மழையில் ...
விழித்துக்கொள்கிறது காடு.
கூழாங்கல்லின் உதடு வருடி
சதா சலசலக்கும் நீரோடைகள்
உறங்கவிடுவதில்லை என்னை
நீர்வழி ரகசியம் வேருக்கு மட்டும்...
நீரும் வேரும் பூமிக்கடியில்
கூடிக் களிக்க
வான் நோக்கி விரிகிறது
பச்சை மரக்கவிகை…
மரத்தைத் தழுவிக்கொள்கிறேன்
பறவைகளின் கீச்சொலி நிரம்பி வழிய
கொடிகள் என்மேல் படர்கின்றன
மிரண்ட மான்களோடும்,
மிளிரும் மயில்களோடும்
காடுகளை மேய்ந்து திரும்புகையில்
யாரும் காணாத மலராக விரிகிறேன்
கானுயிர்களின் கூட்டுப்
பச்சையமாக மணக்கிறேன்..
கூழாங்கல்லின் உதடு வருடி
சதா சலசலக்கும் நீரோடைகள்
உறங்கவிடுவதில்லை என்னை
நீர்வழி ரகசியம் வேருக்கு மட்டும்...
நீரும் வேரும் பூமிக்கடியில்
கூடிக் களிக்க
வான் நோக்கி விரிகிறது
பச்சை மரக்கவிகை…
மரத்தைத் தழுவிக்கொள்கிறேன்
பறவைகளின் கீச்சொலி நிரம்பி வழிய
கொடிகள் என்மேல் படர்கின்றன
மிரண்ட மான்களோடும்,
மிளிரும் மயில்களோடும்
காடுகளை மேய்ந்து திரும்புகையில்
யாரும் காணாத மலராக விரிகிறேன்
கானுயிர்களின் கூட்டுப்
பச்சையமாக மணக்கிறேன்..
-கோ.லீலா.
No comments:
Post a Comment