Friday, 10 February 2017

ஜல்லிக்கட்டு....




சல்லிக்கட்டு சொல்லிக்கிட்டு
 மீசையதான் முறுக்கிவிட்டு
 வேட்டியதான் வரிஞ்சிக்கட்டு
 ஏறுதழுவ வேணாங்கறவன்
மாருலதான் நேராமுட்டு 
 பாரம்பரியம் அழிச்சிட்டு
 பன்னாட்டு காலைத்தொட்டு
 பகட்டான சட்டைப்போட்டு
 பதவிசா ஏலம்போட்டு
 மாடழிக்கப் பாக்குது
 மனுசனையும் ஏய்க்குது
 கவனமா மல்லுக்கட்டு
 தடையாவும் உடைச்சிக்காட்டு
 தமிழனென்று முத்திரைப்போட்டு..., 

-கோ.லீலா.

No comments:

Post a Comment