தண்ணீர்
தண்ணீர்……
வழமை போல முக்கிய செய்திதான் இன்றும் பேச போறோம்.
வாங்க பரிமள்,செல்வா,அனிதா…
வர்றோம் நீ எங்கே ரொம்ப நாளா காணோம்…
இன்னைக்கு பேசப்போற செய்திக்கும்,இத்தனை நாள் நான் காணாமல் போனதுக்கும் தொடர்பு இருக்கு……….
பரிமள்: என்னய்யா,பீடிகை பலமா இருக்கு.
சொல்றேன்,எந்த
வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இரண்டு பருவ மழையும் பொழியவில்லை,எல்லா அணையிலேயும்
தண்ணி ரொம்பவே குறைஞ்சி போயிருச்சி அதாவது முடங்கு நீர் (Dead storage) அளவுக்கும்
கீழே போயிருச்சி,அதனால இரு மாநிலங்கிடையே தண்ணீர் பங்கீடு தொடர்பா,வரிசையா கலந்தாய்வு
கூட்டம்……………
என்ன செய்றீங்க லீலா.
அனிதா:
எப்படி இந்த தண்ணீர் குறைஞ்சி போச்சி………..
பரிமள்&
செல்வா:மழையில்லைன்னு சொல்லாம சரியான காரணத்தை சொல்லு.
J மழையில்லை என்பது முக்கியமான மற்றும் வெளிப்படையா
எல்லோருக்கும் தெரியும் காரணம்….
ஆனால்
மழை பெய்த நேரங்களில் கிடைத்த தண்ணீரை எப்படி பயன்படுத்தினோம் என்று விலாவாரியா பார்க்கணும்.
முதலில்,காரணத்தையும்,பின்
செய்ய வேண்டியதை பற்றியும் பார்ப்போம்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்ற
திருக்குறள் வழியே போவோம்.
தண்ணீர்
வாழ்வின் அமிர்தம்,அனைத்து உயிர்களின் ஜீவாதாரம்,உயிர் மௌனமாய் சுமக்கும் ஏக்கங்களை
செயல்படுத்த,தண்ணீர் வேண்டுமென்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
தண்ணீர்
சேமிப்பு என்றால் என்ன?
.
சாணக்கியர் காலத்தில் பெய்த மழையளவுதான் இன்றும் பெய்கிறது….
அனிதா&
செல்வா: என்ன சொல்ற லீலா?
ஆமாம்,இது
தொடர்பா நானும் ஆச்சரியப்பட்டு,சில செய்திகள்,மற்றும் புள்ளி கணக்குகளின் அடிப்படையில்தான்
நம்பினேன்.
ஒரு
கேள்வி.
ஒரு
உருண்டையான டப்பாவில் தண்ணீரை ஊற்றி மூடி வைச்சிட்டு,பின்னால் conveyance
loss,evaporation loss என எந்த இழப்பு நேரிட்டாலும்,
அந்த இழப்பு அதே டப்பாவிற்கு வரும்படி வடிவமைத்தால்.அந்த உருண்டை டப்பாவில் இருக்கும்
தண்ணீர் குறையுமா? குறையாதா? சொல்லுங்க.
குறையாது.
அதை
தான் சொல்றேன்,அந்த உருண்டையான டப்பாதான் இந்த பூமி.
தண்ணீர்
இருக்கு,,ஆனால் பயன்படுத்த கூடிய நிலையில் இல்லை.
பூமியில்
உள்ள தண்ணீரில் 97% கடல் நீர்,மீதமிருக்கிற 3% தண்ணீரில் 1% தான் நன்னீர்.மீதி 2% துருவ
பகுதியில் பனியாக உறைஞ்சிருக்கு.
இந்த
1% தான் பூமியில் இருக்கிற அனைத்து உயிரினங்களும் பயன்படுத்திக்கணும்.
பரிமள்:
காலநிலை மாறிட்டு ன்னு சொல்றாங்களே உண்மையா?
ஆமாம்,உண்மைதான்.சொல்றேன்
கேளுங்க.
நீர்நிலைகளிலும்,புவியின்
மேல்பரப்பிலும் உள்ள நீர் எப்போதும் அமைதியாக இருப்பதில்லை.
அவை தம்மைத்தாமே மறுசுழற்சிக்கு உட்படுத்திக்கொள்கின்றன.கடல் பரப்பில் உள்ள நீரானது சுமார் 2500 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ,நிலத்தடி நீரானது 1400 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்,புவியில் பனிபாறைகளாகப் படிந்திருக்கும் நன்னீரானது 10000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், பனித்துருவங்களில் பனிப் படிவங்களாக உறைந்திருக்கும் நன்னீரானது 9700 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்,பனிமலைகளில் உறைந்திருக்கும் நன்னீரானது 1600 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்,நன்னீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீரானது 17 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்,வளிமண்டலத்திலுள்ள நீரானது 8 நாட்களுக்கு ஒருமுறையும் தம்மைத் தாமே மறுசுழற்சிக்கு உட்படுத்திக் கொள்கின்றன.இவ்வாறு நீரானது தம்மைத் தாமே மறுசுழற்சிக்கு உட்படுத்திக் கொள்வதால்தான் மழை பொழிகின்றது.
இந்த மறுசுழற்சியில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையே காலநிலை மாறுதல் என்கிறோம்.இதற்கு முக்கிய காரணம்,மழைக்காடுகள் அழிக்கப்பட்டது.காணொளியில் இந்த படம் காட்டி,இதிலிருந்து என்ன தெரிகிறது எனக் கேட்டபோது,ஒரு விவசாயி கூறினார் பச்சையம் சுரண்டப்படுகிறது என்று.
அவை தம்மைத்தாமே மறுசுழற்சிக்கு உட்படுத்திக்கொள்கின்றன.கடல் பரப்பில் உள்ள நீரானது சுமார் 2500 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ,நிலத்தடி நீரானது 1400 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்,புவியில் பனிபாறைகளாகப் படிந்திருக்கும் நன்னீரானது 10000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், பனித்துருவங்களில் பனிப் படிவங்களாக உறைந்திருக்கும் நன்னீரானது 9700 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்,பனிமலைகளில் உறைந்திருக்கும் நன்னீரானது 1600 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்,நன்னீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீரானது 17 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்,வளிமண்டலத்திலுள்ள நீரானது 8 நாட்களுக்கு ஒருமுறையும் தம்மைத் தாமே மறுசுழற்சிக்கு உட்படுத்திக் கொள்கின்றன.இவ்வாறு நீரானது தம்மைத் தாமே மறுசுழற்சிக்கு உட்படுத்திக் கொள்வதால்தான் மழை பொழிகின்றது.
இந்த மறுசுழற்சியில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையே காலநிலை மாறுதல் என்கிறோம்.இதற்கு முக்கிய காரணம்,மழைக்காடுகள் அழிக்கப்பட்டது.காணொளியில் இந்த படம் காட்டி,இதிலிருந்து என்ன தெரிகிறது எனக் கேட்டபோது,ஒரு விவசாயி கூறினார் பச்சையம் சுரண்டப்படுகிறது என்று.
அனைவரும்: தண்ணீர் எவ்வளவு முக்கியம் ஆனா நாம அதை புரிஞ்சிக்கலையோன்னு கவலையா இருக்கு.
நான்:
ம்ம்…..தண்ணீரை நம்மால் உற்பத்தி செய்ய முடியாது.அதே மாதிரி ஒருமுறை பயன்படுத்தினாலே
எளிதில் மாசு அடையக்கூடிய உயரிய தூய்மை பொருள்தான் தண்ணீர்.அடிப்படையில் தண்ணீர் சிக்கலென்பதே
உயிர்ச் சிக்கல்தான்.தண்ணீர் கிடைக்க ஒரே வழி மழை மட்டும்தான் ஒரே வழி என்பதை நாம்
புரிந்துக்கொள்ள வேண்டும்.
இப்போ
தண்ணீரோடு முக்கியத்துவம் என்னன்னு புரிஞ்சிருக்கும்.
செல்வா:
அப்போ வளர்ந்த நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்கிறாங்க?
தண்ணீர்
பற்றாக்குறை வந்தவுடன் வளர்ந்த நாடுகள் என்ன செய்றாங்க? அப்படின்னு பார்ப்போம்.
பரிமள்:
என்னய்யா,எப்போதும் டீ,காபி சாப்பிடுவோம் இன்னைக்கு ஒண்ணுமில்லையா?
இருக்கு
இருக்கு,டீ,காபியோடு சேர்த்து சில செய்திகளும் இருக்கு.
ஒரு
காபி தயாரிக்க எவ்வளவு தண்ணீர் செலவாகும் சொல்லுங்க பார்ப்போம்.
அனிதா
&செல்வா: என்ன பரிமள்,காபி கேட்டா,காபி போடுறத பற்றி கேட்கிறா?
என்ன
கால் லிட்டர் பாலுக்கு ஒரு தம்பளர் தண்ணீருன்னு வச்சிக்கோ.
இல்லை,இல்லை,நான்
சொல்ல போறத கேட்டு ஆச்சரியப்பட போறீங்க
ஒரு
கப் காபி தயாரிக்க 140 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
பரிமள்:
எப்படி?
அதாவது
காபி பயிராக ஆகும் தண்ணீர் செலவிலிருந்து தொடங்கி
காபி குடிச்ச பின் பாத்திரத்த கழுவுற தண்ணி வரைக்கும் 140 லிட்டர் தேவைப்படுது.
எல்லோரும்:
அய்யோ! இவ்வளவு தண்ணீர் செலவாகுதா?
யாருக்கெல்லாம்
கோழி கறி பிடிக்கும் கைத்தூக்குங்க பார்க்கலாம் 75% சதவீத அசைவ உணவு உண்பவர்களுக்கு
கோழி பிடிக்கும்.ஒரு கோழியை முழுமையா சமைச்சு சாப்பிடும் பதத்திற்கு தட்டுக்கு வர
3000லிட்டர் தண்ணீர் செலவாகுது.இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு தண்ணீர் செலவாகுதோ
அது தான் “மறை நீர்” என்று சொல்கிறோம்.
செல்வா:
அது சரி இப்போ எதுக்கு இதை பற்றி சொல்றே……..
நல்ல
கேள்வி,தினம் செய்திதாள் படிக்கிறோம்,ஏவுகணை பற்றியும்,அரசியல் பற்றியும் படிக்கிற
நமக்கு,வெளிநாடுகளுக்கு தினமும் இட்லி,வடை,சாம்பார்,சட்னி,சோறு வகைகள்,இப்படி பல உணவு
பொருடகள் ஏற்றுமதியாகிற செய்தி தெரியுமா?
இந்த
ஏற்றுமதியின் மூலம்,நம் நாட்டின் தண்ணீர் மறை நீராக ஏற்றுமதியாகிறது கனடா போன்ற வளர்ந்த
நாடுகள்,வளரும் நாடுகளிடமிருந்து தண்ணீர் அதிகமாக
செலவாகும் பொருட்களை இறக்குமதி செய்து கொள்கின்றன.
அனிதா&
பரிமள்: ஏற்றுமதி செய்தா தானே நம் நாட்டிற்கு வருமானம் கிடைக்கும்….
உண்மைதான்,ஆனால்
துபாய் போன்ற நாடுகள் பிற நாடுகளிருந்து இறக்குமதி செய்து அதை ஏற்றுமதி செய்கின்றன,இதன்
மூலம் நாட்டின் வளம் பாதுக்காக்கப்படுவதோடு வருமானமும் கிடைக்கிறது..
உலக
வங்கியின் நிதி உதவியுடன் தமிழகத்தில் குறிப்பாக பொள்ளாச்சி பகுதியில் கொக்கோ பயிரிடப்படுகிறது,இந்த
பயிருக்கான மானிய தொகை நேரடியாக விவசாயிடம் கொடுக்கப்படுகிறது,இந்த பயிருக்கான அனைத்து
செலவுகளையும் உலகவங்கி ஏற்றுக் கொள்வதுடன்,நேரடியாக விவசாயின் வீட்டிற்கே வந்து கொள்முதல்
செய்கிறது அதோடு அதற்கான பணத்தையும் உடனடியாக விவசாயிடம் கொடுத்து விடுகிறது. கொக்கோவிற்கு
தென்னை மரத்தின் நிழலும்,பொள்ளாச்சி பகுதி தட்பவெட்பமும் ஏற்றது அதனால் தென்னையுடன்
ஊடுபயிராக இந்த கொக்கோ பயிரிடப்படுகிறது.
தொலைக்காட்சியில்
பார்த்திருப்பீர்கள் கொக்கோ விளம்பரத்திற்கு ஆப்பிரிக்க இளைஞர்கள் மற்றும் குழந்தைகள்
வருவதை.இதில் விந்தை என்னவென்றால்,இந்தியாவிலும் சரி ஆப்பிரிக்காவிலும் சரி கொக்கோ
முதன்மை உணவு இல்லை,ஆனால் இந்தியாவிலிருந்து மறைநீராக கொக்கோ மூலம் நீரையும்,பயிரிட
உழைக்கும் விவசாயிகளின் உழைப்பையும் உறிஞ்சிக்கொள்கின்றன மேலை நாடுகள். கொக்கோவை பதப்படுத்த
ஆப்பிரிக்க போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மனித வளத்தை பெற்றுக் கொள்கின்றன.
வளர்ந்த நாடுகள் இப்படியாகதான் தன்னுடைய தண்ணீர் தேவையை சரி கட்டி கொள்கிறது.
நான்,தளப்பணியில்
இருந்தபோது வாய்க்காலை ஒட்டி இருந்த வயலில் வெள்ளரிக்காய் பயிட்டிருந்தார் ஒரு விவசாயி,அவர்
தோட்டதிற்கு வாங்க என எங்களை அங்கே அழைத்து சென்றார்,உடனே இளநீர் சாப்பிடுங்க என்றார்,நான் உடனே அய்யா,ஏன் மரமேறி கஷ்டப்படணும்,என்றேன் இல்லை
ஏதாவது சாப்பிட்டுதான் போகணும் என்றார்,அப்படின்ன ஒரு வெள்ளரிக்காய் மட்டும் போதும்
என்றேன்.அப்போ அவர் சொன்ன செய்தி இன்றும் என் நினைவில் உள்ளது.
இல்ல
அம்மணி,இந்த வெள்ளரிக்காய் நம்ம நாட்டு வெள்ளரிக்காய் மாதிரியில்ல,ஒரு அங்குல நீளம்
மட்டும் வேணுமின்னு பச்சையா சாப்பிடலாங்க,அது மேல சாப்பிட்டா விஷமுங்கோ என்றார்.
அதிர்ந்து
போய்,ஏனுங்க அய்யா,இதை பயிர் செய்றீங்களே மண்ணு வீணா போயிடாதுங்களா என்றேன்.
தெரியல,
அம்மணி,ஆனா இதுக்கான விதை,மருந்து,மானியம் எல்லாம் வீடு தேடி வந்து கொடுத்து போட்டு
போய்டுவாங்க,விளைஞ்சதும் வீடு தேடி வந்து வாங்கிட்டு போய்டுவாங்க,பணம் கையில கொடுத்துடுவாங்க
என்றார்.
சரிங்கய்யா,இத என்ன செய்றாங்கன்னு கேட்டேன்.
சரிங்கய்யா,இத என்ன செய்றாங்கன்னு கேட்டேன்.
வெள்ளரிக்காய்
ஊறுகாய் போட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிறது என்றார்.பல நேரம் வெள்ளரிக்காயாவே ஏற்றுமதியாகும்
என்றார்.
அதனுடன்
செல்லும் இந்தியாவின் மறைநீர்,நம் விவசாயிகளின் உழைப்பு………….???????
திருப்பூரில்
உள்ள பின்னாலாடை தொழிலானது,மறைநீரோடு,இருக்கும் நீர்நிலைகளையும் அழித்து விட்டது.இதன்
பின்விளைவுகளை அறிந்தே அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னாலாடை உற்பத்தியை இந்தியாவிற்கு
கொடுத்து விட்டன.ஜெட் தயாரிக்கிறவனுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? என்ற கேள்வியை கேட்டு
பாருங்கள் விடை உங்களுக்கே தெரியும்.
இதைப்போல்,
இந்தியாவின் டெட்ராய்ட் என சென்னை மாநகரம் பெயர் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆசியாவின் டெட்ராய்ட் என்று சொல்லுமளவுக்கு ,ஆசியாவின் 30% ஆட்டோ மொபைல்ஸ்
சென்னையிலிருந்தே உற்பத்தியாகிறது.
இந்தியாவின் டெட்ராய்ட் என சென்னை மாநகரம் பெயர் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆசியாவின் டெட்ராய்ட் என்று சொல்லுமளவுக்கு ,ஆசியாவின் 30% ஆட்டோ மொபைல்ஸ்
சென்னையிலிருந்தே உற்பத்தியாகிறது.
அனிதா:
அப்படியா,பெருமையா இருக்கு….
பெருமைதான்,ஆனால்
இன்றைய சூழலில் ஒரு கார் தயாரிக்க 4 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது……இதை மேற்கூறிய
செய்தியோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளுங்கள்….
செல்வா:இது
இங்கே இருக்கிற தண்ணீரை கொள்ளையடிக்கிற மாதிரியில்ல இருக்கு.மழை ஏன் வரலை தெளிவா சொல்லு,இனி
வர வாய்ப்பிருக்கா?
மழை
ஏன் வரலையென்றால் மரமில்லையென்று எளிதாக சொல்லி முடிக்க முடியாது.மழைக்காடுகளைப் பற்றி
முன்பே பேசியிருக்கோம் அது போக கானுயிர்களை பேணவில்லை என்பது அதிமுக்கியமான காரணம்.அதைக்
குறித்தும் பல நேரம் பேசியிருக்கோம்.
பரிமள்:
தண்ணீர் சிக்கல் உயிர் சிக்கல் அப்படின்னு சொன்னியே அத நினைச்சாலே பயமாயிருக்கு…..அத
பத்தி சொல்லு..
“தண்ணீர்
சிக்கல் என்பது இயற்கையாகவே இருப்பது அல்ல,அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்படுவது”
என 2006 ல் மனித வள அறிக்கை(UNDP)சொல்கிறது.
தமிழகத்தை
பொறுத்தவரை அண்டை மாநிலங்கள் எல்லாம் நீர் அரசியல் செய்யும் போது,இங்கே அரிசி அரசியல்
நடக்கிறது….
அவ்வளவுதான்
சொல்ல முடியும்..
கீழே
ஒரு படம் இருக்கே அது யார்? ந்னு சொல்லுங்க பார்ப்போம் என்ன நண்பர்களே நீங்களும்தான்,
சொல்லுங்க.
அட
என்ன விரைவா பதில் வருது….
சரியான
பதில்தான் அனுஷ்கா ஷர்மா தான்.இருக்கட்டும் அடுத்து ஒரு படம் இருக்கு அது யாருன்னு
சொல்லுங்க பார்ப்போம்…
யாரா?
அது சரி,தப்பு அவங்க மேல தான்,அவங்க சினிமால நடிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.
அனிதா:
சரி சொல்லு …
இவங்க
பேரு வங்காரி மாத்தாய்,கென்யாவை சேர்ந்தவங்க,அந்த பகுதியில் முனைவர் பட்டம் பெற்ற முதல்
பெண்.(பெண்களுக்கு முற்றிலுமாக கல்வி மறுக்கப்பட்டிருந்த காலம்).அதோடு இல்லாமல் பெண்களை
ஊக்குவித்து 20மில்லியன் மரங்களை நட்டிருக்கிறார்.மரம் நட்டதற்காக அமைதிக்கான நோபல்
பரிசு பெற்றுள்ளார்.
அது
சரி தென்னை மரங்களை,ஏக்கர் கணக்கில் நட்டு இருக்கீங்களே உங்களுக்கு ஏன் பரிசு கொடுக்கலை.
மழை
தரும் மரங்களை நடணும் அப்போதான் பரிசு கிடைக்கும்.
ஆனா,நாம
மேற்கு தொடர்ச்சி மலையை அழிச்சு தேயிலை தோட்டமாக்கி பொன்னாரம்,பூவாரம்ன்னு பாடல் காட்சி
எடுத்துக்கிட்டு இருக்கோம்.
பசுமையா இருந்தா மழை வரும்னு நினைக்கிறோம் அது மிகத் தவறு.மேற்கு தொடர்ச்சி மலை தோரயமாக 900 மீட்டர்,அதற்கு மேல் Tall trees என்று சொல்லப்படும் மரங்கள் இருந்தால்தான் கடலில் இருந்து ஆவியாகும் நீரை மேகமாக்கி மழை பொழிய வைக்கும். மரங்கள் இல்லாத மலைகள் சூரிய ஒளியை அதிகமாக பிரதிபலிக்கிறது.
பசுமையா இருந்தா மழை வரும்னு நினைக்கிறோம் அது மிகத் தவறு.மேற்கு தொடர்ச்சி மலை தோரயமாக 900 மீட்டர்,அதற்கு மேல் Tall trees என்று சொல்லப்படும் மரங்கள் இருந்தால்தான் கடலில் இருந்து ஆவியாகும் நீரை மேகமாக்கி மழை பொழிய வைக்கும். மரங்கள் இல்லாத மலைகள் சூரிய ஒளியை அதிகமாக பிரதிபலிக்கிறது.
செல்வா:உலகம்
வெப்பமயமாகுதல் ந்னு சொல்றாங்களே அதுக்கும் நீ சொன்ன செய்திக்கும் தொடர்பு இருக்கும்
போல தெரியுதே?
நிச்சயமாக
தொடர்பிருக்கு,உலக உருண்டை 4-5 டிகிரி வெப்பம் உயர்வுக்கு உட்பட்டுள்ளது.அதனால்தான்
எதிர்பாராத விதமாக பனிமலைகள் உருக ஆரம்பித்து விட்டன.
அனிதா:
இவ்வளவு வருஷமா உருகாத பனிமலை இப்போ மட்டும் ஏன் உருகுது?
நல்ல
கேள்வி அனிதா,பலரும் அதிகமான வெப்பத்தால் உருகுது அப்படின்னு ஒரே வரியில் பதில் சொல்லிடுவாங்க.ஆனால்
உண்மை அது மட்டுமல்ல….
இங்கே
ஒரு இருசக்கர வாகனத்தையோ,நான்கு சக்கர வாகனத்தையோ முடுக்கி ஓட்ட ஆரம்பித்தால் அந்த
புகை எவ்வளவு தூரம் போகும் சொல்லுங்க பார்ப்போம்…
பரிமள்:ஒரு
கிலோமீட்டர் தூரம் போகுமா?
அதுதான்
இல்லை,இங்கே வரும் புகை துருவ பகுதி வரை போகும். வாகனம் வெளியிடும் கார்பன் மோனோ ஆக்ஸைடு,கார்பன்-டை-ஆக்ஸைடு
போன்றவைகளை உள்ளிழுத்துக்கொள்ளும் மரம்,செடி கொடிகளை வெட்டிட்டோம்,அதே நேரத்தில் அதிகமான
வாகனங்களை பயன்படுத்துகிறோம்.நமக்குதான் வெளிநாடு போக பாஸ்போர்ட்,வீஸா எல்லாம் வேணும்.ஆனா
வெளிவரும் புகைக்கு அதெல்லாம் தேவையில்லை, இலவசமா பயணம் செய்து துருவ பகுதிக்கு போய்
பனி மேல் படர்ந்து விடுகிறது.
வடிவேல்
சொல்வது போல் தகதக ந்னு எம்.ஜி.ஆர் மாதிரி இருந்த பனி என்னை மாதிரி கறுப்பு தங்கம்
ஆயிடுது.துருவ பனி மலை சூரிய ஒளியை தக்க வச்சிக்காம,பிரதிபலித்து விடும்(Reflect).அதனால்
உருகமா இருந்தது,இப்போ மேலே படிந்த புகை சூரிய ஒளியை வாங்கி தக்க வைத்துக் கொள்வதால்,சூரிய
ஒளி பிரதிபலிக்கமால் பனி உருக வழி செய்து விடுகிறது.
பனி
உருகினால்,கங்கை போன்ற வற்றாத ஜீவநதிகளில் நிறைய தண்ணீர் கிடைக்குமே பிறகு என்ன கவலை?
இந்தியா
போன்ற நாடுகளில் 60% மக்கள் நீர்நிலைகளின் அருகில் வாழ்வதால் வெள்ளம் அழிக்கும் அபாயம்
இருக்கிறது.இதற்கு நம்மிடம் பல உதாரணங்கள் உள்ளன.
பரிமள்&செல்வா:காடு
அது சார்ந்த உயிரினங்களும் கூட அழிஞ்சிருமே…
ஆமாம்,இன்னொரு
முக்கியமான செய்தி, கீழேயுள்ள காணொளியைப் பாருங்கள்.கானுயிர்கள் தனக்கு வேண்டிய உணவு,தண்ணீர்
போன்றவற்றை இருக்கும் இடம் தேடி போய் எடுத்துக் கொள்கிறது.ஆனால் மனிதனோ தன் இருப்பிடத்திற்கு
அனைத்தையும் கொண்டு வர செய்த முயற்சிதான் இயற்கையின் பேரழிவிற்கு வழிவகுத்து விட்டது.
இந்த
காணொளி மூலமா இன்னொரு செய்தியும் சொல்லணும்,உப்பைத் தின்றவன் தண்ணி குடிப்பான் என்பது
பழமொழி,இதில் கூட உப்பு சுவையுள்ள பழத்தை உண்டதால்தான் தண்ணீரை நோக்கி ஓடுகிறது குரங்கு.நம்ம
மண்ணையும் உப்புதன்மை அதிகமாக உள்ள இரசாயன உரங்களை பயன்படுத்தினதால மண்ணில் உப்புத்தன்மை
கூடிபோயிருச்சி, அதனால பொதுவா பயிருக்கு தேவைப்படும் தண்ணீரை விட அதிகமான தண்ணீர் இப்போ
தேவைப்படுது.அதே போல் சிறுதானிய வகைகளை பயிரிட அய்ந்திலொரு பங்குதான் தண்ணீர் தேவைப்படும்.ஆனா
இப்போ 75% பணப்பயிருக்கு மாறிட்டோம்.
நெட்டை
ரக பயிர்களிலிருந்து குட்டை ரகப் பயிர்களுக்கு மாறியது ஒரு அரசியல்,இதில் செவ்வரிசி(மட்டை),கவுனி
அரிசி போன்ற மருத்துவ குணம் மிக்க அரிசிகளும் காணாமல் போயின.
நமது
முன்னோர்கள்,குளிக்க குளம்,ஏரி தேடி போனார்கள்.குளித்த பின்னும் அந்த தண்ணீர் அந்த
வாவி,குளம்,குட்டை,ஏரிகளிலேயே கிடந்து,அதில் வரும் மாசுகளை சுத்தம் செய்ய மீன் வளர்த்தார்கள்.
ஆனால்
இன்று ஷவர் என்ற பெயரில் நாம் குளிக்கும் முறை முற்றிலும் அறிவியல் அடிப்படையில் தவறான
ஒன்று.அது போக குளித்த பின் அந்த தண்ணீர் கண்ணிலேயே படக்கூடாது அப்படியே குழாய் மூலமா
கடல் வரைக்கும் எடுத்துக் கொண்டுபோய் விடுறோம்.இதில் நிலத்தடி நீராக மாறக் கூடிய வாய்ப்பு
அந்த தண்ணீருக்கு இல்லை.தண்ணீர் என்பது குறையக் கூடிய ஒரு வளம் என்ற அறிவின்மையே இதற்கு
காரணம்,ஒரு படி மேலே போய்.வீட்டை சுற்றி கொஞ்சம் கூட மண் இருக்க கூடாது காரை விட்டு
இறங்கினா அடுத்து கான்கிரீட்டும்,டைல்ஸ்ம் பதித்த இடத்தில தான் கால் பதிக்கணும்.மழை
நீர் எல்லாம் வீணா கடலில் கலக்க நாமே காரணமாகி விடுகிறோம்.
இந்த
உலகத்தில் உள்ள உயிரினங்களுக்கு தேவையான தண்ணீரை வானிலிருந்து பூமிக்கு அனுப்புகிறேன்,அதை
பூமிக்கு அடியில்சேமித்து வைத்துள்ளேன், மனிதன் தன்னிச்சையாக ஏதும் செய்யாதிருந்தால்
அதுவே அனைவருக்கும் போதுமானதாக இருக்கும் என்கிறார்.
அதாவது,கான்கிரீட்
போன்ற தரைகளை போடாது விட்டிருந்தால் தண்ணீர் நிலத்தடி நீராக சேமிக்கப்பட்டிருக்குமென்பதுதான்
அது.
நீராருங்
கடலுடுத்த நில மடந்தையான இந்த பூமி தண்ணீர் சார்பாக எதிர்க் கொள்ளும் பிரச்சனைகள் பன்முகத்தன்மையானவை.அந்த
பிரச்சனையின் தீராத வலியை இந்த மனித குலம் மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறது.
திருவள்ளுவர்,மழை
குறித்து முன்நோக்கு பார்வையுடன் எழுதி வைத்திருந்தும் நாம் அதை மறந்துதான் போனோம்…
பரிமள்&
அனிதா:எப்படி மாசுப்படுவதை சரி செய்வது.
துறை
வாரியா இதைக் குறித்து ஒரு சிறு சிந்தனை செய்தது உண்டு.
முதலில்
என் நினைவுக்கு வந்தது,விவசாயம் தான்,விவசாயத்தால் தண்ணீர் மாசுப்படுவதைப் பற்றிதான்.
பரிமள்:
என்ன விவசாயத்தால் தண்ணீர் மாசுப்படுகிறதா?!!!!!
யூரியா,போன்ற
இரசாயன உரங்களை பயன்படுத்துவதால்,பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீரின் வழியே மண்ணை மாசுப்படுத்துவதுடன்,நீரோடும்
வழியில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் மாசுப்படுத்துகிறது.
அதே
போல் ஒவ்வொரு துறை குறித்தும் வேறொரு சந்திப்பில் பேசுவோம்…
அனைவரும்:இதற்கு
தீர்வுதான் என்ன?
பல
கல்லூரிகளில் மாணக்கரிடையே இந்த கேள்வியை கேட்டப் போது பதில் வரவில்லை.
காதலர்
தினம் கேட்ட போது, Feb14 என உடனே பதில் வரும்…அதை தொடர்ந்து அப்படியே வீட்டை விட்டு ஓடினா March 22 ல் நில்லு அதுதான்
சர்வதேச தண்ணீர் தினம் என நகைச்சுவைக்காக கூறுவதுண்டு.ஆம்,நம்மில் பலருக்கு முக்கிய
நாட்களை,செய்திகளை நினைவில் கொள்வதில்லை.
1.உணவை
வீண் செய்யாதீர்கள்.வீணாகும் உணவு பொருட்களின் வழியே மறை நீரை வீண் செய்கிறோம்…
2.உணவகங்களுக்கு
சென்று உண்ணும் போது,ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு தட்டை பயன்படுத்தாதீர்கள்.உணவு பரிமாறுபவரிடம்
பொறுமையாக அவருக்கு புரியும் வண்ணம் சொல்லுங்கள்.
ஏனென்றால்,பிரபலமான
உணவகத்தில் தட்டுகளை மட்டும் கழுவ ஒரு நாளைக்கு பயன்படும் தண்ணீரைக் கொண்டு ஒரு பகுதிக்கே
ஒரு நாளைக்கான தண்ணீராக பயன்படும்.
3.விழாக்களில்
தண்ணீர் பாட்டில் வைக்காதீர்கள்.குடித்தது போக மீதம் வைக்கப்படும் தண்ணீர் வீணாகிவிடும்.
4.பள்ளியிலிருந்து
குழந்தைகள்,மற்றும் வெளியில் சென்று வீடு திரும்பும் அனைவரின் தண்ணீர் பாட்டிலிலும்
உள்ள தண்ணீரை சேகரித்து செடிகளுக்கு ஊற்றுங்கள்.
5.பல்
சுத்தம் செய்யும் போது,சவ்ரம் செய்யும் போதும் குழாயினை முழுவதும் திறந்து வைக்காதீர்கள்.தேவைப்படும்
போது மட்டும் திறந்து கொள்ளுங்கள்.
6.தண்ணீர்
எங்கு வீணாகி கொண்டிருந்தாலும்,உடனடியாக அதை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள்.
7.துணிகளை
இயந்திரத்தில் துவைப்பதாக இருப்பின்,இயந்திரந்தின் முழு கொள்ளவிற்கு துணிகளை போட்டு
துவையுங்கள்.வெளியில் செல்ல வேண்டுமென்பதற்காக குறைந்த அளவு துணியை துவைக்காதீர்கள்.
8.முடிந்த
அளவு மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துங்கள்,ஏனெனில் மின்சார சிக்கனம் மறைமுகமாக தண்ணீர்
சிக்கனம் ஆகும்.
9.Car
pooling என்ற முறையை பயன்படுத்துங்கள்.அதாவது ஒரு நபரு க்காக ஒரு காரை பயன்படுத்தாதீர்கள்.முடிந்தவரை
ஒரே அலுவலகம், பள்ளி என செல்பவர்கள்,ஒரே காரில் செல்லலாம் ஒவ்வொரு நாளை க்கும் ஒவ்வொருவரின்
காரினை சுழற்சி முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் இதன் மூலம் வாகனம் வெளியிடும் புகையை
நம்மால் முடிந்த வரை கட்டுப்படுத்தலாம்.
10.பிறந்தநாள்
பரிசாக மரக்கன்றுகளை பரிசளியுங்கள்,சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக
பாரட்டு,மற்றும் ஊக்கப் பரிசுகள் வழங்கலாம்.
11.கல்லூரிகளில்
ஒவ்வொரு மாணவ,மாணவியருக்கும் ஒரு மரக்கன்றுகளை பரிசளித்து,அவர்களின் படிப்பு முடியும்
வரை பராமரித்து,வெளி செல்லும்போது உள் வரும புது மாணவர்களுக்கு ஒப்படைக்கலாம்.இதன்
மூலம் மரங்களில் காதல் கதைகளை செதுக்கி,பின்னொரு நாளில் பார்க்கும் போது சோகமோ,மகிழ்வோ
கொள்வதை விட,நான் வளர்த்த மரமென்ற பெருமையுடன் பின்னொரு நாளில் நம் குடும்ப உறுப்பினர்களிடம்
பெருமையுடன் கூறலாம்.
12.உங்கள்
வீட்டில் ஒழுகிக் கொண்டிருக்கும் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யுங்கள்.
13.கழிவறைகளில்
half flush முறையை பயன்படுத்தும் வகையாக பொத்தான்களில் வித்தியாசம் வையுங்கள்.ஏனெனில்
ஒரு நாளைக்கு
5-12
லிட்டர் தண்ணீர் இதற்கே செலவாகிறது.
14.தோட்டங்களுக்கு
மாலை அல்லது பின் மாலை பொழுதுகளில் நீருற்றுங்கள்.
15.மூடாக்கு
எனும் முறை,அதாவது செடிகளிலிருந்து விழும் இலை,தழைகளை அங்கேயே விட்டுவிடுங்கள்,வெங்காயத்
தோல்,மஞ்சி,இன்னும் பிற தண்ணீரை நிறுத்தி வைக்கும் பொருட்களை கொண்டு மூடாக்கு போட்டு
தோட்டங்களை பராமரிப்பதன் மூலம் தண்ணீர் செலவு குறையும்.
16.
சமையலறையிலிருந்து வெளிவரும் தண்ணீரைப் போன்ற
கழிவு நீரினை தோட்டங்களுக்கு விடுங்கள்,அதில் நைட்ரஜன் அதிகமாக இருக்கும்.
17. தண்ணீர் அதிகமாக தேவைப்படும்பணப்பயிர்கலை
தவிர்த்து,தண்ணீர் குறைவாக தேவைப்படும் சிறுதானிய வகைகளை பயிரிடலாம்.
18.சுற்றுலா
செல்லும்பொழுது பிளாஸ்டிக் பைகளை ஆங்காங்கே போடாதீர்கள், அது விலங்குகளின் அதை உண்ணும்
வனவிலங்குகள் உயிரிழக்கும்,வனவிலங்குகள் இருந்தால்தான் காடும்,நீரும் இருக்கும். கண்ணாடி
பாட்டில்களை உடைத்துப் போடாதீர்கள்,அது கானுயிர்களின் உடலில் காயங்களை ஏற்படுத்தும்.
19.எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளுக்கு நீரின் அவசியத்தையும், அதனை பாதுக்காக்கும் முறைப்பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.
20.நம்மால்
இதையெல்லாம் செய்ய முடியுமா என யோசிக்கமால்,முடியும் என நம்புங்கள்.நெகிழிகளை தவிர்த்து
விடுங்கள்.
சரி,நேரமாச்சு
விடைபெறுகிறோம்,விரைவில் மீண்டும் சந்திப்போம்.
-நன்றி
தோழமைகளே இதுவரை பொறுமையுடன் எங்களின் உரையாடலை கேட்டதற்கு.
அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு,அக்னியில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.......ஆம் ஒரு நல்ல செயலை செய்வதற்கு பெரியவர்,சிறியவர் என எதன் அடிப்படையிலும் நாம் பின் வாங்க வேண்டிய தேவையில்லை.
அன்புடன்
லீலா.
No comments:
Post a Comment