Friday 19 August 2016

யானையின் குரல்................

வணக்கம் நண்பர்களே………..
தண்ணீரில் யானை
      
அம்முவுக்கும் அரவிந்து க்கும் கத சொல்ல போறேன்……..
இன்னைக்கு எல்லோருக்கும் பிடித்தமான கதை.
அம்மு அரவிந்து வாங்க,வாங்க, Uncle,aunty எல்லாம் வந்தாச்சு……….

அம்மு: என்னம்மா கத…….

அரவிந்த்: அத்த சின்ன பசங்க மாதிரி எப்ப பாத்தாலும் யானை கத தானே சொல்லும் என்னத்த…….

என்ன கிண்டலா ம்ம்……….எனக்கு ரொம்ப பிடிச்சது யானை…………..

என்ன நண்பர்களே உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? உலகில் காண காண சலிக்காத காட்சிகள் ஒன்பது

1.குழந்தையின் சிரிப்பு 2.துறவி 3.யானை 4.கடல் 5.ரயில்  ……………
அதில் யானையை பற்றிதான் இன்று சொல்ல போகிறேன்.

அம்மு: என்ன இன்னைக்கு ஸ்பெஷல்?

ஆகஸ்ட் 12 சர்வதேச யானைகள் தினம்.

அரவிந்த்: அத்த நீதான் பரம்பிக்குளத்தில நிறைய யானையை அடிக்கடி பார்ப்ப அப்போ நிறைய சொல்லுவ 

அம்மு:அம்மா,யானை இந்தியால மட்டும்தான் இருக்கா?
ஆப்பிக்கா,இந்தோனோசியா,தாய்லாந்து,இந்தியா,பர்மா நாடுகளில் இருக்கிறது.

அம்மு &அரவிந்த்: வெள்ளை யானை பற்க்குமா?
ஹாஹா,யானை பறக்காது,ஆனா வெள்ளை யானை இருக்கு..
காட்டில் வெள்ளை யானை
          

அரவிந்த்:எங்கேயிருக்கு அத்த

வெள்ளை யானை
             
தாய்லாந்த் மற்றும் பர்மாவில் அதிகம்

அம்மு: அரவிந்த் யானையை ஏன் கோயில்ல வச்சிருக்காங்க தெரியுமா?
கோயிலில்  யானை

அரவிந்த்: அத்த கிட்ட கேப்போம்

அது மக்களோட அறியாமை,என்ன நண்பர்களே நான் சொலவது சரிதானே.


அம்மு:யானையோட பல்லுதான் தந்தமா?



சரியா கேட்ட

யானையின் பல்
யானையோட மேல்தாடையில் வளரும் பல்தான் தந்தம்



யானையின் பல்



அரவிந்த்: அப்போ ஆண் யானைக்கு மட்டும்தானே தந்தம் இருக்கு.
ஆமாம்,பெண் யானைக்கும் இது வளரும்,யானை கன்றாக இருக்கும்போது ஆண்,பெண் யானை இரண்டுக்கும் குட்டியா தந்தமிருக்கும்,வளர வளர பெண் யானைக்கு தந்தம் வளராது…..

அம்மு: அம்மா, யானை என்ன சாப்பிடும் எவ்வளவு சாப்பிடும்?
என்ன நண்பர்களே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்……….
யானை ஒரு சைவ உணவுக்காரங்க அதாவது தாவர உண்ணி.குறிப்ப மூங்கிலை விரும்பி உண்ணும்,கரும்பு,வாழை போன்றவை  இவங்களின் விருப்பமான உணவு.

யானை சாப்பிட்டு மீதம் போட்ட மூங்கிலைதான் புல்லாங்குழல் செய்வார்கள்,ஏனெனில் யானை  சாப்பிட்டு போட்ட மூங்கில் ரொம்ப சுவையான அதாவது இனிப்பா இருக்கும்,அந்த மூங்கிலில்தான் புல்லாங்குழல் செய்தால் இசை இனிமையாக இருக்குமென ஒரு கூடுதல் தகவல்,ஆறு துளையிட்டால் ஹிந்துஸ்தானி இசையும்,ஏழு துளையிட்டால் கர்னாடாக இசைக்கு உகந்தது எனவும் செவி வழி செய்தி.

அரவிந்த்: அத்த யானைக்கு நிறைய பேர் இருக்காம்,எங்க தமிழ் மிஸ் சொன்னாங்க.

ஹாஹா,ஆனா யானைக்கு அதோட பெயர் தெரியாது,சரி சொல்றேன்..ஆண் யானையை களிறு என்றும்,பெண் யானையை பிடி என்றும்,யானையின் குட்டிகளை கன்று அல்லது யானை குட்டி என்றும் சொல்கிறர்கள்

இது போக யானையின் தமிழ்ப்பெயர்கள்,

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கொம்பன்
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்

என்ன நண்பர்களே எத்தனை பேருன்னு மலைப்பா இருக்கா,நம் மொழியின் தொன்மையும்,சிறப்புக்கும் இது ஒரு சான்று.

அம்மு: அம்மா யானை இவ்வளவு குண்டாயிருக்கே அது நடக்கும் போது செடியெல்லாம் செத்து போயிடும்ல,ஆனா யானை இல்லைன்னா காடு இல்லைன்னு சொல்ற.

அடடே நல்ல கேள்விதான் பாருங்க நண்பர்களே எப்படியான ஒரு கேள்வி.னக்கும் இதே சந்தேகம் இருந்தது…………..ஆனா யானையோட உருவத்திற்கும்,பெரிய காலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு செய்தி சொல்ல போறேன்.அதாவது யானையோட பாதங்கள் மிக மென்மையானவை, மென்பந்து போன்றது,(Elastic nature) ,யானை கால் பதித்து நடக்கும்போது காலை எடுக்கும்போது செடிகள் திரும்பவும் தன் நிலைக்கு வந்துவிடும்.

யானையால் வெயிலில் நிற்க முடியாது,அதனால்தான் வளர்ப்பு யானைகளாக இருக்க அனுமதிக்கப்படும் யானைகளுக்கு சணல் சாக்குகளை தண்ணீரில் நனைத்து போட்டு அது மீது தான் நிற்க வைக்க வேண்டும் என்ற விதிகள் உண்டு.

தார் சாலையில் தகிக்கும் வெயிலில் யானை
         

அதனால காடு அழியாது. அதே மாதிரி வளர்ந்த யானைகளின் உணவு சுமார் 250 கிலோ உணவும் 150 லிட்டர் தண்ணீரும் ஆகும்.எனினும் உண்ட உணவில் சுமார் 40% சதவீத உணவை மட்டும்தான் ஜீரணிக்கிறது,மற்றவை கழிவுகளுடன் வெளியேறுகிறது.இந்த கழிவுகளில் யானைகள் உண்ட பெரும் மரப்பட்டைகள் போன்ற உணவு பொருட்கள் மென்மையாகி வெளிவருகிறது

இதை உண்டே வண்ணத்துப்பூச்சிகளும்பல்வேறு வண்டுகளும் வாழ்கிறது. பெரும் மரப்பட்டைகளை உரிக்கவும் அதை ஜீரணிக்கவும் முடியாத சின்னஞ்சிறு வண்டினங்களுக்கு உணவை அளிக்க இயற்கை படைத்த மாபெரும் உயிரினம்தான் யானை.வண்ணத்துப்பூச்சிகள் இருந்தால் தானே மகரந்த சேர்க்கை மற்றும் அயற்மகரந்த சேர்க்கை நடந்து மரங்களும், செடி, கொடிகளும் பல்கி பெருகி வனமாகும். அதே  போல் குளிர்காலத்தில் யானையின் சாணத்தில் உள்ள கதகதப்பில் குளிரை தீர்த்துக்கொள்ள சிற்றுயிர்கள் சாணத்தில் குடியேறும்.இப்படியாக யானை காட்டை பாதுகாக்கிறது.

அரவிந்த்& அம்மு: இவ்வளோ பெரிய யானை சின்ன குச்சிக்கு ஏன் பயப்படுது?

என்ன நண்பர்களே,உங்களுக்கு தெரியுமா?

 நண்பர்கள்: குழந்தைங்க அங்குசம் என்பதைதான் சின்ன குச்சின்னு சொல்றாங்கன்னு தெரியுது……மற்றதை நீங்களே சொல்லுங்க.

ஆமாம் ரொம்ப சரியா சொன்னீங்க….. அது அங்குசம்தான்

அங்குசம் தேவையா? பெரிய உருவமான யானை, மூன்று அடி உயரமுள்ள அங்குசத்திற்கு கட்டுப்படும் ரகசியம் எதுவுமில்லை. யானைக்கு 110 வர்ம இடங்கள் உள்ளன.அதில் ஏதாவது ஒன்றை அழுத்தி குத்தும்போது, யானை கட்டுப்படும். மற்றபடி, யானைக்கும், அங்குசத்திற்கும் சம்பந்தமில்லை.


   
அரவிந்த்:  அத்த ,மனுசன் குரங்கிலிருந்து வந்தான்னு சொல்லிக்கொடுத்தே.அப்போ யானைக்கும் அதே மாதிரி கத இருக்கா? சொல்லு.

அம்மு: பன்றியிலேருந்து………

அரவிந்த்: ஹாஹா அத்த அம்மு ஜோக் பண்ணுது.

இல்ல தம்பி,அம்மு ஜோக்கு சொன்னாலும் அதுதான் உண்மை

தற்போதைய யானைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பன்றி போன்ற உருவத்தில் இருந்து தட்பவெப்ப சூழ்நிலைகளால் மாற்றமடைந்து தற்போதைய உருவத்தை அடைந்தவை.

ல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்தெரியம் எனப்பட்ட பன்றி போல் உருவத்தில் தோன்றின. பின் மாமூத் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமூத் இனங்கள் காணப்பட்டுள்ளன. பனிக்காலமாக இருந்ததால் அவை தோல் வளர்ந்து காணப்பட்டன.அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன. தற்போது உலகில் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. 


அம்மு: ஹை நான் சொன்னது சரி பாத்தியா……..

அரவிந்த்: அத்த யானைக்கு இனிப்புதான் பிடிக்குமா? கரும்பு,வாழப்பழம் ன்னு நல்ல சாப்புடுதே?

ஹா ஹா,இல்ல இல்ல,மனிதர்கள் மாதிரி யானைக்கு சுவையுணர்வுகள் கிடையாது, ஏனெனில் யானைக்கு நாவில் சுவையரும்புகள் கிடையாது, மணம், மென்மை,சாறு அளவு,மற்றும் பசியை பொறுத்தே மூங்கில், கரும்பு,வாழைப்பழம் மாதிரி உணவுகளை விரும்பி சாப்பிடுகிறது.

அம்மு: ஏம்மா,அவ்வளவு பெரிய யானைக்கு சின்னதா கண்ணு இருக்கு?
அம்மு,நீ கேட்டது ரொம்ப சரியான  கேள்வி.யானையோட கண்ணு ரொம்ப சின்னது.பக்கவாட்டில் இருக்கிறதால நேர்கொண்ட பார்வை யானையால் பார்க்கமுடியாது,அதனால்,கூர்மையான கேட்பு சக்தியையும்,மிக நுட்பமான மோப்ப சக்தியையும் தான் நம்பி வாழ்கிறது.

அரவிந்த்&அம்மு: யானைக்கு மதம் பிடிக்குமா?



ஹாஹா,மதமெல்லாம் மனிதர்களுக்குதான் பிடிக்கும்.யானைக்கு எந்த மதமும் தெரியாது,
யானைக்கு  மதம்


அத்த ஜோக் சொல்லுது,மதம்னா என்ன அப்போ.

யானைக்கு மதம்

சுதந்தரமான காட்டு யானைக்கு மதம் என்பது அதன் உடலியலில் 

இயல்பான ஒரு கட்டம்தான்,

ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் 'மதம்' என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். பெண் யானையுடன் சேர துடிக்கும்.அப்போது அதன் வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறது என்று கொள்ளலாம்.

அம்மு: அம்மா,யானை குடும்பமா வாழும் ன்னு சொன்னியே அத 

சொல்லு,குட்டி யானை ஜாலியா இருக்குமா?



யானைகள் குடும்பம்




ஆமா,உங்கள மாதிரிதான்,குட்டி யானைகளும் செம ஜாலியா அதோட 

அம்மாவோட விளையாடும்,தண்ணியில குளிக்கிறதும்,விளையாடுறதும் 

அதுக்கு ரொம்ப பிடிக்கும். 






யானை கூட்டத்துக்கு பெண் யானைதான் குடும்பத் தலைவி. 

தும்பிக்கையால் தரையை தட்டி தட்டி பார்த்து வழி நடத்தி செல்லும், 

காட்டுக்குள்ள யானையை பிடிக்க ஏதாவது பள்ளமிருக்கிறாத என்பதை 

உறுதி செய்தபின்தான் காலடியை எடுத்து வைக்கும்.அதே மாதிரி 

காட்டுக்குள்ள தண்ணஈர் இல்லாத பஞ்ச காலத்தில்,தரையை 

தட்டிப்பார்த்து தண்ணீர் இருக்கிற இட்த்தை கண்டுபிடிச்சு அந்த இடத்தை 

தோண்டி தன் கூட்டத்திற்கு தண்ணீர் ஏற்பாடு செய்யும்.யானைகள் 

குடிச்சது போக மீத தண்ணீரை மற்ற விலங்குகளும் குடிக்கும்.

குட்டி யானைக்கு தண்ணீரை உறிஞ்சி குடிக்க தெரியாது ,அப்போ பெரிய 



யானைதான் தண்ணீரை உறிஞ்சி குட்டி யானையோட வாயில ஊத்தும்.

அரவிந்த்: அத்த,யானை எப்படி காட்டை விட்டு வந்தது?

ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பே அதாவது சங்க காலத்திலேயே 

காட்டனைகளை பிடித்து பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தினார்கள் 

அப்படிதான் யானை காட்டைவிட்டு வெளியில வந்தது……….
அம்மு: ஆப்பிரிக்கால யானை இருக்குன்னு சொன்னீயே! அது எப்படியிருக்கும்

சொல்றேன்.

ஆப்பிரிக்க யானை 

ஆப்பிரிக்க யானை 4 மீட்டர் நீளம் வரை உயரமும் சுமார் 7 டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் றைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன.

ஆப்பிரிக்க யானையின் காது அதன் தோல்புறத்தைக் முழுதும் மறைக்கும் முகமாக அமைந்துள்ளது. இவற்றின் காது 1.5 மீட்டர் நீளமும் 1.2மீட்டர் அகலமும் உடையது.

ஆசிய யானையின் காது அமைப்பு தோல் புறத்தை காட்டிலும் தாழ்ந்து அளவில் சிறியதாகவும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க யானையின் ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் வளர்ச்சியடைகின்றது. ஆசிய யானை வகைகளில் ஆண் யானைகளுக்கு மாத்திரமே தந்தம் வளர்ச்சியடைகின்றன. பெண் யானைகளுக்கு வளர்ச்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிக சிறிய அளவிற்கே வளர்ச்சியடைகின்றது.


ஆப்பிரிக்க யானையின் தும்பிக்கையின் முனையில் இரு உதடைப் போன்ற பற்றி பிடிக்கும் தசைப் பகுதியும் ஆசிய யானையின் தும்பிக்கை முனை ஒரு பற்றிப் பிடிக்கும் தசைப் பகுதியும் அமையப் பெற்றுள்ளன. ஆசிய யானையின் கால்களின்
விரல் நகம் முன்காலில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும்,

ஆப்பிரிக்க யானைகள் முன் கால்களில் 4 அல்லது 5 நகங்களும், பின்புறக் கால்களில் மூன்று நகங்களும் பெற்றுள்ளன. 

பொதுவாக யானைகள் வெளிர் சாம்பல் நிறத்தையுடையவனாவாக இருப்பினும் இவைகள் குளம் மற்றும் குட்டைகளின் சேற்று சகதிகளில் புரண்டெழுவதனால் சேற்றின் நிறத்திற்கொப்ப அடர் சாம்பல்,







ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் வேறுபாடு

          சிவப்பு, மற்றும் பழுப்பு நிறங்களிலும் காணப்படுகின்றது. நீளம் வரை உயரமும் சுமார் டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. 

ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் குறைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன. 


அரவிந்த்& அம்மு: கும்கி யானை பத்தி சொல்லலையே,சினிமா பார்த்தோம்ல


கும்கி (Kumki) என்பது சிறைப்படுத்தப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பெற்ற இந்திய யானைகளின் உள்ளூர்ப் பெயர் ஆகும்.


பெரும்பாலும் இந்த கும்கி யானைகள் புதிதாக கைப்பற்றப்பட்ட காட்டு யானைகளை இயல்பான நிலைக்கு மாற்றவும் பயிற்சியளிக்கவும், மனிதக் குடியேற்றங்களில் வரும் காட்டு யானைகளை வழி நடத்தி காட்டுக்குள் அழைத்து செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன.

கும்கி பரவலாக இந்தியக் கோயில்களில் காணப்படும் இயல்பான யானைகள் இல்லை. ஒரு யானை விரிவான பயிற்சி மேற்கொண்ட பிறகுதான் கும்கி ஆக முடியும்.

அம்மு: ஏம்மா யானைக்கு காது இவ்வளோ பெருசா இருக்கு?

யானைக்கு உருவத்திற்கேற்ப அகன்ற காது மடல்களை கொண்டுள்ளன.அதன் வெப்பநிலையைப் பராமரிப்பதில் அகன்ற மடல்கள் பெரும்பங்காற்றுகின்றன. யானையின் மடல்கள் இரத்த நாளங்களால் நிரம்பியவை. மடல்களில் வெப்பம் மிகுந்த இரத்தம்,காதுகளின் இடைவிடாத அசைவினால் குளிர்விக்கப்படுகின்றது.இதனால் உடல் வெப்பத்தை யானை குறைத்தும் கொள்கிறது. ஆசிய யானையின் காது ஓரங்கள் வெளிப்புறம் மடிந்திருக்கும்.ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் மடிந்திருக்கும்.


அரவிந்த்: அத்த உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?

        

பழக்கப்படுத்தப்பட்ட யானைகள்
நல்ல கேள்வி தம்பி,


ஹெச்.வில்லியம்ஸ் ந்னு ஒரு ஆங்கிலேய அதிகாரி,அவர் வேலை தொடர்பா,இந்திய மற்றும் பர்மா காடுகளில் அலைகிறார்,அப்போ அந்தமான் காடுகளில் யானையை உற்றுநோக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது.முதலாம் உலகப்போரில் யானைகளை எப்படி மனிதன் பழக்கப்படுத்தியிருக்கிறான் என்ற வியப்பில் ஆழ்ந்த அவர் யானையை குறித்து நாட்குறிப்பேடு ஒன்றை ஆர்வமுடன் எழுதுகிறார்,அதையே பின்னாளில் யானைக்கூட்டம் என்ற புத்தகமாக வெளியிடுகிறார்.அந்த புத்தகமும்,அழியும் பேருயிர் யானைகள்-ச.முகம்மது அலி மற்றும் யோகனாந்த் அவர்களின் புத்தகம் மூலமும்தெரிஞ்சிக்கிட்டேன்.

அதோடு பரம்பிக்குளத்தில் உள்ள Information study centre ல் இருக்கும் முருகன் அவர்கள் கூறிய அரிய தகவல்களும் சேர்ந்த்துதான் இந்த செய்திகள்.

அம்மு: யானை புலியை கொல்லுமா?



                     
பொதுவா,யானை மாமிசம் உண்ணாது,ஆனால் புலி,அல்லது சிங்கத்தால் தொல்லைன்னா புலியை,சிங்கத்தை யானை கொன்று இருக்கிறது.ஆனா இளம் யானையைதான் பல சிங்கள் சேர்ந்து வேட்டையாடும் ,வளர்ந்த பெரிய உருவம் கொண்ட யானையை இவைகளால் வீழ்த்த இயலுவதில்லை.


அரவிந்த்:அத்த அன்னைக்கு படிக்கும்போது யானைமாதிரி நினைவாற்றல் இருக்கணும்னு சொன்ன அப்போ யானைக்கு மெமரி அதிகமா?

ஆமா,உண்மையிலும் உண்மை யானைக்கு மிகுந்த நினைவாற்றல் உண்டு


யானைக்கு நினைவாற்றல்,அறிவாற்றல் அதிகம்.ஒரு கூட்டு சமூகமாக வாழும் இவை தனது அறிவை சந்ததிக்கு கடத்துவதில் வல்லவை.தரையில் வாழும் உயிரினங்களிலேயே யானையின் மூளையே மிகப்பெரியதாகும்.ஐந்து கிலோ கிராமுக்கு சற்று அதிகமாக எடையை இது கொண்டிருக்கிறது. யானைகள் தங்களின் பல ஆயிர வருடங்களான வழித்தடங்களை,வலசைப் பாதைகளை மறக்காமல் அப்படியே நினைவில் வைத்திருக்கின்றன.

   




வழி மறக்காமல்  செல்லுதல்

அம்மு: யானை பிளிறும் ன்னு சொல்றோம்ல சத்தம் எவ்வளோ தூரம் கேட்கும்?


அருமையான கேள்வி.


மனிதர்களில் ஆண்களின் குரலின் ஏற்ற இறக்கம் 110Hz,பெண்ணின் குரலின் ஏற்ற இறக்கம் 220 Hz,குழந்தைகளின் குரலின் ஏற்ற இறக்கம் 300 Hz ஆகவும் இருக்கிறது (Fluctuates).


ஆனால் ஆண் யானைகள் 12 Hz,பெண் யானைகள் 13 Hz,குட்டி யானைகள்22 Hz.


அளவு குரலின் ஏற்ற இறக்கம் இருக்கும் .அதாவது மனிதனால் 20 Hz கீழுள்ள ஒலிகளை கேட்க முடியாது.


நம்ம செல்போன் ல ரிங்டோன் இருக்க மாதிரி நிறைய வகை ஒலிகளை எழுப்பகூடியவை யானைகள்.இதுல பாதியை நம்மால் கேட்க முடியாது. ஏன்ன 5 Hz லிருந்து 10000 Hz வரை ஒலி எழுப்பும்.



காட்டில் யானைகள் ஒலியெழுப்பும் போது


யானை எழுப்பும் ஒலிகள் இன்ஃபர்ஆ சோனிக் சௌண்ட்(INFRASONIC SOUND) மூலமாக தொடர்பு கொள்கிறது.இது 300 கி.மீ கடந்து அங்கிருக்கும் யானைக்கு கேட்குமென்று கூறுகிறார்கள்.அத்தகைய குரல்கள் மூலம் பருவமடைந்த பெண் மற்றும் ஆண் யானைகள் அழைப்பு விடுத்துக்கொள்ளுமென்றும் சொல்லப்படுகிறது.


யானைகள் மணிக்கு 32 கி.மீ/ 40கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது.

யானைக்கும் மனிதனுக்குமான மோதல்கள் பலநூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.தந்தங்க்களுக்காவும்,மருத்துவ பயன் என்ற பெயரிலும்,பெரிய உருவத்தை அடக்கியாளும் எண்ணமும் யானையை விடாது துரத்துகிறது



யானைக்கோடு எனும் தந்தம்

அம்மு&அரவிந்த்: சில பொதுவான செய்திகளை சொல்லி இந்த கதய முடிக்கப்போறேன்.
  
யானைக்கு இவ்வளவு பெரிய உடல் இருந்தாலும் நன்றாக நீரில் நீந்தும். நாலரை மீட்டர்
  
ஆழத்திலும் நீந்தி செல்லும். மனிதன் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூச்சைப் பிடித்துக்கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் யானையாலும் இருக்க முடியும்.


 
யானையின் எலும்பு கூடு

யானை மூச்சு விடுவது தும்பிக்கையால் தான் என்றாலும் வாசனை அறிவது வாயினால்தான்.


யானைக்கு வாசனை அறியும் நரம்புகள் அங்குதான் இருக்கின்றன. துதிக்கையால் பெரிய மரத்தையும் சாய்த்துவிடும் வலுவான தசைகளை பெற்று இருக்கிறது.

யானைகளிடம் விசித்திரமான பழக்கங்கள் உள்ளன. காட்டில் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். சண்டையின் போது களைப்பாக இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளும். சிறிது நேரம் மேயும், தண்ணீர் குடிக்கும். 
பின்பு மீண்டும் சண்டையைத் தொடரும். இப்படியே பல நாட்கள் நீடிக்கும்.
 ஆசிய யானைகள் படுத்து புரள்வது உண்டு. ஆப்பிரிக்க யானைகளோ எப்போதும் படுப்பதில்லை. நின்று கொண்டேதான் தூங்கும். யானை என்று படுக்கிறதோ அன்று அதன் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். யானைப் படுத்தால் அது மரணப்படுக்கை தான். .
  

யானை படுக்கையில்


சரி,யானையை பற்றிய மற்ற செய்திகளை வேறொரு நாள் பேசலாம்.

ஆனால் பாருங்க நண்பர்களே……




யானை தன் குட்டியுடன்



எந்த நாட்டில யானை இல்லையோ அவர்களே யானையை பற்றி 

கவலைப்படுகிறார்கள்.ஆனால் நாம்,யானைகளின் இருப்பிடமான காட்டை 

அழித்தும்,யானைகளை அழித்தும் நமக்கான அழிவை தேடிக்கொள்கிறோம்

யானைகள் இருந்தால் மட்டுமே மழைக்காலமும்,குயிலோசையும் 

இருக்கும்.

அன்புடன் லீலா




No comments:

Post a Comment