Thursday, 21 July 2016

மழை மழை......



மேகமே வருக மேகமே வருக
பூமழையும் மாமழையும் தருக
பள்ளம் நிரம்ப ஓடைகள் ஓட
பசுமை நிறைந்திட பயிர்கள் செழித்திட

மேகமே வருக மேகமே வருக
பூமழையும் மாமழையும் தருக

கொட்டி முழக்கும் மின்னலிடியொடு
மண்ணும் மணக்க விண்ணும் பிளக்க
பூமி குளிர புதுபுனல் ஓட
பாலை எல்லாம் சோலையும் ஆக

மேகமே வருக மேகமே வருக
பூமழையும் மாமழையும் தருக

நலிந்தவர் நலம்பெற நானிலம்  வளம்பெற
பூக்கள் மலர்ந்திட காய்கள் கனிந்திட
மாக்கள் களித்திட மானுடம் வாழ்ந்திட
நல்லவை ஓங்கிட அல்லவை அகன்றிட

மேகமே வருக மேகமே வருக
பூமழையும் மாமழையும் தருக

அன்புடன் லீலா.

No comments:

Post a Comment