.
முக்கடல்
சந்திக்கும்
முனையில் விளைந்த
முத்து நீ
அகிலத்தின் அரும்
சொத்து நீ
பொக்ரானால்
வல்லரசுகளை
வால் வரை
அதிர செய்த
அறிவியல் நீ
ராமேஸ்வர கடல்
வளர்த்த சிறகு
அக்னி சிறகு நீ
தமிழ் தரணியாளும்
காட்டினாய் நீ
உலகமே உறவுனக்கு
நீ தமிழனென்ற
செருக்கு எனக்கு
அறிவும் அன்பும்
அகிலத்தை
ஈர்க்கும்
காந்தமென
காட்டினாய் நீ
படகோட்டி மீன்
பிடித்தாய் நீ
வானில் படகோட்டி
விண்மீன்
பிடித்தாய்
பாரதியின் அக்னி குஞ்சுகளுக்கு சிறகு வளர்த்தவன் நீ
நின் உடல்
நீங்கினாலும்
இளைஞரின் நெஞ்சு
வாழும்
நின்நினைவு.
நின் ஆன்மா
காணும்
வல்லரசாகும் இந்தியா
ராமேஸ்வர கரையோர
கல்லூரி
இன்னும்பல………..
மின்விளக்கு
காணாத
உன் வீடுதான்
பலருக்கு
ஒளியூட்டும்
மின்கலம். கிராமத்தில் பிறந்து
கிரகத்தை ஆராய்ந்தவன் நீ
உறவுகளின் உண்வுக்கான
செலவை பிறர் அறியாமல் நீ
செலவை பிறர் அறியாமல் நீ
செலுத்தியது வரலாற்று புரட்சி
முன்னால் அமைச்சருக்கு
இன்னமும் இனமாகவே
வருகிறது இறைச்சி
தாய்மார்களே
இனி
அஎன்றால்
அப்துல் கலாமென்றே
சொல்லிதாருங்கள்.
-அன்புடன் லீலா
No comments:
Post a Comment