ஆசிரியருக்கும் குருவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
ஆசிரியர் சொல்லி தருதலுடன் விடைபெறுகிறார்.குருவோ எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்வியலையும் வாழ்க்கைக்கு வேண்டியதையும் சிந்திக்க வைத்து செயல்பட வைக்கிறார்.
அந்த வகையில் சில "குரு" அடையாளமின்றி ஆசிரியர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.சிறந்த குரு எப்படியிருக்க வேண்டும்?
ஒரு சீடனின் நெகிழ்வே குருவின் மகிமையை இந்த உலகத்திற்கு பறைசாற்றுகிறது.ஒரு போதும் தன் புகழ் பரப்புவது பற்றிய இலக்கற்றவராகவே இருக்கிறார் குரு.
பள்ளியை விட்டு வெளிவந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் வகுப்பறையின் பசுமை நினைவுகளும்,ஆசிரியர்களின் முகங்களும் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்திய வண்ணமே இருக்கும்,பொதுவாக பள்ளி,கல்லூரி,நாட்களின் காதலும் அதன் வெற்றி ,தோல்விகளுமே ஆவணப்படுத்த்ப்படுகின்றன.
ஒரு ஆசிரியரின் செயல்பாடுகளும்,அவரின் சிந்தனைகளும் நம்முள் ஏற்படுத்தும் மாறாத நினைவுகள்,வாழ்வில் பெறும் ஏற்றங்களுக்கு பின்னால் மறைந்து கிடக்கும் அவர்களின் நேசமிகு இழப்புகளும்,நம்மின் உயர்வில் மகிழ்ந்து போகும் அவர்களின் தன்னலமற்ற போக்கும் ஆவணப்படுத்த்ப்பட வேண்டும்.அதன் மூலம் இன்னும் சிறந்த "குரு" கள் உருவாக அது வழியமைக்கும்.
குடும்பச் சூழல் கல்விக்கு எதிராக இருக்கும் போது அதை தகர்த்து பயில்வது என்பது ஒரு சரித்திரம்தான்.இங்கு ஒவ்வொவ்வொருக்கும் சொல்ல ஒரு சரித்திரம் இருக்கிறது.அந்த சரித்திரத்துக்கு முன்னுரை எழுதிய சிறந்த ஆசிரியர்களை பற்றிதான் பேச போகிறோம்.
ஒரு ஆசிரியர் எப்போதும் தன்னடக்கத்துடன் மட்டுமின்றி வெளிப்படையாகவும்,மாணவர் மற்றும் தன்னின் குடும்ப சூழலை பற்றியும்,தன்னை பற்றியும்,சுய விமர்சனத்துடனும் அலசும் ஆசிரியர் வரம்ல்லவா?
சலித்துப்போய வாசலில் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை புதிய தருணங்களுக்காக காத்திருக்கிறது.சில வாசிப்புகளில்,சில சந்திப்புகளில்,சில வாய்ப்புகளில் இந்த புதிய தருணங்கல் கிடைக்கின்றன்.அத்தைகைய புதிய தருணங்களை தருவதாக ஒரு ஆசிரியரின் சந்திப்பு நிகழ வேண்டும்.
ஆசிரிய-மாணவ உறவுக்கிடையே நீண்டு கிடக்கும் இடைவெளி யும் அதில் மறைந்து கிடக்கும் கசப்புகளையும் அறிந்தவர்களுக்கு தெரியும் தோள் மீடு கை போட்டு பேசும் அல்லது அன்போடு பேசும் ஆசிரியரின் சந்திப்புகளில் ஒரு மாணவரின் மனம் எப்படி துள்ளுமென்பது.
பொதுவாக ஒரு கட்டுப்படான வகுப்பறையில் சொற்பொழிவு ஆற்றவே ஆசிரியர்கள் ஆசைப்படுவார்கள்,ஆனால் அடிப்படை விசயங்களை அறியாத கிராமபுற மாணவர்களை அரவணைப்பதும்,அவர்களை மேல்தூக்கி விடுவதும்தான் நல்ல ஆசிரியரின் பணி.தன்னின் பெருமையை,தன் கருத்துக்களை ஓயாமல் பேசி தன் சாயலில் ஒரு மாணவனை உருவாக்குதன்று ஒரு ஆசிரியரின் வேலை.
சுயமாக சிந்திக்கும் வகையில் ஒரு மாணவனை உருவாக்குவதில் தான் ஒரு ஆசிரியரின் ஆளுமை இருக்கிறது. மேதமையை மட்டும் கொண்டாடமால், எளிய மனங்களின் தேவைகளையும், இயல்புகளையும்,ஆற்றலையும் கொண்டாடுவதிலும்தான் ஒரு ஆசிரியர் தன்னை தன் ஆளுமையை வெளிப்படுத்துகிறார்.
நெருக்கத்தின் ரகசியம் மிகவும் கனமானது,சில அன்பை சிலரால் புரிந்து கொள்ளமுடிவதில்லை,காலம் கடந்து திரும்பி பார்க்கையில் அத்தகைய அன்பு கரி வடிவத்திலிருந்து வைரமாக ஜொலிப்பது புரியும்.அத்தகைய அன்பை தரகூடியவராக ஒரு ஆசிரியர் இருத்தல் வேண்டும்.
மாணவர்களோடு நெருக்கமாக இருத்தல் மட்டுமின்றி வகுப்பறையிலும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.ஆசிரியர்கள் போகிற போக்கில் சொல்லும் சில சொற்களும்,செயல்களும் ஒரு மாணவனின் வாழ்க்கையை மாற்றிவிடும் வல்லமை கொண்டது.
ஆசிரியர் என்பவர்,மானவர்களுக்கான ஆய்வரங்கங்களையும், பயிற்சி பட்டறைகளையும் அமைத்து தர வேண்டும்.அவர்களுள் புதைந்துள்ள ஆற்றலை,திறமையை வெளிகொணர வேண்டும். மாண்வரிடம் சிறு ஆற்றலை கண்டாலும் அதை கொண்டாட வேண்டும்.மாணவர்களின் ஆற்றலை படைப்பாற்றல் ஆக்க வேண்டியது ஒரு ஆசிரியரின் சீரிய பணியாகும்.
சுய சாயலுடன் ஒரு மாணவ சமூதாயத்தை உருவாக்குவதுதான் ஒரு ஆசிரியரின் ஆளுமை,ஆசிரியரும் ,மாணவரும் இரு வேறு கலாச்சரமாக, இருந்தாலும் அதற்கிடையேயான மனந்திறந்த உரையாடலே ஒரு மாணவனை வழி நடத்தும்.
வகுப்பறையை கடந்தும் கற்பித்தல் நீளவேண்டும்,புத்தகம் கடந்து இயற்கையையும்,வாழ்வியலையும் போதிக்க வேண்டும்.ஒவ்வொவ்வொரு நாளும் ந்ம்மை புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை போதிக்க வேண்டும்.பிடி ந்ழுவி தவிக்கும் நேரங்களில் எல்லாம் ஆசிரியரை அல்லது அவரது ஆலோசனைகளையும் தேட வேண்டும் இப்படியாக ஒரு ஆசிரியர் இருக்கும்போது அவர் "குரு" வாகி விடுகிறார்.
மலையோர சாரலாக,அருவியின் அருமையாக ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.
பள்ளி படிக்கும்போதும்,கல்லூரி நாட்களிலும் கூட அதிகமாக யாருடனும் பேசாத நான் மேடையில் மட்டும் பேச( Even Extempore) என்னை தயார் செய்தவர் எனது எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் திருமதி B.சரோஜா அவர்களை இப்போது நினைவு கூருகிறேன்.
மாணவர்களுக்கான குறிப்பு:எல்லா பிரபஞ்சவெளியிலும் உள்ள சத்தத்தை,ஓர் இசைவாணன் உங்களுக்கு பாடிக் காட்ட முடியும்.ஆனால் அதை கேட்கும் செவியையும்,அதன் எதிரொலியையும் உங்களுக்கு கொடுக்க அவனால் முடியாது.
"ஒருவரின் தரிசனம் மற்றவர்க்குச் சிறகு விரிக்காது"
நன்றி:பேராசிரியர் ச.மாடசாமி அய்யா.
அன்புடன் லீலா.

No comments:
Post a Comment