Tuesday 2 August 2016

மரபணு மாற்றம்……….மண்ணை கொல்லும்………..


 




வணக்கம் நண்பர்களே………….


இன்றைய கதை நேரம் தொடங்கியாச்சு…..என்ன சோளப்பொறி,உருளைகிழங்கு சிப்ஸ், வாங்குறீங்களா

ம்ம்..வாங்குங்க,வாங்குங்க இன்னைக்கு அதை பற்றிதான் கதையே………………..
 
கதை  சொல்ல போறோம்ன்னு சொன்னவுடனே நம்ம தோழியும் வந்திட்டாங்க,

என்ன பரிமள் திருச்சூரிலிந்து இப்போதான் வழி தெரிஞ்சுதா? வா வா
பரிமள்: உனக்கு ஒரு suspense  கண்டுபிடி பார்ப்போம்.
நீயே சொல்லு பரிமள்.

பரிமள்: அனிதாவும்,செல்வாவும் வந்திருக்காங்க………..

அடடே வாங்க,வாங்க……………..பாத்து எத்தனை வருஷாமாச்சி  எப்படியிருக்கீங்க .

அனிதா& செல்வா: எல்லோரும் நல்லா இருக்கோம், நீ எப்படியிருக்கே
நல்லாயிருக்கேன்,சரி மதிய சாப்பாடு சாப்பிட்டுகிட்டே பேசுவோம்….யார் யாருக்கு என்ன வேணும் சொல்லுங்க,all spl.items order  செய்யுங்க பார்ப்போம்.

பரிமள்: இது இராமயண மாசம் ப்பா,so no spl.only veg  தான்
ஹா ஹா,சரி சரி சொல்லு

அனிதா: ஏன் சிரிக்கிறே

அசைவ தக்காளி குழம்பும்,சைவ கோழி குருமாவும் நான் ஆர்டர் செய்ய போறேன்.

செல்வா : என்ன கிண்டல் பண்ற.

இல்லை இல்லை கிண்டல் இல்லை,இப்போ மரபணு மாற்றம் செய்த உணவு பொருட்களும்,நம்ம பாராம்பரிய உணவு பொருட்களும் கலந்து போயிடுச்சில்ல அதான் சொன்னேன்.

பரிமள்: என்னாய்யா,பயமுறுத்துற,அப்போ veg ah non veg  குழப்புறீயே.
சரி மரபணு மாற்றம் ன்னா என்ன சொல்லு?

அனிதா,உங்க அப்பா Bsc(Agri) கூடவே இது தொடர்பா,நிறைய தெரிஞ்சவங்க, so  கண்டிப்பா உனக்கு தெரிஞ்சிருக்கும் நீ சொல்லேன்.

அனிதா: சரி சொல்றேன் கேளுங்க.

ஒவ்வொவ்வொரு உயிரினத்திலும் இருக்க கூடிய  இயல்புகளை,பண்புகளை ஒரு தலை முறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கொண்டு செல்லும் உயிர்மத்தின் பெயர்தான் மரபணு.இதை ஆங்கிலத்தில்ஜீன்அப்படின்னு சொல்வாங்க.


செல்வா: ஆமாம்பா, biology la படிச்சிருக்கோமே,மரபணு மாற்றம்னா,அதில் ஏதோ மாற்றம் செய்யறதுதான் மரபணு மாற்றம் சரிதானே.குறைக்கிறது அல்லது கூட்டறது சரியா?
ரொம்ப சரி செல்வா,அதோடு ஓர் உயிரிலிருந்து   மரபணுக்களை பிரித்து வேறு ஒரு  உயிருக்குச் செலுத்தி அந்த உயிருக்கு புதிய  குணாதிசயங்களை உருவாக்கும் முயற்சிதான்  மரபணு மாற்ற தொழில்நுட்பம். அதாவது,ஒரு உயிர் அதன் சந்ததியை அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை மரபணு (டிஎன்ஏ) என்கிறோம்   



பரிமள்:ஆமாம் நானும் கேள்வி பட்டிருக்கேன் பிடி.கத்தரிக்காய்,பிடி.காட்டன் இப்படி…………பிடி ன்னா என்ன?\

அருமையான கேள்வி பரிமள்,நீ கேள்விப்பட்டதும்,உண்மை,ஆனா நீ ஓரளவு SAFE  ஆ தான் இருக்கே,கேரளாவில் பூச்சிக்கொல்லிகள்,மற்றும் உடலுக்கு கேடான பொருட்களை,கேராளவின் உள் நுழைய அனுமதிப்பதில்லை.

சரி Bt.அப்படின்னா என்ன? என்று பார்ப்பதற்கு முன்,கத்தரிக்காயின் வகைகளை பார்ப்போம்.

பொதுவா,நம் நாட்டில் கத்தரிக்காய் என்பது அன்றாடம் உணவில் இடம்பெறும் ஒரு காய் ஆகும்.,சந்தையில் அல்லது கடையில் நாம் போய் கேட்கிறது குண்டு கத்தரிக்காய் கொடு,வெள்ளைக்கத்தரிக்காய்,கோடு போட்ட கத்தரிகாய் இப்படிதான் கேட்போம்.ஆனா Bt.கத்தரிகாய் என்பது மரபணு மாற்றம் செய்யப்பட்டது (Bacillus thuringiensis (Bt) )பேசில்லஸ் துரின்ஜின்சிஸ் என்பதன் சுருக்கம் தான் Bt.

அனிதா& செல்வா:இந்த Bt.ஏன் இந்த கத்தரிக்காயோட தொத்திக்கிட்டு நிக்குது?

Bt. என்பது மண்ணில் வாழும் ஒரு வகை பாக்டீரியா, பி.டி.என்பது பூச்சிக்கொல்லியாக இந்தப் பாக்டீரியா மூலம் உருவாக்கப்படுகிறது.Bt யில்லுள்ள விஷ புரதமான இன்சக்ட்டிடால் கிரிஸ்டல்’ (அ) டெல்டா எண்டோ டாக்சிக்பூச்சிகளை கொல்கிறது..

இந்த கத்தரிக்காய்கள் காய் புழுத்தாக்குதலை எதிர்க்ககூடிய அளவுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்டதாகும்.

சுருக்கமாக,எந்த பூச்சி தாக்குதலும் இல்லாமல் செடிகளில் விளைவதுதான் Bt.கத்தரிக்காய். கத்தரிக்காயின் மரபணுவில் ""கிரை 1ஏசி'' என்ற விஷ வைரஸ்  கிருமியை செலுத்தி உருவாக்கப்படுவது தான் 
பி.டி. கத்தரிக்காய்.  இந்த கத்தரிக்காய் அவ்வளவு சீக்கிரம் கெடாது.

பரிமள்: அய்யோ,தலை சுத்துது பா………அப்போ அந்த விஷ வைரஸ் நம்மள ஒண்ணும் செய்யாதா?

அனிதா: அது எப்படி செய்யாது,ஆந்திராவில் இந்த Bt.கத்தரிக்காயின் இலையை சாப்பிட்ட ஆடு இறந்த போனாதாக அதிர்ச்சியான செய்திகளும் உண்டு.கேரளா,கர்நாடகம்,போன்ற மாநிலங்கள் மரபணு மாற்ற கத்தரிக்காய்களுக்கு தடை விதித்தது, தமிழக அரசு, மத்திய அரசு முடிவை அறிவிக்கும் வரை வேளாண்மை அதிகாரிகள் மரபணு கத்தரிக்காயை தமிழ்நாட்டில் விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக்கூடாது என்று அவசர உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது.

செல்வா: முதன் முதலில் இந்த Bt. டெக்னாலாஜியை யார் அறிமுகப்படுத்தினார்கள்?

1987 ல் Plant Genetic system(Ghent,Belgium) என்ற ஒரு கம்பெனியை மார்க் வான் மாண்டாகு மற்றும் ஜெஃப் ஷீகெல் என்பவர்கள் உருவாக்கினர், இந்நிறுவனம் 1982 லேயே herbicide மற்றும் வண்டுகளை தாங்க கூடிய antibiotic resistant toboco.பயிரிட்டது.

சுருக்கமா Bt.புகையிலைதான் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்.
அனிதா: புகையிலையே பிரச்சனைதான்,,கூட இது வேற வா?


என்னப்பா சாப்பாடு ஆடர் செய்து ரொம்ப நேரமாச்சு,இதோ வந்தாச்சு,
சரி கதையை கேட்டுக்கிட்டே சாப்பிடுங்க.


Bt. கத்தரிக்காய்,சோயா,சோளம்,காட்டன்,வாழை என்று பெரிய பட்டியல் இருக்கு.

பரிமள்:சரி இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்னால என்ன பிரச்சனை?

சரியான கேள்வி,இன்னைக்கு சொல்ல போற முக்கியமான தகவலே அதுதான்.

இருந்தாலும் அதுக்கு முன்னால,யாருதான் இந்தியாவிலே இதை எதிர்தாங்கன்னு சொல்றேன்.

மரபணு கத்தரிக்காயின் பேராபத்தை உணர்ந்த உத்தரகாண்ட் முதல் மந்திரியாக இருந்த  ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க்  Bt.கத்தரிக்காய்க்கு தடை விதித்தார், உத்ரகாண்டில் நிறைய விவசாய நிலங்கள் இருப்பதால், இதை பயிரிட்டால் மொத்த விவசாய நிலமும் பயிரிட தகுதியற்ற நிலமாக மாறிவிடும் என விளக்கமளித்தார்.

அனிதா& பரிமள்: தடை விதிக்கிறாங்க அப்படின்னா? யார் இதை பயிரிடுவதில் முனைப்பா இருக்காங்க.

நல்ல கேள்வி கேட்டீங்க,நண்பர்களே கேட்டவங்களுக்கு விடை தெரியும்,இருந்தாலும் இதை சொல்றது மூலமா,இதை படிக்கிற குழந்தைங்க,மற்றும் இதை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போனவங்க  சார்பா இவங்க இதை கேட்கிறாங்க.
 அப்படிதானே அனிதா,பரிமள்,செல்வா

எல்லோரும்; ஆமாம்.

அதாவது வளர்ந்து வரும் நாடுகளில் மக்கள் தொகை அதிகம்,சற்று ஏழ்மையும் உண்டு,சில நாடுகளில் கல்வியறிவும் குறைவு,சில நாடுகளில் எதிர்த்து போராடக்கூடிய முகாந்திரமும் இல்லாமல் இருக்காங்க,இதை பயன்படுத்தி,இங்கே இந்த பயிர்களை அறிமுகப்படுத்திட்டா,மக்கள் தொகை அதிகமா இருக்க கூடிய சீனா,மற்றும் இந்தியாவில் பயன்படுத்தறங்க, அவங்களுடைய உடல் நலனுக்கு பாதிப்பில்லை என்பதை மய்யப்படுத்தி அய்ரோப்பிய நாடுகளில் இந்த மரப்பணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விரிவுப்படுத்த வேண்டிய கட்டாயத்தினால்,இந்தியாவிற்கு  மான்சாண்டோ, மற்றும் பயோனியர் போன்ற  நிறுவனங்கள் மறைமுகமான நெருக்கடி கொடுக்கிறது.இதற்காக தரகர்களை நியமித்தும் உள்ளது.

பரிமள்: சரி என்னய்யா அசைவ தக்காளி சட்னி,சைவ கோழி குருமா ன்னு சொன்ன,அத சொல்லு முதல்ல, சாப்பிடவே பயமாயிருக்கு.

அனிதா,செல்வா,நான்: ஹாஹா,

பரிமள்: சொல்லிட்டு சிரிங்கப்பா….

சரி,சரி அதுக்கும் முன்னாடி ஒரு சுவாரஸ்சியமான செய்தி சொல்றேன் கேளுங்க.

இந்த மரபணு மாற்ற பயிர்களால பாதிக்கப்படுறது விவசாயிகள்,மக்களின் உடல் நலன் அப்படின்னு சீரியஸா செய்தி இருக்கப்போ,தமிழ் கவிஞர்களுக்கு பெரிய நெருக்கடியும் உண்டு.

எல்லோரும்: தமிழ் கவிஞர்களுக்கா?

சொன்னா திட்டக்கூடாது

எல்லோரும்:திட்டினா மட்டும் விடவா போற சொல்லு.

மானல்லவோ விழிகள் தந்தது,குயில்லவோ குரலை தந்ததுன்னு எழுத முடியாது,

அனிதா: ஏ என்னப்பா சொல்ற……….

அம்மணி,நம்ம ஆளுக இது மட்டுமா பாடுறாங்க,மாங்கனி,திராட்சை ன்னு ஒண்ணு விடாம வர்ணிக்க பயன்படுத்தறங்கல்ல,

எல்லோரும்:ஆமா.

ஹி ஹி.இத்தன நாள் பொய் சொல்லி ஏமாத்திகிட்டு இருந்தவங்களே ஏமாற போறாங்க,

எல்லோரும்:அட சொல்லு

அதான்,திராட்சை கொத்துல தர்பூசணி இருக்கும்,பட்டாணிக்குள்ள ஆரஞ்ச் இருக்கும்
,




வாழைப்பழத்துல் மீன் இருக்கும்,
    


ஆரஞ்ச் ல ஆப்பிள் இருக்கும்.





Strawberry பெண்ணே,தாமரை கன்னங்கள், இந்த ரேஞ்சுக்கு பாட முடியாது அதான் சொன்னேன்


                       
அதிச்சியாக : உண்மையா,

ஆமாம்,ஆமாம்

தர்பூசணி யை திராட்சை வடிவத்தில் பயிர் செய்றாங்க,இது எப்படின்னா? மூன்று முறையில  மரபணு மாற்றம் செய்றாங்க
                             


1.Transgenic,2.Cisgenic,3.Subgenic.

இதுல Transgenic முறையில்,வேறொரு kingdom அல்லது ஒரே kingdom சேர்ந்த உயிரினங்களுக்குள் மரபணுவை மாற்றி வைக்கிறது.
வெளிநாட்டுக்கு செய்யும் தக்காளிகள் அடிக்கடி கீழே விழுந்து உடையறது,சீக்கிரமா பழுக்கறது இதெல்லாம் இயற்கை,ஆனா இது பெரிய் நஷ்டத்தை ஏற்படுத்திச்சு,அதனால தவளையின் மரபணுவை எடுத்து தக்காளிக்கு பொறுத்தினா,தக்காளி கீழே விழுந்தாலும் மேலே எகிறி வந்துடும் உடையாது,மேலும்,பழுக்காம இருக்க அதோடு வெளி தோல் கெட்டியா ஆக்கிட்டாங்க,

Flavr savr என்ற தக்காளிதான் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளி.




Strawberry ல மீனோட மரபணுவை செலுத்தியிருக்காங்க.

வெள்ள ஆடு,செம்மறி ஆடு இரண்டோடு மரபணுவை சேர்த்து வெம்மறி ஆடு உருவாக்கினாங்க.டோலி என்ற பெயரில் முதன் முதலில் குளோனிங் செய்யப்பட்ட ஆடு எல்லோர் நினைவிலும் இருக்கும் என்றே நம்புகிறேன்.


எலிகள் கிட்ட மரபணு மாற்றம் செய்தபோது,சாதராணமாக எலிகள் ஓடும் தூரத்தை விட இரண்டு மடங்கு தூரம்,இரண்டு மடங்கு வேகம் கொண்டு கடந்தது,அதற்காக இந்த எலிகளுக்கு மாரத்தன் எலி என பெயர் சூட்டி மகிழ்ந்த்து விஞ்ஞான உலகம்.

அதே மாதிரி, கோழிக்கு இரண்டு கால் அப்படின்னு படிச்சும்,பார்த்தும் இருப்போம்,ஆனா இப்போ மாத்திட்டாங்க கோழிக்கு நாலு கால்,chicken leg piece க்கு பஞ்சமில்லை,KFC நல்ல ஓடும் நாலு காலு பாய்ச்சலில்.அதோட கோழிக்கு மேலே இறகு(FEATHERS)  இருக்காது, உரிக்க வசதியில்லையா அதான்.
அதே மாதிரி குஞ்சு பொரிக்காத முட்டை போடக்கூடிய லேயர் கோழிகளும் பெருகி விட்டன.

பரிமள் இப்போ சொல்லு சைவம்,அசைவ சாப்பாடுன்னா என்ன?

செல்வா: அனிதா மஸ்கட்ல எப்படிப்பா?

அனிதா:மஸ்கட் இருக்கட்டும்,நீ இருக்கிற சைனா எப்படி?

சரி,சரி கேளுங்க கொஞ்சம் SAFE  ஆ இருக்கிறது பரிமள்தான்,சீனாதான் வேகமாக தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வ்ருது.உலகத்தில் மொத்தம் 90% பூமி,மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் விளையும் பூமியா மாறிடுச்சு.

                 

நார்மன் போர்லக்(Norman Boorlaug) உலகளவில் பல்லாயிர கோடிக் கணக்கானவர்களை பட்டியினியிலிருந்து மீட்டதாக 1970ல் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்,மரபணு மாற்றத்தின் மூலம் அதிக மகசூல் கிடைப்பதால் நாடு உணவு பாதுக்காப்புடன் இருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்


.


Marc Van Montagu, founder and chairman of the Institute of Plant Biotechnology Outreach at Ghent University in Belgium;


Mary-Dell Chilton, founder and researcher at Syngenta Biotechnology; and


Robert Fraley, chief technology officer at Monsanto.

இந்த மூவருக்கும் உலக உணவு பரிசு(WORLD FOOD PRIZE) வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் இறைச்சிகளால் ஏற்படும் நன்மை,தீமைகள் குறித்து முடிவுக்கு வரப்படாத பல்வேறு கருத்துக்கள் இருக்கும் சூழ்நிலையிலும்,

சூழலியல் ஆர்வலர்கள்,பராம்பரிய விவசாயம் மற்றும் விதைகள் குறித்தான பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தும் அதை பொருட்படுத்தாது இப்பரிசுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் விவசாயிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதால் அவர்களை தன் பக்கம் இழுக்க,பூச்சிகளால் அதிகம் தாக்கப்படும் கத்தரிக்காயைதான் முன்னிறுத்துகின்றன.


எனினும்,இதுவரை அந்த துறை சார்ந்த எந்த விஞ்ஞானியும் பொதுவெளியில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் உணவு பொருட்கள் பாதுக்காப்பானவை என அறிவிக்கவில்லை.

செல்வா: சாப்பிட்டாச்சு,இப்போ தீமைகள் பத்தி சொல்லு,நீதானே விவசாயிகளை பார்க்கிறே







உண்மைதான் செல்வா,முதலில்,பொதுமக்களுக்கு என்ன தீமைன்னு பார்ப்போம்


சிலருக்கு மீன் அலர்ஜியா இருக்கும்,ஆனா அவங்க ஸ்ட்ராபெரி போன்ற பழங்களை சாப்பிடும்போது வர அலர்ஜியின் காரணம் புரியாமல் போகும்.







இந்த பயிர்கள் பூச்சிகளை எதிர்க்க்கூடிய விஷ புரதங்களை உள்ளடக்கியுள்ளது இதை உணவாக உட்கொள்ளும்போது இந்த விஷ புரதம் மனித உடலுக்குள் சென்று படிந்துவிடுகிறது.


தேனீ,மண்புழு,குளவி போன்ற எண்ணற்ற நல்சூழலுக்கு தேவையான பூச்சியினங்களும் அழிந்து விடும்.


பல்லுயிர் வாழும் சூழல் முற்றிலும் அழிந்துபோகும்,பல்லுயிர் பாதுக்காப்பு என்பது உயிர் வட்டம் சரிவர இயங்க மிக மிக முக்கியம்.


பல்லுயிர் பாதிக்கப்படும்போது,ஓர்பயிர் (Monocrop) முறை வந்துவிடும்,விஷ புரதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள பயிர்கள் மண்ணின் தன்மையையும் முற்றிலும் மாற்றிவிடும்.


அயல்மகரந்த சேர்க்கை பல மைல்கள் கடந்தும் நடைபெறும்,இதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் மகரந்தம் பராம்பரிய பயிர்களை முற்றிலும் அழித்துவிடும் அபாயமும் உள்ளது.

அனிதா &பரிமள்: செல்வா கேட்ட மாதிரி விவசாயிகளுக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு.

இந்த பூச்சிகளை தாங்கும் சக்தி கொண்ட பயிரகள் இருக்க இருக்க வீரியம் மிக்க பூச்சிகளும்,களைகளும்தான் பெருகும்






எல்லாவற்றிக்கும் மேலாக,நம்முடைய விவசாயிகள்,அறுவடை முடிந்த பின் வரும் பயிர்காலத்துக்குரிய விதைகளை கோட்டை கட்டுதல் எனும் முறையில் விதைகளை பாதுகாத்து வருவது மரபு.

ஆனால்,மான்சாண்டோ,பயோனீயர் போன்ற நிறுவனங்கள்,மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் விதைகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது,இந்த விதைகள் மூலம் விளையும் பயிர்களிலிருந்து விதைகளை உருவாக்கமுடியாது,அதாவது மலட்டுதன்மை அல்லது முளைக்கும் தன்மையில்லாத விதைகளைதான் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

அதனால்,ஒவ்வொவ்வொரு,பயிர் காலத்துக்கும்,விதைகளுக்காக இந்நிறுவனங்களை விவசாயிகளை சார்ந்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.விதைகளின் விலையும் ஒவ்வொவ்வொரு முறையும் விலையுர்வுக்கு ஆட்பட நேரிடும்,சில நேரங்களில் விலைக்கொடுத்து விதைகள், என்பது மாறி அவர்கள்தான் crop pattern ஐ முடிவு செய்பவர்களாகவும் மாறும் வாய்ப்புமிருக்கிறது.

எல்லோரும்:அப்போ விவசாயிகளின் நிலைமை என்ன?


விவசாயிகளிடமிருந்து,பராம்பரிய விதைகள் பறிக்கப்படுவது,உணவு சார்ந்த இறையாண்மை பறிபோகும் அபாயத்தை எதிர்நோக்கி செல்வதற்கான பாதையைதான் காட்டுகிறது.







அர்ஜெண்டினாவில் இயற்கையாக பயிரிடப்படும் சோயா பீன்ஸ் க்கு பதிலாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் சோயா பீன்ஸ் விளைவிக்கப்பட்ட்து.2008ல் இதன் விலை 16.5 பில்லியன் டாலராக உயர்ந்த்து.அதன்விதைகளின் காப்புரிமையை மான்சாண்டோ பெற்றுள்ளது. க்ளைபோசைட் எனும் இலைப்புழு கொல்லியை எதிக்கும் சக்தியுடன் உருவாக்கப்பட்ட இந்த பயிர்கள் பக்கத்திலுள்ள பயிர்களையும் அழித்து,மக்களுக்கு உடல் ஊனத்தை ஏற்படுத்துகிறது என சுற்றுசூழல் ஆய்வு சொல்வதின் அடிப்படையில் சூழலியாளர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன்ஸ்.


பயிர்களை சார்ந்துள்ள,பூச்சிகள்,வண்டுகள்,நுண்ணுயிர்கள் போன்றவையை அழித்து தான் மட்டுமே வளரக்கூடிய தன்மையை உடையது இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்,பூக்களில் தேப் இடுக்குமா,அதை உறிஞ்சும் தேனீக்கள்,வண்ணத்துப்பூச்சிகளின் நிலையென்ன என்பது குறித்தான தெளிவான விளக்கம் ஏதுமில்லை.







பிடி.பருத்தியினால் பாதிக்கப்பட்ட விவ்சாயிகளின் நிலை யாவரும் அறிந்ததே.


அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவனமும் ஐதாராபாத் பல்கலைக்கழகமும் கூட்டுசேர்ந்து வறட்சியைத் தாங்கும் நெல் ரகத்தை உருவாக்க புதுடில்லி, ஐதாராபாத், கோவை ஆகிய இடங்களிலுள்ள அரசின் வேளாண் ஆய்வு மையங்கள் சுவிட்சர்லாந்து ஏகபோகக்கம்பெனியுடன் கூட்டு சேர்ந்துள்ளன. தங்க அரிசி எனும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த அரிசியை உருவாக்க பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையமும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையமும் கூட்டு சேர்ந்து ஆய்வுகள் நடத்துகின்றன.இந்நெல் வறட்சியை தாங்க கூடியது என்றும் சொல்கிறார்கள்.







பயிர்கள் மட்டுமில்லை,மாடுகளுக்கு கூட பால் கற்க்க ஒரு மடி பத்தாதுன்னு 4 மடிகள் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாடுகளை உருவாக்கிட்டாங்க.





வண்ண மீன்கள்,




பெரிய மீன்கள்


                                      



பூக்கள் என நீண்ட பட்டியலிருக்கிறது



ஜப்பானில் தர்பூசணிகள் கட்டமாக விளைவிக்கப்படுகின்றன, இது உங்கள் குளிர்சாதன பெட்டியிலும் சரி ஏற்றுமதி செய்யும் போதிலும்  சரி, வசதியாக இருக்கும்.ஆனால் இது மரபணு மாற்றம் செய்யப்பட்டதல்ல





மேற்கூறிய அத்தனை தீமைகளும் என்னுடைய சொந்த கருத்தன்று


மைக்கோவின் ஆய்வுகளை மறுஆய்வு செய்த கில்லிஸ் எரிக் செராலினி என்ற பிரெஞ்சு விஞ்ஞானி முன்வைக்கும் கருத்துக்கள்..


சற்று சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்.


1. நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளை (ஆன்டிபையாடிக்) செயல் புரிய முடியாமல் செய்யும் தன்மை பிடி கத்தரிக்காயில் ஊடுருவியுள்ள பிடி ஜீனின் உள்ளதால் மனிதனின் நோய்க்கு கொடுக்கப்படும் (முக்கியமாக நியோமைசின், ஸ்டெப்டோமைசின்) போன்ற மருந்துகள் செயல்பட முடியாமல் போகும்.


2. பிடி கத்தரிக்காயில் உள்ள புரதம் (கிரஸ்டல் புரொட்டீன்) மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடிய நச்சுத்தன்மை உடையது.



3. இந்த ஆய்வு90 நாட்களுக்குள்ள ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டு உள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால் தான்  புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபணு மாற்ற கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.


4. சுற்றுப்புற சூழலின் சமனை அழிப்பதில் இந்த மரபணு மாற்ற தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுப்புகதிகளில் இருக்கும் சாதாரண பயிர்களை இவை பாதிக்கின்றன. மகரந்தத்துõள்கள் காற்றில் பரவுவதால் இந்தப்பாதிப்பு ஏற்படுகிறது.  மரபணு மாற்றபயிர்களின் விளைவாக இயற்கையில் இருந்து வரும் உயிர் சங்கிலித்தொடர் சீர்குலையும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது. சில பூச்சிகள், புழுக்கள் ஒரேயடியாக இல்லாமற் போய்விட்டால் , அவற்றை உண்டு உயிர் வாழுறும் சில வகைப்பறவைகள் இல்லாமற் போய்விடும் . அவற்றின் அழிவு, தொடர் விளைவை ஏற்படுத்தும் . மரபணு மாற்ற பெற்ற தானியம் விளைந்தநிலங்களை சுற்றி அமெரிக்காவில் கொத்து கொத்தாய் வண்ணத்துப்பூச்சிகள் இறந்து போயின. சொல்ல முடிய்தாது இந்த நிலை நீடித்தால் நாமும் நம் வண்ணத்துப்பூச்சிகளை இழக்கலாம்.

5. மான்சாண்டோ போன்ற விதை நிறுவனங்கள் தாங்கள் விற்கும் விதைகளில் டெர்மினேட்டர் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த விதைகளிலிருந்து விளையும் தானியங்களிலிருநுஞூது பெறப்படும் விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாது. அவைகள் மலட்டு விதைகளாக இருக்கும். எனவே விதைகளுக்கு நாம் மீண்டும் விதை நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டும். இதனால் விதை தானியங்கள் மீதான சுதந்திரம் விவசாயிடமிருந்து பறிக்கப்படும். உணவு உற்பத்தி ஒரு தனி நிறுவனத்தின் ஏகபோக உரிமையாகக்கூடும். இப்படிப்பட்ட சூழநிலையில் இந்தியாவில் எந்த விவாதமும் இல்லாமல் பன்னாட்டு கம்பெனிகள் , வேளாண்பல்கலைக்கழகங்கள் அரசு ஆதரவுடன் மரபணு மாற்ற பயிர்களைப்பரப்புவதில் இறங்கியிருக்கின்றன.

சரி அனிதா,செல்வா,பரிமள் இன்னைக்கு கொஞ்சம் heavy subject தான்,

எனக்கு ஒரு பயமிருக்கு போற போக்குல இந்த பொண்ணோட உருவத்துல அந்த பொண்ணோட குணமிருக்கணுமினு ஏதும் மரபணு செய்யமால் உலகம் உய்ய வேண்டும்.

வாங்க ஈவினிங்க் வெளியில் போய்விட்டு வருவோம்.


பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறோம். நன்றி நண்பர்களே.


கருத்துக்கள் சிலவும்,படங்களும்


இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது, இணையத்துக்கு தகவல் வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.





-அன்புடன் லீலா.


No comments:

Post a Comment