வணக்கம்
தோழமைகளே !
இன்று என்ன நாள் தெரியுமா?
கண்டிப்பா எல்லோருக்கும் தெரிந்ததுதான்.ஆம் பெருந்தலைவர் காமராசர்
அவர்களின் பிறந்தநாள்.அந்நாளை கல்வி வளர்ச்சி
நாளாக கடைப்பிடிக்கிறோம்.இந்நாளில் அவரின் வாழ்க்கை வரலாறு
மற்றும் சாதனைகளை இன்று பதிவு செய்வதில்
மகிழ்ச்சி கொள்கிறேன்
வாழ்க்கை
வரலாறு
பெருந்தலைவர்
காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு
வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில்
அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர்
தாயார் பெயர் சிவகாமி அம்மாள்.
தந்தையின் பெயர் குமாரசாமி நாடார்.
அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து
வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு
சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார்.
– இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார்.
இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி
வந்தார்.
1903- ஆம்
வருடம், ஜுலை மாதம் 15-ஆம்
தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின்
பெயரையே முதலில் சூட்டினார்கள்.
தாயார்
சிவகாமி அம்மாள் மட்டும், தன்
செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து
வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி,
‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப்
பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு
பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர்
சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர்
தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே,
விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள்
இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம்
அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட
பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப்
போராட்ட வீரராகக் மாற்றியது.
”தந்தையொடு
கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை
குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு
முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர்
திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய
காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது
காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச
விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து
கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு
பெற்றார்.
காலப்போக்கில்
காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத்
தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை
மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப்
போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன்
கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்..
அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை
அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு
காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது.
காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத
உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம்
ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்
காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே
காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித்
தந்தார்.
1954- ஆம்
ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார்.
தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.
மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர்
பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து
கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே
கு. காமராஜர்.
அடுத்த
பதிவில் பெருந்தலைவரின் சாதனைகள் குறித்து காண்போம்.
அன்புடன்
லீலா.
உசாத்துணை:
|
1.பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு-முனைவர் பி.எஸ் செல்வராணி.
|
|
காமராஜரின் சாதனைகள்
|
|
ரௌத்திரம் ப்ளாக்
|
No comments:
Post a Comment