தாய் நாடு………………………
தாய் நாடு எண்ணும்போதே
மனசெல்லாம் குதூகலமும்,இனிமையும் நிரம்பி வழிகிறது,என் தேசம் என் உரிமையென மனதின் முடுக்கெல்லாம்
கொண்டாடும்.நிற்க.இத்தனை உரிமையை,உணர்வுகளை,நினைவுகளை வழங்கும் நாட்டிற்கு என்ன செய்கிறோம்
என்ற சிந்தனை ஒரு புறமிருக்க.
தன் குடும்பம்
பேண பணம் சம்பாதிக்க அயல்நாடு செல்வோர்
பலர்.இவர்களை தாயன்போடு வழியனுப்பி வைக்கிறது
எனது தேசம்.உனது அறிவு,உனது திறமை வேறு எங்கோ பயன்பட போகிறது,அது என் தேசத்தின் புகழ்
பாடட்டும் என்றெண்ணி வழியனுப்பி வைக்கிறது,பல நாடுகளில் உள்ள தொழிற் நுட்பத்தையும்,நல்ல
பழக்க வழக்கங்களையும் எனது தேசத்தில் இறக்குமதி செய்வாய் என எண்ணி வழியனுப்புகிறது.
அந்நிய நாட்டினர்
இன்றளவும் இந்திய தேசத்தின் அமைதியையும், சகிப்புத்தன்மையையும் பாரட்டி மகிழ்கிறார்கள்,திருக்குறளை
போற்றி பாதுக்காக்கின்றனர்,அவர்கள் இந்தியா வரும்போது,இந்திய கலைகளையும், கலாச்சாரங்களையும்
ரசித்து போற்றுகின்றனர்.
ஆனால்,நம் நாட்டிலிருந்து
பிழைப்புக்காக அயல் நாடு சென்று பத்து அல்லது பதினைந்து வருடங்கள் மட்டுமே ஆகி,வருடம்
ஒருமுறை வந்து செல்லும் Non Resident of India (NRI) என்று சொல்லிகொள்கிற இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள்
நம் நாட்டையும்,நாட்டு மக்களையும் எப்படியெல்லாம் தரம் தாழ்த்தி பேசுகிறார்கள் என்பது
வேதனையை தருவோதோடு,
இவர்களின் வேர் இங்கு இருக்க,கிளைகளை மட்டுமே அயல்நாட்டில் பரப்பி
உள்ளார்கள்,தேவைப்படும்போது இவர்களது கிளை வெட்டப்படும் என்ற நிலையில் வேர் கொண்ட இடத்தை
பழிப்பது சற்று ஆச்சரியமாகவும் உள்ளது.
எனது தேச மக்களின்
வரிப்பணத்தில் படித்துவிட்டு,வெளிநாடு செல்லும் அன்பர்களே,நண்பர்களே உங்கள் மனதை நோக
செய்வது எங்கள் எண்ணமில்லை.வெளிநாடு சென்று வருவதாலாயே இங்குள்ளவர்கள் எல்லாம் அறிவில்
குறைந்தவர்கள் என்ற எண்ணம் வேண்டாம்,நீங்கள் கூறுவது எங்களுக்கும் தெரியும்,எங்களது,மூளையும்,திறமையும்,திறனும்
அயல்நாடுகளில் அதிகமாக மதிக்கப்படும் அதற்கான விலையும் தரப்படுமென்றும்,எனினும் நாங்கள்
எங்கள் தேசத்திற்காக,எங்கள் தேச மக்களுக்காக பணிப்புரிகிறோம் என்பதிலே பெருமிதமும்,
பேரானந்தமும்,உவகையும் கொள்கிறோம்.ஒரு நாளும் அந்த ஆனந்தம் உங்களுக்கு கிடைக்காது.
இந்த உலகத்திற்கு,
கல்வியையும்,கலவியையும்,கணிதத்தையும், கற்பையும், கலாச்சாரத்தையும்,பண்பாட்டையும்,ஆத்திகத்தையும்,
மருத்துவத்தையும்,கலைகளையும்,உணவுகளையும்
அறிமுகப்படுத்தியது என் தேசம்.
வயது காலத்தில் குடும்பத்திற்கு அனைத்தையும் ஈந்த தகப்பன்
நலிவுற்ற காலத்தில் சோர்ந்து கிடப்பது போல், சற்றே சோர்ந்து இருக்கிறது.ஆனால் நலிவுற்ற
தகப்பனை பெருமைப்படுத்தும் பிள்ளைகளென,இருக்க வேண்டியவர்கள் இந்நாட்டின் பிள்ளைகள் நாம்தான்.பல்வேறு மதம்,இனம்,பிரிவு என எத்தனையோ உள்ளடக்கிய என் தேசம்,இந்த உலகத்தாரின் பார்வையில் ஓர்
ஆச்சரியம்,அதிசயம்.
என் தேசத்தில்
சில பல குறைகள் உள்ளது அதை சரி செய்யவேண்டியதுதான் நம் கடமையே தவிர எள்ளி நகையாடுவது
அன்று,நீங்கள் சொல்கிறீர்கள் NRI பணத்தை இந்தியாவில்
நாங்கள் முதலீடு செய்கிறோமென்று,உங்களின் வளம் அது என் தேசத்தின் வளம்.உங்களின் வளம்
எது? உங்களின் மூளை,திறமை,திறன். வளத்தை கொடுத்துவிட்டு பொருளை கொண்டு வந்திருக்கிறேன் என பெருமை கொள்வது புத்திசாலித்தனமா?
சரி! எங்கு முதலீடு
செய்கிறீர்கள்,எங்கள் தேச விவசாயிகளிடம் முதலீடு செய்கிறீர்களா?இல்லை ஏழை மாணவர்களின்
படிப்புக்காக முதலீடு செய்கிறீர்களா? இல்லை
இந்தியா உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமென தொழில்நுட்பத்திலே முதலீடு செய்கிறீர்களா?
உங்களுக்கென வீடு
கட்டி கொள்வதும்,கார் வாங்கி கொள்வதும்,வங்கிகளில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும்
திட்டத்தில் போடுவதும் முதலீடு என்றால்,அதை எங்கள் கிராமத்து ஆத்தா செய்கிறார்.
ஒரு
நாள் விவசாயிகளுடன் கழித்திருப்பீர்களா? பெரிய உணவகங்களில் உண்ணும் போதும்,வீணாக்கும்
போதும் இங்கு வெறும் வயிற்றுடன் படுக்கைக்குபோகும் இந்தியனைப்பற்றி யோசித்து இருப்பீர்களா?
Resort களில் காலம் கழிக்கும்போது வீடுகளற்று கிடக்கும் என் சக மனிதனை நினைத்தது உண்டா?
கண்ணீர் சிந்தியது உண்டா? இப்படி எதையும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்பணிக்காத
உங்களுக்கு என் தேசத்தை பற்றியும்,என் தேச மக்களை குறித்தும் அவதூறு பேச யார் அதிகாரமும்,உரிமையும்
கொடுத்தது?
அயல் நாட்டிலே
சின்ன இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் பதறி போகின்ற என் தேசமும்,தேச மக்களும் உயர்ந்தவர்கள்.என்
தேச மக்கள் அங்கே இருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் பதறவில்லை, தன் நாட்டில் வேர்
பரப்பி அதை பாதுக்காக்கும் அவர்களின் தேசப்பற்றை கண்டு அவர்களை வணங்குகிறோம்.
என்னை எது பேசினாலும்,தவறென்றால்
சரி செய்து கொள்வேன்,என் மீது தவறில்லையென்றாலும் நீங்கள் பேசும் அவதூறுகளை மன்னிக்கவும்,மறக்கவும்
செய்வேன்.ஆனால் என் தேசத்தையும்,என் தேச மக்களையும் தரம் தாழ்த்தி பேசினால் ஒரு நாளும்
மன்னிக்க முடியாது…………
NRI நண்பர்களே
உங்களை பெரிதும் மதிக்கிறோம்,அன்பு காட்டுகிறோம், உங்களின் கருத்துகளை மதிக்கிறோம்,அதையே
நம் தேசத்திற்கு திருப்பி கொடுங்கள் என கேட்கிறோம்,ஆரோக்கியமான காரசாரமான விவதாத்திற்கு
பின்னும் நட்புடன் இருக்கும் பண்பை என் தேசம் போதித்துள்ளது.
“நாட்டை காப்பதும் தாயை காப்பதும் ஒன்றுதான்”.
அன்புடன்-லீலா.
No comments:
Post a Comment