வணக்கம் தோழமைகளே............
எழுபத்தியேழு மில்லியன்
மக்களையும் ,130,060 சதுரகிலோ மீட்டர்
நிலப் பரப்பினையும் கொண்ட நம் தமிழகம்,
பாசன வரலாற்றில் நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்டது மிக துல்லியமான கணக்கீடுகளும், பகிர்மான முறைகளும்
கையாளப்பட்டிருப்பது தமிழர்களின் நுண்ணறிவுக்குசான்றாகும்.
உலகின் பல்வேறு பகுதிகளை சார்ந்த பொறியாளர்கள்
,நமது முன்னோர்களின்
அணை கட்டுமானம், நீர்பங்கீடு, மற்றும் விவசாய முறைகளை
கண்டு வியந்து நின்றதோடுஅம்முறைகளைபயின்றும்இருக்கிறார்கள்,இத்தகையபெரும்பாரம்பரியம்கொண்டதமிழர்களின்மகுடத்தில்இன்னொருஜொலிக்கும்கல்லைப்பதித்ததுபரம்பிகுளம்ஆழியார்திட்டம்ஆகும்.
பொறியியல்துறையில், இந்தநூற்றாண்டில் எட்டப்பட்ட
சாதனையாகும். இத்திட்டம்
ஒரு முன் மாதிரி திட்டமாகும் .இச்சாதனை பொறியாளர்களின்
சிறந்த நுண்ணறிவாலும், கருத்தாக்கத்தாலும்
,நிறைவேற்ற கொண்ட துணிச்சல்,தன்னலமற்ற உழைப்பு ,பின்வரும் சமூகத்துக்கு
உதவிட வேண்டுமென்ற தளராத எண்ணம்,
ஆகியவற்றால் சாத்தியமாயிற்று………..
என்ன லீலா, ஒரு பொறியாளரா நாம தெரிஞ்சிக்க வேண்டிய
செய்திதான் இன்னைக்கு போல……………
அடடே வாங்க வாங்க……………பரிமள், செல்வா, அனிதா………
அங்கே பாருப்பா, எங்க அலுவலக தோழிகளும்
வராங்க………
அறிமுகமானவங்க தானே……………… வாங்க நல்லதா போச்சு,முக்கியமான செய்திதான்……………….. பொறியாளர்கள் மட்டுமில்லை
எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்தான்……………..
அனிதா: சரி சொல்லு அப்படி
என்னதான் அதிசயம்?
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் தமிழ்நாடு-கேரள மாநிலங்களுக்கிடையே
நிறைவேற்றப்பட்ட ஒரு பல நோக்குத் திட்டமாகும்…
பல ஆறுகளை இணைக்கும்
மாபெரும்திட்டம், இதற்கு ஈடாக
வேறெந்த திட்டமும் கிடையாது…..
செல்வா: அப்போ interlinking of rivers ந்னுசொல்லலாமா? எந்த எந்த ஆறுகள் எல்லாம் இணைச்சிருக்காங்க…………..
இந்த திட்டத்தில் எட்டு
ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளன….
ஆனைமலைஆறு ,நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம்ஆறு, தூணக்கடவுஆறு, பெருவாரிப்பள்ளம்ஆறு, ஆகிய ஆறு ஆறுகள் ஆனைமலை
மலைக்குன்றுகளில் அமைந்துள்ளன
ஆழியாறு மற்றும் பாலாறுஆகியவை சமவெளிகளிலும் அமைந்துள்ளன….
இவைகளை தான் இணைத்து
இந்த திட்டம் உருவாகியுள்ளது…………..
பரிமள்: பரம்பிக்குளம்ஆறு ,தூணக்கடவுஆறு, பெருவாரிப்பள்ளம்ஆறுகளுக்கு
குறுக்கே இருக்கும் அணைகளை தானே பார்த்தோம்……………..
சரியா சொன்ன………..
சியாமளா: லீலா அப்போ வடிநிலம் (Basin)
மாறி இருக்கா?
நீங்க கேட்க வர விஷயம் தான் இந்த திட்டத்தோட மாபெரும் சாதனை
ஒரு வடிநிலம் மட்டுமல்ல ,இரண்டுக்கும்
மேற்பட்ட வடிநிலங்களுக்கிடையே நீர்மாற்றமும் ,ஏழு ஆற்றுப்படுகைக்குகளிடையேயும் நீர்மாற்றம் செய்யப்படுள்ளது. (Interbasin transfer of water)
செல்வா:லீலா என்ன என்ன வடிநிலம், ஆற்றுப்படுகைன்னு
சொல்லு
வடிநிலம்ன்னு பார்த்தா
மூன்று பெரியவடிநிலங்கள், அதாவது பெரியாறு வடிநிலம்,சாலக்குடிவடிநிலம், பாரதபுழா வடிநிலம் .நீரார்
, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார்
,பாலாறு ஆகிய ஆற்றுப்படுகைகளிடையே நீர்பரிமாற்றமும்தான் இந்ததிட்டத்தின்
முக்கிய செய்தி.
அனிதா: சரி
யார் இந்ததிட்டத்தை உருவாக்கியது?
அருமையானகேள்வி. 1921ல் திரு. R.N.ஆரோக்கியசாமி முதலியார் என்பவர்,மதராஸ் பொதுப்பணித்துறையில் தலைசிறந்த பொறியாளராக பணியாற்றினார்,
பின்னாளில் மதராஸ் மகாணத்தின் அமைச்சர் ஆனார் (பிரிட்டிஷாரின்ஆட்சியின்கீழ்) இவர் தான் மேற்கு நோக்கி பாயும் சாலக்குடி ஆற்றை கிழக்கு நோக்கி திருப்ப
ஒரு திட்டத்தை தலைமைப் பொறியாளாரிடத்தில் சமர்ப்பித்தார். இத்திட்டம் அப்போது போதிய கவனத்தை
பெறவில்லை.
பின்னாளில், வேட்டைக்காரன்புதூர்
மற்றும் ஆனைமலை பகுதியை சார்ந்த விவசாயிகள் பரம்பிக்குளம்ஆற்றின் தண்ணீரை அரேபியன்கடலில் வீணாக கலப்பதை தடுத்து கிழக்கு நோக்கி
திருப்ப வேண்டுமென போராடினார்கள்,பின் மறைந்த திரு,V.K.பழனிச்சாமி கவுண்டர்.M.L.C உடன் விவசாயிகள் திரும்பவும்
கருத்துரு கொடுக்க திரும்பவும் அதே நிலை.
திரும்ப மாநிலங்கள்
மாற்றியமைக்கப்பட்ட பின் (re organization) தமிழக அரசு பொதுப் பணித்துறையின்
தலைமை பொறியாளார் அவர்களை அணை குறித்து ஆய்வு செய்ய ஆணை வழங்கியது, அதனை தொடர்ந்து பொறிஞர் திரு.ஆன்ந்தராவ் அவர்கள் ஆரம்ப
நிலை ஆய்வினை செய்து (preliminary investigation) செய்து அதில்
நீரார் மற்றும் சோலையார் ஆகிய ஆறுகளையும் இத்திட்டத்தில் சேர்த்து கருத்துருவை அரசுக்கு
1959ல் சமர்ப்பித்தார்.
அதன் பிறகு திட்டத்திற்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் வெற்றிகரமாக தொடங்கின.
பரிமள்: என்ன
லீலா ஒப்புதல் வாங்கவே
இவ்வளவு வேலை செய்யணுமா?
ஆமா பரிமள் ,தளபணிகள்
மேற்கொள்வது அவ்வளவு எளிதல்ல, அதுவும்,மலைகளும்,
அடர்ந்த காடுகளும்,வனவிலங்குகளும், சின்னஞ்சிறு வண்டு மற்றும் பூச்சிகளும் உள்ள இடத்தில் ,இத்தகைய பணியை மேற்கொள்வதென்பது பெரிய சவாலாகவே இருந்தது. இன்று போல் அன்று தொழில் நுட்ப
வசதி இல்லையென்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சியாமளா: ரொம்ப
suspense ஆ இருக்கு லீலா,
பிறகு எப்படி ஆரம்பிச்சாங்க சொல்லுங்க.
சொல்றேன், நாம்
நினைக்கிற மாதிரி முதலில் நீரார் சிற்றணை ஆரம்பிக்கப்படவில்லை……….
செல்வா: அப்புறம்…………
சொல்றேன், அதாவது
நீர் போக்கின் வழியை கொண்டு இந்ததிட்டத்தை முதலில் சொல்கிறேன், பிறகுகட்டுமான பணியின் வரிசை முறை,
சொல்கிறேன்,அப்போதான் இந்ததிட்டம் தெளிவா புரியும்.
அனிதா: என்னப்பா
ஒருகாபி, டீ ஏதாவது சாப்பிடலாமா?
கண்டிப்பா, வால்பாறை
டீ இருக்கு, வாங்க…………..
செல்வா: சொல்லு
லீலா, டீ போட்டுக்கிட்டே பேசுவோம்……….
சரி செல்வா,……..
இந்த மாபெரும் திட்டம் 11 அணைகளையும்,4 மின் உற்பத்தி நிலையங்களையும்,
8சுரங்கபாதை வழிகளையும், மற்றும் 10 கால்வாய்களையும் கொண்டதாகும்.
அணைகள்
1.மேல்நீராறுசிற்றணை
2.கீழ்நீராறுஅணை
3.சோலையாறுஅணை
4.பரம்பிக்குளம்அணை
5.தூணக்கடவுஅணை
6.பெருவாரிப்பள்ளம்அணை
7.மேல்ஆழியாறுஅணை
8.ஆழியாறுஅணை
9.திருமூர்த்திஅணை
சுரங்கப்பாதைகள்
1.மேல்நீராறுசுரங்கப்பாதை
2.கீழ்நீராறுசுரங்கப்பாதை
3.சோலையாறுசுரங்கப்பாதை
4.பரம்பிக்குளம்சுரங்கப்பாதை
5.சர்க்கார்பதிசுரங்கப்பாதை
6.சமநிலைக்கோட்டுக்கால்வாயில்உள்ள
நவமலை சுரங்கப்பாதை
மற்றும் சிறு சுரங்கப்பாதைகள்
மின்உற்பத்தி நிலையங்கள்
1.சோலையாறுமின்உற்பத்திநிலையம்எண்
1
2.சோலையாறுமின்உற்பத்திநிலையம்எண்
2
3.சர்க்கார்பதிமின்உற்பத்திநிலையம்.
4.ஆழியாறுமின்உற்பத்திநிலையம்.
5.ஆழியாறுஅணைசிறுபுனல்மின்நிலையம்.
6.திருமூர்த்திஅணைசிறுபுனல்மின்நிலையம்.
கால்வாய்கள்
1.சமநிலைக்கோட்டுகால்வாய்
2.ஆழியாறுஊட்டுக்கால்வாய்
3.சேத்துமடைக்கால்வாய்
4.வேட்டைக்காரன்புதூர்கால்வாய்
5.பொள்ளாச்சிக்கால்வாய்
6.பரம்பிக்குளம்பிரதானகால்வாய்
7.உடுமலைப்பேட்டைகால்வாய்
8.திருமூர்த்திஅணைஉயர்மட்டக்கால்வாய்
அனிதா: டீ
ரெடி வாங்க
சூப்பரா இருக்கு டீ………………..
பரிமள்&சியமாளா:சொல்லு சொல்லு அப்புறம் எங்கேயிருந்து ஆரம்பிக்குது
இந்த நீரோட்டம்.
மேல்நீரார்:
மேல்நீராறு |
நீராறு கட்டமலைப் பகுதியில்
உற்பத்தியாகி பின் கல்லார் என்ற் பெயரில் இடமலையில் கலக்கிறது. இடமலையாறு
பெரியார் நதியின் கிளையாகும் .நீராறு சிற்றணை உள்ள பகுதி சின்ன கல்லார் என்று அழைக்கப்படுகிறது.
இதன் சிறப்பு தமிழகத்தின் (சிரபுஞ்சி) மாயேஷ்வரமாகும்.
இத்திட்டத்திலுள்ள தொகுப்பு அணைகளில், அனைத்து
அணைகளையும் விட உயரமான இடத்தில் 1158மீ (3800 அடி) அமைந்துள்ள அணை என்ற சிறப்பும் இந்த சிற்றணைக்கு உண்டு.
மேல் நீராறு |
இதன் வடிகால் பரப்பும் 29 சதுரமைல் ஆகும் இதில்
11 சதுரமைல் தமிழகப்பகுதியாகும் .இப்பகுதியில் ஆறு நீராறு பெயரோடு
பயணிக்கிறது,தன்
போக்கில் சென்றால் பயனேது?
இங்கிருந்து சுரங்கபாதை மூலமாக சோலையார் ஆற்றுபடுகைக்கு
ஆற்றின்நீர் கொண்டு செல்லப்படுகிறது.
ஆறுகரைகளுக்குள் அடங்கி
நடந்தால் விரும்பிய ஊர் சென்று சேரும் என்பதற்கான எடுத்துக்காட்டு.
செல்வா&அனிதா: சுரங்கப்பாதை பற்றி சொல்லு லீலா.
நிச்சயமா சொல்ல வேண்டிய
செய்தி சொல்றேன்.
இந்த சுரங்கம் குதிரைலாட வடிவத்தில்அமைக்கப்பட்டுள்ளது.இதன் விட்டம் 20 அடியாகும். 4622.90 மீட்டர் நீளம். இதை வெள்ளமலை
சுரங்கமென சொல்வதுண்டு
.மிகபெரிய நுணுக்கம் கொண்ட அறிவியல் சாதனை இந்த சுரங்கம் .இதன் கட்டுமான பணியின் போது அங்கிருந்த மண்கெட்டியாக இல்லாமல் வழுக்கிவிழுவதாக
இருந்திருக்கிறது…. அதோடு ஆற்றின் நீரும் சேர மிகவும் கடினமானதாக
இருந்திருக்கிறது.
ஆனால், இந்த
வழுக்கும் மண்ணை அடுத்து அடுத்து பகுதிக்கு ஸ்காஃப்ல்டிங்காக
பயன்படுத்தியிருக்கிறார்கள். சுரங்கத்தின் கொள்ளளவு
74 மில்லியன் கன அடி ஆகும்.
மேல்நீராறு ஆற்றின்
போக்கில் போகும் தண்ணீர் கீழ்நீராறுக்கு செல்கிறது. மேல்நீராறில் தமிழ்நாட்டிற்கு
தண்ணீர்கொண்டு செல்லும் காலங்களான பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை சுரங்கத்திற்கு தண்ணீர்
செல்லும் வழியில் ஷட்டர்கள் திறந்திருக்கும் .மற்ற காலத்தில்
தண்ணீர் கேரளாவிற்கு கீழ்நீராறு வழியாக River sluice மூலம் இடமலையாறு
செல்லும்.
மேல்நீராறு பகுதிஆண்டுக்கு 9.10 டி.எம்.சி மழைநீர் பெறும் என கணக்கிடப்பட்டிருந்தாலும்,
ஆண்டுக்கு மிககுறைவான அளவே மழைநீர் கிடைக்கப்பெறுகிறது.இந்த சிற்றணை 1975 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
மேல்நீராறு இயற்கை
அழகுடையது, மலைகளும், ஆற்றின் சலசலப்பும் அங்குள்ள குளிர்ச்சியும்
கண்ணுக்கும்,மனதுக்கும்இதமளிக்ககூடியது.
பரிமள்: அடேயப்பா இத்தனை விஷயமிருக்கா?
இன்னும் நிறைய இருக்கு
பரிமள் சற்று சுருக்கிதான் சொல்றேன்.
அனிதா: கீழ்நீராறு
பற்றி கொஞ்சம் சொல்லு………
கீழ் நீராறு
அணை
கீழ்நீராறு |
மேல் நீராறிலிருந்து 8கி.மீ தூரம் கீழே போனால் கீழ் நீராறு அணை உள்ளது.இதன் கொள்ளளவு 274 மில்லியன் கன அடி.இதுவும்நீராற்றின்குறுக்கேகட்டப்படுள்ளஅணையாகும்.இதன் வடிகால் பரப்பும் பகுதி 39 சதுர மைல் ஆகும்.இதில் 21 சதுர மைல் தமிழக பகுதியாகும்.கீழ்நீராறின் தண்ணீர் சோலையார் படுகைக்கு சுரங்கம் மூலம் செல்கிறது.கஜமுடி சுரங்கம் என சொல்லப்படுகிறது .இந்த சுரங்கம் குதிரைலாட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது .இதன் விட்டம் 22 அடியாகும், 8129 மீட்டர் நீளம். சுரங்கத்தின் கொள்ளளவு 62 மில்லியன் கன அடி ஆகும்.
கீழ்நீராறு பகுதி ஆண்டுக்கு 2.5 டி.எம்.சி மழை நீர் பெறும் எனகணக்கிடப்பட்டிருந்தாலும்,ஆண்டுக்கு மிக குறைவான அளவே மழைநீர் கிடைக்கப் பெறுகிறது.இந்த அணை1982 ல் கட்டி முடிக்கப்பட்டது.
இயற்கையின் மடியில்
நம்மை தாலாட்டும் பேரழகு இந்த அணை.
செல்வா&சியாமளா:
அடடே கேட்கவே பிரமிப்பா
இருக்கு………..
இந்த திட்டத்தில் பணியாற்றிய
பல பொறியாளர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாளை அர்பணித்திருக்கிறார்கள்……….
செல்வா: சோலையார்
பற்றி சொல்லு லீலா………….
சாலக்குடி ஆற்றின்
கிளை ஆறான சோலையாற்றின் குறுக்கே 1002.62மி(3290 அடி)
உயரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணைதான் சோலையாறு அணை.இதன் கொள்ளளவு 5392 மில்லியன் கன அடி ஆகும்.சோலையாறு அணைதான் தமிழ்நாட்டிலுள்ள அணைகளில் மிக உயரமான அணையாகும்.இதன் உயரம் 105.50மீட்டர் ஆகும். 47 சதுரமைல் வடிகால் பரப்பும் கொண்டது. மொத்த வடிகால் பரப்பும்
தமிழகப்பகுதியாகும்.இந்த அணை 1971 ல் முடிக்கப்பட்டது.
சோலையார் ஆய்வு மாளிகை |
சோலையார் மற்றும் பரம்பிக்குளம்
அணைகளை இத்திட்டத்தின் முக்கியமான அணையாக நான் நினைக்கிறேன்…………….
சோலையார் அணையிலிருந்து
சுரங்கம் மூலம் கொண்டு வரப்படும் நீரின் மூலம் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் இயக்கப்படுகின்றன.
சுரங்கம் குதிரைலாட
வடிவம் கொண்டது 10.50 அடி விட்டம் உடையது.இதன் நீளம்
2557 மீட்டர் ஆகும்.சுரங்கத்தின் கொள்ளளவு
24 மில்லியன் கன அடியாகும்.
மின்நிலையம்-Iல்
70 மெகவாட் மின் சக்தியும், மின்நிலையம்-II
ல் 25 மெகவாட் மின் சக்தியும், உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்நிலையம்-II மூலமாக செல்லும் நீர் கேரளா சோலையார் அணைக்கும்,
மின்நிலையம்-I
மூலமாக செல்லும் நீர் பரம்பிக்குளம் அணைக்கும் செல்கிறது.
சோலையார் மின்நிலையம்-1 |
சியாமளா: மின்நிலையம்-II
மூலமாக செல்லும் நீர் கேரளா சோலையார் அணைக்கு ஏன் போகுது.
மின்நிலையம்-I மானாம்பள்ளியில் உள்ளது.
செல்வா& பரிமள்: ஏன் இந்த ஆறு பேரு சோலையாறு? சோலைகள் இருக்கா
J இப்பகுதி முழுவதும் சோலைக்காடுகளாக(SHOLA
FOREST) இருந்ததால் இந்த ஆறு சோலையாறு என அழைக்கப்படுகிறது .சோலையாறு நிரம்பி வழிந்தால் அது கேரளாவிற்கு செல்லும்.
சோலையார் மின் உற்பத்தி
நிலையம் எண்-1 396 மீட்டர் நீர்வீழ்ச்சியை பயன்படுத்தி 70 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது.
சோலையார் மின் உற்பத்தி
நிலையம் எண்-2 171 மீட்டர் நீர்வீழ்ச்சியை பயன்படுத்தி 25 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது.
சோலையார் மின் நிலையம் -2 |
அனிதா:பரம்பிக்குளம்
பத்தி சொல்லு லீலா………ஏற்கனவே பரம்பிக்குளத்தை பற்றி நீ நிறைய
சொல்லியிருக்க உனக்கு பிடிச்ச இடமோ…………
JJ ம்ம்…….
எனக்கு பிடிச்ச இடம்தான்…….
பரம்பிக்குளம் ஆறு
ராமகிருஷ்ண மலைப்பகுதியில் உற்பத்தியாகி கடைசியாக சாலக்குடி ஆற்றில் சேருகிறது.இதன்
வடிகால் பரப்பு88.8 சதுர மைல்கள் இதில் 60.71 சதுர மைல் தமிழக பகுதியாகும். இந்த அணை கேரளா காடுகள்
நிறைந்த பகுதியில் உள்ளது.இத்திட்டத்தில் முதன்மையான அணை இதுதான்,
கொள்ள்ளவிலும் இத்திட்டத்தின் பெரிய அணை ஆகும். இதன் கொள்ளளவு 17820 மில்லியன் கன அடி ஆகும்.இந்த அணை1967 ல் கட்டிமுடிக்கப்பட்டது.
அழகிய சூழலில் பரம்பிக்குளம் அணை |
பரம்பிக்குளம் மேற்கு
நோக்கி பாயும் ஆறாகும்,இந்த ஆற்றின் நீர் கிழக்கே திருப்பப்பட்டு தூணக்கடவு
மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகளை அடைந்து பின்னர் சர்க்கார்பதி மின் நிலையத்தை சுரங்கம்
மூலம் அடைகிறது,அங்கு மின் உற்பத்தி செய்யப்பட்ட பின் சமமட்ட
கால்வாய் மூலமாக திருமூர்த்தி மற்றும் ஆழியாறு அணையை சென்று சேர்கின்றன.
சுரங்கம் குதிரைலாட
வடிவம் கொண்டது 16.75 அடி விட்டம் உடையது.இதன் நீளம்
2495 மீட்டர் ஆகும்.சுரங்கத்தின் கொள்ளளவு
37 மில்லியன் கன அடியாகும்.
கேலரி |
இங்கிருந்து மலைகளில்
பாறைகளுக்கிடையே கதை பேசிக்கொண்டும் துள்ளியும் ,குதித்தும் ஓடிய நீர் தற்போது
சமவெளிப் பகுதியில் கம்பீரமாக நடைப்போடுகிறது.
பரம்பிக்குளம் அணையின்
உபரி நீர் குரியர்குட்டி ஆற்றில் கலந்து சாலக்குடி ஆற்றில் கலக்கிறது.
இயற்கையின் பேரெழிலும்,வனங்களின்
வனப்பும்,கானுயிர்களின் சிருங்காரமும்,கம்பீரமும்
காண கண் கோடி வேண்டும்.
சியாமளா:சொல்லுங்க
லீலா கேட்கவே மலைப்பாகவும்,பெருமையாகவும் இருக்கு………..
இருங்க ,இருங்க,
மிக பெருமை பட வேண்டிய செய்திதான் இனி சொல்லபோகும் செய்தி…………….
தூணக்கடவு
மற்றும் பெருவாரிப்பள்ளம் என்ற அணைகள் ஆசியாவில்
வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில் சமன்நிலைப்படுத்தும் அணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.(Balancing dam).
தூணக்கடவு அணை |
தூணக்கடவு அணை முக்கியமாக
பரம்பிக்குளத்திலிருந்து சர்க்கார்பதிக்கு செல்லும் சுரங்கத்தின் நீளத்தை குறைப்பதற்காகவும்,பெருவாரிப்பள்ளம்
அணைப்பகுதியில் கிடைக்கும் பருவ மழையை பெறுவதற்காகவும் அமைக்கப்பட்ட அணையாகும்
338மீட்டர் நீளமுள்ள
இந்த அணையின் மொத்த கொள்ளளவு 557 மில்லியன்
கன அடி ஆகும். இதன் வடிகால் பரப்பு 22 சதுரமைல்கள்
ஆகும்.7.7சதுரமைல்கள்
தமிழகப்பகுதியாகும்.தூணக்கடவு ஆண்டுதோறும் 70 அங்குல மழை பெறும் பகுதியாக சொல்லப்படுகிறது. எனினும் தற்கால தட்பவெட்ப மாற்றத்தினால் மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.இந்த அணை 1965 ல் கட்டி முடிக்கப்பட்டது.
தமிழகப்பகுதியாகும்.தூணக்கடவு ஆண்டுதோறும் 70 அங்குல மழை பெறும் பகுதியாக சொல்லப்படுகிறது. எனினும் தற்கால தட்பவெட்ப மாற்றத்தினால் மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.இந்த அணை 1965 ல் கட்டி முடிக்கப்பட்டது.
செல்வா& அனிதா: பெருவாரிப்பள்ளமும், தூணக்கடவும் இணைக்கப்பட்டிருக்கா லீலா…………
Exactly, பெருவாரிப்பள்ளம் நீர்தேக்கமும், தூணக்கடவு நீர்தேக்கமும்
ஒன்றோடொன்று நேரடியாக இணைக்கப்பட்டு உள்ளன. 466.26 மீட்டர் நீளமுள்ள
இந்த மண் அணையின் கொள்ளளவு 620மில்லியன் கன அடியாகும்.இந்த அணை 1971 ல் கட்டி முடிக்கப்பட்டது.
பெருவாரிப்பள்ளம் அணை |
சியாமளா & பரிமள்: ஓ ரொம்ப பெருமையான விஷயம், ஏம்பா எப்போ பார்த்தலும் காண்டூர் வாய்க்காலுன்னு சொல்லுவியே அது இந்த திட்டத்தில்தானே
வருது…….
ஆமாம்,சரி தமிழகத்தின்
முதல் சம மட்டக் கால்வாய் எதுவென்று தெரியுமா?
அனைவரும்: சொல்லு
கேட்போம்……….
சொல்றேன் கி.பி
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் அமைக்கப்பட்ட சம மட்டக் கால்வாய்
திருச்சியிலுள்ள உய்யங்கொண்டான் கால்வாய் ஆகும்.இருந்தாலும்
தற்சமயம் பயன்பாட்டிலுள்ள ஒரே சம மட்டக் கால்வாய் சர்க்கார்பதியிலிருந்து திருமூர்த்தி
நோக்கி செல்லும் சம மட்டக் கால்வாய் தான் எனலாம்.
சம மட்டக் கால்வாய் |
அதோடு, இந்த
கால்வாய் அமைந்துள்ள பகுதி மலைப்பாங்கும்,அடர்ந்த காடுகளும் உடையது ஆகும்,இப்பகுதியில் சம மட்டக் கால்வாய் என்பது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.கால்வாயின் நீளம் 49.30கி.மீ ஆகும்.வினாடிக்கு 1150 கன அடி நீரை எடுத்து செல்லும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
|
சர்க்கார்பதி மின்நிலையம் சுமார் 104 மீட்டர் நீர் வீழ்ச்சியை பயன்படுத்தி
30 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி
செய்கிறது.இதற்கு தண்ணீர் தூணக்கடவு அணையிலிருந்து சுரங்கம் மூலாமாக
தண்ணீர் வருகிறது.
சர்க்கார்பதி மின் நிலையம் |
அனைவரும்: அடேயப்பா,என்ன ஒரு தன்னலமற்ற பணி செய்திருக்கிறார்கள்……..லீலா you are lucky to work in this project…..
JJ, உண்மையோ
உண்மை,அது மட்டுமில்லைப்பா,சிறிது காலம்
கால்வாய் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டிருக்கிறேன்,தற்சமயம் இருமாநில
நீர் பங்கீடு குறித்த பணிகளை கவனித்து வருவதும்……………. நீங்கள்
சொன்ன வார்த்தை உண்மை,சற்று பெருமையாகவும் இருக்கிறது………
சரி அடுத்த அணைகள் பற்றி சொல்லு
அடுத்து அனைவருக்கும் தெரிந்த சட்டென்று
சுற்றுலா செல்ல கூடிய இடமுமான ஆழியார் அணைதான் ஆகும்.
ஆழியார் அணை |
இந்த அணை சமவெளிப்பகுதியில் அமைந்திருந்தாலும்,இயற்கையின் அழகுக்கு குறைவில்லை சுற்றிலும் மலைகளும் கண்கொள்ளா காட்சிதான்.
இந்த அணையின் கொள்ளளவு 3864 மில்லியன் கன அடியாகும்.இந்த அணை1962 ல் கட்டி முடிக்கப்பட்டது.இதன் வடிகால் பரப்பு
76 சதுரமைல்கள் ஆகும் இந்நீர் தேக்கத்திலிருந்து வேட்டைக்காரன்புதூர்
கால்வாய், பொள்ளாச்சிக் கால்வாய் என்ற இரண்டு கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன.
இந்த அணையிலிருந்து கேரளாவிற்கு 20000 ஏக்கர் மற்றும்
தமிழகத்திற்கு 6366 ஏக்கருக்கும் பாசன தேவைகளை நிறைவு செய்கின்றன.தமிழக பாசன பரப்புகள் 5 பழைய வாய்க்கால்கள் மூலம் பாசனம்
பெறுகின்றன..ஆழியாறிலிருந்து சுமார் 40 கி.மீ பயணத்திற்கு பின் கேரளத்திலுள்ள பாரதப்புழா வில்
கலக்கிறது.
ஆழியாறு மின்நிலையம்
சுமார் 427 மீட்டர் நீர்வீழ்ச்சியைப் பயன்படுத்தி 60 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்யும் இத்திட்டத்திற்கு மேல் ஆழியாறு அணையிலிருந்து
தண்ணீர் வருகிறது.
அதைப்போல் சமவெளிப்பகுதியிலுள்ள
ஆழியாறு அணை சிறு புனல் மின்நிலையம்,அணையிலிருந்து ஆற்றில் திறந்துவிடும் தண்ணீரை
பயன்படுத்தி 2.50 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது.
ஆழியார் சிறு புனல் மின்நிலையம் |
அனைவரும்: ஹாலோ,இந்த அணையில் நிறைய படப்பிடிப்பு நடக்குமாமே……………..
அட ஆமாம்,காதலிக்க
நேரமில்லை படம்,அமைதிப்படை, இன்னும் பல
படங்களில் அணையும்,ஆய்வு மாளிகையும் வந்துள்ளது.
சரி சரி…நம்ம
கதைக்கு வருவோம்……….
இப்போ திருமூர்த்தி
அணை பற்றி சொல்கிறேன்..இந்த அணை 1967 ல் கட்டிமுடிக்கப்பட்டது
பாலாற்றின் குறுக்கே
கட்டப்பட்டுள்ள அணைதான் திருமூர்த்தி அணையாகும் இதன் கொள்ளளவு 1.935 டி.எம்.சி ஆகும் சம மட்டக் கால்வாய்
மூலம் நீரைப்பெறும் இந்த
அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய்,உடுமைப்பேட்டை
கால்வாயும் பிரிந்து செல்கின்றன
திருமூர்த்தி அணை குறு
புனல் மின்நிலையம்,அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய்க்கு
திறந்துவிடும் தண்ணீரை பயன்படுத்தி 2.00 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது.
மேல் ஆழியாறு என்றொரு
நீர்தேக்கம் உண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஆகும், இந்த அணை1964 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.இது
265 மீட்டர் நீளமுள்ளது. இது ஆழியாறு அணைக்கு சற்று
மேலே கட்டப்பட்டுள்ளது.இதன் முக்கிய நோக்கம் மின் உற்பத்தி செய்வதே
ஆகும்.இதனுடைய வடிகால் பரப்பு 54.20 சதுரமைல்கள்
ஆகும்.இதன் கொள்ளளவு 936 மில்லியன் கன அடி
ஆகும்.மின் உற்பத்தி செய்த பின் இந்த தண்ணீர் ஆழியாறு அணையை அடையுமாறு
அமைக்கப்பட்டுள்ளது
மேல் ஆழியாறு மின்நிலையம் |
இத்திட்டத்தில் உள்ள ஆறு மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி திறன் 189.50 மெகாவாட் ஆகும்
காடம்பாறை மின்நிலையம். |
மேலும் சில தகவல் சொல்றேன் கேளுங்க…
காடம்பாறை அணை 1984ல் கட்டி முடிக்கப்பட்டது.
காடம்பாறை அணை 1984ல் கட்டி முடிக்கப்பட்டது.
செல்வா: டீ
குடிக்கலாமா என்ன சொல்றீங்க
சியாமளா, பரிமள், அனிதா,நான்: கண்டிப்பா சுவையான் தேநீர் இருக்கே,குடிக்கலாம்.
ஆனைமலையாறு
நீர்திருப்பு சிற்றணை
இன்னும் நிறைவேற்றப்படாமல்
ஆய்வு நிலையிலும்பரிசீலனை நிலையிலும் உள்ள இத்திட்டம் 2500 மில்லியன் கன அடி நீரை ஆனைமலையாறு படுகையிலிருந்து சமவெளிக்கு திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.கேரள அரசியோன் ஓப்புதல் பெற்ற பின்னர் நிறைவேற்றப்பட உள்ளது.கேரள அரசின் ஒப்புதல் விரைவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நல்லார் நீர்தேக்கத்திட்டம்.
நதி நீர்ப்பங்கீட்டு
திட்டப்படி மேல்நீராறு சிற்றணையிலிருந்து பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 9.00 டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு
கிடைக்கும்.தற்போது இந்த சோலையார் அணை,பரம்பிக்குளம்
அணை வழியாக சர்க்கார்ப்பதி மின் நிலையம் சென்று சம மட்டக்கால்வாய் வழியாக திருமூர்த்தி
அணையை சென்று அடைகிறது.இவ்வாறு நீண்ட தொலைவு நீரை எடுத்து செல்வதால்
மிகுந்த் அநீர் இழப்பு ஏற்படுகிறது. அதே போல் சம மட்டக் கால்வாயில்
பராமரிப்பு பணிகள் அல்லது எதிர்பாராத பழுதுகள் ஏற்படும்போது நீரோட்டம் தடைப்படுகிறது.இந்த இடர்பாடுகளை களைவதற்கென்று நல்லார் நீர்தேக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்பாட்டிற்கு
வந்தால், மேல்நீராறு சிற்றணையிலிருந்து 14.40 கி.மீ உள்ள சுரங்க்கத்தின் வழியாக
தண்ணிர் ந்ல்லார் பள்ளத்தாக்கில் சேரும்.இதில் ஏற்படும் மட்ட வீழ்ச்சியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படும்.நல்லாற்றின் குறுக்கே உத்தேசிக்கப்பட்டுள்ள நீர்தேக்கத்தில் இந்த நீர் தேக்கப்பட்டு,அங்க்கிருந்து புதிய சம உயர்மட்டக் கால்வாய் மூலம் தண்ணீர் திருமூர்த்தி அணையை
அடையும்.
அனைவரும்:இதனால்
என்னென்ன பயன்கள் கிடைக்கும்.
தென்மேற்குப் பருவ
மழைக்காலத்தில் மேல்நீராற்றில் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்த இயலும்.
கூடுதல் மின்சாரம்
உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.
மேல்நீராற்றிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் செல்லும்
தூரம் குறைவதால் நீரிழப்பும் குறைய வாய்ப்புள்ளது.
சம மட்டக் கால்வாயில்
பராமரிப்பு பணிகள் பார்க்கும் காலங்களிலும்.திருமூர்த்தி அணைக்கு நல்லார் நீர்தேக்கத்திலிருந்து நீர்
கிடைக்குமென்பதால்,திருமூர்த்தி பாசனபகுதிக்கு தேவையான நீரின்
அளவை சுணக்கமின்றி பராமரிக்க இயலும்….
என்ன நண்பர்களே இந்த
உரையாடல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.இத்தனை
சிரமத்திற்கிடையே பெறப்படும் நீரை எப்படி பயன்படுத்த வேண்டும்,பாதுகாக்க வேண்டும்
என்பதின் முக்கியத்துவத்தை குறித்தும் நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.பொறுமையுடன்
உரையாடலை கேட்ட அனைவருக்கும் நன்றி.
பொறியாளார் தோழமைகளுக்கு,முக்கியமாக
நீர்வள ஆதார துறையில் பணியாற்றுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த உரையாடலில் கலந்து கொண்டதோழமைகளுக்கும்,இத்திட்டத்தை குறித்து ஆவணப்படுத்தவேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தாலும்,வேலை,குடும்பம் மற்றும் உடல்நிலை காரணமாக கிடப்பிலேயே
இருந்தது. அந்த சுணக்க நிலையை மாற்றி ஒரே நாளில் இதை ஆவணப்படுத்த எனக்கு ஆதரவு தந்த என் தாயார் மற்றும் மகளுக்கும் என் அன்பில் நனைந்த நன்றி…………
….
பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் - எட்டாவது அதிசயம் -
ReplyDeleteமிக விரிவான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டுகிறேன். அருமையாக எழுதுகிறீர்கள். மகிழ்ச்சி & வாழ்த்துகள் திருமதி Leela Ammu
அற்புதமான தகவல்கள் அடங்கிய பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான மதிப்புமிக்க பதிவு ...வாழ்த்துக்கள் ..உடுமலைப்பேட்டை இலிருந்து சிவக்குமார் ...மிக்க நன்றி ..எனது பகிரளி குழுவில் பகிர்ந்துகொள்கிறேன் ..கோவை திருப்பூர் .ஈரோடு விவசாய..மக்கள் படித்து பயன்பெறுவார்கள் ..
ReplyDeleteஅருமை.. சிறப்பு..
ReplyDeleteஇவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டம் என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன் நன்றி
ReplyDeleteவணக்கம் தங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை, எனக்கு தொடர்ந்து தங்களுடைய பதிவுகள் தகவல்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். நன்றி. success.jose@gmail.com
ReplyDeleteஅருமையான பதிவு... இன்னும் கொஞ்சம் விளக்கமாக ஆனைமலையாறு நல்லாறு திட்டம் பற்றி விரிவாக சொல்ல முடியுமா...? ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிலையில் உள்ளது. ரீல் மக்கள் தங்கள் பங்களிப்பாக என்ன செய்யலாம் என்று ஆலோசனைகள் தேவை.
ReplyDeleteகௌசிகா நதி செல்வராஜ்
www.kousikanathi.com
9362362114