இலைகள் தவிர்த்து
பூக்களை தாங்கும்
மரமென
அன்பு சுமந்திருந்தேன்
கிளைகள் அசைத்து
பார்த்தாய்
பூக்கள் உதிரவில்லை
மெல்ல வேர்கள் அசைத்தாய்
பூக்களின் நிறம்
வேர்வரை
பரவி தீயாய் எரிந்தது
சாம்பல் கிளறுகிறாய்
பூக்களின் சாம்பல்தான்
பூக்களின் நிறமிருக்காது.
அன்புடன்-லீலா.
No comments:
Post a Comment