Saturday 25 August 2018

ஞானசூன்யம்.

அறிவு தளையிலிருந்து விடுதலையாகி
  ஞானசூன்யப் பெண்ணாய்
ஒரு நாள் வாழும் வரம் வேண்டும்.
கரடேறி சுள்ளி பொறுக்கி...
நெருப்புக் கூட்டி சோறாக்கி... 
ஏரி இளங் காத்தோடு
ஆல்விழுது ஊஞ்சலாடி...
அறுத்த புல்லோடு
கன்னுக்குட்டி முகமுரசி முத்தமிட
 கோழியை வாரியணைத்து
மெள்ள பறக்கவிட.
நேரக்கெடு ஏதுமின்றி
ஓடையிலே முங்கியெழ.
ஓடும் மீனை கையிலேந்தி நீரில் விட...
குயிலுக்கு எசை கொடுக்க...
பூத்த மல்லி பாத்துநிக்க..
மூச்சுக்காத்துல பச்ச நெல்லு
மணம் நிரப்பிக்கொள்ள
அந்தி மயங்கையிலே
அள்ளிப் பூசிய வண்ணத்திலே
வானைக் கொஞ்சம் கிள்ளி வர
கண்ணோடு அள்ளி வர
நிலவோடு பேசி விட
ஞானசூன்யப் பெண்ணாய்
ஒரு நாள் வாழும் வரம் வேண்டும்.
அணை வழியும் தண்ணீர்கணக்கிடும்
மனம் மாய்ந்தே போகட்டும்
ஒருநாள் மகிழ்ந்தே இருக்கட்டும்.

-கோ.லீலா.

No comments:

Post a Comment