Wednesday, 6 July 2016

கடல் பயணம்

                                               
கடல், மனிதகுலத்தோடு நீண்ட பந்தம் கொண்டது.அலையாடும் கடல் பேரழகு,காண காண சலிக்காத பேரழகில் ஒன்று.உயிரோட்டமுள்ள ஒரு இயற்கையின் விந்தை,எல்லைகளை வரையறுத்து கொண்டும்,மானுடம் தவறிழைத்தால் வரம்பு தாண்டி அனைத்தையும் உள்ளுக்குள் இழுத்து கோபம் தணித்துக்கொள்ளும் நீதி தேவதையும் கூட.நான்கு புறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர் சூழ்ந்திருக்க கடலின் நடுவே பயணம் செய்யும் அனுபவம்,சற்று திகிலும்,மகிழ்வும் நிறைந்த ஒன்று.பயணிக்கும் சக மனிதர்களோடு,நீரலைகளும் பயணிக்க,கடல் ஆர்பாரிக்கும் போதெல்லாம் மேலும் கீழுமாய் ஆடும் படகு/கப்பல் ஒரு பேரின்பம் தரும் கலம்.



கடலின் மேற்பரப்பு ஒரு கோடி கதை சொல்லுமென்றால்.ஆழ் கடல் ஓராயிரம் கோடி கதை சொல்லும்.கடல் நீர் ந்டுவே பயணம் செய்தால் குடி நீர் தருபவர் யாரோ என்ற பாடல் வரிகளும்,கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற இடமேயில்லை என்ற பாடலின் வரிகளும்.கடலில் பயணம் செய்ய தன்னம்பிக்கையும்,தளரா மனமும் வேண்டுமென்பதை சொல்லாமல் சொல்கிறது.


வானின் நிறத்திற்கேற்ப நீரின் நிறம் மாற்றி காட்டும் கோலமெல்லாம் கண்களின் கோலம் காட்டும் பேரழகு,துள்ளும் மீன்களும்,அலையடிக்க மேனி நனைக்கும் நீர் திவலைகளும்,உள்ளிருக்கும் குழந்தையை வெளிக்கொணர்ந்து மகிழ்ச்சி ஆரவராம் செய்ய வைக்கும் கடல் மாபெரும் மன  சிகிச்சை தரும் நிபுணர்.











கண்களில் வான் பருகி,கைகளில் கடல் அள்ளும் சுகம் பெரிது.பூமியின் பெரும் பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது,அதிலொரு பயணம்,காடுகளை கைகளில் அள்ள முடிவதில்லை,கண்களால் மட்டும் பருகி பருகி தாகம் தணித்துக்கொள்ள வேண்டும்.கடலின் கீழ் வேறொரு உலகம் உள்ளது,சின்ன்ஞ்சிறு மீன்கள், கடல் வாழ் செடிகள்,பவள பாறைகள் என எத்தனையோ அழகும்,அதிசயமும் தன்னுள் வைத்துக்கொண்டு,எதற்காக காலில் சலங்கை கட்டிக்கொண்டு சதா ஓய்வு இல்லாமல் இந்த கடல் எங்கு நடந்து கொண்டிருக்கிறது இந்த கடல்,எதை தேடி பயணிக்கிறது,கோபமா? ஆன்ந்த தாண்டவமா? எதை சொல்கிறது அடித்து மோதி கொண்டு வரும் இந்த அலை.


கடல் என்ன பாடம் சொல்கிறது?

சதா சலசலக்கும் இந்த அலைகள் முயற்சி பற்றி சொல்கிறதா? மீன் கள் கடல் நீரில் நான் மூழ்கியிருந்தாலும் என் உடலுக்குள் இந்த உப்பு செல்லவில்லை,இந்த உலகத்தில் வாழும் நீ உலகத்தின் ஆசையை உன்னுள்ளே விடாதே என்றா?

கடல் என்றால் ஆசையாய் ஒடி கால் நனைக்குமெனக்கும் உன் மீது கோபம் உண்டு,கால் நனைக்கமால் திரும்பிய நாளன்று தூங்காமல் இருந்ததும்,எப்போது உனக்கு பிணம் தின்னும் பழக்கம் வந்தது என மருகி போனதும் நினைவிற்கு வருகிறது.
 
பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா,மோதி மிதித்து விடு பாப்பா, முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்ற வரிகளை நீ  அறிந்து நடந்து கொள்கிறாயோ என தோன்றுகிறது,பூமிக்கு பாதகம் செய்யும் மனித குலத்தை விழுங்கி கொள்கிறாயோ.

இதுவும் மனித குலத்திற்கான பாடம்தான்.

எனினும் கடல் பேரழகு,வாரி வழங்குவதில் தாய்,கடல் உயிரிகள்,கனிமங்கள் மட்டுமல்லமால்,கதைக்கும்,கவிதைக்கும் கரு கொடுப்பதிலும் நீ கருணை கொண்டவள்.

இந்த பூமியின் தொன்மைகள் கடலின் உள்ளே பாதுக்காக்கப்படுகிறது.

கடல் பயணம்,கனவுகளிலும் களிப்பூட்டும் பயணம்.



பயணம் தொடரும்.



-    அன்புடன் லீலா.

No comments:

Post a Comment