருக்கு.
BROMELIADS
Add caption
              
தினசரி நாம் பயன்படுத்தும் பல உணவு,மருந்து ஆகியவை இவ்வகை வனத்தில் இருந்துதான் கிடைக்கின்றன.
உரங்குத்தான்
எடுத்துக்காட்டாக சாக்லேட்,பட்டை லவங்கம், ரப்பர்,அன்னாசி பழம்,மருந்து வகைகள்.
ரப்பர் மரம்
                 
லீலா கொஞ்சம் தண்ணீ கொடுங்க….

இருங்க தோழிகளே…. வனத்தில் நடந்து பழக்கமில்லாத காரணத்தினால் மூச்சு வாங்கறீங்க,இந்த ஜில்லுலேயும் வேர்க்குது பாருங்க…வாயால மூச்சு விடாதீங்க,மூச்சு சமன் ஆன பிறகு தண்ணி குடிங்க
சரி நடங்க….
CARNIVEROUS PLANTS
               
  
எப்படி இந்த வனத்திற்குள் குளுமை,இருட்டு,ஈரப்பதம் என்ற ஒரு அற்புதமான சூழல் எப்படி வந்தது என்பது பற்றி சொல்றேன் கேளுங்க.

சூரியனின் கதிர்கள் நேரடியாக,காற்றை சூடாக்காது அல்லது வெப்பப்படுத்தாது,மாறாக


 இவ்வனத்திற்குள் சூரிய வெளிச்சம் ஊடுருவி புகாததால் மண்ணில் உள்ள நீர் எளிதில் ஆவியாவதில்லை,இதனால்தான் மண் எப்போதும் ஈரப்பதத்தோடு இருக்கிறது,அதோடு காற்றின் ஈரப்பதத்தையும் நிலையாக வைத்திருக்கிறது.

வெற்று நிலத்தின் (barren land) மீது இந்த சூரிய கதிர்கள் படும்போது நிலம் சூடாகி அதனால் நிலத்தையொட்டியுள்ள காற்றும் சூடாகிறது,அப்படி சூடான காற்றின் அடர்வு குறைவினால் மேலேறும்போது வளிமண்டலம் சூடாகிறது. ஆனால் நிலம் மரங்களால் போர்த்தப்பட்டிருந்தால், அதன்  வெப்பநிலை குறிப்பிட்ட அளவுக்கு மேல்  காற்றின் வெப்பநிலை உயராது.மரங்கள் நீராவியை வெளியிட்டு மரங்களின் மீது படும் வெப்பத்தை தணித்துக்கொள்கின்றன. வனத்தில் உள்ள மரங்களின்  உயரமும்,அடர்த்தியும் அதிகரிக்க அதிகரிக்க,உட்புற குளுமையும் அதிகரிக்கிறது.
                                   

  இந்த வனத்திலுள்ள மரங்கள் சுமார் 200 அடி உயரம் இருக்கும்,இந்த மரங்களுக்கு உச்சியில் அடர்வான கிளைகளுடன் கூடிய இலைகள் உண்டு,ஆனால் இதன் தண்டு(Trunk) பகுதியில் கிளைகள்  கிடையாது.மரக் கவிகை(CANOPY) ஒரு குடை போல் விரிந்திருப்பதை பாருங்கள்.
இந்த வனத்தில் உயிரினங்கள் மூன்று நிலைகளில் வாழ்கின்றன.அதாவது அடர்ந்த மரக்கவிகையின் மேல் இருவாச்சி பறவைகள், உரங்கொட்டான் போன்ற குரங்கு வகைகள், வாழ்கின்றன.

இரண்டாவது தரைப்பகுதி(forest floor) இப்பகுதியில் மான்,சிறுத்தை,யானை,காட்டு எருது போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழ்கின்றன.
                   
மூன்றாவது, வனத்திலுள்ள நீர்நிலைகளில் வாழக்கூடிய அரிய வகை
மீன்கள்,  நீர்நில வாழ்விகள்(Amphibians) போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன.



EMERGENT LAYER

The tallest trees are the emergents, towering as much as 200 feet above the forest floor with trunks that measure up to 16 feet around.   Most of these trees are broad-leaved, hardwood evergreens. Sunlight is plentiful up here.  Animals found are eagles, monkeys, bats and butterflies.




 


 CANOPY LAYER

This is the primary layer of the forest and forms a roof over the two remaining layers.   Most canopy trees have smooth, oval leaves that come to a point. It's a maze of leaves and branches.  Many animals live in this area since food is abundant.   Those animals include: snakes, toucans and treefrogs.



UNDERSTORY LAYER

Little sunshine reaches this area so the plants have to grow larger leaves to reach the sunlight.   The plants in this area seldom grow to 12 feet.  Many animals live here including jaguars, red-eyed tree frogs and leopards.  There is a large concentration of insects here.


 FOREST FLOOR

It's very dark down here.  Almost no plants grow in this area, as a result.  Since hardly any sun reaches the forest floor things begin to decay quickly.  A leaf that might take one year to decompose in a regular climate will disappear in  6 weeks.   Giant anteaters live in this layer.

 

இந்த அற்புதமும், உயிரினங்களின் செழிப்பும் இயற்கையின் பெருங்கொடை,இந்த பெருங்கொடை தரும் அற்புதம்தான் மழை,இந்த மழையை வேறு எந்த வனத்தினாலும் தர இயலாது.
         

ஆனால் இத்தகைய அற்புதத்தை,மனித இனம், இல்லை இல்லை உலகின் அனைத்து உயிரினங்களின் உயிர்நாடியினை நாம் பாதுக்காக்கிறோமா?

லீலா,நீண்ட தூரம் வந்துவிட்டோம் போலிருக்கிறதே…………..

ஆமாம்…..

திரும்பி செல்ல வழி தெரியணுமே

கவலை படாதீர்கள்….மதி கெட்டான் சோலை இல்லை இது……..

சரி உட்காருங்க கொஞ்ச நேரம்….

இந்த வனத்தின் மரணம்...

இல்லை தானாக நிகழந்தால் தான் மரணம். இது மரங்களின் படுகொலை.

ஆம் அதைதான் இந்த மனித குலம் நிகழ்த்தி கொண்டிருக்கிறது.
மரங்களை வெட்டி,காகிதம் செய்து,அதில் மரத்தை வெட்டாதே என எழுதும் மாபெரும் அறிவாளி சமூகம் தான் நாம்.

மழைக்காடுகள் எங்கெங்கு உள்ளது என்பதை பார்ப்போம்.

மத்தியஅமெரிக்கா,அமேசான்,ஆப்பிரிக்கா,தென் ஆசியா,ஆஸ்டாலாசியாஆகிய பகுதிகளில் மழைக்காடுகள் உள்ளன.  கீழே கொடுக்கப்பட்டுள்ள உலக வரைப்படத்தில் அடர் பச்சை வண்ணத்தில் இருப்பவை மழைக்காடுகள் ஆகும்.

         

சரி எங்கெங்கே இருக்குன்னு சொன்னேன் இப்போ அதை பற்றி சொல்றேன்………..


மத்திய அமெரிக்கா:
ஒரு காலத்தில் இந்த பகுதி முழுவதும் மழைக்காடுகளாக இருந்தது. பின்னாளில் கால்நடைகளின் பண்ணைகளுக்காவும், மற்றும் கரும்பு பயிடவும் இந்த வனம் அழிக்கப்பட்டது.

                                                
மத்திய அமெரிக்காவின் வனத்திலும்,சதுப்புநில காடுகளிலும் வெப்ப மண்டல பறவைகள் குறிப்பாக பல்வேறு வகையான கிளிகள் இங்கு உண்டு.

அமேசான் வனம்:
                                       
அமேசான்  வனம்தான் உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல மழைக்காடு ஆகும்.உலகின் இரண்டாவது மிக பெரிய ஆறான அமேசானின் வடிநிலம் முழுவதும் இவ்வனம் தான்.உலகின் 1/5 பங்கு தாவர இனங்களும்,பறவைகளும்,1/10 பங்கு பாலூட்டி வகைகளும் இந்த அமேசான் வனத்தில்தான் உள்ளன.

மத்திய ஆப்பிரிக்கா:
உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு இதுதான்.மபெரிய தீவான மடஸ்கார் மிகவும் அடர்வான வனமாக இருந்தது,ஆனால் இப்போது அழிய துவங்கிவிட்டது.


                 

மடஸ்கார் தீவில் உயர் மேகக் காடுகள்,சதுப்பு நிலக்காடுகள்,வெள்ளகாடுகள் நிறைந்த பகுதியாகும்.உலகில் எங்கும் காண இயலாத அரிய வகை தாவர வகைகளும்,விலங்கினங்களும் இங்கு உண்டு.





மேக காடுகள்
வெள்ள காடுகள்
   










தென் ஆசியா:

ஆசியாவின் மழைக்காடுகள் இந்தியாவிலும்,மலேசியாவின் மேற்கு பகுதியாக இருக்கும் பர்மாவிலும் மற்றும் ஜவா மற்றும் போர்னீயோ தீவின் கிழக்கிலும் உள்ளன. உலகின் அதிக அளவிலான சதுப்பு நில காடுகள் பங்களாதேஷில் உள்ளன.
.
சதுப்பு நில காடுகள்
 

தென்கிழக்காசியாவில் வருடம் முழுவதும் சூடான மற்றும் ஈரபதமுள்ள பருவநிலையும்,ஆசியாவின் முக்கிய பகுதிகளில் மித வெப்ப மண்டலமாகவும்,தொடர் பருவ மழையை தொடர்ந்து வறட்சி வரும் பகுதியாகவும் உள்ளது.




ஆஸ்ட்ரேலியா:

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு,ஆஸ்ட்ரேலியா,நீயுசிலாந்து,மற்றும் புது ஜீனியாவின் தீவுகள் தான் தென்கண்டத்தின் பெருங்காடுகளை உருவாக்கின.இன்று வேறெங்கும் காண இயலாத விலங்குகள் உள்ளன.


                         

ஆஸ்ட்ரேலியாவின் வெப்ப மண்டலக் காடுகள் மிகவும் அடர்வானது,பசிபிக் பெருங்கடலிருந்து ஈரக்காற்று  வீசும் வழியில் உள்ளது.

இந்த காடுகள் எல்லாம் இருக்கும் போது ஏன் மழை வரவில்லை?
இந்த காடுகள் அழிந்துக்கொண்டிருக்கின்றன,அதை பற்றி சொல்றேன் கேளுங்க……………

ஒரு கவிஞன் எழுதினான்,

அய்யோ,

அந்த பியானோவை வாசிக்காதீர்கள்,
அதில் இருவாச்சியின் கதறல் கேட்கிறது. என்று

எத்தனை உண்மையான துயரமிகு வார்த்தைகள்.

மழைக்காடுகளில் ஒவ்வொவ்வொரு மரம் வெட்டுப்படும் போதும் இருவாச்சிகளின் கதறல் காற்றில் கரைந்த வண்ணம் இருக்கிறது.
பெரு மரங்கள் வெட்டுப்படும் போது பல்லாயிரக் கணக்கான சிறு மரங்கள்,தாவரங்கள் மீது சாயும் போது வனத்தின் அழிவு ஒரு பூகம்பம் போல்,ஒரு சுனாமி போல் வனம் அதிர்ந்து ஓய்கிறது.மரங்களின் குருதியின் வீச்சம் தூக்கம் கெடுத்து நாசிகளை வருத்துவது……..

              

வனம் அழியும்போது உயிரினங்களின் கூக்குரல்,
நம்மை நோக்கி கொடுக்கப்படும் அபாய ஒலியல்லவா?

சரி நடங்க…………
வனம் என்றாலே வெட்டு மரங்களுக்காக என  நினைத்து கொள்வதுதான் பிரச்சனையின் ஆரம்பம்…

                 
இப்படி ஒரு பெரும் வனம் அழிக்கப்படும் போது அங்குள்ள சிறு தாவரங்களால் மீண்டும் அத்தகைய வனத்தை உருவாக்க இயலாது, ஏனெனில்,பல்லாயிர ஆண்டுகளாக இருட்டிலும்,ஈரப்பதத்திலும் வளர்ந்த தாவரங்கள், பெரும் மரங்கள் வெட்டப்பட்ட பின் வரும் சூரிய ஓளியை தாக்குப் பிடிக்க முடியமால் அழிந்து விடும்.

அங்கு வாழ்ந்த பல உயிரினங்களும் இடம் பெயர்ந்து வேறு பகுதிக்கு சென்றுவிடுவதால் உயிரினங்களின் செறிவும் அழிந்துவிடுகின்றன.
இயற்கையான மழைக்காட்டை அழித்த பின் ஒரு போதும் மழைக்காட்டை மனிதனால் உருவாக்க முடியாது.பெரு மரங்களை அழித்து விட்டு மறு காடு உருவாக்குவது என்பது ஏமாற்று வேலைதான்.

மரங்களை விற்பதன் மூலம் வரும் வருமானம் ஒரு பக்கம்,பெரும் நிலப்பரப்பு கிடைக்கும் அதுவும் இவ்வனத்தின் அற்புதமான மண் வளமும் கூடுதல் பரிசாக கிடைக்கும்,அதோடு சில வனங்கள் கனிம சுரங்கங்களாகவும் மாறும்,மேலும் இந்த நிலப்பரப்பில் பண பயிர்களை பயிரிடுவதும் இன்னொரு புறம் என பல்வேறு காரணங்களுக்காக வனங்கள் அழிக்கப்படுகிறது.

           
ஒரு வளமான அரை அங்குல மண் உருவாக பல்லாயிர ஆண்டு காலமெடுத்துக் கொள்கிறது.,இதில் பண பயிர்களை பயிரிடும் போது முதல் அறுவடையின் போது செழிப்பான பயிர்கள் கிடைக்கும்,இம்மண் வளம் சில ஆண்டு காலம் கிடைத்தாலும்,மரக்கவிகையற்ற இந்நிலத்தில் நேரடியாக பொழியும் மழையால் நாளடைவில் மண்ணரிப்பால் இவ்வளம் அகற்றப்படுகிறது.
SOIL PROFILE.
               
இப்படி பெரு மரங்களை வெட்ட அனுமதியளித்துவிட்டு,ஆங்காங்கே சிறிதளவு காடுகளுக்கு  பாதுக்காப்பு அளிப்பதன் மூலம்,அவ்வனம் முழுதும் சுதந்திரமாக அலைந்து திரிந்த உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட  பகுதிக்குள் முடங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது, தரைவாழ் உயிரினங்களின் உணவு சுழற்சியில் தடை ஏற்படும்,பறவைகளின் வலசை மற்றும் விலங்கினங்களின் பாரம்பரிய வழித்தடங்களும் பாதிப்பு அடைகின்றன.
              


சரி நண்பர்களே! யானையின் மணம் வருகிறது,அருகில் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.கவனம்………….

மேலும் காடுகள் பெருகுவது தடைப்படும்?

எப்படி மேடம்?

பெரு மரங்களின் மரக்கவிகையில் வாழும் பறவைகள் கூடிழந்து வேறு இடம் பெயர்ந்து விடுவதால் எச்சத்தின் மூலம் விதைகள் பரவுவது தடைப்பட்டு விடுகிறது,அதே போல் மகரந்த சேர்க்கையும் முற்றிலும் தடைப்படுவதால் பாதுக்காக்கப்பட்டதாக சொல்லப்படும் வனங்களின் பரப்பளவும் நாளடைவில் குறைந்துவிடுகிறது.

                   

உலகத்தில் மித வெப்பமண்டல காடுகள் இருக்கும் நாடுகள் எல்லாம் ஏழை நாடுகளின் பட்டியலில்தான் உள்ளன.எ-கா: ஆப்பிரிக்கா

இத்தகைய ஏழை நாடுகள் தன் வருமானத்திற்காக காடுகளை அழிப்பதாக ஒரு மாயை உருவாக்கப்படுகிறது,ஆனால் உண்மை வேறு…………

சில பன்னாட்டு வங்கிகள்,நம் நாட்டின் வளர்ச்சிக்காக மிகுந்த அக்கறையும்,கவலையும் கொண்டு நமக்கு கடன் கொடுக்க,அதை கட்ட திணறும் போது,பன்னாட்டு வங்கிகளுடன்  உறவு கொண்டிருக்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள்  நமக்கு உதவ முன் வருவதும்,அவர்கள் காட்டை,நீர்நிலைகளை அழிக்க கூடிய  தொழிலை அபிவிருத்தி செய்து,அதன் மூலம் வரும் வருவாயில் பெரும் பகுதியை அந்நிறுவனங்களே விழுங்குவதும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.


மலையில் மூன்றில் இரண்டு பங்கு வனமாக இருக்க வேண்டும்.ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும்,அப்படியிருப்பதுதான் ஒரு நாட்டின் வளத்திற்கு அறிகுறி……..

மரங்களை அழித்தால் நாடு என்னவாகும்?

ஒரு மனிதனின் நுரையீரல் அழிந்தால் என்னவாகும்…………….பூமியின் நுரையீரல் காடுகள்தான்…நுரையீரல் அழிவுற்றால் பூமியின் வாழ்வு என்னவாகும்……….
                
அனைத்து நீராதரங்களும் காட்டின் மடியில்தான் உற்பத்தியாகிறது.காடுகள் அழிந்தால் நீர் நிலைகள் அழியும்,மழை குறையும்………

             
இயற்கை தன்னை புதுபித்து கொள்ளும்,ஆனால் இந்த மனித இனம் மாண்டு போகும்….

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அறிவாளிதனம் தான் காட்டை அழித்து நாட்டை மேம்படுத்துவதில் வெளிப்படுகிறது…………

இன்றும் கூட,வீடு கட்டும்போது தனது செல்வ செழிப்பை காட்ட பர்மா தேக்கு, வெண் தேக்கு,பிள்ளை மருது, என பல்வேறு மரங்களை வெட்டி சாய்க்கிறது இந்த மனித இனம்.

சரி நேரமாயிடுச்சி,திரும்பி போகலாம்,கொஞ்சம் வேகமா நடங்க, இருட்டுறதுக்கு முன்னாடி காட்டை விட்டு வெளியே போகணும்………….
          
இப்படி காகிதம், மரவேலை என பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்படும் மரங்களால் பூமி வெப்பமயமாகிறது.பொதுவாக நிழல் தரும் மரம் வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெய்யிலின் தாக்கத்தை  குறைத்து தருகிறது.அப்படியென்றால் மழைக்காடுகள் எந்த அளவுக்கு வெப்பத்தை குறைக்கும் என யோசித்து பாருங்கள்.

              

அதே போல் அவை அழிக்கப்படும் போது பூமியின் வெப்ப தன்மை எந்த அளவுக்கு உயரும் என்பதையும் யூகித்துக்கொள்ளுங்கள்.இப்படி பூமி வெப்பமடையும் போது பல உயிரினங்கள் அழிவதால்,உயிர் சங்கிலியின் கண்ணி பாதிக்கப்படுதல்,உணவு சங்கிலியின் சமன் பாதிக்கப்படும்,அதோடு பூமியின் தட்ப வெட்ப சூழல் முற்றிலும் மாறி மழையின் அளவு,பருவ காலம் அனைத்தும் மாறி விடுகிறது.

ஒரு மரம் என்பது இரண்டு தொழிற்சாலைக்கு சமம்.


                 


ஒன்று ஆக்ஸிஜன் தயாரிக்கும் தொழிற்சாலை, இன்னொன்று கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிழுத்து கொள்ளும் தொழிற்சாலை.ஒரு மரம் ஒரு வருடத்திற்கு 118 கிலோ ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

                    
ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் ஒரு வருடத்திற்கு  வெளியிடும் ஆக்ஸிஜன்,18 மனிதர்கள் ஆயுள் முழுதும் சுவாசிக்க உதவுகிறது.ஒரு ஏக்கரிலுள்ள மரங்கள் காற்றிலுள்ள 2.6 டன் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்கின்றன. மரங்கள் நிறைந்த காடுகள் மனித குலத்திற்கு உதவும் நுரையீரல்.மேற்கு தொடர்ச்சி மலை சுமார் 900மீட்டர் உயரம் உடையது அதன் மீது உயரமான மரங்கள்(tall trees) இருந்தால்தான் கடலிலிருந்து ஆவியாகும் நீரை மேகமாக கருக்கொள்ள செய்து மழை பெற முடியும்.

ஆனால் மழைக்காடுகளை அழித்து, தேயிலை தோட்டமாக்கி மகிழ்ந்திருக்கும் மனித குலத்தின் அறிவிற்கு இன்னும் எட்டவில்லை மழைக்காடுகள் மட்டுமே மழை தருமென்று.மழைக்காடுகள் இருந்த பகுதிகள் பச்சையம் சுரண்டப்பட்ட இலை போன்று ஆங்காங்கே காடுகள் அழிந்து விட்டன.
                                    
வனத்தை பற்றிய அறிவோ, உணர்வோ,அக்கறையோ இல்லாதவர்கள் எப்படி வனத்தை பாதுக்காக்க முடியும்.இத்தனையும் உள்ளவர்கள் வனத்தின் மைந்தர்கள் ஆன பழங்குடியினர்தான்,அவர்களை  இணைத்துக் கொள்ளமால் வனங்களை பாதுக்காக்க இயலாது,ஏனெனில் தைல மரங்களின் அணி வகுப்பை காடுகள் என நம்பி ஏமாந்து கொண்டிருப்பவர்கள் தான் நாம்.மழை தரும் காடுகளை அழித்து, நிலத்தடி நீரை உறிஞ்சும் தைல மரங்களை வனமென்று நம்புவதிலிருந்து முதலில் மனிதர்களை மீட்டெடுக்க வேண்டும்.

இப்படி,வனங்களின் பயன்களை பட்டியலிடலாம், தற்சமயம் மழை இல்லை என்பதால் மட்டுமே காடுகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இவர்கள் முதலில் உணர வேண்டியது மழைக்காடுகளை மனிதனால் உருவாக்க முடியாதென்பதும், இவர்கள் நடுகிற மரங்கள் எல்லாம் காடுகளை அதுவும் மழை தரும் காடுகளை உருவாக்காது என்பதைதான்.ஒரு லட்சம் ஈட்டி மரங்கள்,செம்மரங்கள் போன்ற மரங்களை நடுவதால் மழைக்காடுகளை உருவாக்க முடியாது.
ஆப்பிரிக்க பழங்குடி பெண்
அமெரிக்கா யானோமினர்



ஜெனீவா ஹுலியினர்
காடுகளில் வாழும் பழங்குடியினருடன் இணைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு காடுகளை பாதுகாக்கவும், பல்லுயிரியத்தையும், சூழல் மண்டலங்களையும் பாதுகாக்க உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி  நண்பர்களே………..
               

-அன்புடன் லீலா