பரம்பிக்குளம் என்னதான்
இருக்கிறது இங்கு?
பலருக்கு
இது இயற்கை சூழல் தரும் அமைதி,சிலருக்கு relax செய்யும் இடம்,என ஒவ்வொருவருக்கும் ஒன்றாக இருக்க.பரம்பிக்குளம் எனக்கொரு பரவசம்.பல்கலைக்கழகம்.
அரசு அலுவல் தொடர்பாக பரம்பிக்குளம் செல்ல ஆயத்தமான போது,அனைவரிடமும் மகிழ்ச்சி, பரம்பிக்குளம் மட்டுமில்லை,நீர் பிடிப்பு(water spread) பகுதி மற்றும் வடிகால் பகுதி(catchment) முழுவதும் ஆய்வு செய்ய வேண்டுமென சொன்னவுடன்.எப்போதும் போல் எங்கள் பாசன உதவியாளர் திரு.மனோஜ், மேடம் வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டுமே என்றார்.
நமக்கு
அலுவல் காரணமாக அந்த இடங்களுக்கெல்லாம் செல்ல ஒப்பந்தத்தில் அனுமதியிருக்கிறது என்றேன்,என்றாலும் சோதனை சாவடியின் சாவி வேண்டுமே என வாய்மொழியின் பேரில் அனுமதி பெற்றுக் கொண்டோம்.
போனமுறை,மதிய உணவு இல்லாமல் தவித்த அனுபவத்தின் பயனாக, சேத்துமடையில் தேநீரும் மூன்று ரூபாய் வடையும் சுவைத்துவிட்டு பின் கொஞ்சம் உணவு பொட்டலங்களையும் சேகரம் செய்து கொண்டு, உற்சாகமாக பயணத்தை தொடர்ந்தோம்,சிறிது தூரம் வரை அலுவலக தொடர்பான நீர் அளவீடுகள் குறித்து பேசிக்கொண்டு சென்றோம்.
ஓட்டுநர்
ராஜூ,பாசன உதவியாளர் இருவரையும் கருத்தில் கொண்டு, மெதுவாக பொதுவான செய்திக்கு ஜீப் பயணிக்க தொடங்கியது. பரம்பிக்குளத்தின் வரலாறு தெரியுமா? என நான் கேட்க, ஆரம்பித்தது கதை.
காதை
இவர்களிடம் கொடுத்துவிட்டு,கண்ணை இயற்கைக்கு சமர்பித்து ஏகாந்தமாய் பயணத்தை தொடர்ந்தேன்,அவ்வப்போது கண்ணை இயற்கையிடமிருந்து எடுக்கமால் நானும் கதை சொல்ல சுவராஸியமாகியது ஜீப்.
கதை
கேட்க நீங்க ரெடியா?
கேரள
மாநிலத்தில்,பாலக்காடு மாவட்டத்தில்,சித்தூர் வட்டத்தில்(Taluk) உள்ள ஒரு கிராமம்தான் பரம்பிக்குளம்,இக்கிராமம் பாதுக்காக்கப்பட்ட பகுதியாகும் அதாவது பாதுக்காக்கப்பட்ட வனமாகும். என்று கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ் சொல்ல,
தொடர்ந்து
ஆமாம் இந்த பகுதியை எப்படி அல்லது எதற்காக கண்டுப்பிடித்தார்கள் தெரியுமாவென நான் கேட்க அனைவரும் ஒரே பதிலை சொல்ல அதையே முன்னுரையாக கொண்டு நான் ஆரம்பித்தேன்.
19ம் நூற்றாண்டில்,இரு முக்கிய ஆட்சி மண்டலத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த பரம்பிக்குளம், வெட்டு மரங்களுக்காக (Timber) கண்டுபிடிக்கப்பட்டது என நான் சொல்ல,ஆமாம் மேடம் இங்கே ட்ரம் வே இருக்கு நான் பார்த்திருக்கேன் என பொறியாளர் சுமதி சொல்லி கதைக்கு சுவரஸியம் கூட்டினார்.
ஆமாம்,நீங்க சொன்னது ரொம்ப சரி,இங்கிருந்து ட்ரம்வே வழியா,வெட்டு மரங்களை கொச்சினுக்கு எடுத்து போயிருக்காங்க என்றேன்,இங்கிருந்து உருட்டிவிட்டாலே கொச்சின் போய்விடுமாம் என கூடுதலாய் தகவல் சொல்லி
பொறியாளர் கார்த்திகேயன் தன் பங்கு கதையை சொன்னார்.
எப்போ
இது எல்லாம் நிறுத்தினாங்க தெரியுமா? என்றேன்.ஜீப் நின்றது, டாப் ஸ்லிப் வந்துவிட,மூலிகை வனம்,அருங்காட்சியகம்,நீண்டு விரிந்த பச்சை கம்பளமாய் பூமியை போர்த்தியிருக்கும் புல்வெளி,அதன் மீது வரைந்த ஓவியமாய் உலவும் புள்ளி மான்கள்,பழக்கப்படுத்தப்பட்ட
யானைகள்,யானை சவாரி என அழகின் முகம் தெரிய ஆரம்பித்துவிட கேரள எல்லை நம்மை அழகுடன் வரவேற்க,கண்களெனும் இயற்கை காமிரவுடனும்,காமிரவுடனும் உள்நுழைந்தோம்.
யானைகள்,யானை சவாரி என அழகின் முகம் தெரிய ஆரம்பித்துவிட கேரள எல்லை நம்மை அழகுடன் வரவேற்க,கண்களெனும் இயற்கை காமிரவுடனும்,காமிரவுடனும் உள்நுழைந்தோம்.
மூலிகை
வனத்தினுள் குறிஞ்சி செடி,உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் இருக்க அதை குறித்த விளக்கமளிக்க மண்ணின் ஆதிமைந்தனின் சந்ததியில் ஒருவர் இருக்கிறார்.அகத்தியரின் உருவ சிலையொன்றும் இருந்தது.
அதற்கு
சற்று முன்னே,தமிழக வனத்துறையின் தகவல் மய்யமும் ,அருங்காட்சியகமும் இருக்க அங்கே
பாடம் செய்யப்பட்ட பத்து மாத யானையின் கரு,சிறுத்தை புலி,பல வகை மீன்கள் பார்த்து மகிழும்
வண்ணம் இருந்தது
வண்ணம் இருந்தது
மனமும்,உடலும் லேசாக,மீண்டும்,பயணமும்,கதையும் தொடர்ந்தது….
1907 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ட்ரம் வே அறிமுகப்படுத்தினர்,அதை தொடர்ந்து வெட்டு மரங்களை எடுத்து செல்லும் பணிகள் தொடர்ந்தது, பின்
1921 ஆம் ஆண்டு தேக்கு மரங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பயிரிடப்பட்டது. இதை தொடர்ந்து வெட்டு மரங்களை நகரங்களுக்கு எடுத்து செல்லும்பணி மிக முனைப்புடன் நடந்தது என்று சொல்லும் போதே கண்கள் தோகை விரித்து ஆடும் மயிலை பார்க்க,கதை நிற்க, ஜீப்பும் நிற்க,மயிலும்,காமிரக்களும்,கண்களும் சுழன்று கொண்டேயிருந்தன,
ஜீப்போ உற்சாகத்தின் எல்லைக்கு செல்ல,சத்தம் போடாதே என மெல்லமாய் சொல்லி நிறைய கிளிக்கி கொண்டோம்.
மயில்
தன் தோகையை மெதுவாக இறக்கி உலர்த்தி நிற்க மனமில்லாமல்,ஜீப் நகர,எனக்கொரு சந்தேகம் என்றேன்.
சொல்லுங்கமேடம் என்றார்கள் கோரஸாய், இல்லை மயில்கழுத்து கலர்லபுடவை வாங்க சொல்றாங்களே பெண்கள்,பாவமில்லையா ஆண்கள் என கேட்க,சுமதி மேடம் தவிர எனக்கு எல்லோரும் ஓ போட, ஜீப் ஒட தொடங்கியது,
சிறிது தூரத்திலேயே மீண்டும் ஒரு மயில் தோகை விரித்தாட சொல்லவும் வேண்டுமோ எங்களின் ஆனந்தத்தை.
சொல்லுங்கமேடம் என்றார்கள் கோரஸாய், இல்லை மயில்கழுத்து கலர்லபுடவை வாங்க சொல்றாங்களே பெண்கள்,பாவமில்லையா ஆண்கள் என கேட்க,சுமதி மேடம் தவிர எனக்கு எல்லோரும் ஓ போட, ஜீப் ஒட தொடங்கியது,
சிறிது தூரத்திலேயே மீண்டும் ஒரு மயில் தோகை விரித்தாட சொல்லவும் வேண்டுமோ எங்களின் ஆனந்தத்தை.
சரி, சரி கதை சொல்லுங்க என மீண்டும் கண்களை இயற்கையிடம் கொடுத்துவிட்டு கதைக்க தொடங்கினோம்.
பொறியாளர்
வெங்கிடுபதியும்,மனோஜ் ம் மேடம் SE கிட்ட சொல்லிடுங்க எங்கே இருக்கோம்னு,இல்லைன்னா signalஇருக்காது என பொறுப்பானவர் களாய் மாறினார்கள். கடமையாற்றிவிட்டு
கதை தொடர்ந்தது.சுதந்திரத்திற்கு பின் 1962 ம் ஆண்டு,வெட்டு மரங்களை பரம்பிக்குளத்திலிருந்து எடுத்து செல்லுதல் தடை செய்தனர் அதோடு தேக்கு மர வளர்ப்பை ஆரம்பித்தனர். 1973 ஆம் ஆண்டு பரம்பிக்குளம் சரணாலயம் என அறிவிக்கப்பட்டது.
கதை தொடர்ந்தது.சுதந்திரத்திற்கு பின் 1962 ம் ஆண்டு,வெட்டு மரங்களை பரம்பிக்குளத்திலிருந்து எடுத்து செல்லுதல் தடை செய்தனர் அதோடு தேக்கு மர வளர்ப்பை ஆரம்பித்தனர். 1973 ஆம் ஆண்டு பரம்பிக்குளம் சரணாலயம் என அறிவிக்கப்பட்டது.
ஆமாம்,சரணாலயம் என்றால் அதன் பரப்பளவு,மக்கள் பற்றி சொல்லுங்க என்றார்கள்,வனவிலங்கு சரணாலயம் 285சதுர கிலோமீட்டர் (sq. km) என்றும் பிப்ரவரி 19,2010 ஆம் வருடம் வனவிலங்கு சரணாலயம், பரம்பிக்குளம் புலிகள் இருப்பு வனத்தின் ஒரு பகுதியென அறிவிக்கப்பட்டது .(declared as a part of Parambikulam
Tiger Reserve Forest) எனவும்,Buffer
zone னுடன் 643.66 சதுர கிலோமீட்டர் என்றும்
சொல்லி
மனோஜ்
இங்கு வாழும் மக்களை பற்றி சொல்லுங்க என்றேன்.
மனோஜ்,உற்சாகமாக ஆரம்பித்தார்,மேடம் இங்கே ஆறு காலனில ஆளுக இருக்காங்க,காடர்,மலசர்,முடுவர்,மல மலசர் இப்படி சொல்லி என்றார்
ஆமா,இவங்களுக்கு சாப்பாடு என கேட்க,
மனோஜ்
தொடர்ந்தார்,மூங்கில் அரிசி,கப்ப கிழங்கு,தேன் பிறகு இங்கே இருக்கும் பழ வகைகள். ஆனா இப்போ அவங்க கீழே வந்து பாக்கெட்ல உள்ள பொருட்களை வாங்குறாங்க,பரம்பிக்குளத்தில் கடைகள் கொஞ்சம் இருக்கு அதிலேயும் பொருட்கள் விற்பனையாகுது,இயற்கையா கிடைக்கிற பொருட்களை கேரளா வனத்துறை விலைக்கு விநியோகம் செய்றாங்க என்றார்.
சரி
இவங்க non veg சாப்பிடுவாங்களா? என நம்முடைய subjectக்கு மாறினேன்.
இந்த
டேம் ல கிடைக்கிற மீன் சாப்பிடுவாங்க,மத்தப்படி இங்கே கோழி,ஆடு,மாடுக, நாய் வளர்க்கறதில்லை,அதனாலே கீழே போய் மாமிசம் வாங்கி வந்து சமைச்சு சாப்பிடுவாங்க என்றார்.சொல்லும் போதே எல்லோருடைய சுவையரும்புகளும் பணியை துவங்கிவிட்டிருந்தது. நாங்களும் ஆனப்பாடி சோதனை சாவடிக்கு வந்துவிட்டோம்,அரசு பணிசார்பாக வந்ததால்,ஜீப் தடையின்றி செல்ல, அங்கிருந்த பயிற்சி மற்றும்விளக்கவுரை மய்யத்திற்கு(Training and explanation centre)
செல்லும் முன் சுவையரும்புகளுக்கு ஒரு சூடான தேநீர் கொடுத்தோம் அங்கிருந்த தட்பவெட்பத்திற்கு அமுதமாய் உள்ளிறங்கியதுதேநீர்.
செல்லும் முன் சுவையரும்புகளுக்கு ஒரு சூடான தேநீர் கொடுத்தோம் அங்கிருந்த தட்பவெட்பத்திற்கு அமுதமாய் உள்ளிறங்கியதுதேநீர்.
அந்தட்ரெயினிங்க் செண்டரில் விலங்குகள்,காடுகள் குறித்த விரிவான விளக்கம் அளிக்கப்பட,செவிக்கும் உணவு கொடுத்து,காமிரக்களில் கிளிக்கி கொண்டு கிளம்பினோம்.
மெல்ல
தூணக்கடவு நோக்கி ஜீப் பயணிக்க இரு புறமும்,மானும்,மயிலும்
உலவிக்கொண்டிருக்க,
அய்யோ செந்நாய்,செந்நாய் என ஜீப் கலவரத்தில் சத்தமிட அட நல்லா பாருங்கப்பா sign board என்று சொல்ல ஜீப் கலவரத்திலிருந்து கலகலப்பாகியது.
சரி கதைய சொல்லுங்க என ஆர்வமுடன் கேடக,மீண்டும் கதை தொடங்கிற்று.பரம்பிக்குளம் எந்த மலையில இருக்கு? இதுக்கு பேரு இருக்கா? என்று முறுக்கை நொறுக்கி கொண்டே கார்த்தி கேட்க,சார் நாம மலையிலதான் மழையில போறோம் என எங்கள் தமிழறிவை காட்டிவிட்டு சொல்ல தொடங்கினேன்.
ஆனைமலை மற்றும் நெல்லியம்பதி குன்றுகளுக்கு இடையேயான சுங்க எல்லைக்கு உட்பட்டதுதான் இந்த பரம்பிக்குளம், பரம்பிக்குளத்தை உலக பராம்பரிய தளமாக UNESCO அறிவித்துள்ளது என்று சொல்லி நாம் ஒரு பராம்பரிய மிக்க வனத்திலே இருக்கிறோம் என்று பெருமையோடு சொன்னேன்.
சரி கதைய சொல்லுங்க என ஆர்வமுடன் கேடக,மீண்டும் கதை தொடங்கிற்று.பரம்பிக்குளம் எந்த மலையில இருக்கு? இதுக்கு பேரு இருக்கா? என்று முறுக்கை நொறுக்கி கொண்டே கார்த்தி கேட்க,சார் நாம மலையிலதான் மழையில போறோம் என எங்கள் தமிழறிவை காட்டிவிட்டு சொல்ல தொடங்கினேன்.
ஆனைமலை மற்றும் நெல்லியம்பதி குன்றுகளுக்கு இடையேயான சுங்க எல்லைக்கு உட்பட்டதுதான் இந்த பரம்பிக்குளம், பரம்பிக்குளத்தை உலக பராம்பரிய தளமாக UNESCO அறிவித்துள்ளது என்று சொல்லி நாம் ஒரு பராம்பரிய மிக்க வனத்திலே இருக்கிறோம் என்று பெருமையோடு சொன்னேன்.
கார்த்தி
தொடர்ந்தார்,மேடம் இங்கேயிருக்கிற பழங்குடியினருக்கு என்ன தொழிலுன்னு சொல்றேன் சொல்லுங்க்க என சுமதியும்,வெங்கிடுபதியும்
ஊக்கப்படுத்த,இவங்களுக்கு தேன்
எடுக்கிறது, பூவிட்டு,நெல் கொடுத்த பின் உள்ள
மூங்கிலை தட்டிபாய் போல செய்யறது,மூங்கில் குடில் அமைக்கிறது, தண்ணியில போறதுக்கு கட்டுமரம் மாதிரி செய்யறதுதான் என்றார், சரிப்பா, இவங்களுக்கு காசு யாரு கொடுப்பா? என்று கேட்டார் சுமதி.
கார்த்தி
தொடர்ந்தார்,ஆமாம் மேடம் அதுக்காகதான் டெரக்கிங்,சபாரி போகும்போது பழங்குடியினர்தான் கைடு ஆ வருவாங்க,அதுக்கு இவங்களுக்கு சிறப்புபயிற்சி தராங்க,CAPACITY BUILDING பயிற்சியும் தராங்க என்றார்.ஆமாம் மூலிகை வனத்தில கூட பழங்க்குடியினர்தானே இருந்தார் என நினைவூட்டினேன்.
இப்படி
சுவரஸியமாக,போய் கொண்டிருக்க வலது புறத்தில் டொட்டாய்ங் ஆர்வமுடன் எதிர்பார்த்த யானைகள் நிற்பதை, பார்த்துவிட்டேன், நிறுத்துங்க, நிறுத்துங்க என சொன்ன எனக்கு யானை என சொல்லவரவில்லை ஆர்வ மிகுதியில். அடே யானை என இன்ஜினை
நிறுத்தமால் ஜீப்பை நிறுத்த,சுமதி பயத்தில் சத்தம் போட,ப்ளீஸ் சத்தம் போட்டீங்கனாதான் தொல்லை, அமைதியா பாருங்க,யானை சிக்னல் கொடுத்தவுடன் போகலாம் என்றேன்.
குட்டியானையோடு,பெண் யானைகள் நின்ற கண்கொள்ளா காட்சி பேரழகு,செடிகளை உடைத்து மென்றுகொண்டும்,குட்டி யானையை கால்களுக்கிடையில் நடத்தி அழைத்து செல்லும் விதமும் அற்புதம்,ஓட்டுநர் மேடம் போகலாமா என கேட்க,ஒரு அதிகாரியாக,அனைவரின் பாதுக்காப்பும் என் வசம் வந்துவிட.
வேண்டாம் ராஜூ,யானை சிக்னல் தரலையே என்றேன். எவ்வளவு நேரம் நிற்பது,SE வேறு பரம்பிக்குளத்திலிருக்காரே என அனைவரும் சொல்ல.
மனோஜ்,நீங்க சொல்லுங்க காடு பற்றி உங்களுக்குதான் தெரியுமென்றேன் ,போயிடலாம் மேடம் என்றார். மனமில்லாமல் சட்டென்று வேகமாக அந்த இடத்தை கடந்து சென்றோம்.
புகைப்படங்களும்,வீடியோவும் எடுத்துக்கொண்டு, வனத்தில் பயணிக்கும்போது,வனவிலங்குகளுக்கு தொல்லை கொடுக்கமாலும் ,இயற்கையை மதிக்கும் வகையில் நெகிழி,தீ பற்றிக்கொள்ளும் பொருட்களை உடன் எடுத்து செல்ல கூடாது,தேவையில்லாமல் இடையில் இறங்ககூடாது, குப்பைகளை கண்ட இடத்தில் போடக்கூடாது,மதுபானங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.இது பயணித்த அனைவருக்கும் தெரியுமென்பதால் சற்று அமைதியான இனிமையுடன் பயணம் தொடர்ந்தது.
புகைப்படங்களும்,வீடியோவும் எடுத்துக்கொண்டு, வனத்தில் பயணிக்கும்போது,வனவிலங்குகளுக்கு தொல்லை கொடுக்கமாலும் ,இயற்கையை மதிக்கும் வகையில் நெகிழி,தீ பற்றிக்கொள்ளும் பொருட்களை உடன் எடுத்து செல்ல கூடாது,தேவையில்லாமல் இடையில் இறங்ககூடாது, குப்பைகளை கண்ட இடத்தில் போடக்கூடாது,மதுபானங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.இது பயணித்த அனைவருக்கும் தெரியுமென்பதால் சற்று அமைதியான இனிமையுடன் பயணம் தொடர்ந்தது.
இடது
புறம் தூணக்கடவின் நீர்பிடிப்பு பகுதி உடன் பயணிக்க,இன்னும் குளுமை கூடியது,காட்டுப்பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன.இது மிகவும் அபாயகரமான விலங்கு,இரண்டு புறமும் பல் வெளியில் நீட்டி கொண்டிருக்கும்,zip திறப்பது போல் சட்டென்று நம் சதையை கிழித்து திறந்துவிடும்,சிறுத்தைகளை கூட காட்டுப்பன்றிகள் தாக்கிவிடும்.என கதை காட்டுப்பன்றி பற்றி விரிந்தது.
ஜீப் பயணம் தொடர தூணக்கடவு அணை வர.ஜீப்பை நிறுத்தி அணையும் அதனோடு கூடிய இயற்கையின் பேரழகையும் ரசித்துக்கொண்டு மெதுவாக நடக்க குரங்குகளும் அங்கே அருகே நடந்து கொண்டிருந்தன,தூணக்கடவு அணையின் நீரளவை குறித்துக்கொண்டு spillway பக்கம் வர முதலையொன்று தண்ணீரில்
ஜீப் பயணம் தொடர தூணக்கடவு அணை வர.ஜீப்பை நிறுத்தி அணையும் அதனோடு கூடிய இயற்கையின் பேரழகையும் ரசித்துக்கொண்டு மெதுவாக நடக்க குரங்குகளும் அங்கே அருகே நடந்து கொண்டிருந்தன,தூணக்கடவு அணையின் நீரளவை குறித்துக்கொண்டு spillway பக்கம் வர முதலையொன்று தண்ணீரில்
சோம்பேறித்தனமாக படுத்துக்கிடந்தது,காமிரா ஆன் செய்து நாங்கள் நடக்க எங்களின் ந்டை அதிர்வுக்கு சட்டென்று நீருக்குள் சென்றுவிட, அணையின் ஒருபுறம் மானும் மயிலும் உலவிக்கொண்டிருந்தன,மீண்டும்ஜீப்பில் ஏறிக்கொண்டோம், தூணக்கடவு அணையின் சிறப்பு பற்றி சொல்லுங்கள் என சொல்ல ,தூணக்கடவு ஒரு balancing reservoir என்றார்கள்(.அணைகளின் சிறப்பு பற்றி பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் எனும் அடுத்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.)
தூணக்கடவு,பரம்பிக்குள கோட்டத்தின் வன தலைமையகம் ஆகும்,இங்கு wireless station ம் உள்ளது.அது சரி பரம்பிக்குளத்திலிருந்து எந்த இடத்தில் தண்ணீர் தூணக்கடவை வந்து சேர்கிறது என பார்க்க அணையின் மீது சென்றோம்.டனலின் வழி தண்ணீர் வருவதை பார்த்த பின்பு,அந்த இடத்தின்
ரம்யத்தில் மனதை பறிகொடுத்து நின்றோம்.
டீம் உற்சகமாக நடக்க,தூணக்கடவின் இன்னொரு புற அழகை கண்டு பிரம்மித்து போனோம்,இங்கு புள்ளி மான்,சாம்பர் மான்,கூட்டம்கூட்டமாய் யானைகள்,நமக்கு வாய்த்தால் கரடியை கூட சற்று இருள் தொடங்கும் நேரத்தில் கண்டு களிக்கலாம்.எப்போதும் போல் பல்வேறு கோணங்களில் புகைப்படமெடுத்து கொள்ளும் போது சலைங்கை ஒலி படம் போலாகிவிடமால் கவனமாக கிளிக்கி கொண்டு,பரம்பிக்குளம் நோக்கி சென்றோம்,பெருவாரிபள்ளம் அணையை வரும்போது பார்க்கலாம் என முடிவு செய்தோம்.
பரம்பிக்குளம் சென்றடைந்தோம் மணி
நண்பகல் 12 நெருங்க,மீண்டும் கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி கொண்டு,ஆய்வு மாளிகை நோக்கி சென்றோம்,சிறிது ஓய்வுக்கு பின் பரம்பிக்குளம் அணைக்கு சென்றோம்,
செண்பக பூக்களின் மணம் எங்களை வரவேற்க,பயண களைப்பு சிறிதும் இல்லமால் பூக்களின் மணம் நுகர்ந்த படி இயற்கையின் பேரழகையும்,தமிழக பொறியாளர்களின் பேர்ரறிவையும் வியந்த வண்ணம் பேபி டேம்
சென்றோம்,அங்கு SE,EE,அங்குள்ள உபகோட்டத்தின் உதவிசெயற்பொறியாளர் மற்றும் நாங்களும் இணைந்து கொள்ள அலுவலக பணிகள்,மற்றும் தள பணிகள் குறித்து கலந்துரையாடினோம்,பின் SE கொடுத்த அறிவுரைகளை குறிப்பெடுத்துக்கொண்டு மீண்டும் பரம்பிக்குளம் அணைக்கு வந்தோம்.
சென்றோம்,அங்கு SE,EE,அங்குள்ள உபகோட்டத்தின் உதவிசெயற்பொறியாளர் மற்றும் நாங்களும் இணைந்து கொள்ள அலுவலக பணிகள்,மற்றும் தள பணிகள் குறித்து கலந்துரையாடினோம்,பின் SE கொடுத்த அறிவுரைகளை குறிப்பெடுத்துக்கொண்டு மீண்டும் பரம்பிக்குளம் அணைக்கு வந்தோம்.
பரம்பிக்குளத்தின் உயர்ந்த
சிகரமான கருமலையை அங்கிருந்து பார்க்க பார்க்க பரவசம் ஆகி இயற்கையை பாதுக்காப்பது குறித்து சிறிய உரையாடல் தொடர்ந்தது.
நான்,சார் குரியக்குட்டி சென்று பார்வையிட வேண்டும் என்றேன்,சரி வாங்க போகலாமென சொல்ல,தேநீருக்கு பின் உற்சாகத்துடன் கிளம்பினோம்.வனத்துறையிடம் சொல்லிவிட்டு core forest க்குள் பயணம் ஆரம்பித்தது, இருபுறமும் அடர்ந்த வனமிருக்க,இடையில் பாதையில் ஜீப் சென்று கொண்டிருந்த்து,மாபெரும் அனுபவமாக இருக்க,குரியர்குட்டி பாலம் வந்தது,அதற்கு மேல் நடந்துதான் செல்லவேண்டுமென சொல்ல,ஜீப்பை நிறுத்திவிட்டு,நடக்க தொடங்கினோம்.
ஏதோ சில்லென்று ஏதோ நில்லென்றது,ஒண்ணுமில்லைநில்லென்றது,ஒண்ணுமில்லைங்க தென்றல்தான். பாலத்தின் வலது புறத்தில் தூணக்கடவின் உபரி நீரும்,இடது புறத்தில் பரம்பிக்குளத்தின் உபரி நீரும் சங்கமித்து பொரிங்கல்குத்து அணையை நோக்கி குதித்தோடி கொண்டிருந்தது.பாலத்தின் மீது அனைவரும் நிற்க நான் புகைப்படம் எடுத்தேன்.
கொள்ளையழகில்
மனம் மயங்கி பேச்சற்று நடந்தோம்,சட்டென்று வனத்துறையின் போர்டு வர கிளிக்கிகொண்டு நடந்தோம், பிரியாணிக்கு போடும் பிரிஞ்சி இலை/ bay leaf மரம் வர அதையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மெல்ல நடக்க
மனோஜிடம்,எந்த மனோஜ், சலிம் அலி bird study centre key கிட்டியோ என மலையாள புலமையை காட்டி சாவி வாங்கி வர குரியார்குட்டி செட்டில்மெண்ட்க்கு செல்ல.
நாங்கள் மெல்ல நடக்க தொடங்கினோம்,யாருமற்ற வனம்,குளிர்ந்த காற்று, நீண்ட ஆறு என ரம்மியமான சூழல்,இடது புறத்தில் சிறிய தடமொன்று ஆற்றுக்கு செல்ல அதில் இறங்கி
நடந்தோம்,புல்வெளியும்,பாறையுமாய்,ஆற்று தண்ணீருக்கு செல்ல,பனிப்போல் சில்லென்ற தண்ணீரில் கால் நனைத்து நின்றோம்,மாற்றி மாற்றி புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள,மீண்டும் மீண்டும் காலை தண்ணீருக்குள் நனைத்தவாறு நின்று
நாங்கள் மெல்ல நடக்க தொடங்கினோம்,யாருமற்ற வனம்,குளிர்ந்த காற்று, நீண்ட ஆறு என ரம்மியமான சூழல்,இடது புறத்தில் சிறிய தடமொன்று ஆற்றுக்கு செல்ல அதில் இறங்கி
நடந்தோம்,புல்வெளியும்,பாறையுமாய்,ஆற்று தண்ணீருக்கு செல்ல,பனிப்போல் சில்லென்ற தண்ணீரில் கால் நனைத்து நின்றோம்,மாற்றி மாற்றி புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள,மீண்டும் மீண்டும் காலை தண்ணீருக்குள் நனைத்தவாறு நின்று
கொண்டிருந்தோம்,SE இப்போ எங்களை வழிநடத்த வாங்க எல்லோரும் மேலே என முன்னேற சொன்னார்,நான் எங்கள் அலுவலக பணிக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு, மெல்ல வன சாலைக்கு திரும்பினோம்.
.
வீடியோ
மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்த வழியாகவே திரும்பினோம், வழியில் ஒரு ஒட்டுண்ணி மரத்தில் பற்றி ஊஞ்சல் போல் தொங்க,சாலையின் அடி வழியாக சென்று மறுபுறம் இன்னொரு மரத்தை பற்றியிருந்தது.ஊஞ்சலில் அனைவரும் உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள,அட்டை ஒருவருடைய காலை பதம் பார்க்க,அனைவரும் மீண்டும் சாலைக்கு வந்துவிட மெல்ல பாலத்தை அடைந்தோம்.
சரி,பரம்பிக்குளம் ஆய்வு மாளிகைக்கு போய் சாப்பிட்டுவிட்டு அடுத்த தள ஆய்விற்கு செல்லலாம் என SE சொல்ல,SE,EE இருவரிடமும்,சார் தெல்லிக்கல் போகணும் ஆனா அனுமதி கிடைக்கலை,அதனால கோழிகமுத்தி ஆறு போறோம் சார்,உணவு பொட்டலங்கள் இருக்கு என சொல்லி அனைவரிடம் விடை பெற்றுக்கொண்டு,குரியார்குட்டி செட்டில்மெண்டிலிருந்து தினேஷ் என்ற கல்லூரி மாணவர் பரம்பிகுளம் சாலைபிரிவு வரை செல்லவேண்டுமென் சொல்ல அவரையும் எங்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு,மெல்ல ஜீப் நகர்ந்தது,
தினேஷிடம் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி கேட்டேன்,மலையாளமும், தமிழும் கலந்து அவர் பேச தொடங்கினார்.
தினேஷிடம் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி கேட்டேன்,மலையாளமும், தமிழும் கலந்து அவர் பேச தொடங்கினார்.
நான்:
தினேஷ் குடிக்க,குளிக்க என தனி தனி தண்ணீரா? எந்த தண்ணீர் பயன்படுத்றீங்க?
தினேஷ்:
இப்போ பார்த்த ஆத்து தண்ணிதான் எல்லாத்துக்கும்.
நான்:இங்கே என்ன பண்டிகை கொண்டாடுவீங்க
தினேஷ்::தீபாவளி,பொங்கல் இல்லை,கிருஸ்மஸ் கொண்டாடுவோம் என்றார்,ஆனா கிருஸ்டியன் இல்லையென்றார்,அப்புறம் அம்மனுக்கு பொங்கல் வச்சி கொண்டாடுவோம்,அன்னைக்கு எங்க( பழங்குடினர்) நடனம் ஆடுவோம்
.
.
நான்: இங்கே என்ன மரங்கள் இருக்கு?
தினேஷ்:
கூவாட்டி,கணக்க,பிள்ளைமருது,தேக்கு,பட்டைலவங்க மரம்(பிரிஞ்சி இலை) மரம் என சொல்ல.அவர் இறங்க வேண்டிய இடம் வரஅவரை இறக்கிவிட்டுவிட்டோம்,
நாங்கள் பயணத்தை தொடர வழியில் சாப்பிடலாமென சொல்ல தண்ணீர் தீர்ந்து போச்சி மேடம் என்றார்கள்,சரி வழியில அருவி இருந்தா,தண்ணீர் பிடிக்க முடிவு செய்தோம்.
சிறிது தூரத்தில் அருவியொன்று வர,எல்லா பாட்டில்களும் நிரம்பின,VIEW POINT ல் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு,அருவி தண்ணீர் குடித்தால்,சில்லென்று அருமையாக இருந்தது,உடனே பயணம் தொடர.
பெருவாரிப்பள்ளம் வர
அதற்கு 50மீ முன்பாக மேடம், யானை,யானை உ தள்ளியிருந்த வனத்திற்குள் கூட்டமாக யானைகள் நிற்க குஷியாகி,
பார்த்துக்கொண்டே புகைப்படங்க்ள எடுத்துக்கொண்டு,கன்னிமரா தேக்கு பார்க்க சென்றோம்,அய்நூறு வருட பழமையும் மகாவிருக்ஷா புரஸ்கார் விருதும் பெற்ற மரம் அதை பார்த்து விட்டு திரும்பும் வழியில் சாம்பார் மானும்,சற்றுதள்ளி காட்டுஎருது,காட்டு பசுக்களும் மேய்ந்து கொண்டிருந்தன.
நேரம்
குறைவாக இருந்ததால்,விரைந்து டாப்ஸ்லிப் நோக்கி பயணித்தோம். டாப்ஸ்லிப் க்கு 150 மீ முன்னால் பத்துக்கும் மேற்பட்ட செந்நாய்கள் நிற்க பார்ப்பதற்குள் ஓட தொடங்கின,இருந்தும் காமிரவுக்குள் சிக்கியவைகளை கிளிக்கி கொண்டு பயணித்தோம்,
டாப்ஸ்லிப் தமிழக வனத்துறை,அங்கே கோழிகமுத்தி ஆற்றை பார்வையிட வந்திருப்பதாக மனோஜ் சென்று சொல்ல ரேஞ்சருடன் அலைப்பேசியில் பேசினேன்,உடனே அனுமதி கிடைக்க, வனத்துறை வேனை தொடர்ந்து சென்றோம்,சாலை மிக மோசமாக இருக்க மெதுவாக ஜீப் ஊர்ந்தது,கோழிகமுத்தில் யானைகள் முகாம் உள்ளது,இங்கு யானைகளுக்கென கேழவரகு மற்றும் அரிசி மாவில் உணவு தாயரிக்கிறார்கள் அதனுடன் வெள்ளம் சேர்த்து கொடுக்கிறார்கள்,
கோழி கமுத்தி ஆற்றிலேயே யானைகள் குளிக்கின்றன தனக்கான செடிகளை ஒடித்து கட்டாக இரவு டிபனுக்கு கொண்டு வந்துவிடுகின்றன,மாலை நேரத்தில் தண்ணீரில் விளையாடி,குளித்துவிட்டு,முகாமில் கொடுக்கும் உண்வை உண்டு விட்டு,பார்வையாளர்களை பார்க்கிறது.பின் தத்தம் இடத்திற்கு சென்று கொண்டு வந்த செடிகொடிகளை,சாப்பிட்டுக்கொண்டு விடியும் வரை இருக்கின்றன்,பின் வனத்திற்குள் செல்கின்றன
,ஆனால்காட்டு யானைகளிடம் இருந்து வரும் ஒரு வகையான மணமிவைகளிடமில்லை.
கோழிகமுத்தி
ஆற்றை பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு,ஆற்றின் ஆரம்ப இடத்தை பார்க்க வேண்டுமென கூற அதுக்கு ரொம்ப தூரம் நடக்கணும்,அடர்ந்த காடு ,இப்போ மணி மாலை 6.30 அதனால இப்போ போக முடியாது என்றார்கள்.சரியென்று ஆற்றைப்பற்றிய குறிப்புகளை எடுத்துக்கொண்டோம்,பெருங்குன்றா என்ற இடத்திலிருந்து ஆறு உற்பத்தியாகி,கதவுசாத்தி என்ற இடத்தின் வழியாக வருகிறது என்றார்கள்.
குட்டியானை
சரவணனனை எனக்கு மிகவும் பிடித்துவிட அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு,கல்பனா,மாரியப்பன் என 21 யானைகளை பார்த்துவிட்டு,கிளம்பினோம்,அம்புலி சாலை வழியாக செல்ல சொன்னார்கள்,வனத்துறை வேனும் வர
ஜீப் ஓட தொடங்க,
மனோஜ்,யானைகளுக்கு இவங்க மருந்தெல்லாம் போடுறாங்க காட்டு யானைகள் என்ன செய்யுமென கேடக,தேக்கு மரத்தோட பட்டையை தின்றால் வயிற்று போக்கு நிற்குமென்பது காட்டு யானைக்கு தெரியும்,அத போல தந்தம் இரண்டும் வளர்ந்து சேர்ந்துடுச்சினா,தும்பிக்கையை தூக்க முடியாது,அதனால காட்டு யானைகள் மர கொம்புகளில் கொடுத்து உடைத்து கொள்ளும் என கூறினார்.
அம்புலி சாலையில் உள்ள அம்புலி மாளிகையை படமெடுத்துக்கொண்டு, மீண்டும் டாப்ஸ்லிப் வந்தோம்,ரேஞ்சருக்கு நன்றி சொல்லிவிட்டு பயணம்தொடர,
அம்புலி சாலையில் உள்ள அம்புலி மாளிகையை படமெடுத்துக்கொண்டு, மீண்டும் டாப்ஸ்லிப் வந்தோம்,ரேஞ்சருக்கு நன்றி சொல்லிவிட்டு பயணம்தொடர,
காட்டெருதுகளும்,காட்டு பசுக்களும் குட்டிகளுடன் சாலையில் நிற்க,மிக நெருக்கத்தில் பார்த்தோம்,காட்டெருதுகள் 1200கிலோ எடையும்,காட்டு பசுகள் 800 கிலோ எடையும் இருக்குமென்று நான் சொல்ல,மேடம் தட்டுச்சினா அவ்வளவுதான என்று கேட்கும்போதே,காட்டு முயல் இரண்டு சரியான பாய்ச்சலில் திக்குக்கொன்றாய் ஓடின,சாம்பார் மானொன்றும் குதித்தோட அவைகளின் கண்களின் பளபளப்பு சொல்லில் கூறமுடியாது.
காட்டு
அணில்,காட்டுகோழி பார்த்ததையும்.காட்டு அணில் எப்படி பலா பழத்தை சாப்பிட்டது என்பதை பற்றியும் சொல்லிக்கொண்டே பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம்.இதில் இன்னும் பல செய்திகளை சொல்லவில்லை, அவற்றை வரும் நாளில் சொல்கிறேன்.பரம்பிக்குளம் உயிரினங்கள் பற்றி,வனம் பற்றி, நீர்நிலைகள் பற்றி,பழங்குடியினர் ஓராயிரம் கதைகளை உள்ளடக்கியுள்ள பெரும் பெட்டகம்.,ஒரு பல்கலைகழகம்.இங்கேயுள்ள செடிகள் கொடிகள்,மரங்கள் குறித்து சொல்லவே நிறைய உள்ளது.
பரம்பிக்குளம்,மேற்கு தொடர்ச்சி மலையின் உயிர்கோளத்தில் ஒரு அழகு,அற்புதம் என சொல்லிக்கொண்டே போகலாம்,கேரள மாநிலத்திலேயே அதிகமான விலங்குகளை காணக்கூடிய ஒரு இடம்.
அணைகள்
குறித்தும்,ஆறுகள் குறித்தும் சுவைப்பட அடுத்த கட்டுரையில் காண்போம்.அது வரை பரம்பிக்குளத்தின் நினைவுகளில் திளைத்திருங்கள்.
-அன்புடன் லீலா.
பரம்பிக்குளம் என்றொரு பரவசம் - Parambikulam - அற்புதமான பதிவு, படங்களுடன், நிறைய விபரங்களுடன். படித்துப் பாருங்கள், நாமும் அவர்களுடன் பயணிக்கிறோம், அப்படி ஒரு அற்புதமான எழுத்து நடை - எனக்கு ஒரு வருத்தம். 24.7.2016 அன்று எழுதியிருக்கிறார்கள், ஒரு பின்னூட்டம் கூட இல்லை. இயவர்களை படித்து உற்சாகப்படுத்தினால் நிறைய எழுதுவார்கள், நிறைய தகவல்கள் நமக்குக் கிடைக்கும். - எனது பக்கத்தில் பகிர்கிறேன். அற்புதமான எழுத்தாற்றலுக்கு மகிழ்ச்சி & வாழ்த்துகள் திருமதி Leela Ammu எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete