விண்ணை முட்டி கெஞ்சும்
கெஞ்சும்
மலையினை மேகம் கொஞ்சும்
கொஞ்சும் மேகம் சிந்தும்
சிந்தும்
மழைத்துளி இலையினில் மிஞ்சும்
இலைவீழ் நீர்துளி பூவினை
விஞ்சும்
காற்றலை இசை மீட்ட
தலையாட்டும்
மரக்கவிகை நீர்துளி
சிந்தும் சிந்தும்
மழைத்துளி மேனியில்
போடும் மஞ்சம்
கள்ளம் மறந்து மகிழும்
நெஞ்சம்
வானோக்கி பறக்க றெக்கை
கட்டும்
வான் கோலம் யாவும்
கண்ணோடு
ஜாலங்கள் ஆயிரம் காவியம் பாடும்
இனியெங்கும் வீசாதோ
புது வசந்தம்.
-கோ.லீலா.
No comments:
Post a Comment