ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கலையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க
அட ஒரு ஓடை இல்லயே
இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க அது மோரு
மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பார்க்க
மந்தவெளி இங்கே இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமரம் மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அணைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம் ஊரை போல ஊரும் இல்லை..
என்ன பாட்டு பாடுறேன்னு கேட்கிறீங்களா……ம்ம் பிடித்த பாடல் அதுவும் மேஸ்ட்ரோவின் குரலில்..ஹூம் இனிமே இதை நம்ம ஊர்லயே பாட வேண்டியிருக்கும் போலிருக்கு….
கிராமம் என்பதே இனிவரும் தலைமுறைக்கு படத்தின் மூலமோ,பாட்டின் மூலமோதான் தெரிந்துக் கொள்ள வேண்டிய நிலை வந்து விடுமோ என்ற பயத்தில்தான் இந்த கட்டுரை அல்லது உரையாடல் உதயமாயிற்று.
அறிவியலோடு கூடிய வாழ்வியலும்,அமைதியும் நிறைந்த கிராமங்கள் எங்கே போயிற்று.உருவான நகரங்களை மாற்ற முடியாது என்றாலும் கிராமத்தையும் நகரத்தையும் சமன் செய்யும் விதமாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஏன் சமன் செய்ய வேண்டும்? சாலையும், காரும், உபகரணங்களுடன் சமையல் அறை,எதையும் எளிதில் பெறக்கூடிய வசதி வாய்ப்புகள் பின் ஏன் சமன் செய்ய வேண்டும்,கிராமங்களை காக்க வேண்டும்?
கிராமிய வாழ்வில் இருந்த கூட்டு குடும்ப அமைப்பு சிதைந்த்தால் ஏற்பட்ட கலாச்சார,பண்பாட்டு சீரழிவோடு உடல் நலக் கேடும்,மன நலக் கேடும் தலைதூக்கி மனித குலத்தை அமைதியற்று அலைய விட்டுவிட்டது.
கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கூட்டுக் குடும்பம். |
முதலில் இந்த தலைமுறைக்கு கிராமத்தில் பயன்படுத்திய பொருட்களும் அதனால் ஏற்பட்ட பயன்கள்,உடல் நலன்,மன நலன் ஆகியவற்றைப் பற்றி பேசுவோம். இல்லையென்றால் இத்தகைய பொருட்களை பயன்படுத்தியதோ அதன் மூலம் அறிவியல் அறிவோடு நம் முன்னோர்கள் வாழ்ந்ததை,இளைய தலைமுறை தெரித்துக்கொள்ளாமலே போய்விடுவர்.
முதலில் பனை கூரை வீடுகளைப் பற்றி பார்ப்போம்.பனை கூரை
சங்க காலம் முதல் தமிழரின் வாழ்வில் பனை மரம் முக்கிய அங்கம் வகிக்கிறது.தமிழகத்தின் மாநில மரம் பனை.பனை புல்லினத்தை சார்ந்த தாவர்ப் பேரினம்.பனையில் சல்லிவேர் மண் அரிப்பை தடுக்கும் என்பதறிந்த நம் முன்னோர்கள் நீர்நிலையின் ஓரங்களில் பனையை வளர்த்தனர்.அதோடு மட்டுமில்லாமல் வயல்கள் மற்றும் குடியிருப்பின் ஊர் எல்லைகளை குறிக்க பனை மரங்களை நட்டனர்.எல்லை பிரிக்கும் பனை மரங்கள்.
பனை மரங்கள் இல்லாது போயிருந்தால் பல இலக்கியங்கள் கிடைக்காமல் போயிருக்கும்….பனை ஓலையில் தானே பல இலக்கியங்கள்,குறிப்பாக திருக்குறள் ஆகியவைகளை ஓலைச்சுவடியில் தானே.பண்டைய காலத்தில் செய்தி பரிமாற்றங்கள் அனைத்தும் ஓலைகளினால் தான் நடைப் பெற்றது.
ஓலைச்சுவடி
ரைட் லெஃப்ட் என பழக்கப்படுத்த ஓலைக்கால், சீலைக் கால் என தான் சொல்லிக்கொடுத்திருக்கின்றனர்.புயல் காலத்தையும் தாங்கி நிற்க கூடிய பனை வீடுகளை நம் முன்னோர்கள் கட்டினர்.பனையோலையில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதால் பனையோலை பெட்டி,கூடை என முடைந்து பயன்படுத்தினர்.மிட்டாய் முதல் உணவு பொருட்கள் யாவும் பனையோலைப் பெட்டியில் வைத்தே தரப்பட்டது.ஆகையால் ஓலைப் பெட்டி தொழில் வளர்ந்து வந்தது.ஆனால் சமீப காலமாக நெகிழி பயன்பாட்டிற்கு வந்ததால் ஓலைப் பெடி தொழில் நலிவடைந்ததோடு,மக்களின் நலனும் கேள்வி குறியாகியுள்ளது.பனையோலை கடகம்
பனையோலை பாய் என பல் பொருள் தரும் ஒரு மரத்தை பேணி வளர்த்த நம் முன்னோரின் அறிவு வியக்கத் தக்கதாகும்.பனை பாய்
பனையோலை விசிறி கோடைக்காலத்தில் மிகுந்த பயனுடையது ஆகும்.வீசினால் குளிர்ந்த காற்று தரும்,சற்று தண்ணீர் தெளித்து பின் வீசினால் இன்னும் குளுமையாக இருக்கும்.
உணவை பாதுக்காக்க மட்டுமின்றி உணவாகவும் பயன்பட்டுள்ளது ஜெல்லி போன்ற நுங்கு, பனம் பழம்,பதநீர்,பனங்கிழங்கு, பனங்கற்கண்டு, கருப்பட்டி, பனங்கள் போன்ற சத்துள்ள உடலை குளிர்விக்க கூடிய மருத்துவ குணங்களுடன் கூடிய உணவையும் உறைவிடத்தையும், இலக்கியத்தை தாங்க கூடிய பனையோலை பாரம்பரிய மரபு அதை காப்பதும் பயன்படுத்தி இயற்கையை பேண வேண்டியதும் நம் ஆகப் பெரிய கடமை.
No comments:
Post a Comment