Monday 10 February 2020

மேடை பேச்சு-1
*****************

மேடைப் பேச்சினால் பல வரலாற்று மாற்றமும்,மனமாற்றமும் நிகழ்ந்திருக்கிறது.

மேடையில் ஒருவர் பேசினால் பார்வையாளர்களை அப்படியே கட்டிப் போட்டுவிட வேண்டும்.
இன்னும் கொஞ்சம் பேசட்டுமே என கேட்க வேண்டும்...
என்ன செய்றது....ம்ம்ம்

நமக்கு  கொடுக்கப்பட்ட தலைப்பை   முன் முடிவுகள் எதுவுமற்று நடுநிலையோடு 360 டிகிரியில் பிரிச்சு மேய்ஞ்சி குறிப்பு எடுக்கணும்.

எப்படின்னா முதலில்  பார்வையாளராக வரப் போகிறவர்கள் அத்தனைப் பேரும் அறிவுஜீவிகள்,ஜாம்பவான்கள்‌ என நினைத்துக் கொண்டு நமக்கு‌ ஒண்ணுமே தெரியாது என நினைத்துக்‌‌ கொள்ள வேண்டும். இப்போ 360 டிகிரியில் என்பது புரிந்திருக்கும்.

அந்த தலைப்பை சார்ந்த துறையின் ஜாம்பவான்கள் என்னென்ன சொல்லி இருக்காங்கன்னு அப்படியே சாறு எடுத்துக்கணும்.
ஆனால் அதை அப்படியே கொடுக்க கூடாது.

பானி பூரி தெரியும்ல... அதேதான் இப்போ பூரிய நாம தயார் செய்யணும்,அதுல அந்த சாறை‌ பானியா ஊத்திக் கொடுக்கணும்.
சுவைக்கிறவங்களுக்கு பூரி சுவையா,பானி சுவையான்னு புரியகூடாது.ஆனா தனித்தனியா இரண்டுமே சுவையா இருக்கணும்.

ஒரு தலைப்பை பற்றி நாம பேசினால் அந்த தலைப்பில் வேறு யாரும் நாம சொல்லாத புது கருத்தைக் சொல்லிடக்கூடாது.
அந்தளவுக்கு‌ ரவுண்ட் கட்டி தயாரிக்கணும்.

🚩சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

நேரமில்லைன்னா அடுத்த வாய்ப்பில்‌‌ பேசறேன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடணும்.....

பானி பூரி ரெடி... பரிமாறணுமே.
அது தான்‌‌ பெரிய கலை.
எந்த மொழியில் பேசப்போறோம், எங்கே பேசப்போறோம் என்பதை தெளிவு செய்துக் கொள்ள வேண்டும்.

அதற்கேற்றார் போல் மொழி
உச்சரிப்பு,கதைகள்,நகைச்சுவை துணுக்குகள் சேர்க்கணும்.... கதை, நகைச்சுவை எல்லாம் புதுசா இருக்கணும். நாம ஏற்கனவே வேறு இடத்தில் பேசியபோது சொல்லியவைகளாக இருக்கக் கூடாது... அதே நேரத்தில் பேச்சு ஓட்டத்தில் இயல்பா கதையும், நகைச்சுவையும் இணையற மாதிரி பார்வையாளர் நடுவில் நடக்கும் சில சம்பவங்களை கவனித்து அதனுடன்‌ இணைத்து சொல்லணும்.

சரிங்க மீதியை நாளை‌ பார்ப்போம்.
அன்புடன்‌ கோ.லீலா.

No comments:

Post a Comment