Tuesday 28 August 2018

முரண்

நீரில்லா நதியது ஒன்றில்
முகம் காணத் துடிக்கிறேன்
துளையில்லா குழலதில் நாளும்
இசையொன்றை இசைக்கிறேன்
மவுனத்தின் மொழிக்கொண்டு
கவிதை நான் வடிக்கிறேன்
மரமில்லா பெரும் பரப்பை
வனமென்று நினைக்கிறேன்
சுடுமணலில் கால் புதைத்து
நிலவென்று சுகிக்கிறேன்
இறையில்லா கருவறையில்
தொழுதே நான் அழுகிறேன்
மறுதலித்த நேசமொன்றை
நெஞ்சில் சூடி அலைகிறேன்
அலையாடும் கடல் மீது
நிலவின் பிம்பம் காண்கிறேன்
நீயில்லா நெஞ்சின் நினைவு
சுவைக்கின்ற வலியது
மரணத்தின் வாழ்வது.
-கோ.லீலா.
T.R அவர்களின் இது குழந்தை பாடும் தாலாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்,எப்படி இப்படியொரு சிந்தனை என பலமுறை வியந்திருக்கிறேன்,இரண்டு கவிஞர்களை கண்டு சற்று பொறாமை உண்டு அதில் ஒருவர் டி.ஆர்,இன்னொருவர் கங்கை அமரன். வெகு நாட்களாக இப்படி ஒன்று என்னுள் உதிக்கும் என தெரியவில்லை ,இன்றைய சிறு முயற்சி....கருத்து சொல்லுங்கள்.

No comments:

Post a Comment