தென்னக பண்பாட்டு மய்யம்….
தஞ்சாவூர்-
தஞ்சை என
சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு ஊர். இது ஊர் மட்டுமா?
நெற்களஞ்சியம் அதுமட்டுமா?
இல்லையில்லை கலை களஞ்சியம்,கதை களஞ்சியம்,கவி களஞ்சியமென களஞ்சியங்களுக்கெல்லாம் களஞ்சியம்.இங்கு கல்லும் கவிப்பாடும்….சொல்லும் இசைப்போடும்……..
சிற்பம்
செதுக்கும் ஓசை முதல் சிறு தீக்குச்சி உரசும் ஒசை வரை எல்லாமே இசைதான் இங்கே…….
சொந்த
ஊர் பற்றி பேச சொன்னா எல்லோருக்கும் பேச நிறைய இருக்கும்……… ஆனா எங்க ஊர் பற்றி எல்லோருக்குமே ஏதோ இருக்கும்……. ஆசையும் இருக்கும்……..
தஞ்சை
சொல்லும் போதே நெஞ்சை அள்ளும் உறுமி மேளமும்,நாசி துளைக்கும் கதம்ப மணமும்……வந்து வந்து போகும்………மண்வாசனை பிடிக்கும் எல்லோருக்கும்…..மண்ணுக்கே வாசனை கொடுத்த ஊரு இது,விளைஞ்சு நிற்கும் நெற்கதிரின் மணம் மண்ணுக்கு மட்டுமில்லை மனசுக்கும்தான்……
எல்லோருக்கும் சோறு
போடும் ஊரு,காதுக்கெல்லாம் இசையை ஊட்டும் ஊரு…..கண்மாயும் கதை சொல்லும் ஊரு,மாட்டை கூட சுருதியோட்தான் ஓட்டுவான்…………
இசைக்
கருவிகளின் ராணி வீணை.
வீணை,மிருதங்கம்,தம்புரா,தபேலா, போன்ற மெல்லிசை கருவிகள் இங்குதான் செய்யப்படுகிறது.முக்கியமாக சொல்ல வேண்டிய செய்தி தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும்.
உலகப்
புகழ் தஞ்சை பெரியக்கோயில் என பெரிய பட்டியல் உண்டு……..
இத்தனை பெருமையும் கலையும் கொண்ட இடத்தில்தான் இந்தியாவில் உள்ள ஏழு பண்பாட்டு மய்யங்களில் ஒன்றான தென்னகப் பண்பாட்டு மய்யம் உள்ளது.
பல
பேரரசுகளின் எழுச்சியையும்,வீழ்ச்சியையும் கண்ட பழம் பெரும் நகரம். தமிழகத்தின், இந்தியாவின் பண்பாட்டையும்,கலாச்சாரத்தையும்,கலையையும்,வரலாற்றையும்,அரசியல் ஞானத்தையும்,பறைச்சாற்றும் சின்னம்தான் தஞ்சாவூர்.இது வெறும் ஊர் அல்ல..
இத்தனை
பெருமையுடைய ஊரில், தென்னக பண்பாட்டு மய்யம் இடம்பெற்று தன்னை பெருமைப்படுத்திக்கொண்ட்து…
ராஜராஜ
சோழனும்,வானதியும்,குந்தவை நாச்சியாரும்,வந்திய தேவனும் உலா வந்த மண்ணில் அல்லவா எங்கள் பாதம் நடந்துக் கொண்டிருக்கிறது………
தென்னக
பண்பாட்டு மய்யம், கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால்
அமைக்கப்பட்டதாகும்.அதோடு மட்டுமில்லாமல்
நம் நாட்டின் கலாச்சாரம்,பாரம்பரியம் ஆகியவற்றை
உயிர்ப்போடு வைத்திருக்கவும்,நேர்மையான
உணர்வுகளை மதிக்கும் விதமாகவும்
அமைக்கப்பட்டிருக்கும்
ஒரு இடம்தான் தென்னக
பண்பாட்டு மய்யம். வெளி நாடுகளுக்கும் நம்மின் நடனம்,இசை,கலை ஆகியவற்றை பரப்புவதற்காக
வருட வருடம் கலை நிகழச்சிகள் நட்த்துகிறது
இந்நிறுவனம்
சலங்கைநாதம் நிகழ்ச்சி என்றால் உடனே கிள்ம்பி விடுவோம்..
தஞ்சாவூரில் ஒவ்வொவ்வொரு இடமும் ஒராயிரம் கதை சொல்லும்,.கல்லும் கவிப்பாடும்……..
தென்னக பண்பாட்டு மய்யம்,மருத்துவ கல்லூரி சாலையில் வல்லம் செல்லும் வழியில் உள்ளது.வெளியிலிருந்து பார்க்கும் போதே உள்ளே வர சொல்லும் தலையாட்டி பொம்மைகள் வனப்பு மிக்கவை. சுமார் இருபந்தைந்து அடி உயரம் இருக்கும்.
கண்ணாடி இழை மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள். தலையாட்டி அழைக்க ஆர்வமுடன் உள்ளே சென்றோம்.நுழை வாயிலின் இட்து புறம் மனிதனின் பரிணமா வளர்ச்சியை சித்தரிக்கும் பொம்மைகள் கருத்தையும்,கண்ணையும் கவர குட்டீஸ்களை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்……
கண்ணாடி இழை மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள். தலையாட்டி அழைக்க ஆர்வமுடன் உள்ளே சென்றோம்.நுழை வாயிலின் இட்து புறம் மனிதனின் பரிணமா வளர்ச்சியை சித்தரிக்கும் பொம்மைகள் கருத்தையும்,கண்ணையும் கவர குட்டீஸ்களை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்……
அதற்குள்ளாக,நுழைவாயில் அருகே புலியாட்டம் துவங்க கண்கள் விரிய அனைவரும் அங்கு விரைந்தோம்.நல்லதொரு கிராமிய நடனம் சுமார் பதினைந்து நிமிடம் எங்களை கட்டிப்போட்ட்து…
வலது புறம்,புல் தரை மீது நின்றிருந்த வண்ண வண்ண பொம்மைகள், எண்ணம் கவர குழந்தைகளோடு குழந்தைகளாய் ஓடினோம்,புகைப்படம் எடுத்துக்கொண்டு பொம்மையோடு வெகுநேரம் நின்றிருந்தோம்……..பால்யம் திரும்பியது போன்றோதொரு மகிழ்வு…
ஏதோதோ ஊர்களில் பணிநிமித்தம் சுற்றும் எங்களை போன்றவர்களுக்கு .சொந்த மண்ணில் ஒரு சொர்க்கம்,மனம் பேரமைதியில் இருந்தது.மெல்ல புல் தரையை ஓட்டிய நடைப்பாதையில் சென்று அங்குள்ள பொம்மைகளுடன் பேசிவிட்டு தென்னக பண்பாட்டு மய்யத்தின் முக்கிய பகுதிக்கு வந்தோம்…….
புல்லாங்குழல் வாசிப்பது போன்ற கைகளின் வடிவமைப்பில் மெய்மறந்து போனோம்…அதற்கு முன்னால் விரிக்கப்பட்ட புத்தகமும் அதில் நாட்டியா சாஸ்திராவும் பொறிக்கப்பட்டிருந்த்து.
அதை தொடர்ந்து மேலே செல்ல படிக்கட்டுகளுக்கு வலப்புறம் சிலைகளும்,படிக்கட்டு ஏறியவுடன் மாட்டு வண்டியும்,மண்சால்களும் வரவேற்க,வண்டியை பார்த்தவுடன்,
எங்கள் தாத்தா வீட்டு நினைவுகளையும்,மாட்டு வண்டி,குதிரை வண்டி பயணத்தை பற்றியும் நானும்,எனது தம்பியும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டோம்……..
எங்கள் தாத்தா வீட்டு நினைவுகளையும்,மாட்டு வண்டி,குதிரை வண்டி பயணத்தை பற்றியும் நானும்,எனது தம்பியும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டோம்……..
உள்ளே சென்றவுடன் மனம் திறந்து கொண்டது, கலை கண்ணும்,காதும் திறந்துக்கொள்ள மகிழ்வு மடை திறந்துகொள்ள சிறிது நேரம் எதை பார்ப்பது என திகைத்து நிற்க….எனது தம்பிதான் எங்களை பொறுமையாக வழிநடத்தி ஒரு ஒரு இடமாக, சிலையாக பார்க்க வைத்தார்..
அங்குள்ள திரையரங்கில் நடன ஓத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்கள்..
கதவுகளின் வேலைப்பாடுகளில் மனதை பறிகொடுத்து நிற்க சற்று நேரத்தில் வேறொரு உலகத்திற்கு சென்று வந்தேன்.
கதவுகள் பேசுமோ?
என என்னையே நான் கேட்டுக்கொள்ள,கதையென்ன கவியே பாடுவோம் என சொல்லாமல் சொல்லி ஆடினர் மங்கையர் கதவுகளில்………
ரசனைகளின் எல்லைக்கு ஏது அளவு?
மெல்ல மய்ய பகுதிக்கு வர கூரை முட்டும் வகையில் சுடு மண்ணால் செய்யப்பட்ட அடுக்கு விளக்கும்.கூரையின் மய்ய பகுதியும்,அதை சுற்றியும் வரையப்பட்டிருந்த வண்ண ஓவியங்கள் மகாபாரத கதையை சொல்லியது,மெல்ல அங்கிருந்த 7AD கால சிலைகளை நோக்கி நகர்ந்தோம்…….. உள்சுற்று மன்நிறைவுடன் முடிவடைய…...........
வெளியில் இசை கலைஞர்களும்,நாட்டிய கலைஞர்களும் ஓப்பனையுடன் நடந்து செல்ல அங்கு விரைந்தோம்,பின் கீரை மற்றும் பொம்மைகள் நடனம் பார்த்த பின்பு சற்றே அனைவருக்கும் பசிக்க தொடங்கியிருந்த்து………..
உணவு பகுதிக்கு சென்றோம்.ஆனந்த ஆச்சரியம் ! ஆம் அனைத்துமே நம் மண்ணின் பராம்பரிய தின் பண்டங்கள்….
.போகும் வழியில் ஏர்,கலப்பையுடன் மாடு பூட்டி நின்றார் நம் விவசாயி...
தினை லட்டு,நவதானிய புட்டு,பாசி பயறு பாயசம்,பால் பாயசம், மூலிகை தேநீர்,கரும்பு சாறு,வேக வைத்த சோளம்,சோள பொறி, இட்லி என வகை வகையாய் உணவுகள் மணக்க வேண்டியதை சாப்பிட்டோம்…..
அருகில் சிறுதெய்வங்கள் நிற்க அவர்களையும் எங்களது காமிராவுக்குள் பத்திரப்படுத்திக்கொண்டோம்....
அருகில் சிறுதெய்வங்கள் நிற்க அவர்களையும் எங்களது காமிராவுக்குள் பத்திரப்படுத்திக்கொண்டோம்....
அங்கு,கிட்டதட்ட நூறுக்கும் மேற்பட்ட கடைகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து போட்டிருந்தார்கள்.எப்போதும் பிளாஸ்டிக் பொருட்களை பார்த்து சலித்து போயிருந்த கண்களுக்கு மரவேலைப்பாடுகள்,மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள்,முத்து வைத்து செய்யப்பட்ட ஆபரணங்கள்,கைத்தறி உடைகள் என கலைகளின் வெளிப்பாடு மிளிர்ந்தது கண்களுக்கு விருந்து…….
மாலை ஆறு மணியாகி விட,கலை நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நோக்கி விரைந்தோம், நிகழ்ச்சிகளை பார்க்க வசதியாக இடம் பிடித்து அமர்ந்தோம்………
பெரும் ஆவ்லுடன் இருந்தோம்,அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் தன்னிச்சையாக வந்தவர்கள்,வந்திருந்த அனைவரையும் கலை,என்ற ஒரு புள்ளி இணைத்திருந்தது……..
நிகழ்ச்சி ஆரம்பித்து விட அனைவரும் மவுனமாகி கலைகளில் கரைந்து போயிருந்தார்கள் எனினும்,தன்னை மறந்து கைகள் தாளம் போட,சிறப்பான இடங்களுக்கு கைத்தட்டலும்,சீழ்கை ஒலிகளும் பறந்தன……..
மணிப்புரி பூங்சோளம் ஆடல் ஆரம்பிக்க,மெய் மறந்து அதில் லயிக்க ஆரம்பித்தோம், மேளங்களுடன் மெல்லிய ஓசையுடன் ஆரம்பித்த இசை, சாரல்,தூறாலாகி பின் மழையென பெருகுவதை போல் வான் தொட்டு திரும்பிற்று பூங்சோளம்,மீண்டும் சாரலாக, விண்ணை தொட்ட்து கைத்தட்டல்,மீண்டும் சீராக பயணித்த இசையில் சட்டென்று ஆடல் கலைஞர்கள் தலையை சிலுப்ப ஒன்று போல் தலையில் கட்டியிருந்த தலைப்பாகை கீழே விழ மீண்டும் கைத்தட்டலுடன் விண்ணை தொட்ட்து இசை………….
அடுத்து கர்நாடக மாநிலத்து கலைஞர்கள்,தப்பு மற்றும் தபேலா என இரு பிரிவாக உள்நுழைய தபேலாவும்,தப்பும் ஒன்றுக்கு ஒன்று பதில் கொடுக்க (counter) செம பீட் என அனைவரும் எழுந்து நின்று.
ஆடவும்,கைத்தட்டவும்,சீழ்கை எழுப்பவும் அனைவரின் ஆன்மாவையும் தொட்டிருந்த்து இசை,அதுவரை ஒன்றுக்கு ஒன்று போட்டியாக இசைத்த கருவிகளும்,கலைஞர்களும்,சட்டென்று ஒருகிணைந்துஇசைக்க, தப்பும்,தபேலாவும் பின்னி பிணைந்து கொண்டன,
கையில் இருந்த குச்சிகளுடன் கலைஞர்கள் தன்னை மறந்து வாசிக்க அங்கே அவர்கள் இல்லை,இசையிருந்தது……அவர்கள் இசையாகியிருந்தார்கள்,அவனே நாதமாக, கீதமாக, நடனமாக, கருவியாக,காலமாக இருக்க,கண்டவர்,கேட்டவர் யாரும் அங்கில்லை,இசை மட்டும் தன் போக்கிலே பொங்கி வழிந்து கொண்டிருந்தது………..
சற்றே அடுத்த நிகழச்சிக்காக இடைவெளி விட அடுத்து என்ன என்று ஆவலுடன் காத்திருக்க மணி எட்டு ஆகியிருந்தது…………
அடுத்து தமிழகத்தின் தப்பாட்டமும், கரகம், காவடியாட்டம், பொய்க்கால் ஆட்டம் என கூறவும்,மணி என்னவாகயிருந்தாலும் பார்த்து விட்டுதான் போகணும் என நான் சொல்ல மற்றவர்களுக்கும் அதே எண்ணத்துடன் இருக்க……….
கண்கள் விரிய காத்திருக்க……..
இசைத்தது தஞ்சாவூர் உறுமி மேளமும்,நாதஸ்வரமும்,மெல்ல தப்பாட்ட குழு உள்ளே வர நான்கு பெண்களும்,நான்கு ஆண்களும்,பக்கத்திற்கு இரண்டு பெண்கள்,இரண்டு ஆண்கள் என இரு அணியாக நின்று ஆடத்தொடங்க, கைகள் தப்படிக்க தொடங்கியது,இதிலும் போட்டி தொடங்க இசை முழங்கிற்று
தப்பு உயிரின் நாதம் அல்லவா?(Rhythm of life) அனைவரின் உடலும் ஆட ஆரம்பித்த்து…… ரசிகர்கள் தன் ரசனையின் உச்சமாக ஆட ஆரம்பிக்க……..சட்டென்று கரகம் வர தலையிலிருந்து கழுத்துக்கும் முதுகுக்கும் கரகம் தானாக பயணித்தது…….
ஆறிலிருந்து-ஏழு வயதுக்குள் இருக்கும் ஒரு சிறுவன் காவடியாட,சொல்ல வார்த்தைகளின்றி கரகோஷம் விண்ணை பிளக்க,விசில் பறந்தது…………
பொய்க்கால் ஆட்ட்த்திற்கு வந்தவர் கூரையை தொட்டு நின்றார்,இந்தியா பாகிஸ்தான் எல்லை வீர்ர்கள் போல் காலை தூக்கி சலாம் போட ஆட்டம் ஆரம்பித்தது…..
ஒன்பது மணிக்கு கலை நிகழ்ச்சி நிறைவு பெற மனநிறைவுடன் அங்கிருந்து வீட்டை நோக்கி கிளம்பினோம்…………
ஆன்மாவின் நாதம் அது எங்க ஊரு ராகம்.கலைகளின் பிற்ப்பிடம்…. எங்க ஊர் கலை என்ற கர்வம் ஒரு நிமிடம் வந்துதான் போயிற்று……
-அன்புடன் லீலாஒன்பது மணிக்கு கலை நிகழ்ச்சி நிறைவு பெற மனநிறைவுடன் அங்கிருந்து வீட்டை நோக்கி கிளம்பினோம்…………
ஆன்மாவின் நாதம் அது எங்க ஊரு ராகம்.கலைகளின் பிற்ப்பிடம்…. எங்க ஊர் கலை என்ற கர்வம் ஒரு நிமிடம் வந்துதான் போயிற்று……
No comments:
Post a Comment