Saturday, 17 March 2018

பேனா.....

குனிந்தே கிடக்கும்
பேனாக்களுக்கு நிமிர்ந்து நின்ற
சிலைகளின் உடைப்பை
அறியாததில் ஆச்சரியம்
ஏதொன்றும் இல்லை
பெண்ணின் மேனியழகின் பெரு “மை”
பேனாவை நிரப்பிக்கிடக்கிறது
தில்லியில் அரசியலமைப்பு
உடைந்து கிடக்கிறது
திரிபுராவில் சமத்துவம்
சாய்ந்து கிடக்கிறது
தமிழகத்தில் பெண்விடுதலை
கல்லடி வாங்குகிறது
பேனாவை தன்மான “மை”
கொண்டு நிரப்புங்கள்
குனிந்தே கிடக்கும் பேனா
அறிவின் கனத்தால்
குனிந்ததாய் இருக்கட்டும்
நிமிரும் போது சமூக
அவலங்களை எழுதி
காகிதத்தை கறையாக்கி
நிமிரட்டும் பேனாக்கள்.
-கோ.லீலா

No comments:

Post a Comment