தோதா சோலை காப்புக் காடு வர- Dhodda
💦🌳💦🌳💦🌳💦🌳💦🌳💦🌳💦🌳💦☘️

தமிழ்ப் பசுமைப் படைப்பாளிகள் கலந்துரையாடல் 2026 ஜூலை 3-5 தேதிகளில் கோத்தகிரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
குழுவினை 2026 ஜூலை 5 ம் தேதி காலையில், லாங் வுட் மழைக்காட்டின் பாதுகாப்பு குழு செயலாளர் திரு கே.கே .ராஜூ அய்யா அவர்களும், ஓசை காளிதாஸ் அவர்களும் அழைத்து சென்றனர்.
அக்குழுவில் நானும் ஒரு பங்கேற்பாளர்.
சரி வாங்க காட்டுக்குள்ள போகலாம் !
காட்டிற்குள் செல்வதற்கு முன் எப்படி செல்ல வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்...
ஆலயத்திற்குள் செல்ல ஆயிரம் விதிமுறைகள் உண்டல்லவா?
ஆம் ஆயிரமாயிரம் உயிர்களின் தாயகம் ஆலயம்தானே!
முதலில் அடர் வண்ண ஆடைகள், கண்ணை உறுத்தும் வண்ணங்கள் உடுத்த கூடாது. எளிமையாக சொல்ல வேண்டுமெனில் பச்சை அல்லது Camouflage ஆடைகள் உடுத்தலாம்.
வாசனைத் திரவியங்கள், பூக்கள், போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கூந்தலை அள்ளி முடிந்துக்கொள்ள வேண்டும்.
ஆபரணங்கள், பறக்கும் விதமான உடைகள் இல்லாதிருத்தல் நலம்.
கால்களை முழுமையாக மூடியபடி இருக்கும் காலணிகளை அணிதல் நல்லது ( பழங்குடியினர் அணிவதில்லையே என கேள்வி எழலாம் அவர்களின் உடல் அறி நுண்திறன் வேறு)
உள்ளே நுழைவதற்கு முன் தண்ணீர் குடித்துக்கொள்ள வேண்டும் ( To avoid oxygen demand)
வாயை மூடி கண்கள் மற்றும் காதுகளை விழிப்புணர்வுடன் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.
எந்த தாவரங்களையும் தேவையற்று தொடுதல், பறித்தல், உண்ணுதல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
நாம் பார்க்க போற ஆள் அதாங்க லாங் வுட் சோலை சாதாரண ஆள் இல்லைங்க ! நாம் காலடி பதிக்கும் இடம் நம் மூதாதையர்கள் கால் பதித்த இடம், அவர்கள் சுவாசித்த காற்று உலவும் இடம்...
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இக்காடேன்னு பெருமையோடு நடக்கலாம்...
பல உலகாளவிய சிறப்புகளையும் கொண்டுள்ளது
கோத்தகிரியின் மய்யப்பகுதில் சுமார் 115-116 ஏக்கர் நிலப்பரப்பில்
விரிந்திருக்கும் லாங்வுட் மழைக்காடு பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது...
1. நீலகிரியின் ஒரே நகர்ப்புற மழைக்காடு.
2. சதுப்பு நிலங்களை தன்னகத்தே கொண்டுள்ள காடு
3. இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை
அங்கீகாரம் (The Queen's Commonwealth Canopy (QCC)) பெற்ற உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக கோத்தகிரி லாங்வுட் சோலைக்காடு அறிவிக்கப்பட்டுள்ளது.
4.Montane shola forest (high - altitude )
5. Recognized as IBA ( Important Bird Area) and Ramsar wetland
6. *#Cobalt_crust_fungus* is a rare blue fungus which was discovered by K.K.Raju sir in this shola forest. இயற்கையை சுத்தம் செய்யும் பூஞ்சான்.
7. பல்வலி செடி (*#Acmella_oleracea*) பூ இந்த சதுப்பு சோலை காட்டில் ஒன்றோ இரண்டோ இருந்தது அதில் ஒன்றை எனக்கு கொடுத்து மென்று விழுங்க சொன்னார்கள்.
அடடே ! குட்டி மஞ்சள் பூ... மென்றதும் மாபுளிப்பும் கசப்பும் சேர்ந்தாற் போன்றொரு சுவை. ஆனால் நாக்கு கொஞ்சம் மரத்து போயிற்று.
பழங்குடியினர் பயன்படுத்தும் மயக்க மருந்து இது என்றார்கள். குறிப்பாக பல் வலிக்கு பயன்படுத்துவார்களாம்.
மிளகு இலை ஒன்றை மென்றேன் அவ்வ்வ்... காரமோ காரம்.
8. *#Rhododendron* என்ற fire fighter மரம் பார்த்தேன் ( k.k.Raju sir சொன்னாங்க) காட்டில் தீ பரவும் போது இம்மரம் ஒரு எண்ணெயை சுரந்து தீயிலிட தீ அணைந்து விடுமாம்.
Rhodo - ரோஜா Dendron - மரம் என பொருள்படும்.
ஒரு மரம் அடர் ரோஸ் வண்ண பூக்கள் தருகின்றது, இன்னொன்று வெண்ணிறம் அல்லது வெளிர் மஞ்சள் வண்ணப் பூக்களை தருகின்றன.
9. கீழே படத்தில் இருக்கும் Juncus is a Water purifier. கோரை போன்று உள்ளது.
கதை கேளு கதை கேளு காட்டோட கதை கேள🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
பல மில்லியன் ஆண்டுகள் பழமையானது இந்த லாங் வுட் சோலைக்காடு.
இந்திய துணைக்கண்டம் தொன்மையான கோண்டுவானா மீப்பெரும் கண்டத்தின் ( Gondwana Supercontinent) ஒரு பகுதியாக இருந்தபோதே இக்காடு இருந்ததாக கூறப்படுகிறது.
நிலத்தட்டுகளின் அசைவால்
(Tectonic plates movements) மேற்குத் தொடர்ச்சி மலை உருவானபோது, உயர் மலைப்பகுதியில் தனித்துவமான காலநிலையில் குளுமையான தட்பவெட்ப நிலையில், மிகுதியான மழைப்பொழிவை கொண்ட காடாக செழித்தோங்கி வளர்ந்தது.
லாங் வுட் சோலைக்காடுகளில் உள்ள ஒவ்வொரு தாவர மற்றும் கானுயிர்களும் பல மில்லினியம் ஆண்டுகளில் பரிணமித்தவை. Rhododendron, பெரணிகள்
போன்ற அரிய வகை இனங்கள் இங்கு உண்டு.
1819 ல் ஜான் சல்லிவன், நீலகிரி மலை குறித்து நேரில் கண்டறிந்து ஒரு அறிக்கையை கிழக்கிந்திய கம்பெனி சமர்ப்பிக்க சொன்னதின் பேரில் செல்கிறார், ஒரு எழுத்தராக பணியமர்ந்து பின்னர் கோவை மாவட்ட ஆட்சியராக பணியேற்றபோது தான் நீலகிரி செல்கிறார். அவர்தான் முதன்முதலில் ஒரு கட்டடத்தை நீலகிரியில் எழுப்பியவர் ( Stone house). கூடவே, அங்கு வாழும் தோடர்கள் மற்றும் படுகர்களுக்கு உதவியாக இருக்குமென தேயிலை, உருளைக்கிழங்கு, பார்லி போன்ற பல பயிர்களை பயிரிட முன்னின்றவர். கூடவே ஊட்டி ஏரியை இவ்விவாசயத்திற்கு ஏதுவாக ஊட்டி ஏரியை வெட்டியவரும் இவரே. மண்ணின் மைந்தர்களுக்கே முழு உரிமை என்ற இவரது சிந்தனையை ஏற்காத பிரிட்டீஷ், இவரை வெளியேற சொல்லியது எனினும் 1835 வரை அங்கேயே இருந்தார்.
அதற்கு பின்னர் பிரிட்டிஷர் முழுமையாக சூறையாடிய இக்காட்டை பாதுகாத்தவர், 1905ல் அக்காட்டில் இருந்த பங்களாவில் குடியேறிய Baylin Brook தான் 1940வரை இருந்த பெய்லி தான் இந்த சோலை காடு ஒன்றுதான் அருகிருக்கும் கிராமங்களுக்கு குடிநீருக்கான ஒரே ஆதாரம் அதை அழித்து விடாது பாதுகாக்க சொன்னவர்.
Baylin Brook க்கிற்கு பிறகு, பரோடா மகாராஜா விலைகொடுத்து இந்த சோலைக்காடு பங்களாவை வாங்கினாலும், பேய்கள் வாழும் பங்களா என அதில் வாழாமல் ஓடிவிட்டாராம்.
ப்ரான்சில் பிறந்த இந்திய அறிஞரான மைக்கேல் டானினோ, Mother's Institute of Reserach, Aroville, தமிழ்நாட்டின் கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலைவனத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய பாதுகாப்பு முயற்சியை முன்னெடுத்தார் .
ஒரு பகுதியில் இருந்த யூக்லிப்டஸ் மரஙகளை அகற்ற சொல்லி பலமுறை வலியுறுததி இருக்கிறார். ஊர் மக்களும் ஏற்றுக்கொண்டு யூக்லிப்ட்ஸ் மரஙகளை அகற்றி( uprooted) சில விதைகளை விதைத்துள்ளனர்.
ஆனால், அந்த விதைகள் முளைக்கவில்லை, எனினும் மக்கள் அந்நிலத்தை பராமரிதது வந்துள்ளனர். 14 வருடங்களுக்குப் பின், அச்சோலைக்காட்டில் ஏற்கனவே இருந்த, அழிக்கப்பட்ட மரஙகள் முளைத்தெழுந்துள்ளன. இதை Memory of Soil என்போம். அதாவது மண்ணின் மீள்திறன் மண்ணின் நுண்ணறிவை பறைசாற்றுகின்றன.
அழிந்த சோலைக்காடுகளை மீளுருவாக்கம் செய்ய முடியும் என்பதற்கு தோடா காப்பு சோலைக்காடு ஒரு முன்னோடியாகும்.
1980-களில் டானினோ முன்னெடுத்த மக்கள் இயக்கம், அந்த வனம் அழிக்கப்படுவதைத் தடுத்தது. இதுவே, முதல் உள்ளூர் குடிமக்கள் மற்றும் வனத்துறை மேலாண்மைக் குழு உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
1984 ல் கோட்ட வனத்துறை அதிகாரிக்கு வனத்துறை சோலைக்காடுகள் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என ஒரு மனுவை அனுப்புகிறார்.
வனத்துறை முன் வந்து மரங்களை வெட்டுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டாலும் அது நீடித்த பணியாக இல்லாது போய்விட 1990 ல் பொதுமக்கள் குழுவாக இயங்கி மரம் வெட்டுதல், இன்னும் பிற அழிவு களிலிருந்து சோலைக்காட்டை பாதுகாக்கின்றனர்.
1997 ல் இக்குழு அங்கீகாரம்பெறும்போது சுமார் 40 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இயங்கி கொண்டு இருந்தது.
1998 ல் கோட்ட வனத்துறை அதிகாரியாக பணியேற்ற துரைசாமி, லாங் வுட் சோலைக்காடு காக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்ததோடு, அரசு பதிவுப்பெற்ற குழு ஒன்றினை அமைக்க வேண்டியது அவசியம் என்றெண்ணினார், அதன் அடிப்படையில் உள்ளூர் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டத்தில் Long Shola Watchdog Committee ( LSWC) என்ற பெயரில் குழுவை உருவாக்கி அதற்கான செயல்பாட்டாளர்களை தேர்வு செய்தனர்.
இந்த குழு, முடிவெடுக்கும் அமைப்பாக அங்கீகாரம் பெற்றது. இக்குழுவின் பணி சோலைக்காட்டை பாதுகாக்க காவல் உலாவுதல் மூலம், அந்நிய தாவர ஊடுவலை தடுத்தல், மரம் வெட்டுதலை தடுத்தல், மண், மற்றும் நீர் வளத்தை பாதுகாத்தல் போன்ற பணிகளோடு, தன்விருப்ப பேரில் இக்குழு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகாம்கள், கையேடுகள்,போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலம், கிராமத்து மக்களுக்கு தண்ணீரின்ஆதாரம் சோலைக்காடு என்பதை உணர வைத்ததில் LSWC ன் பங்கு மிக முக்கியமானது ஆகும்.
Swamp Ecology
💧🌱💧🌱💧🌱💧🌱💧🌱
Swamp & Marsh என இரு சூழலியல் தளங்கள் உள்ளன. இரண்டையும் தமிழில் சதுப்பு நிலம் என்றே அழைக்கிறோம்.
எனினும், இரண்டுமே சதுப்பு நிலங்கள் என்றாலும் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு.
Swamp - சதுப்பு நிலக்காடு
Marsh - கழிலி / சதுப்பு நிலம்
என்றும் கூறலாம் என நினைக்கிறேன்.
ஒரு மழைக்காட்டிற்கு மேல் ஒரு புல்படுக்கை ( Grass bed) இருப்பது போல், மழைக்காடுகளுக்கு கீழ் இவ்வாறான சதுப்பு நிலக்காடுகள் அல்லது கழிலி நில அமைப்புகள் இருக்கின்றன. ( அனைத்து காடுகளிலும் உள்ளனவா என எனக்குத் தெரியவில்லை)
கடலோரம் இருப்பவை Saltwater Swamp உவர் சதுப்பு நிலங்கள்.
உவர்நீர் சதுப்பு நிலங்கள்
நன்னீர் சதுப்பு நிலங்கள் என இருவகை சதுப்பு நிலங்கள் உள்ளன.
Swamp - சதுப்பு நிலக்காடுகள்: மரங்களும், புதர்களும் உடைய ஈர நிலம்.
Marsh - கழிலி
பெரும்பாலும் புல் மற்றும் நாணல்களை உடைய ஈரநிலம்.
இன்று, கோத்தகிரி லாங் வுட் மழைக்காட்டில் உள்ள சதுப்பு நிலக்காடு ( Swamp) குறித்து நான் கற்றுக்கொண்ட செய்தியினைதான் பகிர்ந்துக் கொள்கிறேன்.
தவறுகள் இருப்பின், தெரிந்தவர்கள் திருத்தி அறிய தாருங்கள்.
இந்த சதுப்பு நிலக்காடு சோலைக்காட்டில் இருந்து வரும் மழை நீரை பெற்று சுத்தமாக்கி ( சில தனித்துவமான புல் வகைகள் உள்ளன Juncus) கீழே ஓடும் நீரோடையில் சேர்க்கிறது.
சுமார் 25 குக்கிராமங்களுக்கான தண்ணீர் தேவையை நிறைவு செய்வதை இந்த லாங் வுட் சோலைக்காடு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
பொதுவாக, சோலைகாடுகளில் புல்படுக்கைகளை தொடர்ந்து அடர் சோலைக்காடு வரும் அதனை தொடர்ந்து நீரோடைகள் அல்லது அருவிகள் வரும்.
மிக அரியதாக மலைகளில் உள்ள காடுகளில் சதுப்பு நிலம்இருக்கும்.
இந்த சோலையில் 44 மர வகைகள், 32 வகையான புதர்கள், 25 கொடி வகைகள், ஒன்பது வகையான பெரணிகள், ஆர்கிட் மலர்கள் உள்ளிட்ட அரிய தாவரங்கள் உள்ளன. மேலும், இமயமலையில் இருந்து வந்து செல்லும் வுட்காக், வங்கதேசத்தில் இருந்து வரும் வாலாட்டி குருவிகள், குரோஷியாவில் இருந்து வரும் பிளேக் பேர்ட் பறவைகள் என, 90 வகையான பறவைகளின் வாழ்விடமாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக, இந்த சோலையில் இரண்டு புலிகள் உள்ளதாக வனத்துறையினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
வளமான உயிர்க்கோளத்தாஇ கொண்டுள்ள பன்மயத்தான்மைக்கொண்ட சோலைக்காடு தான் இந்தா தோடா சோலைக்காடு.
தொடரும்
அன்புடன்
- கோ.லீலா
















No comments:
Post a Comment