Monday 22 May 2017

வானம் அழைத்து வந்த மகள்



மழையில் 
நனைந்த மகள்
வானம் அழைத்து
வந்தாள் வீட்டிற்கு

-லீலா

தேநீர்........



  நேற்று நீயும் நானும் 
 அருந்திய தேநீர் தான் 
 இன்று நான் அருந்துகிறேன் 
 ஆனால் அதுவும்
இதுவும் ஒன்றல்ல.....

-லீலா