புத்தகம் என்றொரு பொக்கிஷ தோழமை...............
புத்தகம் மாபெரும் தோழமை,நிலவும்,வான் மழையும்,இசையும்,மலரும்,
குழந்தையின் ஸ்பரிசமும்,சுதந்திரமும்,தனிமையும் தரும் மகிழ்வெல்லாம் பூரணமாகும்,புத்தகமொன்று உடனிருந்தால்.மனிதர்களின் உறவை விட புத்த்கம் பலவகையில் மேன்மையானதாக பல நேரங்களில் இருக்கிறது.
புத்தகம் ஒரு பொழுது போக்கல்ல,அது ஒரு ஆன்மாவின் தேடல்,அறிவின் தேடல்,ஒரு ஆக்கத்தின் வெளிப்பாடு.
கைத்தழுவி நிற்கும் புத்தமொன்றே கைகளின் ஆபரணம்,மனங்களின் தோரணம்,ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு வேறொரு புத்தகத்தை எடுக்கும் போது அப்புத்தகம் நம்மிடம் கோபித்துக்கொள்வதில்லை.எந்த புத்த்கமும் தோழமையுடன் இருப்பதற்கு நம்மின் சுயம் விசாரிப்பதில்லை,
பொய்யுரைப்பதில்லை,மாறாக,நேரம் மட்டும் கொடுத்தால் போதும்,அறிவை பெருக்கி,ஆன்மாவை அமைதியாக்கி,தனிமை போக்கி, மகிழ்வை கொடுத்து எதையும் எதிர்பார்க்காத ஒரே தோழமை புத்தகம்தானே.
தினம் படி,காலை படி,மாலைபடி,நூலை படி என்ற சொற்றொடர் எத்தனை பொருள் பொதிந்தது.மனதிற்கு பேரின்பத்தை அள்ளி தரும் ஒரே இடம் நூலகம்தான்.இணைய வசதிகள் வந்தாலும்,புத்தகமொன்றை கடைக்கு வாங்க செல்வதே பெரும் மகிழ்வு,அங்கே பல புத்தகங்களை பார்த்தவுடன் வரும் பரவசம்,அடுத்து வாங்க வேண்டிய புத்தகங்களை தேர்வு செய்வது எத்தனை சுவராஸ்சியமான விசயம்,ஒவ்வொவ்வொரு முறையும் கையிலிருக்கும் பணயிருப்புக்கு மேலே புத்தகங்களை வாங்குவது வழக்கமாகிவிடுகிறது,சில நேரங்களில் தவிர்க்க முடியமால் சில புத்தகங்களை வைத்துவிட்டு,திருவிழா கடையில் பொம்மையை திரும்பி பார்த்தவாறே வரும் குழந்தை போல மனம் முழுவதும் அங்கேயே சுழன்று கொண்டிருக்கும்.
தீபாவளி புத்தாடையை தொட்டு பார்க்கும் குழந்தை போல் அமைதியான இடம் தேடி அமர்ந்து,புத்தகம் பிரிப்பது பேரின்பம்.,படிக்க படிக்க அவரவர் ரசனைகேற்ப மனதில் விரியும் காட்சிகள் கற்பனை திறனை மேம்படுத்துவதோடு ,தான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் கற்பனையும் நினைவாற்றலும் அதிகரிக்கின்றது.
படித்தல் என்பது ஒரு வகை தியானம், புறவுலகை மறந்து,தன்னை மறந்து லயிக்கின்ற பேரானந்தம் படிப்பதில்தான் கிடைக்கும்.இந்த பேரானந்தம் கிடைக்கப்பெற்றவர்களில் நானும் ஒரு நபர் என்பதில் ஆனந்தம்.
புத்தகம் கையிலிருக்கும்போது ஒரு வசதியுண்டு,எங்கு வேண்டுமானலும் கையோடு எடுத்து செல்லலாம்,வயல்களில்,பயணங்களில்,வான் பார்த்துக்கொண்டு என பல நிலைகளில் படிப்பது ஒவ்வொவ்வொரு நிலை தியானம்,ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து படிப்பது போன்றதொரு பேரானந்தம் ஏதொன்றுமில்லை,படிப்பதும்,கூடவே தண்ணீரின் சலசலப்பு இசையமைக்க இயற்கையை ரசித்தப்படி படிப்பது கிடைப்பது வரம்.
பரிசாக புத்தகம் கொடுப்பதும்,பெறுவதும் அழியாத செல்வத்தை கொடுப்பதற்கும்,பெறுவதற்கும் சமம் ஆகும்,எவ்வளவு விலையானலும் பரிசாக கொடுக்க இசையும் மனம்,இரவல் கொடுக்க மறுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இரவல் கொடுத்த புத்தகம் கொடுத்த வடிவில் திரும்பி வருவதில்லை,குழந்தையை பாதுக்காப்பது போல் பாதுக்காக்கப்படும் புத்தகத்தை யாரிடமும் கொடுக்க மனம் வருவதில்லை,புத்தகத்தை மடக்கி பிடித்து படிப்பது,முனையை மடிப்பது,புத்தகத்தில் பேனாவால் கிறுக்குவது போன்ற செயல்கள் அவ்வளவு பிடித்தமானதை இருப்பதில்லை,இது போல் ஒவ்வொவ்வொருவருக்கும் ஒரு பழக்கம்,அதனால் இரவல் கொடுக்க பிடிப்பதில்லை,மீறி கொடுத்தாலும் திரும்பாத புத்தகம் சில நேரங்களில் நட்பை இழக்க வைப்பதும் உண்டு,மாறாக புத்தகங்களால் சில நட்பு கிடைப்பதும்,நீடிப்பதும் உண்டு.
யாம் பெற்ற சுகத்தை மற்றவர்களும் அடைய வேண்டும் என்பது தான் பரிசாக மாறி அவர்கள் கையில் புத்தகமாக வீற்றிருக்கிறது.
நல்ல புத்தகமா? என்பதை எப்படி அறிவது? புத்தகத்தை புரட்டினால் கீழே வைக்க முடியமால் படிக்க வைக்க வேண்டும்,மனதை,சிந்தனையை புரட்டி போட வேண்டும்,புத்தக கருவின் சார்பான பொருட்களை,காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் அப்புத்தக வரிகள் கண்முன்னே விரிய வேண்டும்.......
அப்படியான புத்தகம் கிடைக்கப்பெற்று விட்டால் வேறென்ன வேண்டும்.பசி,தூக்கம் மறந்து படிப்பதுதான் வேலையாகிவிடும்.பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நாளில் மருத்துவரிடம்,அண்ணா அவர்கள் நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் இன்னும் சில பக்கங்கள் மீதமிருக்கிறது ,அதனால் அறுவை சிகிச்சையை தள்ளி வையுங்கள் என கூறியிருக்கிறார்.
இப்படி பல புத்தக பிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.நேரு,டாக்டர் இராதகிருஷ்ணன்,சாக்ராடீஸ் என பெரிய பட்டியலே போடலாம்.
புத்தகங்கள்,காண்பவற்றையெல்லாம் பகுத்தறியும் திறனை தருகிறது,சோகத்தில் சோர்ந்திடமால் காத்திடும் பெருந்தோழமை புத்தகம்,வெற்றியை கொடுத்து அமைதியாய் இருக்கும் தோழமை,கைத்தட்டல் பெற்று தந்துவிட்டு பெருந்தன்மையாய் வீட்டினுள் வீற்றிருக்கும் தோழமை.எந்த சூழ்நிலையிலும் தயார் நிலையில் நம்மை வைத்திருக்கும் தோழமை...........இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சந்ததியினருக்கு அறிவினை கடத்திடும் ஜீன் போன்றே பணியாற்றிடும் தோழமை புத்தகம்.
வீட்டை அழகுப்படுத்த அழகு பொருட்கள் வாங்கவும்,வைக்கவும் கவனம் செலுத்தும் பலர்,புத்தகங்களையும் அழகு பொருட்கள் போல பாவிக்கும் சிலரை பார்த்திருக்கிறேன்,புது வீடு கட்டியிருக்கிறேன்,அதில் அலங்காரமாக வைக்க சில புத்தக பெயர்களை சொல்லேன்(list) என கேட்பவர்களை பார்க்க சற்று பரிதாபமாகதான் இருக்கிறது.ஆனால் அவர்களோ,புத்தக புழுக்களென் ஏளனமிடுவதும் நடைமுறையில் உள்ளது.
எனினும்,புத்தகங்களை வாங்குவது மட்டும் போதாது,படிக்க வேண்டும்,படித்தால் மட்டும் போதாது,ஆழ்ந்து படிக்க வேண்டும்,உள்வாங்க வேண்டும்,படித்தல் என்பது ஒரு அற்புதமான கலை,மனம் ஒன்றி படித்தல் நினைவாற்றலை,ஒருமுகத்தன்மையை விரிவாக்கும்.
புத்தகங்களை வாசியுங்கள்,நேசியுங்கள்,சுவாசியுங்கள்.
பூ மணம் போல் புத்தக மணமும் அலாதியானது....
காதலியை பற்றி எழுதும் காதலனைப்போல் புத்தகத்தை பற்றி எழுதிக்கொண்டேயிருக்கலாம்......
அன்புடன் லீலா.
தொடரும்........

No comments:
Post a Comment