Happy Arbor Day.
Arbor என்றால் லத்தீனில் மரம் என்று பொருள்.
ஏப்ரல் மாதத்தின் கடைசி வெள்ளி கிழமை Arbor தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் ஒவ்வொவ்வொரு தனி மனிதனும்,குழுவும் மரங்களை போற்றவும்,மரக்கன்றுகளை நடவும்,அதனை பாதுக்காக்கவும்,மரங்களை பற்றி அக்கறை கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சர்வதேச ஆர்பர் தினத்தை செடிகள் நட்டும்,சமூக தளங்களில் மரங்கள் குறித்து விழிப்புணர்வு கொடுத்தும் இத்தினத்தை அனுசரிக்கலாம்.
1872,ஏப்ரல் 10 அன்று பத்திரிக்கையாளரும்,செய்தியாளருமான .J.Sterling Morton. என்பவர் இத்தினத்தை state of Nebraska காவில் தோற்றுவித்தார்.முதல் ஆர்பர் தினத்தன்று 1million மரங்கள் நடப்பட்டுள்ளது.
மரம் ஒரு புனிதம்.ஒன்று உருவாகும் போது,படைக்கப்படும்போதும் வரும் ஆனந்தம்,வார்த்தைகளில் அடங்கி விடாது,அழுத்தப்பட்ட விதைகள், பூமியிலிருந்து முட்டி வெளிவரும்போது பேரழகு,அதை காண்பதில் பெரும் மகிழ்வு இயல்பானது.இயற்கையோடு இயைந்து இருத்தலினும் பேரின்பம் வேறு ஏது?
மரம் எத்தனை பெருங்கருணையை உள்ளடக்கியுள்ளது,மலர்களின் வண்ணங்களும்,சுவாசத்திற்கு சுகந்தம் சேர்க்கும் மணங்களும்,சுவாசத்திற்கான ஆக்ஸிஜனை கொடுத்து,கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொள்ளும் இரு பெரும் தொழிற்சாலைகளை தன்னுள்ளே கொண்டுள்ள இயற்கையின் அதிசயம்.பறவைகள் சுகபிரசவம் கொள்ளும் தாய்வீடு,நிழலும்,கைவீசும் சாமரங்களாய் இலையுடன் கூடிய கிளைகளும், சுகந்தம் பரப்பும் தூயகாற்று,மழையை பன்னீரென தன்னை தாங்கி நிற்கும் பூமியில் தூவி மகிழும் நன்றி,தூளி கட்ட,வீடு கட்ட,பண்ணிசைக்க, என எண்ணிலடாங்கா பயன்களை இந்த மண்ணிற்கும்,மனிதத்திற்கும் வழங்கிடும் வள்ளல்..........
மனிதன் எத்தனை பாடுப்பட்டாலும்,ஒரு வனத்தை அதன் இயல்புகளுடன் உருவாக்கிட முடியாது,வனத்துடன் வாழ்பவர்க்கும்,அதன் மீது தீராத காதல் கொண்டிருப்பவர்களுக்கும் மட்டுமே புரியும் அந்த உணர்வு......
இன்று,பல்வேறு கட்டுமான பணிகளுக்காக மரங்களை அகற்றுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நாம் அதனை ஈடுகட்ட செடி நடுகிறோம் என சொல்வது,சரியான மாற்றாக தோன்றவில்லை.
ஒரு மரத்திற்கு ஈடாய் நடப்படும் செடி,மரமாக எத்தனை வருடம் ஆகும்,மரங்களிலிருந்து இடம் பெயர்ந்த பறவைகளின் நிலையென்ன,ஒரு Ecological cycle முழுவதுமாக பாதிக்கப்படும் நிலையை எப்படி சரி செய்வது? செடி நடப்பட்டாலும் அது முறையாக பரமாரிக்கப்படுவதை யார் கண்காணிப்பது?
ஒரு காகம் கழிவுகளிலே செய்து விடும் வேலையை,சாலைகளில் கூட்டம் போட்டு,ஆயிர ஆயிரம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பின் மனிதன் செய்கிறான் செடி நடு விழாவை.!!!
மரங்களை வேருடன் இடம் பெயர்த்து நடுவதும்,கொஞ்சம் அக்கறை காட்டினால் மூன்று மாதங்களில் புது இடத்தில் பழைய மரம் காணலாம்,ஒரு சில இழப்புகள் இருப்பினும் மொத்தமாய் மரத்தை இழந்துவிடும் அபாயம் தவிர்க்கப்படும்.
இந்த யோசனையும்,அதற்கான உபகரணங்கள் இருந்தும்,மரங்களை வெட்ட காட்டப்படும் ஆர்வம் இதற்கு காட்டப்படுவதில்லை என்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.......
மரங்கள் வெறும் பயன் தரும் உயிர் மட்டுமன்று,நம் உணர்வுகளோடு, சிறுபிராய நினைவுகளோடு நீண்ட உறவு கொண்டது,ஒரு மரத்தோடு மனிதனின் வாழ்வியலும், நினைவுகளும்,கலாச்சரமும்,பல தீர்ப்புகளும்,பல தீர்வுகளும் வேரோடு புதைந்து கிடப்பதை மறுக்க இயலாது.
உணர்வுபூர்வமாகவும்,அறிவியல் ரீதியாகவும் மரங்கள் மனதின் வளத்தையும்,மண்ணின் வளத்தையும் காக்ககூடியவை.
துளசி செடி,மூங்கில்,அரச மரம்,ஆலமரம்,வேம்பு ஆகியவை ஆக்ஸிஜனை அதிகமாக தரக்கூடியவை என்பது கூடுதல் தகவல்.
இத்தனை சிறிய விதையிலிருந்து இத்தனை பெரிய விருட்சமா? என வியப்பில் ஆழ்த்தும் இயற்கையின் அதிசயம்.பூவிற்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் கண்டு அதிசயிக்கும் கவிஞன் போல் விதைக்குள் ஒளிந்திருக்கும் வனம் கண்டு அதிசயித்து போகிறேன். மரம் இயற்கையின் கொடை,வாழ்நாள் முழுதும் செய்யும் கொடை நினைத்து வேருக்கு நீர் கொடுப்போம்,பூமிக்கு பச்சை கம்பளம் போர்த்துவோம்.........
-அன்புடன்
லீலா.