Sunday 8 November 2020

கவிதையும் கதையும்- 1


நீ அமைதியாகதான் இருக்கிறாய்

உன் நினைவுகள்தான்

அதிகாலையிலேயே 

சிறகு விரித்து விடுகிறது 

கரிச்சான் குருவியாய்.


- கோ.லீலா.


கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!..

- திருப்பாவை.


ஆனைச்சாத்தான் - கரிச்சான் குருவி அதிகாலை 3.30 மணிக்கு எழும்பி விடுமாம். 1600 வருடத்திற்கு முன்பு அவங்க பேரு ஆனைச்சாத்தான்.


ஆங்கிலத்தில் Black Drongo.


வயலில் மாடுகளின் முதுகில் அமர்ந்து இருப்பாங்க. மாடுகள் நடக்க நடக்க, புல்லில் இருந்தும், பயிர்களில் இருந்தும் வெளிவரும் பூச்சிகளை (குறிப்பாக வெட்டுகிளிகள்) சாப்பிடுவாங்க. காலை 5.30-7 மணி வரைதான் பூச்சிகள் உற்சாகமாக பயிர்களுக்கு மேல் உலா வருமாம்.


கரிச்சான் குருவியார் டிபன் சாப்பிட 3.30 க்கே தயாராகி குடும்பத்தோட போய்டுவாராம்.


இதனால் நமக்கு என்னன்னு கேட்கிறீங்களா?


அட ! பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டாங்க. இயற்கை Entomologist நம்ம கரிச்சான் குருவியார் காலையில் ஒரு‌மணி நேரத்தில் 100, அதே போல் மாலையில் 100 பீஸ் பூச்சிகளை அபேஸ் பண்ணிடுவாராம். இருந்தாலும் அவருக்கு டேங்க்( வயிறு) சிறிசுதானே, அதனால மீதி பூச்சியை அரைச்சி துப்பிடுவாராம். அது மண்ணுக்கு உயிர்ச்சத்து தருதாம்.


அது மட்டுமில்லைங்க, நம்ம ஆளு கரிச்சான் குருவியார் பருந்தௌ, கழுகுன்னு எல்லாரையும் அடி தூள் கிளப்பி விரட்டி விடுவாராம்.


ஆனைச்சாத்தான் அடியாள் போலிருக்கே !


பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டாம் பாருங்க ! அதுல மண்ணும் கெடாது மனுசனும் கெட மாட்டான்.


நன்றி : கோவை சதாசிவம்‌ அய்யா.

அன்புடன்

- கோ.லீலா.

அம்மு

 மலைப்பூவே என் மனப்பூவே

என் அன்பான செல்லக்கிளி

இவள் ஓடி வர ஒளிந்திருக்க

பார்க்கையில் பூவாக சிரிக்கிறாள்

நினைக்கையில் தேனாக இனிக்கிறாள்

சின்னஞ்சிறுபூசிந்தும் சிரிப்பில்

நெஞ்சம் நெகிழ்ந்ததென்ன

அள்ளி அணைக்கையில்

ஆசை பெருகுகையில்

என்னை மறந்ததென்ன

மூக்கு கடித்துமுத்தம் கொடுக்க

நெஞ்சம் குளிர்ந்ததென்ன

சித்திர சேலையில் 

சின்னஞ்சிறு பூவை காண

உள்ளம் சிலிர்த்ததென்ன

இவளோடு நானிங்கு

வாழ்கின்ற நாளெல்லாம் தேன்

எனை இவள்  கொஞ்சாத 

நாளெல்லாம் வீண்

சொந்தமென பந்தமென

எனை  தொடரும் உறவுதான்

நினைக்கையில் இனிப்பாக இருக்குது

என் மனம் எங்கெங்கோ பறக்குது.


-கோ.லீலா.



தண்ணீர் தண்ணீர்

 தோழமைகளே! வணக்கம் மைனா படத்தில் வரும் ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கி‌ போட்டு பாடலை தண்ணீர் விழிப்புணர்வு பாடலாக மாற்றி எழுதியிருக்கேன்.யாராவது பாடி கொடுங்களேன்.


ஏ வண்ண வண்ண ஜீன்ஸ் போட்டு

வகைவகையா சட்டையப் போட்டு

தண்ணி பாட்டிலோடு   நீயும் எங்க போவுற- நானும்

தண்ணிக் கத பேசிக்கிட்டே கூட வரட்டுமா...

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


ஏ வண்ண வண்ண ஜீன்ஸ் போட்டு

வகைவகையா சட்ட போட்டு

எங்க வேணா பொண்ணு போவேன் தள்ளி‌ நில்லுங்க அந்த

தண்ணி கத எனக்கு தெரியும்‌ தள்ளி நில்லுங்க...


ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


நல்லத் தண்ணி கெட்டுப்போச்சி

நதியெல்லாம் வத்திப்போச்சி

பாட்டிலுக்கு மட்டுமிங்க தண்ணி   ஏதடி

யோசிச்சு நீயும் அந்த கொஞ்சம் கதய சொல்லடி  -ஹேய்


நாகப்பட்டணம் இங்க இருக்கு

டெல்லி பட்டணம் அங்க இருக்கு

எங்கேயுமே குடிக்க சொட்டு தண்ணி இல்லடி...

கோலா பெப்சி குடிக்கிறத விட்டு வெலகடி

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


அரிசிக்கு பின்ன மூவாயிரம் 

ஜீன்ஸ் ஆக்க பத்தாயிரம் லிட்டர் வேணுமே

அத்தனையும் கப்பலேத்தி வித்துப் போட்டுட்ட

தண்ணியதான் காசு குடுத்து வாங்கி‌ குடிக்கிற

அந்த வெட்கக் கேட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற


ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


சிங்கபூரு எத்தன மயிலு

சிக்காக்கோ‌ தான் எத்தன மையிலு

அத்தன மையிலும் சுத்திப்பார்த்த 

அத்தன ஊருக்கும் வித்துப் போட்ட பண்டம் ஏதடி

அதில மறஞ்சு நிக்கும் தண்ணியத்தான் எண்ணி பாரடி

ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..


காட்டையெல்லாம் அழிச்சிப்புட்ட

பெஞ்ச மழைய நிறுத்திப்புட்ட

நம்ம போல புள்ளைங்கதான் வாழவேண்டாமா....

இல்ல பல்லு போயி சொல்லு சாக வேணுமா?


உலக வங்கில மொத்த கடனு

மிச்ச வங்கியில சொச்ச கடனு

ஒலகம் பூரா கடன்பட்டும்  இன்னும் திருந்தல

நம்ம நாட்டுக்குள்ள ஒருத்தருமே தண்ணிய மதிக்கல


ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்


ஏரிக இருக்கு பத்தாயிரம்

குளம் குட்டை இருக்கு நூறாயிரம்

எறைக்காத கேணியில நீரு ஏதடி

இந்த ஊரு சனத்த கூட்டிகிட்டு தூரு வாரடி

அடியே........


ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்.


Rescript : கோ.லீலா.

மழையும் நானும்.

 மேகம் இங்கே தூறல் போட

உம் பேர சாரல் போட

அதில நானும் நனைய போறேன்

உன்னப் பத்தி கேட்கப் போறேன்

அதிலே முழுசா கரையபோறேன்


நெஞ்சுக்குள்ளே எதையோ நினைச்சு 

அதையும் ஏனோ சொல்லில் மறச்சு 

நீ போடும் வேசமெல்லாம் சொல்லிடுச்சே.

சொல்லை புதச்சு மவுனம் விதச்சு  

என்ன வதைக்கும்

யுக்தியெல்லாம் காதோடு சொல்லிடுச்சே.

என் சொல்லை துரத்தி வம்பிழுக்கும் உன் ரகசிய நேசத்த என் காதுக்குள்ள ஓதிடுச்சே.


மழையில் நானும் நனைய 

மனசுக்குள்ள நேசம் நிறைய

உம் பேரு குடையா விரிய

அதில நானும் வாழப் போறேன்.


- கோ.லீலா