வெண்முகில் கறுத்து கருக் கொள்ளுமோ
வான் பார்த்த மண்ணில் மழையாகுமோ
காற்றழைத்த திசைத்தேடி மேகம் போகுமோ?
கழனி நனைக்க மழையாக சொரியுமோ?
கண்ணீர் மாரியில் கழனி விளையுமோ?
வான் பார்த்து களைத்து போகிறான்
விளைச்சல் இன்றி இளைத்து போகிறான்
உணவின்றி தன்னையே உரமாக போடுறான்
விடிந்த பொழுதிலும் விடியாமல் வாழ்கிறான்
மண்ணில் உயிரோடு புதைந்து போகிறான்
மண்ணில் உயிரோடு புதைந்து போகிறான்
தினம் விவசாயியை நினைக்க மறந்தவன்
விவசாய தினமதில் திளைக்க சொல்றான்
சின்னஞ்சிறு விதையை சோறா ஆக்குபவன்
இன்று மண்ணுக்கு விவசாயி உணவாகிறான்
நாளை மண்மட்டுமே நமக்கு உணவாகும்
-அன்புடன் லீலா........
No comments:
Post a Comment