சொற்களை சோழியாய்
சுழட்டுகிறாய்
மன தாயம் விழுகிறது
ஆட்டம் ஆரம்பமாயிற்று
சொற்களை வாளாக
சுழட்டுகிறாய்
மன தாயம் வெட்டுண்டது….
ஓரமாய் கிடந்து
வேடிக்கை பார்க்கிறேன்
மீண்டும் சோழி
சுழலுகிறது
புதிதாய் மன தாயம்
விழுகிறது
ஆட்டம் தொடர்கிறது……..
விழ செய்வதும்
வெட்டுவதும் இயல்பென இருக்கிறாய்
மன தாயங்களின்
தலைகளால்…………….
கண்ணீரால் தளும்பும்
உன் கட்டங்களை
அன்பின் கோப்பையால்
வாரியிறைக்கிறேன்………….
அன்புடன் லீலா
No comments:
Post a Comment