Saturday 25 August 2018

மழையின் பிழையன்று.

புதைப்பட்ட நதியின் ஆன்மா
மேகமென உருமாறி  தடம்தேடி
ஊரெங்கும் கால் பதிக்கிறது
சீற்றமென அதை தூற்றுவதோ
ஆறு குளம் அழித்ததை
ஏரி கிணறு தூர்த்ததை
நடமால் மரம் வெட்டியதை
வெட்டிய குளம் மூடியதை
மறந்தே போவோதோ
சூடான பூமித்தாயின்
கொட்டும் கண்ணீர்
மழையென்பதை மறுப்பதா
மானுடத்தின் பிழையிதை
மழையின் பிழையென்பதா
சிந்திக்கவே தவறினால்
சட்டங்களை உதறினால்
கொள்ளாத மழையோ
கொளுத்தும் வெயிலோ
தனை புதுப்பித்துக்கொண்டு
நமை அழிக்கும் நிச்சயம்.

-கோ.லீலா.

No comments:

Post a Comment