Saturday 21 January 2017

பசு பொருளாதாரம்......

வணக்கம் தோழமைகளே,இன்று ஒரு முக்கிய செய்தியுடன் வந்திருக்கிறேன்,அனைவருக்கும் தேவையான செய்தியும் கூட..

                           மாடு…..



                     

மாடு என்றால் செல்வம் என்று ஒரு பொருள் உண்டு,திருவள்ளுவர்
கேடில் விழுச்செல்வம்  கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

என்ற குறளில் மாடல்ல என்பதை செல்வம் என்ற பொருள் தரும்படி எழுதியிருப்பதே இதற்கு போதுமான சான்றாகும்.பசு,காளை என்று அழைக்கப்படும் விலங்குகளை மாடு என்று அழைப்பதற்கு பின் பெரிய அறிவியலும்,ஆன்மாவும் இணைந்துள்ளது.

 மாடுகளை,விலங்குகள் என்று கருதுவதில்லை தமிழர்கள்,மாறாக குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே கருதுகின்றனர்.அதிகபட்சம் பசுக்களுக்கு லக்ஷ்மி யென்றும்,,காளைகளுக்கு செவலை,கொம்பன்,என உருவமைப்பின் அடிப்படையிலும் மற்றும் வீரர்கள்,குலதெய்வ பெயர்களையும் இட்டு அழைப்பது வழக்கம்.

ஒரு மனிதரை காணும்போது,அவருக்கான அடையாளமாக, அவரது தோற்றம்,அறிவு,செல்வ நிலை என எதையாவது கொண்டு அவரை சமூக அரங்கில் அடையாளப்படுத்துகிறோம்.அதே  போன்று உலக அரங்கில் ஒவ்வொவ்வொரு நாட்டுக்கும் அடையாளம் உண்டு,ஜப்பானுக்கு அயராத உழைப்பு,சிங்கப்பூர் –சுத்தம்,ஆப்பிரிக்கா-கனிம வளம்,அமெரிக்கா-அதிகாரம் இந்தியாவின் அடையாளம் என்ன?

இந்தியாவின் அடையாளம் விவசாயம்,கலை,பண்பாடு, பாரம்பரியம்,பழமை………. ஆம் இத்தனை அடையாளத்திற்கும் ஒற்றை சொல் இந்தியா.
எப்படி?

இதே கேள்விதான் அன்றைய நாளில் இந்திய நாட்டை வென்றெடுக்க துடித்த பல நாடுகளின் கேள்வியாக இருந்தது.

ஒருவரை தாழ்மைப்படுத்த அவரது அழகை குறை கூறுவது ஒரு வழக்கம்,அழகை குறைத்து கூறும்போது எதிராளியின் தன்னம்பிக்கையை குறைக்கும் யுக்தி அதனுள் மறைந்து கிடக்கும்.ஆம் அப்படிதான் இந்தியாவின் மேன்மையை குறைக்க இந்திய கலைகளை அழிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக,கலைகளின் பிறப்பிடமான தஞ்சை கோயில் இன்னும் பிற மாநிலங்களின் சிறந்த சிற்பங்களின் மூக்கு உடைக்கப்பட்டது.”Long Nose is the index of beauty” என்ற ஆங்கில சொற்றொடரை மனதில் கொண்டு அனைத்து சிற்பங்களின் மூக்கை உடைத்தனர்.தற்போதும் தஞ்சை பெரிய கோயிலில் மூக்கு உடைந்த சிற்பங்களை பார்க்கலாம். மயிலாசனம் சூறையாடப்பட்டது,கட்டட கலைகளை பறைசாற்றிய பல கட்டங்கள் தகர்க்கப்பட்டது.எனினும் இந்தியாவின் சுபிட்சம் குறையவில்லை, குழம்பியே தவித்தான் அந்நியன்,அப்போதுதான் வெள்ளைக்காரன் வணிகம் என்ற பெயரில் உள்நுழைந்தான்,மீண்டும் மீண்டும் நாட்டை உலா வந்தான்.

அப்போதுதான் கண்டுகொண்டான்,AGRICULTURE என்பது culture ஆக இருந்தது என, அதை Business ஆக மாற்ற நினைத்தான்,இந்த விவசாயிகள் எப்படி வருடம் 365 நாட்களும்,வருமானத்துடன் இருக்கிறான் என யோசித்தான்.
அய்யா நம்மாழ்வார் அவர்கள் கேட்கும் ஒரு விடுகதையின் விடைதான் வெள்ளைக்காரனின் யோசனைக்குமான பதிலாக இருந்தது.
விடுகதை இதுதான்.

அடி காட்டுல்,நடு மாட்டுல,நுனி வீட்டுல அது என்ன?
இதற்கான பதில்:
நெற்கதிர் (அ) சோள கதிர்.

அடியை விட்டு கதிரறுப்பார்கள்,நடுவில் இருக்கும் வைக்கோல் பகுதி மாட்டுக்கு உணவாகும் நுனியில் இருக்கும் தானியம் வீட்டுக்கு.என்பதுதான் இதன் விளக்கம்.

விவசாயி 365 நாளும் வருமானத்துடன் இருக்கும் ரகசியம் புரிந்ததா?
அறுவடை காலங்களில் வைக்கோலை மாட்டுக்கு போட்டு அதன் சாணத்தை எருவாக (இயற்கை உரம்)  பயன்படுத்திக்கொண்டான்,
அறுவடை இல்லாத காலங்களில் வீட்டை சுற்றி இருக்கும் மரம்,செடி,கொடியிலிருந்து தழைகளை மாட்டுக்கு உணவாக போட்டு,மாடு கொடுக்கும் பால்,மற்றும் கோழி முட்டை,ஆட்டுப்பால் இவைகளை விற்று வாழ்வது மரபு,பண்டிகை காலங்களில் வீட்டு பிராணிகளில் மாட்டிற்கு தனி மரியாதை உண்டு. கோடிக்கணக்கில் செலவழித்து வீடு கட்டினாலும்.

 பசுமாடே முதலில் இல்லம் நுழையும்.

சரி,எப்படி நம்மின் விவசாயம் அழிக்கப்பட்டது என பார்ப்போம்.
உயரமான பயிர் வகைகள் விவசாயம் செய்தால்தான் மாட்டிற்கு தீவனம் கிடைக்கும்,மாடு இருந்தால்தான் இந்தியா செழுமையாக இருக்குமென புரிந்து கொண்ட அந்நியன்,இரண்டாம் உலகப்போரில் மிச்சமான அமோனியாவை விற்கவும்,இந்திய நாட்டின் விவசாயத்தை அழிக்கவும்,ஒரே கல்லில் இரண்டு மாங்காய் எனும்படி.அமோனியாவை இந்தியாவிற்கு உரமென்ற பெயரில் விற்க முடிவு செய்தனர்.

அமோனியா என்பது நைட்ரஜனை அடிப்படையாக கொண்ட நேரடி உரம். இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட குண்டு வெடிப்புகளால் வளிமண்டலத்தில் அளவுக்கு மீறிய புகை மண்டலம் ஆக்கிரமித்ததால் மழை பொய்த்துப் போனது,தொடர்ந்து வந்த பஞ்சத்தை காரணம்காட்டி அதிக மகசூல் பெற அமோனியா உரத்தை இந்தியா எனும் மாபெரும் சந்தையில் விற்றனர்,அதோடு பாரம்பரிய நெல் வகைகளை அழிக்கும் விதமாக குட்டை ரக நெல்பயிர்களை அறிமுகப்படுத்தினர,இதிலும் இரண்டு பயன்,ஒன்று பாரம்பரிய நெல் வகை ஒழிப்பு,இன்னொன்று குட்டை ரகம் பயிடும்போது வைக்கோல் கிடைக்காது.திட்டம் அரங்கேறியது,மாடுகள் அடிமாடாக கசாப்பு கடைகளுக்கு சென்றன, நிலத்தை உழணுமே மாடு வேணுமே நம் விவசாயிகள் கவலையுற்றிருந்த காலத்தில்,கவலைக்கு காரணமானவர்களே ஆபத்பாந்தவனாக ட்ராக்ரை அறிமுகப்படுத்தினர்.

கண்ணுக்கு முன்னால விளையாடி வளர்ந்த பிள்ளைங்க எல்லாம் பெரிய படிப்பு படிச்சு காரில் வர, நம்ம வீட்டு பிள்ளைகளும் கார் வாங்கணுமே என்ற எண்ணம் வர ட்ராக்டர் ல உட்கார்ந்து உருமால் கட்டிக்கொண்டு பணம் எண்ணி கொண்டிருந்த விவசாயி வேடம் பூண்ட கனவில் வர ட்ராக்டர் திட்டமும் வெற்றி பெற்றது.

J.C குமராப்பா(Joseph  Chelladurai Cornelius Kumarappa) அவர்கள் காந்திய வழியில் வந்த பொருளாதார நிபுணரும்,சூழலியாளரும் ஆவார்.அவர்  மாடுகள் எப்படி இந்தியா பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன என்பது குறித்து The cow in our Economy    என்ற தலைப்பின் கீழ் The cow and peace என்று பல கருத்துக்களையும் அவரது காலக்கட்டத்தில் காளை உழுவதற்கும், ட்ராக்டர் உழுவதற்குமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் மாடு உழுவது போல் ட்ராக்டர் உழும்போது மகசூல் கிடைக்கவில்லையென்றும்  அதில் பதிவு செய்துள்ளார்.

J.C.குமாரப்பா அவர்கள் ட்ராக்டர் உழும் ஆனால் சாணி போடாதே என்று கேட்ட போது அது வெறும் நகைச்சுவை என எண்ணிவிட்டனர்,ஆனால் அதன் பின்னணியிலிருந்த இயற்கை வேளாண்மை என்ற மாபெரும் அறிவியல் மறைக்கப்பட்டது.

இப்படி ஒரு வழியாக உழவு ட்ராக்டர் உழவாக மாறிற்று.
முன் காலத்தில் வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் இருக்க,அந்த நைட்ஜனை கவர்ந்திழுக்க கூடிய அவரை துவரை வகைகளை பயிரிட்டனர்,அதன் வேர் முடிச்சுகளிலிருக்கும் நைட்ரஜன் மண்ணுக்கு சேரும் படி வயலில் விடப்பட்ட அடி மடக்கி உழப்பட்டது,அதனால் மண் இலகுவாக இருந்தது,அதோடு இயற்கை உரத்தில் உப்பு தேவையான அளவு மட்டுமே இருந்தாதல் தண்ணீரும் இப்போது பயன்படுத்துவதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே செலவானது.

வளிமண்டலத்திலிருந்து இலவசமாக 78% நைட்ரஜன் கிடைக்கும் போது,வெறும் 46% மட்டுமே நைட்ரஜனை கொண்ட யூரியா விவசாயிகளின்  மத்தியில் விற்பனைக்கு பிரபலமானது.
இயற்கை உரம் இல்லாத காரணத்தால்,மண் கடினமானது…….

சரி,மாடு பற்றி பார்ப்போம்……

எப்படி இந்திய பொருளாதாரத்தில் மாடு பங்கு பெறுகிறது. என்று பார்ப்போம்…

நாம் மாடுகளையும்,மற்ற கால்நடை வளங்களையும் பயன்படுத்திய போது(There is a Natural limit to the quantity of production) இயற்கையின் நியதிக்கு உட்பட்டு  உற்பத்தியின் அளவு ஒரு வரையறைக்கு உட்பட்டு இருந்தது,இதை காரணம் காட்டிதான் சில சமர்களை மாடுகளுக்கு எதிராக நடத்தினர்.எது எப்படியிருந்தாலும்,இயற்கையின் வரையறைக்கு உட்படாமல், உற்பத்தி செய்யும் போது, அந்த விளை பொருளுக்கான சந்தையை ஏற்படுத்த முடியமால் போனது,பெருமளவில் பொருளாதாரத்திற்கு கேடானது ஐரோப்போபிய  நாடுகள் சந்தையை கைப்பிடித்தது. விலங்குகள் பொருளாதாரத்திலிருந்து, அதிகார பொருளாதாரத்திற்கு மாறிய போது வன்முறை அத்தியாவசிமாயிற்று. சந்தையை பிடிக்க ஒரு நாடு இன்னொரு நாடோடு சண்டையிட வேண்டியதாயிற்று. விளைவு நிலக்கரியின் சந்தையை முன்னிட்டு முதலாம் உலகப்போர் நடந்தது.

இப்போது தெரிகிறதா? தமிழன் எவ்வளவு பெரிய செய்தியை இந்த மாட்டுக்குள் வைத்திருந்தான் என்று.
அய்யா நம்மாழ்வரிடம் ஒரு வெளிநாட்டு பெண்மணி கேட்ட கேள்வியை சற்றே மாற்றி பொருள் மாறாமல் இங்கே சொல்கிறேன் கேளுங்கள்.
மாடு என்ன சாப்பிடும்?
புல்லு
புல்லு என்ன கலர்?
பச்சை.
மாடு என்ன தருது?
பால்
பால் என்ன கலர்?
வெள்ளை
பச்சை புல்லை சாப்பிடற மாடு எப்படி வெள்ளையா பால் தருது? பச்சையாதானே தரணும்.
பச்சையா இருந்தா அது மெக்னீசியம்,வெள்ளையா இருந்தா கால்சியம்.
மெக்னீசியத்தை கால்சியமா மாத்தற மிஷின மாட்டு வ்யித்துக்குள்ளே வச்சிருக்கீங்களா?

மெக்னீசியத்த கால்சியமா மாத்தி தர திறன் மாட்டுக்கு இருக்குன்னு கண்டுபிடிச்சவன் தமிழன் என்று அய்யா சொல்லி சிரித்திருக்கிறார். 

அப்படி ஒரு அற்புதம்தான் மாடு.இந்த அற்புதம் விவசாயத்திற்கு மட்டுமில்லை,தாயற்ற குழந்தைகளுக்கும்,ஒரிரு வயதுக்கு பின் எல்லா குழந்தைகளுக்கும் கோமாதா தான் பால் கொடுக்கும் ஜீவன்.

வைரமுத்து அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் மாட்டிற்கு பேய்தேவர் பிரசவம் பார்க்கும் இடம்,தமிழனின் அறிவுக்கும்,விலங்குகள் மீது தமிழனுக்குள்ள தீராத அன்பையும் வெளிப்படுத்தும்...

ஆசிய மாடுகளின் சிறப்புதான் அதன் அழிவிற்கு காரணமாயிற்று.ஆம் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க மாடுகள்தான் A2 புரத பாலை தரக்கூடியவை.பொதுவாக ஆடு,ஒட்டகம்,கழுதை,எருமை,காட்டெருமை போன்றவைகளின் பால் A2 புரத பாலாக இருக்கும்.

European Food Safety Authority(EFSA) 2009 ல் நடத்திய ஆய்வில் A1 புரத பால் அருந்துபவர்களுக்கு  டைப் 1 நீரழிவு  மற்றும் வளர்ந்த ஆண்களுக்கு இருதயநோய்,சிலருக்கு டைப் 2 நீரழிவும் ஏற்படுவதாக கூறியது.
A2 Corporation Company 2000 ம் ஆண்டில் நீயூசிலாந்தில் தொடங்கிற்று,பல ஆய்வுக்குபின் வளர்ந்த ஆண்களுக்கு இருதயநோய், மற்றும் இன்சுலின் சார் நீரழிவு குறைபாடு உள்ள குழந்தைகளையும் உருவாக்குவதாகவும் அதனால் A1 புரத பால் தடை செய்யவும் Food Standards Australia Newzealand regulatory க்கு மனு ஒன்றை சம்ர்ப்பித்தது.

பின் A2 பால் கம்பெனி வெற்றியடைந்தது.

பின் சீனாவுக்கு A2’s infant formula 2013ல் அனுப்பட்டது,அதில் 3,00,000 குழந்தைகள் அசுத்தமான பாலினால் விஷமாகி போனார்கள் என்பது உலகறிந்த செய்தி.

ஜெர்ஸி என்பது மாடா?

இந்த கேள்வி சற்று முட்டாள்தனமாக தோன்றாலாம்.ஆனால் பதிலை தெரிந்து கொண்ட பின் உண்மையறிவோம்.
இன்று இந்தியா முழுவதும் ஜெர்ஸி மற்றும் H.F ( Holstein Friesian) என்ற விலங்குகளின் பால்தான் பதப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.ஆனால் ஜெர்ஸி மற்றும் H.F விலங்க்குகளை மாடுகள் வகை கிடையாது.மாறாக காட்டு விலங்குகளில் ஒரு வகை(wild animal) இதன் பெயர் URUS.ஜெர்மனியில் இதை AUROCHS என்று அழைக்கின்றனர். 

இவ்விலங்குகளின் அதிகபட்சமான மற்றும் தரமான மாமிசத்திற்காக இதை வேட்டையாடுவது வழக்கம்,ஆனால் வேட்டையாடுவது அத்தனை எளிது அன்று.எனவே இதை வேறு விலங்குகளோடு கலப்பின பெருக்கம் செய்தனர்.அந்த வகையில் உருவானதுதான் இன்றைய ஜெர்ஸி. Holstein  மற்றும் F.S(Farming Simulator)

இவ்வகை விலங்குகளை மாமிசத்திற்காக மேலை நாடுகள் பராமரிக்கின்றன, ஆனால் அதிர்ச்சி தரும் செய்தி என்னவெனில் இவ்விலங்குகளின் பாலில் CASOMORPHINE என்ற விஷ வேதிப்பொருள் இருப்பதால் இதை நேரடியாக உட்கொள்ள முடியாது என்பதே.


இந்திய மாடுகளின் பாலோ மிக சிறந்த ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது   (இந்திய மாடுகளுக்கு உரம் கலந்த வைக்கோல்,நெகிழி,மாசாடைந்த புல் ஆகியவற்றை கொடுக்காத படசத்தில்) பல நோய்களுக்கு சிகிச்சை தரக்கூடிய வல்லமை வாய்ந்தது.
உயிர் அறிவியல் பல ஆராய்ச்சிகள் மூலம் நிருப்பித்திருப்பது என்னவெனில்,இந்திய மாடுகளின் பாலில் Amino acid PROLINE என்ற அமினோ அமிலம் இன்னொரு அமினோ அமிலமான INSOLEUCINE வுடன் வலுவாக இணைந்திருக்கிறது என்பதுதான் இத்தகைய பால்தான் a2 பால என கூறப்படுகிறது.இந்த பால் பல உடல் குறைப்பாடுகளை சரிசெய்ய வல்லது குறிப்பாக உடல் பருமன், மூட்டு வலி,ஆஸ்துமா மற்றும் மூளை சார்பான குறைப்பாடுகள் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

 அதே போல் A2 பாலில் அதிக அளவில் உள்ள ஓமேகா3 இரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்க வல்லது. 

A2 பாலில் உள்ள STORNTIUM என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை தர கூடியது.
இந்தியாவின் நாட்டு மாடுகள் பல வகையிலும் மேன்மையானவை, இவ்வகை மாடுகளை மேலும் ஆரோக்கியமான சந்திகளை பெருக்குவதற்கு ஏதுவாக ஏறு தழுவுதல் என்ற 5000 ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பராம்பரிய வாய்ந்த விளையாட்டு நடத்தப்படுகிறது. இவ்விளையாட்டு அறிவியலின் அடிப்படையில் நடத்தப்படும் ஒன்றாகும்,மனித இனத்தில் ஆணும், மாட்டினத்தில் காளையும் நல்ல வளமான சந்ததியை பெருக்குவதற்காக சிறந்த ஆண் மகனையும், காளையையும் தேர்ந்தெடுந்து வளமுடன் வாழ்ந்தனர் தமிழர்கள்.
நீயூசிலாந்து,டென்மார்க்,அமெரிக்கா போன்ற நாடுகள் சேர்ந்து A2 பாலின் காப்புரிமையை  பெற்றுக்கொண்டு,நம் நாட்டு மாடுகளையும் ஜெர்சி களையும் செயற்கை கருவூட்டலின் மூலம் தயார் செய்து,நம் நாட்டு மாடுகளை அழித்து,மொத்த A2 பால் வணிக சந்தையை தன் கைவசம் கொண்டுவரும் திட்டம்தான் ஏறு தழுவ அல்லது ஜல்லிக்கட்டிற்கு தடை.
ஜல்லிக்கட்டு என்பது கொம்பு பிடிப்பது இல்லை,ஏறு தழுவல் என்பதன் மூலம்,காளைகளின் திமிலைப்பிடித்து காளைகளை தழுவி வெற்றி கொள்வதே தமிழர் பண்பாடு.

ஏறு தழுவலில் மிருக வதையை கண்டவர்கள், பணம் படைத்தவர்கள் விளையாடும் குதிரை பந்தயத்தை தடை செய்யாததும்,வெயிலில் நிற்க முடியாத மென்பாதங்களை கொண்ட வன விலங்கான யானைகளை கோயிலில் ஈர சாக்கிடமால் நிற்க வைக்கும் கொடுமையையும்,ஆனைஊட்டு என்ற விழாவையும் தடை செய்யவில்லையே ஏன்? என்ற பலநூறு கேள்விகள் இருக்கின்றன்…..
எனினும்,திரண்டெழுந்த தமிழினம்,இளைஞரினம்,ஆணுக்கு பெண் இளைப்பில்லை காண் என்று வெகுண்டெழுந்த் பெண்ணினம் யாவரும் சொல்வது ஒன்றுதான் அது எங்களின் சங்க கால வீரம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதே!

அன்புடன் லீலா.

Sunday 8 January 2017

எனது மண் எனது கலாச்சாரம்-1 தென்னக பண்பாட்டு மையம்......

தென்னக பண்பாட்டு மய்யம்….

தஞ்சாவூர்- தஞ்சை  என சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு ஊர். இது ஊர் மட்டுமா?
தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி"என்று பொருள்
                                                                                                                                                                   

நெற்களஞ்சியம் அதுமட்டுமா? இல்லையில்லை கலை களஞ்சியம்,கதை களஞ்சியம்,கவி களஞ்சியமென களஞ்சியங்களுக்கெல்லாம் களஞ்சியம்.இங்கு கல்லும் கவிப்பாடும்….சொல்லும் இசைப்போடும்……..
சிற்பம் செதுக்கும் ஓசை முதல் சிறு தீக்குச்சி உரசும் ஒசை வரை எல்லாமே இசைதான் இங்கே…….

சொந்த ஊர் பற்றி பேச சொன்னா எல்லோருக்கும் பேச நிறைய இருக்கும்……… ஆனா எங்க ஊர் பற்றி எல்லோருக்குமே ஏதோ இருக்கும்……. ஆசையும் இருக்கும்……..

தஞ்சை சொல்லும் போதே நெஞ்சை அள்ளும் உறுமி மேளமும்,நாசி துளைக்கும் கதம்ப மணமும்……வந்து வந்து போகும்………மண்வாசனை பிடிக்கும் எல்லோருக்கும்…..மண்ணுக்கே வாசனை கொடுத்த ஊரு இது,விளைஞ்சு நிற்கும் நெற்கதிரின் மணம் மண்ணுக்கு மட்டுமில்லை மனசுக்கும்தான்……

எல்லோருக்கும் சோறு போடும் ஊரு,காதுக்கெல்லாம் இசையை ஊட்டும் ஊரு…..கண்மாயும் கதை சொல்லும் ஊரு,மாட்டை கூட சுருதியோட்தான் ஓட்டுவான்…………

பொம்மை சாதாரண பொம்மை இல்லை தலையாட்டும் பொம்மை அறிவியலின் அடிப்படையில் உருவான பொம்மை….

இசைக் கருவிகளின் ராணி வீணை.
வீணை,மிருதங்கம்,தம்புரா,தபேலா, போன்ற மெல்லிசை கருவிகள் இங்குதான் செய்யப்படுகிறது.முக்கியமாக சொல்ல வேண்டிய செய்தி தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும்.

உலகப் புகழ் தஞ்சை பெரியக்கோயில் என பெரிய பட்டியல் உண்டு……..
 உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் இங்குதான் உள்ளது……..                                                    


இத்தனை பெருமையும் கலையும் கொண்ட இடத்தில்தான் இந்தியாவில் உள்ள ஏழு பண்பாட்டு மய்யங்களில் ஒன்றான தென்னகப் பண்பாட்டு மய்யம் உள்ளது.
         
பல பேரரசுகளின் எழுச்சியையும்,வீழ்ச்சியையும் கண்ட பழம் பெரும் நகரம். தமிழகத்தின், இந்தியாவின் பண்பாட்டையும்,கலாச்சாரத்தையும்,கலையையும்,வரலாற்றையும்,அரசியல் ஞானத்தையும்,பறைச்சாற்றும் சின்னம்தான் தஞ்சாவூர்.இது வெறும் ஊர் அல்ல..
இத்தனை பெருமையுடைய ஊரில், தென்னக பண்பாட்டு மய்யம் இடம்பெற்று தன்னை பெருமைப்படுத்திக்கொண்ட்து
ராஜராஜ சோழனும்,வானதியும்,குந்தவை நாச்சியாரும்,வந்திய தேவனும் உலா வந்த மண்ணில் அல்லவா எங்கள் பாதம் நடந்துக் கொண்டிருக்கிறது………
       
தென்னக பண்பாட்டு மய்யம், கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டதாகும்.அதோடு மட்டுமில்லாமல் நம் நாட்டின் கலாச்சாரம்,பாரம்பரியம் ஆகியவற்றை உயிர்ப்போடு வைத்திருக்கவும்,நேர்மையான உணர்வுகளை மதிக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு இடம்தான் தென்னக பண்பாட்டு மய்யம். வெளி நாடுகளுக்கும் நம்மின் நடனம்,இசை,கலை ஆகியவற்றை பரப்புவதற்காக வருட வருடம் கலை நிகழச்சிகள் நட்த்துகிறது இந்நிறுவனம்

       


இத்தனை சிறப்பு பெற்ற தென்னக பண்பாட்டு மையம்,எங்கள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம்தான்.

சலங்கைநாதம் நிகழ்ச்சி என்றால் உடனே கிள்ம்பி விடுவோம்..

தஞ்சாவூரில் ஒவ்வொவ்வொரு இடமும் ஒராயிரம் கதை சொல்லும்,.கல்லும் கவிப்பாடும்……..
                      
தென்னக பண்பாட்டு மய்யம்,மருத்துவ கல்லூரி சாலையில் வல்லம் செல்லும் வழியில் உள்ளது.வெளியிலிருந்து பார்க்கும் போதே உள்ளே வர சொல்லும் தலையாட்டி பொம்மைகள் வனப்பு மிக்கவை. சுமார் இருபந்தைந்து அடி உயரம் இருக்கும்.

                          
கண்ணாடி இழை மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள். தலையாட்டி அழைக்க ஆர்வமுடன் உள்ளே சென்றோம்.நுழை வாயிலின் இட்து புறம் மனிதனின் பரிணமா வளர்ச்சியை சித்தரிக்கும் பொம்மைகள் கருத்தையும்,கண்ணையும் கவர குட்டீஸ்களை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்……


அதற்குள்ளாக,நுழைவாயில் அருகே புலியாட்டம் துவங்க கண்கள் விரிய அனைவரும் அங்கு விரைந்தோம்.நல்லதொரு கிராமிய நடனம் சுமார் பதினைந்து நிமிடம் எங்களை கட்டிப்போட்ட்து…

வலது புறம்,புல் தரை மீது நின்றிருந்த வண்ண வண்ண பொம்மைகள், எண்ணம் கவர குழந்தைகளோடு குழந்தைகளாய் ஓடினோம்,புகைப்படம் எடுத்துக்கொண்டு பொம்மையோடு வெகுநேரம் நின்றிருந்தோம்……..பால்யம் திரும்பியது போன்றோதொரு மகிழ்வு…
ஏதோதோ ஊர்களில் பணிநிமித்தம் சுற்றும் எங்களை போன்றவர்களுக்கு .சொந்த மண்ணில் ஒரு சொர்க்கம்,மனம் பேரமைதியில் இருந்தது.மெல்ல புல் தரையை ஓட்டிய நடைப்பாதையில் சென்று அங்குள்ள பொம்மைகளுடன் பேசிவிட்டு தென்னக பண்பாட்டு மய்யத்தின் முக்கிய பகுதிக்கு வந்தோம்…….


   
                             
புல்லாங்குழல் வாசிப்பது போன்ற கைகளின் வடிவமைப்பில் மெய்மறந்து போனோம்…அதற்கு முன்னால் விரிக்கப்பட்ட புத்தகமும் அதில் நாட்டியா சாஸ்திராவும் பொறிக்கப்பட்டிருந்த்து.         
அதை தொடர்ந்து மேலே செல்ல படிக்கட்டுகளுக்கு வலப்புறம் சிலைகளும்,படிக்கட்டு ஏறியவுடன் மாட்டு வண்டியும்,மண்சால்களும் வரவேற்க,வண்டியை பார்த்தவுடன்,                          
எங்கள் தாத்தா வீட்டு நினைவுகளையும்,மாட்டு வண்டி,குதிரை வண்டி பயணத்தை பற்றியும் நானும்,எனது தம்பியும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டோம்……..
             


உள்ளே சென்றவுடன் மனம் திறந்து கொண்டது, கலை கண்ணும்,காதும் திறந்துக்கொள்ள மகிழ்வு மடை திறந்துகொள்ள சிறிது நேரம் எதை பார்ப்பது என திகைத்து நிற்க….எனது தம்பிதான் எங்களை பொறுமையாக வழிநடத்தி ஒரு ஒரு இடமாக, சிலையாக பார்க்க வைத்தார்..

அங்குள்ள திரையரங்கில் நடன ஓத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்கள்..

கதவுகளின் வேலைப்பாடுகளில் மனதை பறிகொடுத்து நிற்க சற்று நேரத்தில் வேறொரு உலகத்திற்கு சென்று வந்தேன்.

கதவுகள் பேசுமோ?



என என்னையே நான் கேட்டுக்கொள்ள,கதையென்ன கவியே பாடுவோம் என சொல்லாமல் சொல்லி ஆடினர் மங்கையர் கதவுகளில்………


ரசனைகளின் எல்லைக்கு ஏது அளவு?
    
மெல்ல மய்ய பகுதிக்கு வர கூரை முட்டும் வகையில் சுடு மண்ணால் செய்யப்பட்ட அடுக்கு விளக்கும்.கூரையின் மய்ய பகுதியும்,அதை சுற்றியும் வரையப்பட்டிருந்த வண்ண ஓவியங்கள் மகாபாரத கதையை சொல்லியது,மெல்ல அங்கிருந்த 7AD கால சிலைகளை நோக்கி நகர்ந்தோம்…….. உள்சுற்று மன்நிறைவுடன் முடிவடைய…...........

                                        


வெளியில் இசை கலைஞர்களும்,நாட்டிய கலைஞர்களும் ஓப்பனையுடன் நடந்து செல்ல அங்கு விரைந்தோம்,பின் கீரை மற்றும் பொம்மைகள் நடனம் பார்த்த பின்பு சற்றே அனைவருக்கும் பசிக்க தொடங்கியிருந்த்து………..

உணவு பகுதிக்கு சென்றோம்.ஆனந்த ஆச்சரியம் ! ஆம் அனைத்துமே நம் மண்ணின் பராம்பரிய தின் பண்டங்கள்….
.போகும் வழியில் ஏர்,கலப்பையுடன் மாடு பூட்டி நின்றார் நம் விவசாயி...
தினை லட்டு,நவதானிய புட்டு,பாசி பயறு பாயசம்,பால் பாயசம், மூலிகை தேநீர்,கரும்பு சாறு,வேக வைத்த சோளம்,சோள பொறி, இட்லி என வகை வகையாய் உணவுகள் மணக்க வேண்டியதை சாப்பிட்டோம்…..

அருகில் சிறுதெய்வங்கள் நிற்க அவர்களையும் எங்களது காமிராவுக்குள் பத்திரப்படுத்திக்கொண்டோம்....

                



அங்கு,கிட்டதட்ட நூறுக்கும் மேற்பட்ட கடைகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து போட்டிருந்தார்கள்.எப்போதும் பிளாஸ்டிக் பொருட்களை பார்த்து சலித்து போயிருந்த கண்களுக்கு மரவேலைப்பாடுகள்,மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள்,முத்து வைத்து செய்யப்பட்ட ஆபரணங்கள்,கைத்தறி உடைகள் என கலைகளின் வெளிப்பாடு மிளிர்ந்தது கண்களுக்கு விருந்து…….

மாலை ஆறு மணியாகி விட,கலை நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நோக்கி விரைந்தோம், நிகழ்ச்சிகளை பார்க்க வசதியாக இடம் பிடித்து அமர்ந்தோம்………

பெரும் ஆவ்லுடன் இருந்தோம்,அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் தன்னிச்சையாக வந்தவர்கள்,வந்திருந்த அனைவரையும் கலை,என்ற ஒரு புள்ளி இணைத்திருந்தது……..

நிகழ்ச்சி ஆரம்பித்து விட அனைவரும் மவுனமாகி கலைகளில் கரைந்து போயிருந்தார்கள் எனினும்,தன்னை மறந்து கைகள் தாளம் போட,சிறப்பான இடங்களுக்கு கைத்தட்டலும்,சீழ்கை ஒலிகளும் பறந்தன……..

மணிப்புரி பூங்சோளம் ஆடல் ஆரம்பிக்க,மெய் மறந்து அதில் லயிக்க ஆரம்பித்தோம், மேளங்களுடன் மெல்லிய ஓசையுடன் ஆரம்பித்த இசை, சாரல்,தூறாலாகி பின் மழையென பெருகுவதை போல் வான் தொட்டு திரும்பிற்று பூங்சோளம்,மீண்டும் சாரலாக, விண்ணை தொட்ட்து கைத்தட்டல்,மீண்டும் சீராக பயணித்த இசையில் சட்டென்று ஆடல் கலைஞர்கள் தலையை சிலுப்ப ஒன்று போல் தலையில் கட்டியிருந்த தலைப்பாகை கீழே விழ மீண்டும் கைத்தட்டலுடன் விண்ணை தொட்ட்து இசை………….




அடுத்து கர்நாடக மாநிலத்து கலைஞர்கள்,தப்பு மற்றும் தபேலா என இரு பிரிவாக உள்நுழைய தபேலாவும்,தப்பும் ஒன்றுக்கு ஒன்று பதில் கொடுக்க (counter) செம பீட் என அனைவரும் எழுந்து நின்று.


ஆடவும்,கைத்தட்டவும்,சீழ்கை எழுப்பவும் அனைவரின் ஆன்மாவையும் தொட்டிருந்த்து இசை,அதுவரை ஒன்றுக்கு ஒன்று போட்டியாக இசைத்த கருவிகளும்,கலைஞர்களும்,சட்டென்று ஒருகிணைந்துஇசைக்க, தப்பும்,தபேலாவும் பின்னி பிணைந்து கொண்டன,


கையில் இருந்த குச்சிகளுடன் கலைஞர்கள் தன்னை மறந்து வாசிக்க அங்கே அவர்கள் இல்லை,இசையிருந்தது……அவர்கள் இசையாகியிருந்தார்கள்,அவனே நாதமாக, கீதமாக, நடனமாக, கருவியாக,காலமாக இருக்க,கண்டவர்,கேட்டவர் யாரும் அங்கில்லை,இசை மட்டும் தன் போக்கிலே பொங்கி வழிந்து கொண்டிருந்தது………..



சற்றே அடுத்த நிகழச்சிக்காக இடைவெளி விட அடுத்து என்ன என்று ஆவலுடன் காத்திருக்க மணி எட்டு ஆகியிருந்தது…………


அடுத்து தமிழகத்தின் தப்பாட்டமும், கரகம், காவடியாட்டம், பொய்க்கால் ஆட்டம் என கூறவும்,மணி என்னவாகயிருந்தாலும் பார்த்து விட்டுதான் போகணும் என நான் சொல்ல மற்றவர்களுக்கும்  அதே எண்ணத்துடன் இருக்க……….

கண்கள் விரிய காத்திருக்க……..

இசைத்தது தஞ்சாவூர் உறுமி மேளமும்,நாதஸ்வரமும்,மெல்ல தப்பாட்ட குழு உள்ளே வர நான்கு பெண்களும்,நான்கு ஆண்களும்,பக்கத்திற்கு இரண்டு பெண்கள்,இரண்டு ஆண்கள் என இரு அணியாக நின்று ஆடத்தொடங்க, கைகள் தப்படிக்க தொடங்கியது,இதிலும் போட்டி தொடங்க இசை முழங்கிற்று


                    

தப்பு உயிரின் நாதம் அல்லவா?(Rhythm of life) அனைவரின் உடலும் ஆட ஆரம்பித்த்து…… ரசிகர்கள் தன் ரசனையின் உச்சமாக ஆட ஆரம்பிக்க……..சட்டென்று கரகம் வர தலையிலிருந்து கழுத்துக்கும் முதுகுக்கும் கரகம் தானாக பயணித்தது…….


ஆறிலிருந்து-ஏழு வயதுக்குள் இருக்கும் ஒரு சிறுவன் காவடியாட,சொல்ல வார்த்தைகளின்றி கரகோஷம் விண்ணை பிளக்க,விசில் பறந்தது…………


பொய்க்கால் ஆட்ட்த்திற்கு வந்தவர் கூரையை தொட்டு நின்றார்,இந்தியா பாகிஸ்தான் எல்லை வீர்ர்கள் போல் காலை தூக்கி சலாம் போட ஆட்டம் ஆரம்பித்தது…..


ஒன்பது மணிக்கு கலை நிகழ்ச்சி நிறைவு பெற மனநிறைவுடன் அங்கிருந்து வீட்டை நோக்கி கிளம்பினோம்…………

ஆன்மாவின் நாதம் அது எங்க ஊரு ராகம்.கலைகளின் பிற்ப்பிடம்…. எங்க ஊர் கலை என்ற கர்வம் ஒரு நிமிடம் வந்துதான் போயிற்று……
-அன்புடன் லீலா