கலெக்டர் ஆபீஸ் பியூனா கூட நான் ஆகமுடியாது - கர்ம வீரர் காமராஜர்.
***************************************
ஜூலை 15, கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக📚📚📚 கொண்டாடுகிறோம்.
இன்று தென்னாட்டு காந்தியின் 118 வது பிறந்தநாள்.💐💐💐💐💐
அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை
🌊🌊🌊🌊
பவானித்திட்டம்,
மேட்டூர் கால்வாய்த்திட்டம்,
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,
மணிமுத்தாறு,
அமராவதி, வைகை,
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்,
சாத்தனூர், கிருஷ்ணகிரி,
ஆரணியாறு ஆகியவையாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
கட்சி சார்பற்று ஒரு தலைவராக மனதிற்குள் நின்ற மனிதர் மட்டுமல்ல...
என் அன்றாட அலுவலகப் பணியில் ஒரு அதிகாரி எப்படி எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்கும்,
நேர்மையாகவும், விரைந்தும் முடிவெடுக்க வேண்டும் என்பதற்கும், நாம் வாழும் தேசத்தின் புவியமைப்பு, மழை என அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்கும்,
எளிய மனிதர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதற்கும், அய்யா காமராஜர் அவர்களை பற்றி படித்ததும், கேட்டதுமே காரணம்.
தன்னுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சி காலத்தில் சுமார் 27,000 பள்ளிகளை திறந்திருக்கிறார்.
🚩
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
-பாரதி.
🚩
என்ற வரிகளை விடவும் ஒரு படி மேலே போய் அன்னமும் இட்டு கல்வியும் தந்த பெருந்தகை காமராஜர் அவர்கள்.
இன்று நான் பணியாற்றும் பரம்பிக்குளம் ஆழியார் திட்டம், அய்யா காமராஜரின் பெரும் முயற்சியால் வந்தது. எப்படி வந்தது என்று பார்ப்போம்.
விவேகமாய் செயலாற்றுதல்.
********************************
முதலமைச்சரான அய்யா காமராஜர் அவர்கள் CS அவர்களை அழைத்து....
காமராஜர் :
பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் என்னாச்சுங்குறேன்.
CS : பேசிகிட்டு இருக்குறாங்க.
காமராஜர் : யாருங்குறேன்.
CS : அதிகாரிங்க.
காமராஜர் :
அவன் பேசுவான்லே, அவன் 58 வயசு வரைக்கும் பேசுவான்லே. நமக்கு அஞ்சு வருஷந்தான்லே...
ஏன், நீங்க பேசமாட்டியலோ.
நம்பூதி பட் க்கு போனை போடுங்குறேன்.
☎️
போன் உரையாடல்.
காமராஜர் :
என்னாவே, இதுக்குதானா, இரண்டு பேரும் ஜெயிலுல வானத்த அண்ணாந்து பார்த்துகிட்டு கிடந்தோம்..
ந.ப : என்னை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு, ஆனா எதுக்கு திட்றேன்னு சொல்லிட்டு திட்டுங்க.
காமராஜர் : என்னமோ தண்ணி தர மாட்டியேன்னியாலமே...
என்னவே தண்ணிய வச்சிகிட்டு என்ன பண்ண போறேங்குறேன்.
நான் காங்கிரஸ், நீ கம்யூனிஸ்டா இருந்தாலும், தேச பக்தங்கறேன்.
ந.ப :
நான் எப்போ முடியாதுன்னேன்
எவ்வளவு தண்ணி வேணும் சொல்லுங்க.
காமராஜர்:
உன்னை நான் நம்பறேன், டிரப்ட் போட்டு அனுப்புல கண்ணை மூடிகிட்டு கையெழுத்து போடுதேங்கிறேன்.
ந.ப : நான்கையெழுத்து போட்டே அனுப்பிடுறேன்.
📚✍🏼📚✍🏼📚✍🏼
டிரப்ட் வந்தவுடன், CS ஐ அழைத்து பார்த்துகுவே, படிக்கமாலே கையெழுத்து போடுறேன் என்று கையெழுத்திட்ட "King maker".
அப்படி உருவான ஒரு திட்டத்தில் பொறியாளராக பணியாற்றும் பெரும்பேறு பெற்றுள்ளேன் என்பதே மகிழ்வுதான்.
எளியவரின் தேவையை அறிதல்.
***********************************
ஒரு முறை முதலமைச்சர் காமராஜர் அவர்களை பார்க்க பஸ் கம்பெனி உரிமையாளர்கள் வந்திருந்தனர், அதே நேரத்தில் வேறு ஒரு கோரிக்கைக்காக பொதுமக்களும் வந்திருந்தனர்.
காமராஜர், முதலில் பொதுமக்களை சந்திக்க சென்றுவிட்டார், முதல் கேள்வியாக உங்களுக்கு கடைசி பஸ் எத்தனை மணிக்கு என்று கேட்டிருக்கிறார்.
அவர்கள் இரவு 7.30 மணிக்கு என்று சொல்ல, அதற்குள் அவர்களின் வேலையை முடித்து அனுப்பியிருக்கிறார்.
🚌🚌🚌🚌🚌
அதற்குள், பேருந்து உரிமையாளர்கள் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள் என உதவியாளர் சொல்ல... போடு போடு போனை போடு என்று சொல்லி போனில் பேசியிருக்கிறார்.
என்னாங்குறேன், அவனுக்கு கடைசி பஸ் 7.30 க்கு விட்டுட்டா அவன் வீட்டுக்கு போகமுடியாது.
நீ காரு வச்சிருக்க எப்ப வேணும்னாலும் போகலாம்வே.
அவன் ஊருக்கு போக முடியலைனா, மெட்ராஸ்ல தங்கனுங்குறேன், கையிலே காசு இருக்குமாவே..
நீ ரூம் போட்டு தங்கலாம்ங்குறேன்...
அவன் நெலமைய பாக்கணும்வே...
புரியாமா கோவிச்சுக்கிட்டா எப்படிங்குறேன்.
நான் முதலமைச்சரா ஆனாதல பார்க்க வர...
அவன் என்னை முதலமைச்சரா ஆக்கிட்டு வந்திருக்கான்லே என்றராம்.
இதை படித்ததின் விளைவுதான், விசிட்டர் யார் வந்தாலும், காக்க வைக்கமால், அவர்களின் தேவையை உணர வைத்தது, வைக்கிறது.
எல்லோரும் சமம்.🪑🪑🪑
*********************
காமராஜரின் கீழ் எம்.எல்.ஏ வாக இருந்த ஒருவர் எந்த அதிகாரி வந்தாலும் நிற்க வைத்தே பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.
இந்த தகவல் அதிகாரிகள் மூலம், சீஃப் செகரட்ரி வழியே முதலமைச்சர் காமராஜரை அடைந்துவிட்டது.
காமராஜர் உடனே அந்த எம்.எல்.ஏ வையும், மற்ற எம்.எல்.ஏக்களையும் வரசொல்லு ஒரு புறம் அமர வைத்திருக்கிறார்.
சிறிது நேரத்தில் அனைத்து துறை அதிகாரிகளையும் வரவழைத்து இன்னொரு புறம் அமர சொல்லிவிட்டு, அய்யா, பேப்பரை படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
வெகுநேரம் ஆகிவிட, அந்த எம்.எல்.ஏ வர சொன்னீங்க என்றாராம்.
நீங்களும் உட்கார்ந்திருக்கீங்க, நானும் உட்கார்ந்திருக்கேன், அவங்களும் உட்கார்ந்து இருக்காங்க ஒண்ணும் குடிமுழுகிடல போங்கவே என்றாராம்.
🪑
எவ்வளவு ஒரு எளிமை. இதை படித்ததும் மனதில் பதிந்த செய்தி.
நமக்காக, நம் கீழ் பணிபுரிவோர் நின்றால், அவர்களை முதலில் அமர சொல்லவேண்டும், சாப்பிட்டார்களா என்பதை கேட்டறிய வேண்டும், அவர்கள் வீடு திரும்ப வாகன வசதிகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பதுதான்.
நம் தேசத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்.
***********************************
கர்நாடக முதலமைச்சராக இருந்த நிஜலிங்கப்பாவுடன், காமராஜர் நெருங்கிய நட்புடையவர். ( வா, போ என்று பேசும் அளவிற்கு).
ஒரு முறை, கர்நாடகவில் அவருடன் பயணித்திருக்கிறார், லேசா மழைதூற, வழியில் ஒரு ஏரி வர...
(இருவருக்குமிடையே மொழிபெயர்ப்பாளராக மதுர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இருந்திருக்கிறார்கள்.)
காமராஜர்:
அது என்ன கொள்ளளவுங்குறேன்.
நி.லி : தெரியாது.
காமராஜர் :
இந்த தண்ணி விவாசயத்துக்கு போகுதா, வேறெதும் தொழிற்சாலைக்கு போகுதா? விவசாயம்னா எவ்ளோ ஏக்கரு?
நி.லி : தெரியாது.
காமராஜர் : மூதி ஒண்ணுமே தெரியாத நீ முதலமைச்சரா இருந்தா எப்படி விளங்குகேறேன்.
(மதுர் கி.முக்கு மொழிபெயர்ப்பின் பிரச்சனை முதல் இரண்டு எழுத்தில் ஆரம்பித்து விட்டது).
அடுத்த சம்பவம், தொழிற்சாலைக்கு ஆயிரம் ஏக்கர் நில ஒதுக்கீடு
🌦️☀️🌍
எனக்கான பாடம் :
அதிகாரியா இருக்கிறவங்களும், முழு தகவலையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
துணிந்தும் விரைந்தும் முடிவெடுத்தல்.
*****************************
சீன போர் முடிந்த நேரம் நேரு மனசோர்வில் இருக்கிறார். இந்தியாவுக்கு பெரிய அடி.
நேருவை பார்த்த காமராஜர் என்ன பிரச்சனை என்கிறார்.
நேரு:
ராணுவ தள்வாடங்களை அமெரிக்காவில் இருந்து கொண்டு அமெரிக்க வங்கி ஒன்று கையெழுத்திட வேண்டும், ஆனால் எந்த வங்கியும் போட தயராய் இல்லை.
காமராஜர் : நம்ம ஊர்ல அமெரிக்ககாரங்க கடை ஏதுமில்லையா?
நேரு : கடைன்னா ? எத சொல்றீங்க.
காமராஜர் : அதான் இன்ஸ்டிட்டியூஷன்.
நேரு : அமெரிக்கன் எகஸ்பிரஸ் பேங்க் தான் இருக்கு. வேறெதும் இல்லை.
காமராஜர் :
அதை இழுத்து மூடுங்க. நமக்கு உதவாதவன் இங்கே எதுங்குறேன்...
நேரு : பெரிய பிரச்சனை ஆயிடுமே.
காமராஜர் : ஆகட்டுமே, என்ன ஆகிடும்ங்கேறேன்.
உடனே, அமெரிக்கன் எகஸ்பிரஸ் பேங்கை இழுத்து மூட உத்தரவிட, அமெரிக்காவில் துரித தகவல் வருகிறது 24 மணி நேரத்தில் இராணுவ தள்வாடங்கள் இந்தியா வருமென்று.
அசையாத நேர்மையை பாராட்டு.
***********************************
கட்சிக்காரரின் தியேட்டர் ஒன்றை திறந்து வைக்க காமராஜருக்கு அழைப்பு வர, அதை ஏற்றுக் கொண்டார்.
தியேட்டரில் வயரிங் வேலை முடிவடையாமல் லைசென்ஸ் அனுமதிக்க முடியாது என்று அன்றைய கலெக்டர் பசுபதி பாண்டியன் சொல்லியிருக்கிறார்.
கட்சி தொண்டர்களோ, யாருகிட்ட பேசுற. வரபோறது, சகல வல்லமையும் வாய்ந்த முதலமைச்சர், நீ வெறும் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் என சொல்ல.
நான், இன்னைக்கே ரிசைன் பண்ணிட்டு, எலெக்ஷன்ல நின்னா முதலமைச்சரா ஆக முடியும், ஆனால் தலைகீழா நின்னாலும் உங்க அய்யா கலெக்ட்ராக ஆக முடியாது. அதனால் நான்தான் கையெழுத்து போடணும் போ என்று சொல்லியிருக்கிறார்.
இந்த செய்தி காமராஜருக்கு போக, அவர் சொன்னதில்ல என்ன தப்பு, ஒரு சின்ன தப்பு இருக்கு, நான் பியூனா கூட ஆக முடியாது, அதுக்கும் குறைந்தளவு படிப்பு வேணுமில்ல....
என்ன குறைய கண்டீங்க, சட்டத்தைதானே சொல்லியிருக்காரு, இவரை மாதிரியான நேர்மையான அதிகார்களை நம்பிதான் ஆட்சி செய்றேன் என்று சொல்லிவிட்டு.
ரிப்பனை வெட்டுறேன், ஆனா படம் ஓட்டாத, என்று சொல்லி திறப்பு விழா செய்திருக்கார்.
( அரசியல்வாதிகள் தனிப்பட்ட கூட்டத்திற்கு சென்றால் அங்கு அரசு அதிகாரிகள் செல்ல மாட்டார்கள் என்பது மரபு)
திறப்பு விழா முடிந்தவுடன், நேரே கலெக்டர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். கலெக்டரும்,அவரது மனைவியும், வாங்க என வரவேற்க, எனக்கு காஃபின்னா புடிக்கும் கொண்டு வாம்மான்னு சொல்லிவிட்டு, விளையாடிக் கொண்டிருந்த கலெக்டர் பையனை வாங்க ! உங்க பேர் என்ன ?
நீங்களும் அப்பா மாதிரி நேர்மை மாறாத பெரிய பதவிக்கு வரணும்னு சொல்லி காஃபியை குடிச்சிட்டு போயிட்டராம்.
இப்படி நேர்மையான அதிகாரிகளை பாராட்டிய அரசியல்வாதிகள் வாழ்ந்த பூமி இது. ( ஹூம் இப்போ... )
மக்களுக்காக சட்டமேயன்றி. சட்டதிற்காக மக்கள் இல்லை.
- காமராஜர்.
இன்னும் பல்வேறு நிகழ்வுகள் படிக்க படிக்க வியப்பும், மகிழ்ச்சியும் ஒருசேர வருவதோடு, நம்மை சிறந்த மனிதராகவும் செதுக்கி விடும் வல்லமையான வாழ்வு வாழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் என்பது மிகவும் பொருத்தமே.
அவரது எளிமை இன்னும் பிற நற்குணங்களை பின்பற்றுவதே அவருக்கு செய்யும் மரியாதை ஆகும்.
நேரம் வாய்க்கும்போது இன்னும் பல நிகழ்வுகளை குறித்து எழுத்து தொடரும்.
அன்புடன்.
- கோ.லீலா.
#கட்டுரை.

No comments:
Post a Comment