Sunday, 8 November 2020

கவிதையும் கதையும்- 1


நீ அமைதியாகதான் இருக்கிறாய்

உன் நினைவுகள்தான்

அதிகாலையிலேயே 

சிறகு விரித்து விடுகிறது 

கரிச்சான் குருவியாய்.


- கோ.லீலா.


கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!..

- திருப்பாவை.


ஆனைச்சாத்தான் - கரிச்சான் குருவி அதிகாலை 3.30 மணிக்கு எழும்பி விடுமாம். 1600 வருடத்திற்கு முன்பு அவங்க பேரு ஆனைச்சாத்தான்.


ஆங்கிலத்தில் Black Drongo.


வயலில் மாடுகளின் முதுகில் அமர்ந்து இருப்பாங்க. மாடுகள் நடக்க நடக்க, புல்லில் இருந்தும், பயிர்களில் இருந்தும் வெளிவரும் பூச்சிகளை (குறிப்பாக வெட்டுகிளிகள்) சாப்பிடுவாங்க. காலை 5.30-7 மணி வரைதான் பூச்சிகள் உற்சாகமாக பயிர்களுக்கு மேல் உலா வருமாம்.


கரிச்சான் குருவியார் டிபன் சாப்பிட 3.30 க்கே தயாராகி குடும்பத்தோட போய்டுவாராம்.


இதனால் நமக்கு என்னன்னு கேட்கிறீங்களா?


அட ! பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டாங்க. இயற்கை Entomologist நம்ம கரிச்சான் குருவியார் காலையில் ஒரு‌மணி நேரத்தில் 100, அதே போல் மாலையில் 100 பீஸ் பூச்சிகளை அபேஸ் பண்ணிடுவாராம். இருந்தாலும் அவருக்கு டேங்க்( வயிறு) சிறிசுதானே, அதனால மீதி பூச்சியை அரைச்சி துப்பிடுவாராம். அது மண்ணுக்கு உயிர்ச்சத்து தருதாம்.


அது மட்டுமில்லைங்க, நம்ம ஆளு கரிச்சான் குருவியார் பருந்தௌ, கழுகுன்னு எல்லாரையும் அடி தூள் கிளப்பி விரட்டி விடுவாராம்.


ஆனைச்சாத்தான் அடியாள் போலிருக்கே !


பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டாம் பாருங்க ! அதுல மண்ணும் கெடாது மனுசனும் கெட மாட்டான்.


நன்றி : கோவை சதாசிவம்‌ அய்யா.

அன்புடன்

- கோ.லீலா.

No comments:

Post a Comment