Tuesday 28 August 2018

சாதி தீ..



வள்ளுவன் பாரதி
அண்ணல் பெரியார்
இன்னும் பலரும்
முழங்கியே தீர்த்தும்
தீராத உங்கள் சாதி 
தாகம் தண்ணீரில்
தத்தளிக்கிறது…….
அநீதி எரித்து வாழாது
மனிதம் மரிக்க மரிக்க
வாழ்தல் தகுமோ
செவ்வாயில் தண்ணீர்
தேடும் விஞ்ஞான உலகில்
தவித்த வாய்க்கு
தண்ணீர் மறுத்தல்
அஞ்ஞானம் அன்றோ
மண்ணின் மைந்தர்கள்
சாதிய தீயில் மாய்வதோ
மனிதம் சாய்வதோ…
சாதிய தீயே பரவாதே
மொழிக்கு சங்கம் வளர்த்த
பண்பாட்டில் களையென
சாதிய சங்கமே ஊடுருவாதே
சமர்தனை தொடுக்காதே
விழித்தெழுந்த சிங்கங்கள்
சிலிர்த்து களையின்
வேரறுக்க கத்தி தேடாது
புத்தியே போதும்……
புரிந்து ஓடிடு சாதிய பிசாசே.
-கோ.லீலா.

No comments:

Post a Comment