ஆத்தங்கரையோரம் ஒரு அதிகாரியின் நினைவுகள்............
திருச்சியில் ஒரு திருமண விழாவிற்கு சென்று திரும்பும்போது,பழனியில் புத்தக கடையில் பல புத்தகங்களை தேர்வு செய்த போது,இப்புத்தகத்தையும் வாங்கினேன்.எந்த புத்தகத்தை படித்தாலும் ஒரு நாள் இடைவெளியிட்டுதான் இன்னொரு புத்தகத்தை படிப்பது வழக்கம்.படித்த புத்தகத்தில் படித்த கருத்துக்களை அசைபோட ஒருநாள் தேவைப்படும்.
ஆனால்,ஆத்தங்கரையோரம் படித்த பின் ஒரு வாரம் ஆகியும்,சிந்தனை ஒரே புள்ளியில் சுழல்கிறது.கண்முன்னே சிந்தூர் கிராமத்திற்கு பதிலாக,பல்வேறு அணைகள் (காடு மற்றும் மலைப்பகுதியில் உள்ள ) நினைவுக்கு வந்து செல்கிறது.எத்தனை கோவிந்து பாய் கள் அங்கே போராடினார்கள் என்று மனம் எண்ணி கலக்கமாகிறது.
ஒரு அரசு அதிகாரியாக,இன்னும் சற்று பொறுப்புடன் பணியாற்றி இருக்க வேண்டுமோ என தோன்றுகிறது,மீண்டும் அசைப்போட்டு பார்க்கும்போது,மக்களுக்காக பணிகள் புரிந்திருக்கிறோம் என்றாலும்.மேலும் ஏதோ செய்ய வேண்டுமென தோன்றும் வண்ணம் இப்புத்தகம் உள்ளது.
The algebra of infinite justice ,கள்ளிக்காட்டு இதிகாசம் ஆகிய புத்தகங்களும் நினைவுக்கு வந்து செல்கிறது.ஒரு பொறியாளார் இயற்கை ஆர்வலராகவும் இருக்கும்போது பல சிரமங்கள் உண்டு.
எனினும்,ஓடும் நதியையும்,மேகங்களையும்,வன விலங்குகளையும்,பறவைகளையும்,இயற்கையின் பேரழகையும் அதன் அமைதியையும்,ஒரு அடர் வனம் தரக்கூடிய அச்சமும் மகிழ்வும் கலந்த ஒரு உணர்வை பிரிந்திட மனம் கூடுவதில்லை என்பது உண்மைதான்,வந்தேறிகளாக இருக்கும் நமக்கேஅப்படியாயின் மண்ணின் மைந்தர்களின் மனநிலையை நினைத்துப்பார்க்கவே மனம் அஞ்சுகிறது.
சுதீர் போன்ற கதாபாத்திரங்கள் எங்களை போன்றவர்களுக்கு மேலும் ஊக்கத்தையும்,மன உறுதியையும் தரக்கூடியதாக இருக்கிறது.
நூலாசிரியர் வெ.இறையன்பு அவர்களுக்கு நன்றி.