#கட்டுரை.
கவிஞரை ஓவியராக்க வைக்கப்பட்டப் பெயர் வாலி.
***********************************
எழுத்தாளர், நடிகர், வசனகர்த்தா, ஓவியர், கவிஞர், திரைப்பட பாடலாசிரியர்
பத்ம ஸ்ரீ வாலி அவர்களின் நினைவு நாளில், வணங்கி
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 💐
நினைவுகளைப் போற்றுவோம்.
***********************************
இவ்வுலகில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்தாலும், மனிதன் மட்டுமே ரசனையின் உச்சத்தை பகுத்தறிந்து மகிழக்கூடியவனாக இருக்கிறான். எத்தனை வசதி, வாய்ப்புகள் இருந்தாலும், மனமகிழ்ச்சி இல்லையென்றால் எதுவும் பயன் தராது.
பல்வேறு பணிகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டுவது இலக்கியம் என்றால், அதில் திரையிலக்கியம் முக்கிய பங்காற்றுவதை மறுக்க இயலாது.
அதிலும் திரைப்பட பாடலுக்கென்றே தனியிடம் உண்டு.
எந்த சூழலுக்கும் பொருந்தும் பாடல்களை கொண்டிருப்பது திரை இலக்கியத்தின் செறிவு என்றே சொல்ல வேண்டும்
நம்மை, புத்துணர்வுடன் வைத்திருந்த படைப்பாளியை அவரது நினைவு நாளில், நம்மின் "நினைவு நாடாக்களில்"
சுழற்றுவோம்.
சிறுவயதில் ரேடியோவில் சிலோன் ஸ்டேஷன், பள்ளிக்கு போய் வரும் வழிகளில் உள்ள கடைகளில் என கவிஞர் வாலி அவர்களின் பாடலை கேட்டிருக்கிறேன்.
( யார் எழுதினார்கள் என்பது பற்றிய பிரக்ஞையெல்லாம் அப்போது கிடையாது.)
நாளடைவில் கவிஞர்களின் பெயர்களை கேட்கும் அளவிற்கு, வரிகளில் ஈர்ப்பு துவங்கியிருந்த காலம்.
திரையரங்கிற்கு இப்போதும் அதிகமாக என்பதை விடவும் செல்லவே மாட்டேன் என்றே சொல்லலாம். ஆனால், பாடல்கள் மட்டும் தெரியும்.
சிறு வயதில் இருந்தே தத்துவப் பாடல்களும், சமூக சிந்தனை சார்ந்த வரிகளுமே என்னை பெரிதும் ஈர்த்தன.
அப்படி என்னை ஈர்த்த வரிகள்தான்...
"மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா"
அடடா ! என்ன அற்புதமான சிந்தனை என மலைத்துப் போனேன்.
"அவதார புருஷன்" என்ற தொடரை, எதர்ச்சையாக, ஒரு முறை படித்தேன், ஆகா ! அழகியத் தமிழும், சிலேடையும், மீண்டும் மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டியது.
காவிரி நீரின் சுவை மிளிர்கிறதே எழுத்தில் என்று தோன்ற, கவிஞர் வாலி அவர்களைப் பற்றிய தகவல்களை தேடி எடுத்தேன்.
கணிப்பு தவறாகவில்லை, திருப்பராய்த்துறையில் பிறந்து, ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தவர்.
ஒரு புறம் பெரியாரின் கொள்கை மீது தீராத பற்று, இன்னொரு புறம் நித்தமும் காதில் ராமயாணம் பற்றிய சொற்பொழிவுகள் ஒலிக்க வளர்ந்த பருவத்தில் கலைஞரின் தமிழுடன், வாலி அவர்களின் தமிழ் எனக்கு பிரமிப்பை தந்தது.
இப்படிதான் வாலி அவர்களின் பாடல்களை கேட்கத் தொடங்கினேன்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி- கமல், விஜய் - அஜித், சிம்பு- தனுஷ் என நான்கு காலக்கட்டத்தின் ரசனைகேற்ப சுமார் பதினைந்தாயிரம் பாடல்களை எழுதியுள்ளார்.
காதல், பக்தி, தத்துவம்,நட்பு என வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் காலத்திற்கேற்ப எளியத் தமிழில் சுவைக்க கொடுத்தவர்.
நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் எங்கள் பேட்ஜ் பாடும் "காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுதான்" ரொம்பவே ஹிட். இப்போ அனுமினி மீட் சென்றபோதுகூட மீண்டும் அதே பாடலை பாடினோம், அப்படி வாழ்வோடு, உணர்வுகளோடு ஒன்றிப்போன பல பாடல்களை தந்தவர் கவிஞர் வாலி அவர்கள்.
அம்மா பாட்டுன்னா இதோ...
அம்மா என்றழைக்காத உயிரில்லையே’,
‘அம்மா அம்மா எந்தன் ஆருயிரே’, ‘
நானாக நானில்லை தாயே’,
‘சின்னத்தாயவள் தந்த ராசாவே’,
‘காலையில் தினமும் கண்விழித்தால்’
என அம்மாவை கவியெழுதியவர்.
பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா’ என்பது ஒரு பாடல்.
கற்பகம் கவிஞர் வாலியைத் தனித்தன்மையுள்ள கவிஞராக நிறுத்தியது என்றே சொல்லலாம்.
"பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையில படம் புடிச்சான்" ன்னு ஒரு பாட்டு...
மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்
மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்
எங்க ஊர்ல ( திருவாரூர்) தேருக்குதானே வடம் பிடிப்பாங்க, இதென்ன "மை விழியில் வடம் புடிச்சான்"ன்னு நான் ரொம்பவே ரசித்த வரி. கவித்துவம் நிறைந்த வரியாகவும் இருந்தது.
தொட்டால் பூ மலரும் பாடல் இன்றும் வியப்பையும், ரசிப்பையும் ஒன்றாக சுரக்க வைக்க கூடியவை.
கேள்வி - பதில் பாடல்.
*************************
ஒடிவதுபோல் இடை இருக்கும், இருக்கட்டுமே’
இந்தப் புன்னகை என்ன விலை...
என் இதயம் சொன்ன விலை’
இதை தொடர்ந்து வாடகை, விலை என்பதை வைத்து பாடல்கள்.
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்…
வாடகை என்ன தரவேண்டும்?
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடலை கேட்ட வயதில் அரசியல் என்னவென்றே தெரியாது... மூன்றெழுத்தில் மூச்சுன்னா "மூக்கு" தானேன்னு குறுக்கு எழுத்து போட்டிக்கு யோசிக்கிற மாதிரி யோசிச்சு இருக்கேன்.
பின்னாளில், சோ அவர்களிடம் மூன்றெழுத்தில் மூச்சு ன்னா தமிழ், அண்ணா, திமுக எது? என்று கேட்டார்களாம்,
சோ அவர்களும் மூக்கு என்றுதான் பதில் சொன்னாராம்.😀
அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்கள் கவிஞர் வாலியின் பாடல்கள்.
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மிகவும் பிரபலமான பாடல்.
நானொரு குழந்தை நீயொரு குழந்தை என பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அவதாரப் புருஷன் , அம்மா பொய்க்கால் குதிரைகள், ராமானுஜ காவியம்,
நிஜ கோவிந்தம்,
கலைஞர் காவியம்,
பாண்டவர் பூமி,
கிருஷ்ண விஜயம்,
நானும் இந்த நூற்றாண்டும்
என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன்,
ஒரு செடியில் இரு மலர்கள்
என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், பொய்கால் குதிரை, சத்யா,
பார்த்தாலே பரவசம், ஹே ராம் என திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சுவாரசிய செய்திகள்.
**************************
🚩
கவிஞர் ரங்கராஜன் நல்ல ஓவியரும் ஆவார். கவிஞரின் நண்பர் பாபு என்பவர், கவிஞர் மாலி போல் புகழ்பெற வேண்டும் என்று கவிஞர் ரங்கராஜனுக்கு சூட்டிய பெயர்தான் வாலி.
🚩
கவிஞர் வாலி நடத்திய பத்திரிக்கையின் பெயர் "நேதாஜி" பலரும் அதில் எழுதி பங்கேற்றனர்.
அவ்விதழில் எழுதியவர்களில், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதாவும் ஒருவர்.
🚩
பணம் படைத்தவன் படத்தில் ‘கண்போன போக்கிலே கால்போகலாமா’,
‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை’.
இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்றே இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இல்லை இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வாலி.
இரண்டாவது பாடல் திருக்குறளின் சாரத்தை கொண்டது.
🚩
வாலியின் திரைப்பாடலில் பெண்ணியம், சமூகசிந்தனை, அகப்பொருள் மரபு போன்ற ஆய்வுகளை காலம் வாய்க்கும்போது மேற்கொள்ள வேண்டும்.
தெரிந்துக் கொள்ள வேண்டிய செய்தி
**********************************
இவர்களுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான்.
கவிஞர் வாலி அவர்களின் நினைவுகளை போற்றி வணங்குவோம்.🙏💐🙏💐🙏💐
அன்புடன்
- கோ.லீலா.
அருமை
ReplyDelete