சுற்றுசூழல் சீர்கேடுகள்
என்பது தொழிற்சாலைகள்,பொருள் நுகர்வு கலாச்சாரத்தால் ஏற்படுவதைவிட மக்கள் தொகை பெருக்கத்தாலும்,
அவர்களது பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது என்பதை யாரும்
பொருடப்படுத்துவதில்லை.
காடுகள் மறைவதற்கு
காரணம் மனிதர்களின் நடமாட்டமும்,வனநில உரிமை சட்டத்தின் பெயரில் காடுகளில் எங்கும் வழிப்பாட்டுத் தலங்கள்,கல்வி
நிறுவனங்கள் அமைந்திருப்பதும்தான்.
தற்போது அறிவியல் என்பது காசு,கல்வி,பொழுது போக்கு
அடிப்படைக்கானதே தவிர வாழ்வியல் அடிப்படைக்கானதல்ல என்பதை நமது அன்றாட வாழ்க்கை காட்டுகிறது.உயிரினங்கள்
அனைத்தும் எப்படி மனித வாழ்வின் உயிர்நாடியான காடுகள் சுற்றுசூழலுடன் எப்படி பிணைந்திருக்கிறது
என்பதை அறிவியலாக இப்போதேனும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இத்தகைய காடுகளின்
கட்டமைப்பாளர்(ARCHITECT/CIVIL Engr) யானைகள்தான்.வளர்ந்த யானைகளின் உணவு சுமார்
250 கிலோ உணவும் 150 லிட்டர் தண்ணீரும் ஆகும்.எனினும் உண்ட உணவில் சுமார் 50% சதவீத
உணவை மட்டும்தான் ஜீரணிக்கிறது,மற்றவை கழிவுகளுடன் வெளியேறுகிறது.இந்த கழிவுகளில் யானைகள்
உண்ட பெரும் மரப்பட்டைகள் போன்ற உணவு பொருட்கள் மென்மையாகி வெளிவருகிறது.இதை உண்டே
வண்ணத்துபூச்சிகளும்,பல்வேறு வண்டுகளும் வாழ்கிறது.பெரும் மரப்பட்டைகளை உரிக்கவும்
அதை ஜீரணிக்கவும் முடியாத சின்னஞ்சிறு வண்டினங்களுக்கு உணவை அளிக்க இயற்கை படைத்த மாபெரும்
உயிரினம்தான் யானை.வண்ணத்துப்பூச்சிகள் இருந்தால் தானே மகரந்த சேர்க்கை மற்றும் அயற்மகரந்த
சேர்க்கை நடந்து மரங்களும்,செடி,கொடிகளும் பல்கி பெருகி வனமாகும்.
இப்படி ஒரு யானை,
வனம் உருவாவதற்கு காரணமாயிருக்கிறது. இத்தகைய அறிவியலை அறியாத மானுடமாக வளர்ந்து நிற்கிறோம்.ஒரு
யானையின் அழிவு ஒரு வனத்தை அழித்துவிடுகிறது.மனிதனின் தலையீட்டால் 10 ஹெக்டர் பரப்பளவுள்ள
வனம் அழியும்போது 1500 வகை பூக்கும் செடிகளும்,கொடிகளும்,700 வகை மரங்களும்,60 வகை
நீர்நில வாழ்விகளும் அழிந்து போகின்றன என்றும்,ஒரு மழைகாட்டு மரம் 400 வகைப் பூச்சிகளுக்கு
வாழிடமாக இருக்கிறது என்றும் அய்.நா வின் சுற்றுசூழல் ஒன்று கூறுகிறது.
எல்லா உயிரினங்களும்
இன்புற்றிருக்க வேண்டும் என்பது கூட உயிரினப் பாதுகாப்பான அறிவியல் குரலாகவோ,அழகியல்
பார்வையாகவோ இன்றி,பாவம்,புண்ணியம்,இறைச்சியுண்ணாமை,தீண்டாமை சார்ந்தெழுந்த கருத்தாகவே,இன்று
உயிரினங்கள் படும் அவலநிலையால் அறிய முடிகிறது.
பொல்லாத பொருளாதார
உலகம் அச்சடித்த காகிதத்தை சோறுக்கும்,நீருக்கும் ஈடாக்கிவிட்டது,இதனால் உயிரினங்களின்
தேவை இரண்டாம் பட்சமாகிவிட்டது.யானையின் வலசை பாதை (Elephant corridor) அதை போன்றே
பல்வேறு பறவைகளின் வழித்தடங்களும் இன்று,ரயில் தடங்களாகவும்,உயர்ந்த கட்டடங்களாகவும்,மின்
மற்றும் அலைபேசி கோபுரங்களாகவும் வழிமறித்து நிற்கின்றன,உயிரினங்களின் வாழ்விடத்தையும்,வழிதடங்களையும்
ஆக்ரமித்து உயிரை பலி வாங்கி விடுகிறது இன்றைய முன்னேற்றம்.யானைகளை கும்கி யானையாக
மாற்றுவது,வழிப்பாட்டு தலங்களில் நிற்க வைத்து பிச்சையெடுக்க வைப்பது போன்ற செயல்களை
காணும் போதெல்லாம், கம்பீரம் தொலைத்த யானை கண்ணீரைதான் வரவழைக்கிறது.
இயற்கை அதன் போக்கில்
ஒவ்வொன்றையும் படைத்துள்ளது,அதற்கான வளர்ச்சி காலம்,குணாதிசயம் என அனைத்தும் ஒரு காரணத்திற்காக
அமைக்கப்பட்டுள்ளது,இதை அறிந்து நடந்து கொள்ள வேண்டியது மனித இனத்தின் கடமை,வேகமாக
வளரும் எதுவும் வேகமாக அழியும்,நிதானமாக வளருவது நீடித்து நிற்கும் என்பது இயற்கை.
வாழ்க்கையென்பதும்
வளர்ச்சியென்பதும் முடிவை நோக்கியதே.
“அவரவர் நாட்டிலுள்ளதையே
அவரவர் போற்றி,புகழ்ந்து காக்கவேண்டும்.அதுவே உண்மையான Conservation ஆகும்”
No comments:
Post a Comment