தூணக்கடவு அணை,பரம்பிக்குளம் செல்லும் வழியிலிருக்கும் பார்வை முனையிலிருந்து.பச்சை பசேல் என கண்ணையும், கருத்தையும் கவரும் பரம்பிக்குளமும்,அதன் காடும் தன் விலாசமிழந்து காட்சியளிக்கிறது.ஆரம்பக் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் காட்டினை அழித்து தேக்கு மரங்களை நட்டு காடென நம்ப வைத்தனர்.இப்போதோ மழையற்று போய்விட்டது.
பூமிக்குக் காய்ச்சல் வந்துவிட்டது,இது சாதாரண காய்ச்சல் அல்ல.காலாகலாத்துக்கும் உலகைப் பாதிக்கப் போகிற காய்ச்சல்.காய்ச்சல் என்பது நலமின்மையின் அறிகுறி.
நீர்நிலைகளிலும்,கடற்பரப்பிலும் புவியின் மேற்பரப்பில் உள்ள நீர் அமைதியாக எப்பொழுதும் இருப்பதில்லை.அவை தம்மை தாமே மறு சுழற்சிக்கு உட்படுத்திக்கொள்கின்றன்.
கடற்பரப்பில் உள்ள நீரானது சுமார் 2500 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்.
நிலத்தடி நீரானது சுமார் 1400 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்.
புவியில் பனிப்பாறைகளாகப் படிந்திருக்கும் நன்னீரானது சுமார் 10000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்.
பனித்துருவங்களில் பனிப்படிவங்களாகப் படிந்திருக்கும் நன்னீரானது சுமார் 9700 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்.
பனிமலைகளில் உறைந்திருக்கும் நன்னீரானது சுமார் 1600 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்.
நன்னீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில்,குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீரானது சுமார் 17ஆண்டுகளுக்கு ஒருமுறையும்.
வளிமண்டலத்திலுள்ள நீரானது 8 நாட்களுக்கு ஒருமுறையும்.
தம்மை தாமே மறுசுழற்சிக்கு உட்படுத்திக் கொள்வதால்தான் மழை பொழிகின்றது.இந்த மறுசுழற்சியில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையே காலநிலை மாறுதல் என்கிறோம்.
சிலநேரங்களில் பொறியியல் வல்லமையென்றும் மனிதக் குலத்தின் மாபெரும் வெற்றியென்றும் கருதிக் கொள்ளும் ஆறுகளை திசை மாற்றி ஓடச் செய்தல்,இணைத்தல்,அதன் ஓட்டப்பாதையை தடுத்து நிறுத்துதல் போன்றவை,நீர் மறுசுழற்சிக்கு அவ்விடம் வரும் போது வெற்றிடமாக இருப்பின் பருவ மழை காலம் மாறியும்,அளவுகளில் மாற்றமுடனும் பெய்யக்கூடும்.
சீனாவில் THREE GORGES அணையை கட்டும் முன் அந்த இடத்தில் அதிக மழையளவு வரும் என்பதால் மட்டுமே அங்கு கட்டப்பட்டது. ஆனால் கட்டிமுடித்தப்பின் எதிர்பார்த்த எதிர்பார்த்த மழையளவு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக ACUTE RAINFALL பெய்ததும் கவனிக்க வேண்டிய ஒன்று.
-கோ.லீலா.
No comments:
Post a Comment