பண்டைய மரபுகளில் அல்லது கலாச்சாரத்தில்,பயன்படுத்திய பொருட்கள் பல சுவராசியமான கதைகளை,பழமொழிகளை ,அற்புதமான வாழ்வியல் சொல்லும் பாடல்களை தாங்கியுள்ளன.
நம் முன்னோர்கள்(ஃப்ரிட்ஜ்) குளிர்சாதன பெட்டியில்லாத போது என்ன செய்திருப்பார்கள் என்று சிந்தித்த போது உறி நினைவுக்கு வந்தது.
கிராமிய வாழ்வின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த உறி இப்போது நினைவு சின்னமாக மாறிவிட்டது.ஆதிமனிதன் காடுகளிலும்,மலைகளிலும்,குகைகளிலும் வாழ்ந்து வந்தனர்.
மெள்ள முன்னேற்றம் அடைந்து தனக்கென ஒரு வாழ்வியலை உருவாக்கி அத்தகைய வாழ்க்கைக்கு மாறினர்.ஒரு பெரும் சமூகமாக வாழ்ந்த மனிதர்கள் விவசாயம்,மற்றும் பல தொழில்களை அனைவருக்குமாக பொதுவில் செய்தனர்.பின் பொதுவாக அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு பிரிக்கப்பட்ட்து அப்படி பங்கு பிரிக்கப்பட்ட தானியங்களை புழு பூச்சிகள் அண்டாதிருக்க என்ன செய்வது என யோசித்து குதிர்,சுரை குடுவை போன்றவற்றை சிந்தித்து கண்டறிந்தனர்(இவற்றை குறித்து அடுத்த பதிவில் காணலாம்).
ஆனால் சமைத்த உணவு பொருட்கள் மீதமாவதை எப்படி பாதுகாப்பது என யோசித்து கண்டுபிடிக்கப்பட்டது தான் உறி.
பானைகளில் பொருட்களை இட்டு கீழே வைக்கமால் ஏன் உறி செய்து அதில் கட்டி தொங்கவிட்டனர்?
இதற்கு நாய்,பூனை போன்ற விலங்குகளோ அல்லது சிறு குழந்தைகளோ உணவு பொருட்களை தரையில் உருட்டி விட்டு விடாமல் இருக்கும் பொருட்டே கூரையின் ஒரு பகுதியில் மூன்று கயிறு கொண்டு உச்சியுல் முடியிட்டு அடியில் பிரிமனை ஒன்றை வைத்து நடுவில் சட்டி அல்லது பானையை வைத்து கட்டி தொங்கவிட்டனர் என்று பலரும் கூறக் கேட்டேன்.
ஆனாலும்,அந்த பதிலில் அத்தனை திருப்தியடையவில்லை.ஏனோ என் மனம் சதா பிரமிட்களில் பொருட்கள் கெடாமலிப்பதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என யோசிக்க வைத்தது.
பிரமிடில் உடல்கள் கெடாமலிருப்பதற்கு,எகிப்தியர்களின் உடல் பதன முறைகளுடன் பிரமிடின் முக்கோண வடிவமும் காரணமாக இருக்கலாமென்று போவிஸ் என்ற ஆய்வர் ஊகித்தது நினைவுக்கு வர…..அவர் என்ன செய்தார் என்பதை ரத்தின சுருக்கமாக கீழே கொடுத்துள்ளேன்
போவிஸ் நாடு திரும்பியதும் தன் வீட்டில்மூன்றடி அகலமுள்ள ஒரு பிரமிடை அமைத்துஅதை வடக்கு தெற்காக திருப்பி வைத்து அடித்தளத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் ஒரு பூனையின் சடலத்தை வைத்தார். சில நாள்களுக்குப் பிறகு அந்தச்
சடலம் அழுகிப் போகாமல் உலர்ந்து வற்றலாகி இருந்தது.
போவிஸ் பல்வேறு தாவரப் பொருள்களையும்,மாமிசப் பொருள்களையும் அவ்வாறு
பிரமிடுக்குள் வைத்தபோது அவையும்அழுகிக் கெடாமல் உலர்ந்து விடுவதைக்கண்டார்.
பிரமிடின் ஏதோ ஒரு புரியாத தன்மையே அதற்குக் காரணமென்று அவர்முடிவு செய்தார்.நிற்க.
இதனடிபடையில் தான் உறியிலும் உணவு கெடாமலிருக்கிறதோ என தோன்றியது.உறி மேற்கூரையிலிருந்து முக்கோண வடிவத்தில் உறி தொங்கவிடப்படும்.(மூன்று கயிறுகளை கொண்டு இணைக்கப்பட்டிருக்கும்) உறியின் அடிப்பாகத்திலிருக்கும் பிரிமனையிலிருந்து பானை 1/3 உயரத்தில் இருந்திருக்க கூடுமோ என தோன்றுகிறது.
இதைப் போன்ற ஆராய்ச்சி எண்ணங்கள் ஒரு புறமிருக்க,உறி எத்தனைக் கால பழமையானது,இலக்கியங்களிலே இதைப் பற்றிய குறிப்புகள் ஏதும் உள்ளதா என்று தேடிய போது
'அறிவே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணெய் தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுமாறது எங்ஙனே?''
போதனையால் பாதுகாத்த, தரும நூல்கள் ஓதுகின்றீர். சன்மார்க்கத்திலே கலந்து விடும் சீர்திருத்தம் ஒன்றை அறியவில்லை. வீட்டு மேல்க் கூரையில் தொங்கும் கயிற்றுக் கிடையிலிருக்கும் சட்டியில் தயிர் இருக்கிறது. ஊருக்குள் போய் வெண்ணெய் தேடுகின்றீர். உங்களிடம் இருக்கும் தயிரைக் கடைந்தால் வெண்ணெய் எடுக்கலாம். இறைவனை உங்களிடையே தேடாமல், வெளியில் தேடிக்கொண்டு அலைகின்றீர். இது குறித்து கூறி எடுத்துரைத்தாலும் சிந்தனையில் ஏற்காத ஞானமில்லாத மனிதரிடம் நெருக்கமாகிப் பழகுவதும், அவர் செல்லும் தடத்திலிருந்து வழிமாற்றி மறுபுறம் செலுத்துவதும் எவ்வாறு நடக்கும்?''
என்று உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணெய் தேடுவோர் என்று கூறுவதன் மூலம் உறியில் எப்போது எந்த பொருள் இருக்கிறதோ இல்லையோ தயிர் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதோடு ஒரு பகுதி என்றில்லாமல் அனைத்து பகுதியிலும் உறி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் உறுதியாகிறது.
உறியை தேடிய போது ஒரு ஆன்மீகம் சார்ந்த சுவையான கதையொன்றும் கிடைத்தது.
இடும்பனின் வரலாறு பழனி முருகன் கோவில் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை போன்ற வித்தைகளைப் பயிற்றிய இடும்பாசுரான் முருகனின் வேலால் அசுரர்கள் அழிந்தமையால் மனைவி இடும்பியுடன் வானவாசஞ் சென்றான்.
அவ்வழியால் திருக்குற்றாலத்துக்கு அருகில் அகத்தியமுனிவரைக் கண்டு வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினான். அகத்தியரும் திருக்கேதாரத்தில் உள்ள வனத்தில் இருக்கும் இரு மலைகளை எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் பெறற்கரும் பேற்றை அடைவாய் எனக் கூறினார்.
இடும்பனும் மனைவியோடு அவ்வனத்திற்கு சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூல மந்திரங்களைக் கூறித் தவமிருந்தான். இரு சிகரங்களையும் தம் தவவலிமையால் பாம்புகளால்உறி போலச் செய்து தோளில் வைத்து காவடி
எடுப்பார்போல பொதிகை சென்றான்.
பழனியை அடைந்தபோது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி பாரமாகத் தோன்ற அவற்றை இறக்கி வைத்தான். பின்னர் காவடியைத் தூக்க முடியாமல் போனது. அங்குள்ள மர நிழலில் தண்டாயுதபாணியைக் கண்டு அவனை விலகும்படி பணித்தான். முருகன் விலகாமல் இருக்கவே இடும்பன் கோபங்கொண்டு பாய்ந்தபோது அங்கு வீழ்ந்து இறந்தான். இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகனும் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார்.
இடும்பன் தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போல காவடி எடுத்து வரும் அடியார்களுக்கு அருளும்படியும் கேட்டுக்கொண்டான். இக்கதையுடன் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுவர்.
இன்னொரு சுவையான கதை ஆம் உண்மையில் சுவையான வெண்ணெய் திருடும் கிருஷ்ணன் பற்றியது.
கிருக்ஷ்ணரிடம் , " கிருஷ்ணா, போய் விளையாடு. எங்கேயும் போய் வெண்ணெய் திருடக் கூடாது. சரியா? எல்லோரும் உன்னைத் திருடன், கள்வன் என்று சொல்லும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா?" என்று யசோதை சொல்ல,
கிருஷ்ணன், " இல்லேம்மா , நான் எங்கேயும் போகவில்லை. நம் வீட்டு முற்றத்திலேயே விளையாடுகிறேன். நீ போய்த் தூங்கு." என்று சொல்லி விட்டு ஓடவும், யசோதைத் தன் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினாள்.
தயிர், வெண்ணெய் வைத்திருக்கும் உறியிலிருந்து, ஒரு கயிற்றைக் கட்டி அதன் மறுமுனையை பக்கத்து அறைக்குக் கொண்டு போய், அதன் நுனியில் ஒரு மணியையும் கட்டி விட்டாள். பிறகு , உறியை மெதுவாக ஆட்டவும், மணி 'கிணி கிணி ' என்று அடித்தது.
ஆக, வெண்ணெய் திருடும் போது கிருஷ்ணனை இன்றுக் கையும் களவுமாகப் பிடித்து விடலாம் என்று உறுதிப் படுத்திக் கொண்டு, சற்றே கண்ணயரத் தொடங்கினாள்.
இப்பொழுது உள்ளே ஓடி வந்த கிருஷ்ணன் ,யசோதை தூங்கி விட்டாளா என்று உறுதி செய்து கொண்டான். சட்டென்று உறியில் தொங்கும் கயிறு அவன் கண்ணில் பட, அந்தக் கயிற்றைத் தொடர்ந்து சென்று பார்க்க இறுதியில் மணி ஒன்றுக் கட்டப்பட்டிருந்தது..
இது தான் விஷயமா? என்று நினைத்துக் கொண்டு, மணியிடம், " மணியே !மணியே ! " என்று கூப்பிடவும், மணி விழித்துப் பார்த்தது. கூப்பிட்டவன் கிருஷ்ணன் என்று தெரிய அதற்கு ஒரே குஷி தான்.
"மணியே ! எனக்கு ஒரு உதவி செய்வாயா ? "என்று கிருஷ்ணன் கொஞ்சிக் கேட்க,
மணிக்கோ ஒரே சந்தோஷம். "என்ன பாக்கியம் செய்தேன் நான். பரம் பொருளே என்னிடம் உதவி கேட்கிறாரே." ,
" பரம் பொருளே சொல்லுங்கள்! இல்லை...இல்லை .....ஆணையிடுங்கள். செய்யக் காத்திருக்கிறேன்." என்று மணி சொன்னது.
"நானும் என் நண்பர்களும் வெண்ணெய் திருடும் போது நீ சப்தம் செய்து என்னை அம்மாவிடம் காட்டிக் கொடுக்கக் கூடாது". என்று கிருஷ்ணன் சொல்லவும், மணி சந்தோஷமாக ஒத்துக் கொண்டது. "வாக்கு மாற மாட்டாயே!" என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு , வெளியே நிற்கும் தன் நண்பர்களை , சைகையால் உள்ளே வரவழைத்தான் கண்ணன்.
பின் ஒருவர் மேல் ஒருவர் ஏறி , உறியிலிருந்து , வெண்ணெய் பானையை ஓசைப்படுத்தாமல் கீழே இறக்கினார்கள் .
மணியும் ஓசையே செய்யாமல் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது..
பிறகு, வெண்ணெயை உருண்டை உருண்டையாக எடுத்து தன் நண்பர்களுக்கு வாரி வழங்கினான் கிருஷ்ணன்.எல்லோரும் கட்டிக் கட்டியாக வெண்ணெயை முழுங்கினார்கள்.
ஊஹும்.....அப்போதும் மணி மூச்சுக் காட்டவில்லையே.
எல்லோருக்கும் கொடுத்து முடித்தப் பிறகு, தன் பிஞ்சு விரல்களால் வெண்ணெயை அள்ளி, தன் செம்பவழ இதழில் வைக்கவும்,
"கிண் கிணி , கிண் கிணி " என்று மணியோசை யசோதையை எழுப்பியது.
யசோதை திட்டம் பலித்து விட்ட மகிழ்ச்சியில் வரவும், கிருஷ்ணன், கை, வாய், குண்டு கன்னம் எல்லாம் வெண்ணெய் வழிய எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. யசோதை தாவிப் பிடித்தாள் கிருஷ்ணனை. " கையும் களவுமாக மாட்டிக் கொண்டாயா?. இன்று உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபமாக சொல்லவும்.
"கொஞ்சம் இரும்மா .இதோ வந்து விடுகிறேன்"என்று சொல்லி விட்டு மணியிடம் ஓடினான் கிருஷ்ணன்.
" மணியே! கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனாயே . உன்னை நம்பித் தானே இந்த வேலையில் இறங்கினேன்." என்றுகிருஷ்ணன் கேட்கவும்,
மணி சொல்லியது," பரம் பொருளே ! தாங்கள் உறியைத்த் தொடும்போது சப்தித்தேனாசொல்லுங்கள் பிரபுவே.."
"இல்லை" என்றான் கிருஷ்ணன்.
"உறியிலிருந்து பானையை இறக்கினீர்களே. அப்பொழுதாவது சப்தம் போட்டேனா ? "
"இல்லை."
"உங்கள் நண்பர்களுக்கு வெண்ணெயை பகிர்ந்து கொடுக்கும் போது ஏதாவது சப்தம் செய்தேனா ?"
"இல்லை."
"அவர்கள் உண்ணும் போது கூட , நான் சப்தம் செய்யவில்லை தானே.?"
"ஆமாம். நீ அப்பொழுதும் சப்திக்கவில்லை.. பின் நான் உண்ணும் போது மட்டும் சரியாக சப்தம் செய்துக் காட்டிக் கொடுத்து விட்டாயே. அது ஏன்?" என்று கோபமாகக் கிருஷ்ணன் கேட்க,
"பரம் பொருளிற்கு நைவேத்தியம் செய்யும் போது, மணியடிக்காமல் இருக்கலாமா? அது என் கடமை அல்லவா? அந்த நினைவில் அடித்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் ." என்று மணி கிருஷ்ணன் திருவடிகளில் விழுந்து வணங்கியது.
இதோடு மட்டுமல்லாமல்,கிராம்ம்,நகரம் என்றில்லாமல் உறியடிக்கும் விளையாட்டு தமிழர் திருநாளையொட்டி நடப்பது மிகவும் பிரபலமான ஒன்று.
உறியில் மண்பானை பொருந்திய அளவுக்கு வேறு எந்த உலோக பாத்திரங்களும் உறிக்கு பொருந்தவில்லை.பால் வியாபரம்,தயிர்,நெய் போன்ற பொருட்களை உறியில் பானைகளை அடுக்கி அதில் வைத்து தான் விற்றனர்.
அந்த காலத்தில் வீட்டுக்கு வருபவர்களுக்கு உறியிலிருந்து தயிரை மோராக்கி கொடுத்தனர்,இத்தகைய பழைய சாதம்,கூழ்,மோர் போன்ற உடலின் வெப்பம் தணிக்கும் நல்லுணவுகளையே இந்த உறிகள் சுமந்துள்ளன.
இப்போது இந்த உறிகள் நினைவு பொருளாகிவிட்டது என்பதையும் விட,ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களால் உடல் கேடுகள் விளைகின்றன என்பது மறுக்க முடியாதது.

இதில் இடும்பன் மற்றும் கிருஷ்ணர் பற்றிய கதைகள் கடவுள் நம்பிக்கைக்காக கொடுக்கப்படவில்லை.உறி என்பதின் பயன்பாடு அந்த கதையில் கையாளப்பட்டிருப்பதால் அதன் பழமையை உணர்த்துவதற்காக மட்டுமே.
.https://www.youtube.com/watch?v=3JhDzo1k858
அன்புடன் லீலா.

No comments:
Post a Comment